நித்ய கல்யாண பெருமாள் கோவில் | சென்னை ECR

2
நித்ய கல்யாண பெருமாள் கோவில்

காபலிபுரம் அருகே திருவிடந்தை என்ற ஊரில் உள்ளது நித்ய கல்யாண பெருமாள் கோவில், பல்லவர்களால் 7 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

நித்ய கல்யாண பெருமாள் கோவில்

இங்கே உள்ள பெருமாள், வராஹி அவதாரம் ஆகும்.

திருமணம் நடக்காதவர்கள் இங்கே வந்து வேண்டிக்கொண்டால், திருமணம் நடப்பதாக ஐதீகம். அவ்வாறு நடந்தால், கோவிலுக்கு ஜோடியாக வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.

கோவில் முழுக்கவே புதுமணத் தம்பதியினர் நிறைந்து இருந்தனர்.

தல வரலாறு

ஹிரண்யாக்ஷன் பிரம்மாவிடம் எந்த மனிதனாலும், மிருகத்தாலும் தன்னை அழிக்க முடியாத வரத்தைப் பெற்றதோடு பூமியை கட்டுப்பாட்டில் எடுக்கிறான்.

ஹிரண்யாக்ஷன் யாராலும் வெல்ல முடியாதவனாகிறான்.

இவ்வாறு ஹிரண்யாக்ஷன் கொடுத்த மிருகங்களின் பட்டியலில் பன்றி இல்லையாததால், பன்றியாக வராஹி அவதாரம் எடுக்கிறார் விஷ்ணு.

அந்த அவதாரத்தில் கடுமையான சண்டைக்குப் பிறகு ஹிரண்யாக்ஷனை வெல்கிறார். இதனால், வராஹி மூக்கின் மீது பூமியைக் காணலாம்.

வராஹியை மணக்கப் பல பெண்கள் முன் வந்துள்ளனர்.

காலவ முனிவர் தன் மகள்களை வராஹி மணக்க விரும்பினார் அதன் படி விஷ்ணு மணந்தார் என்றும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமும் கன்னிப்பெண்களை மணந்து கொள்வார் என்ற நம்பிக்கையுள்ளதால், இங்கே வந்து வேண்டிக்கொள்பவர்களுக்குத் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

எனவே, திருமணம் தாமதமாகுபவர்களுக்கு இக்கோவில் சென்று வேண்டிக்கொள்வது நல்லது.

கருவறையில் பூமா தேவியுடன் வராஹ வடிவில் நித்ய கல்யாணப் பெருமாளின் கருங்கல் சிலை உள்ளது.

திருக்கல்யாண கோலத்தில், பூமா தேவியான அகிலவல்லித் தாயாரைத் தமது இடப்பக்கத்தில் அமர்த்தி வைத்துள்ள காட்சி பார்க்க அற்புதமாக இருக்கும்.

இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

சக்தி அதிகம்

பாதி மனித உருவம் பாதி விலங்கு உருவமுள்ள கடவுளுக்குச் சக்தி அதிகம் என்ற நம்பிக்கை இந்து மதத்தில் உள்ளது.

எனவே, விநாயகர், வராஹி, நரசிம்மர், அனுமன் போன்றோருக்குப் பக்தர்கள் அதிகம். அதோடு விரைவிலேயே வேண்டியது நடக்கும் என்பது நம்பிக்கை.

ராமரின் பக்தரான அனுமனையே கடவுளாக்கியவர்கள் இந்துக்கள்.

சமீபமாக வராஹி கடவுள் பிரபலமாகி வருகிறார். இதற்கான காரணம், என்னவென்று தெரியவில்லை. முன்பு அதிகம் கண்டதில்லை.

கோவில் எப்படியுள்ளது?

மகாபலிபுரம் நோக்கி ECR வழியாகச் சென்று கோவளம் தாண்டி 3 கிமீ தூரத்தில் வலது புறத்தில் திரும்பிக் கோவிலுக்கு உள்ளே செல்ல வேண்டும்.

உள்ளே நுழையும் போது பூ, பூஜைப் பொருட்களுடன் வழி மறிக்கிறார்கள்.

வாகனத்தை மறித்து நிறுத்தியவுடன் வந்த பெண், ‘கல்யாணம் செய்துக்க போறீங்களா?‘ என்று கேட்டார். எனக்கு ஒன்றும் புரியலை!

எதற்கு இப்படிக் கேட்கிறார்கள்?!‘ என்று குழம்பி, பின்னர் நண்பர்கள் கூறிய பிறகே இது திருமணத்துக்கான சிறப்புக் கோவில் என்று தெரிந்தது 🙂 .

உள்ளே நுழைந்தவுடன் மண்டபத்துடன் வெளிப்புறத்தோற்றம் உள்ளது, முதலில் கண்ணில் பட்டது இந்து அறநிலையத்துறை வசூல் அட்டை தான்.

தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் கோவில் உள்ளது.

மகாபலிபுரம் அருகே என்பதாலும் வெளிநாட்டினர் வருகையும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. ‘எதற்குத் திருமணத்துக்கு வேண்டிக்கொள்கிறார்கள்!‘ என்று யோசித்து இருப்பார்களோ ! 🙂 .

நவம்பர், டிசம்பர் மாதங்களில் கிருத்திகை நட்சத்திரத்தில் திருமங்கை ஆழ்வார் உற்சவம் கொண்டாடப்படுகிறது

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

2 COMMENTS

  1. கிரி.. வழிபாட்டு தளத்துக்கு செல்லும் போது பொதுவாக பல எண்ணங்கள் மனதுக்குள் ஓடும்.. கூட்டம் அதிகம் இல்லாமல், அமைதியாக இருக்க கூடிய சில வழிபாட்டு தளங்களுக்கு செல்லும் போது மனது மிகவும் நிறைவாக இருக்கும்.. தனிமையில் உட்கார்ந்து யோசிக்கும் போது மனது தெளிந்த ஒரு நீரோடை போல இருக்கும்..

    இந்தியாவில் உள்ள வழிபாட்டு தளங்களை மட்டும் காண வேண்டி சக்தியுடன் சேர்ந்து நிச்சயம் ஒரு நீண்ட பயணத்தை தொடர வேண்டும் என்பது இருவரின் விருப்பம்.. நிச்சயம் எதிர்காலத்தில் நடக்கும் என நம்புகிறேன்..

    முன்பு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதிக தடவை நான் கல்லறைக்கு செல்வேன்.. குறைந்தது 3 / 4 மணி நேரம் அங்கேயே இருக்கும் போது, இந்த உலகத்தில் எதுவும் நிலையில்லை.. நான் எவ்வளவு சிறியவன் என்பதை அந்த இடம் எனக்கு உணர்த்தும்.. இந்த அனுபவம் எனக்கு விருப்பமானது..

  2. @யாசின்

    “இந்தியாவில் உள்ள வழிபாட்டு தளங்களை மட்டும் காண வேண்டி சக்தியுடன் சேர்ந்து நிச்சயம் ஒரு நீண்ட பயணத்தை தொடர வேண்டும் என்பது இருவரின் விருப்பம்.. நிச்சயம் எதிர்காலத்தில் நடக்கும் என நம்புகிறேன்.”

    எனக்கு வடமாநிலப்பயணம் பட்டியலில் உள்ளது. எப்போது நடக்கும் என்று தெரியவில்லை.

    உபி மாநிலத்தில் உள்ள கோவில்கள், ரிஷிகேஷ் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பது பல நாள் விருப்பம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!