NPS திட்டம் பலருக்கும் தெரியும் ஆனால், குழந்தைகளுக்கும் கொண்டு வரப்பட்ட திட்டமே NPS Vatsalya. Image Credit
NPS Vatsalya
மத்திய நிதி அமைச்சகம் 2024 ம் ஆண்டு PFRDA கண்காணிப்பில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
18 வயதுக்குள் இருப்பவர்கள் இத்திட்டத்தில் இணையலாம், 18 வயத்துக்குப் பிறகு தானாகவே வழக்கமான NPS திட்டத்துக்கு மாறி விடும்.
கணக்கைத்துவங்க இந்தியக்குடிமகனாக இருக்க வேண்டும்.
₹1000 செலுத்தி இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். பெற்றோரோ அல்லது பாதுகாவலர் மூலமாகவோ கணக்கைத் துவங்கலாம்.
வருடத்துக்குக் குறைந்தது ₹1000 செலுத்த வேண்டும்.
குழந்தையிலிருந்தே சேமிப்பைத் துவங்க பழக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
18 வயதில் பணத்தைக் கட்டுப்பாடுகளுடன் எடுக்க முடியும் என்றாலும், இத்திட்டத்தின் நோக்கமே எதிர்காலச் சேமிப்புக்கானது என்பதால், எடுக்காமல் இருப்பதே பிள்ளைகளுக்கான உதவியாக இருக்கும்.
என்ன பயன்?
குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டங்களாகப் பல உள்ளன ஆனால், எடுக்கப்படும் பணம் மற்ற செலவுகளுக்கோ அல்லது குழந்தையின் செலவுக்கோ, பள்ளி, கல்லூரி கட்டணங்களுக்கோ பயன்படுத்தப்படுகிறது.
எனவே, இவ்வாறு குழந்தைகளுக்காக சேமிக்கப்படும் பணம் பெற்றோர்களாலே முடித்து வைக்கப்படுகிறது.
ஆனால், NPS Vatsalya திட்டத்தில் பணத்தை எடுக்க முடியாது என்பதால், பிள்ளைகளின் ஓய்வுக் கால வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
25% எடுக்கலாம் ஆனால், கட்டுப்பாடுகள் உண்டு.
பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், இதிலிருந்து கிடைக்கும் தொகை அதிகக் கால இடைவெளியால், எதிர்பார்க்காத அளவுக்கு வளர வாய்ப்புள்ளது.
இதில் புரிந்து கொள்ள வேண்டியது, இச்சேமிப்பால் பிள்ளைகளே முழுக்க முழுக்க பயனடைவார்கள், பெற்றோர்களுக்கு எந்தப்பயனும் இல்லை.
எனவே, சரியான முறையில் திட்டமிட்டுச் சேமிக்க வேண்டும்.
எப்படி இணைவது?
https://enps.nsdl.com/eNPS/NPSVatsalyaPensionSystem.html தளத்துக்குச் சென்று பெற்றோர் விவரங்களைக்கொடுத்து இணையலாம்.
இதற்கு கணக்கு துவங்கும் பெற்றோரின் கையெழுத்துடன் கூடிய நிழற்படம் மற்றும் குழந்தையின் வயதுச் சான்றிதழும் தேவை.
இவற்றோடு வழக்கமான PAN, ஆதார் விவரங்களும் இருந்தால் போதுமானது, அதிகபட்சம் 10 நிமிடங்களில் கணக்கைத்துவங்கி விடலாம்.
எந்தத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தாலும், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அத்தொகை எதோ ஒரு செலவுக்குப் பயன்படுத்தப்பட்டு விடும்.
ஆனால், NPS தொகை ஓய்வு காலத்துக்கு முழுமையாகப் பயன்படுத்தப்படும்.
18 வயதில் சேமிக்கப்பட்ட பணம் ₹2,50,000 இருந்தால், முழு பணத்தையும் எடுத்துக்கொண்டு வெளியேறலாம், அதிகம் இருந்தால் கட்டுப்பாடுகள் உண்டு.
18 வயதில் வெளியேறுவதாக இருந்தால், இத்திட்டத்தில் இணைவதே வீண்.
ஏன் தேவை?
ஓய்வுக் காலப் பணத்தேவை என்பது மிக மிக முக்கியமானது காரணம், வாழ்க்கைச் சூழல் மாறி வருகிறது, கூட்டுக்குடும்பம் மறைந்து வருகிறது.
எனவே, இத்திட்டத்தில் இணைப்பது பிள்ளைகளுக்குச் செய்யும் மாபெரும் உதவி.
துவக்கத்தில் சாதாரணமாக இருந்தாலும், 40 வயதைக் கடக்கும் போது இதில் சேமிக்கப்பட்ட தொகையைப் பார்த்தால், மலைப்பாக இருக்கும்.
எனவே, இத்திட்டத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டாம், அதே சமயம் அனைத்துப் பணத்தையும் இதில் முடக்க வேண்டாம். பணத்தை 60 வயது வரை எடுக்க முடியாது.
SIP போன்றவற்றில் முதலீடு செய்வது NPS விட அதிக இலாபத்தைத் தரும். எனவே, இதில் சேமித்த பணத்தை, விரும்பினால் NPS க்கு மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது.
அனைத்தையும் இதிலேயே முதலீடு செய்து விட்டால், தேவைப்படும் போது பணம் இருக்கும் ஆனால், எடுக்க முடியாது.
எனவே, உணர்ச்சிவசப்படாமல் முடிவு செய்து சேமிக்கவும்.
இணையலாமா?
மத்திய அரசின் திட்டம் என்பதால் பாதுகாப்பானது. இருந்தும் ஏதாவது பிரச்சனை என்றால், அதற்கான வேறு வாய்ப்பைக் கொடுப்பார்கள்.
காரணம், மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியப் பணம் NPS ல் இணைந்துள்ளது. எனவே, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று மத்திய அரசு செய்து விட முடியாது.
NPS குறித்து மேலும் விரிவான தகவல்களுக்கு –> தேசிய ஓய்வூதிய திட்டம் | National Pension System
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
இது வரை அறியாத தகவல் இது.. பகிர்ந்தமைக்கு நன்றி கிரி..