Scam 1992 | The Harshad Mehta Story

4
scam 1992

ந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய ஊழலைச் செய்து இந்தியாவையே அதிரவைத்த ஹர்ஷத் மேத்தாவை வைத்து வந்ததே Scam 1992 சீரிஸ்.

Scam 1992

இப்படியும் பங்குச்சந்தையில் ஊழலைச் செய்ய முடியுமா?! என்று பலரைத் திகைக்க வைத்த ஹர்ஷத் மேத்தா கதையை Scam 1992 என்ற சீரீஸாக எடுத்துள்ளார்கள்.

படமாக எடுத்தால், விரிவாகக் காண்பிக்க முடியாது என்பதற்காக சீரீஸாக எடுத்துள்ளார்கள் ஆனால், அவ்வாறு எடுத்ததை நியாயப்படுத்தியுள்ளார்கள்.

அற்புதமான இயக்கம். Image Credit

ஹர்ஷத் மேத்தா

குஜராத்தி ஜெயின் குடும்பத்தில் பிறந்து மிகவும் ஏழ்மையில் வளர்ந்து, தானும் மிகப்பெரிய ஆளாக வேண்டும் என்ற வைராக்கியத்தில் தீவிரமாக இறங்கினார்.

பல்வேறு தொழில்களில் ஈடுபட்டாலும் பங்குச்சந்தையில் எதுவுமே தெரியாமல் வந்து ஒவ்வொன்றையும் கற்றுக்கொண்டு பங்குச்சந்தையில் சூப்பர்ஸ்டாராக மாறி விட்டார்.

அவரின் வளர்ச்சி படிப்படியாக வந்தாலும், அசுர வளர்ச்சியாக உள்ளது.

இவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர் ஆனால், கதையில் இவரது சகோதரர் அஸ்வின் மட்டுமே காண்பிக்கப்படுகிறார், மற்ற இருவரை பற்றிய செய்தியில்லை.

அஷ்வினாக வரும் சகோதரர் இளைய சகோதரராக இருந்தாலும் பார்க்க மூத்த சகோதரரைப் போல உள்ளார்.

குஜராத்தி என்றாலே வியாபாரத்தில் திறமையானவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இவர்களுடைய கணக்கு எப்போதுமே வித்தியாசமாக இருக்கும்.

இதனாலையே என்னவோ தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். குறிப்பாக, மேலாண்மையில் சிறந்து விளங்குவார்கள்.

பங்குச்சந்தை

இந்த சீரீஸ் பார்த்தால், பங்குச்சந்தை எப்படி இயங்கியது? அதில் என்னென்ன அரசியல் உள்ளது? ஆபத்து என்ன? அதில் நடைபெறும் உள்ளடி வேலைகள் என்ன?

என்று அனைத்தையும் புரிந்து கொள்ளலாம்.

சிலரே அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள், இவர்களே நிறுவனப் பங்குகளைத் தீர்மானிக்கிறார்கள். அடேங்கப்பா! என்றுள்ளது.

ஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பையே செயற்கையாக உயர்த்துகிறார்கள்.

Research & Analyze

பங்குச்சந்தை என்பது Research & Analyze என்று கூறுகிறார்கள்.

அதாவது ஒரு நிறுவனத்தின் பங்கை ஒருவர் வாங்குகிறார் என்றால், அந்நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது? அதன் வருமானம் என்ன? எவ்வளவு வருடங்களாக தொழில் செய்கிறார்கள்? எதிர்காலத் திட்டங்கள் என்ன?

இதையெல்லாம் கணித்து, பங்குகளை வாங்கினால் இலாபம் பெறலாம் என்று திட்டமிடுகிறார்கள். இதுவே பங்குச்சந்தையின் அடிப்படை.

இருக்கு ஆனால் இல்லை

ஆனால், நிறுவனமே இல்லாமல் நிறுவனம் இருப்பது போலக் காண்பித்து போலியாகச் செய்திகளைப் பரப்பி அந்நிறுவன! பங்கை உயர்த்தி பணத்தை அடித்தது ஹர்ஷத் மேத்தா.

அதோடு பல்வேறு நிறுவனங்களின் உள்ளே ஆட்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு அங்கு நடப்பவற்றைத் தெரிந்து கொண்டு அதற்கேற்பச் செயல்படுவது.

வங்கிகளில் உள்ள சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி ஊழல் செய்துள்ளார், மேலோட்டமாக பார்த்தால், தவறு இல்லை என்பது போலவே தோன்றும்.

அப்போது மின்னணு தொழில்நுட்பம் இல்லாதது, பணியில் உள்ளவர்களின் உள்ளடி வேலை, கணக்கு வழக்குகள் லெட்ஜரில் பராமரிக்கப்பட்டது, வெளிப்படைத்தன்மை இல்லாதது போன்றவையே இவரின் ஊழலுக்குக் காரணம்.

ஒரு கட்டத்தில் கழுத்தை நெறிக்கச் சிக்கிக் கொள்கிறார்.

இவ்வளவையும் 38 வயதுக்குள் செய்து மாட்டி, அடுத்த 9 வருடங்களில் மாரடைப்பால் இறந்தும் விடுகிறார்.

கதாபாத்திரங்கள்

ஹர்ஷத் மேத்தாவின் தம்பி தவிர மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் மிகப்பொருத்தமாக உள்ளார்கள். யாரையும் குறைத்து மதிப்பிடமுடியவில்லை .

ஹர்ஷத் மேத்தாவை சிக்க வைக்கும் செய்தியாளராக வரும் சுஜிதா தலால் நடிப்பு பிரமாதம். அவரின் இள வயதுக்கான துடிப்பு, ஆர்வம், முகபாவனைகள், உடல்மொழிகள் எல்லாமே சிறப்பு.

பிரபல கார்ட்டூனிஸ்ட் RK லக்ஷமன் அவர்களிடம் ‘Common man தானே இருக்கிறார்கள், ஏன் common women இல்லை‘ என்று கேட்டதற்கு அவர் கூறும் பதில் சுவாரசியம் 🙂 .

சிபிஐ அதிகாரியாக வரும் மாதவன் ரொம்ப ஓவராக போவது போல உள்ளது அல்லது உண்மையிலே இப்படித்தான் விசாரித்தாரா? என்பது புரியவில்லை.

ஃபோபர்ஸ் ஊழலை விசாரித்தவர் என்பதால், தலைக்கனத்துடன் இருந்தாரா என்று புரியவில்லை. சில நேரங்களில் சுவாரஸ்யத்திற்குப் பதில் எரிச்சலே மேலிட்டது.

ஒளிப்பதிவு பின்னணி இசை

இந்த சீரீஸிலேயே முதல் பாராட்டு ஒளிப்பதிவுக்குத்தான், அட்டகாசமாக உள்ளது.

எப்படி எடுத்தார்கள் என்றே தெரியவில்லை! 1980 / 1990 காலங்களை அப்படியே கண்முன் நிறுத்தியுள்ளார்கள்.

Colour tone மங்கலாக வைத்துப் பழைய காலத்தை மனதில் நிறுத்தியுள்ளார்கள்.

அக்கால கார், வீடு, நபர்கள், ஆடைகள், மற்ற வாகனங்கள், அலுவலகங்கள் என்று கடுமையாக உழைத்துள்ளார்கள்.

பின்னணி இசை நன்றாக இருந்தது ஆனால், பேச்சைக் கேட்கத் தொந்தரவாக இருந்தது, உரையாடல் புரிந்து கொள்ள இடைஞ்சலாக இருந்தது.

வசனம்

Line of Duty சீரிஸ் போல கொஞ்சம் கவனிக்கவில்லையென்றாலும் என்ன கூறினார்கள் என்று புரிந்து கொள்ள முடியாது. எனவே, பலமுறை பின்னாடி சென்று திரும்பப் பார்த்தேன்.

இன்னொரு குறிப்பிடத் தக்க விஷயம் தமிழ் டப்பிங்.

தரமான டப்பிங், ஒவ்வொருவரின் குரலும் அவரவர் குரல் போலவே அவ்வளவு பொருத்தமாக உள்ளதோடு வசனங்களும் அருமை.

சில படங்களில் டப்பிங் கடுப்பாக உள்ளது என்று அதே மொழியிலேயே பார்த்து, சப்டைட்டில் பார்த்துக்கொள்வேன் ஆனால், இதில் தமிழ் சீரீஸ் போலவே இருந்தது.

யார் பார்க்கலாம்?

பங்குச்சந்தையில் ஆர்வம் உள்ளவர்கள் தவறவிடக்கூடாத சீரீஸ்.

மற்றவர்களுக்குப் புரிந்து கொள்ளக் கடினமாக இருக்கலாம் ஆனால், ஒவ்வொரு வருடமாக உயர்ந்து 1992 நெருங்க நெருங்க படபடப்பாக உள்ளது.

ஏனென்றால் 1992 ல் தான் ஊழலில் சிக்கினார். சீரீஸை இயக்கியதும் இரு மேத்தாக்கள் 🙂 . அதனாலோ என்னவோ மிக இயல்பாக எடுத்துள்ளார்கள்.

பரிந்துரைத்து யாசின். SONYLiv ல் காணலாம்.

Genre Financial thriller, Biography, Drama
Based on 1992 Indian stock market scam
Written by Sumit Purohit, Saurav Dey, Vaibhav Vishal, Karan Vyas,
Directed by Hansal Mehta, Jai Mehta
Mukesh Chhabra (Casting Director)
Starring Pratik Gandhi, Shreya Dhanwanthary, Hemant Kher, Satish Kaushik
Music by Achint Thakkar
Country of origin India
Original language Hindi
No. of seasons 1
No. of episodes 10

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

4 COMMENTS

  1. கிரி.. ஹர்ஷத் மேத்தாவை பற்றி கல்லூரி படிக்கும் போது தெரிந்து இருந்ததால், இயல்பாகவே அவருடைய வாழ்க்கை வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தது.. இடையில் அவ்வப்போது செய்தித்துளிகளாக அவரை குறித்த நிகழ்வுகளை சிலது படித்து தெரிந்து கொண்டேன்..

    இந்த சீரியஸ் பார்த்ததும் என்னால் மேலும் பலவற்றை அவரை குறித்து தெரிந்து கொள்ள முடிந்தது.. Pratik Gandhi யின் நடிப்பு பிரமாதம்.. குறிப்பிட்ட இடைவெளியில் இவரது நடிப்பில் முதிர்ச்சி நன்றாக தெரியும்.. எல்லா பாத்திரங்களும் தங்களின் பணியை சிறப்பாக செய்து இருந்தார்கள்.. நீங்கள் குறிப்பிட்டது போல் படத்தின் ஆர்ட் ஒர்க் செம்ம!!!

    80 / 90 காலகட்டத்தை கண் முன்னே திரையில் அழகாக கொண்டு வந்து இருப்பார்கள்.. இதற்கு முன் Sardar Udham படத்தில் வெளிநாட்டில் படமாக்க பட்ட காட்சிகளை கண்டு வியந்தேன்.. இது போல் தமிழில் வரும் படங்களில் இந்த அளவிற்கு மெனக்கிடல் இருக்குமா? என்றால் கொஞ்சம் கடினம் தான்.. இந்த வெப் சீரிஸ் நான் மிகவும் ரசித்து பார்த்தேன்..

    தனிப்பட்ட முறையில் நான் படித்த வரை ஹர்ஷத் மேத்தாவின் வாழ்வில் பல பல பிரச்சனைகள் இருந்திருக்கிறது.. அதற்கு பல்வேறான காரணங்கள் கூறப்படுகிறது.. பின்னணியில் அரசு உயர் மட்ட துறையில் உள்ள அதிகாரிகளும் / RBI / மற்ற வங்கி அலுவலர்களின் தொடர்பு அதிகம் உள்ளது.. இவர் மீது புனையப்பட்ட 90 % வழக்குகள் நிரூபிக்கப்படவில்லை என்று படித்ததாக நினைவு.. மேலும் இவரின் குடும்பம் இன்னும் அவர் வாங்கிய அதே வீட்டில் வசித்து வருகிறார்கள்..

  2. @யாசின்

    “80 / 90 காலகட்டத்தை கண் முன்னே திரையில் அழகாக கொண்டு வந்து இருப்பார்கள்”

    இதுவே எனக்கு வியப்பை அளித்தது.

    “இது போல் தமிழில் வரும் படங்களில் இந்த அளவிற்கு மெனக்கிடல் இருக்குமா?”

    தமிழில் சுப்ரமணியபுரம் சிறப்பாக எடுத்து இருப்பார்கள்.

    “பின்னணியில் அரசு உயர் மட்ட துறையில் உள்ள அதிகாரிகளும் / RBI / மற்ற வங்கி அலுவலர்களின் தொடர்பு அதிகம் உள்ளது..”

    உண்மை. இதனாலே அனைத்தையும் முன்கூட்டி அறிந்து அதற்கு தகுந்த மாதிரி செயல்பட முடிந்துள்ளது.

    இதோடு நிறுவனங்களின் உள்ளே உள்ள ஆட்கள்.

    “இவரின் குடும்பம் இன்னும் அவர் வாங்கிய அதே வீட்டில் வசித்து வருகிறார்கள்.”

    அப்படியா ! இது எனக்கு செய்தி.

  3. மெய்யழகன் படம் பாருங்க செம படம். படம் ஸ்லோவா தான் இருக்கும் ஆனால் ஃபீல் குட் மூவி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!