அதிகரிக்கும் அடிப்படைவாத முஸ்லிம்கள்

7
அடிப்படைவாத முஸ்லிம்கள்

லகம் முழுக்க அடிப்படைவாத முஸ்லிம்கள் (Fundamentalist) அதிகரித்துக்கொண்டு செல்கின்றனர். இது பற்றிக் காண்போம். Image Credit

அடிப்படைவாத முஸ்லிம்கள்

இஸ்லாத்தில் பழமையான வழக்கங்களை, கட்டுப்பாடுகளை, கருத்துகளை, சட்ட திட்டங்களை முன்வைப்பவர்களை அடிப்படைவாத முஸ்லிம்கள் என்று கூறுகின்றனர்.

முஸ்லீம் அல்லாதோர் காஃபிர்கள் என்று கருதப்பட்டு, அவர்களுக்கு எதிராகச் செயல்படுபவர்கள். அதோடு தங்கள் மத வழக்கங்களை மற்றவர்கள் மீது திணிப்பவர்கள், மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள்.

மதம் மாற்றம் செய்வதில் தீவிரம் காட்டுபவர்கள்.

தமிழகம்

தமிழகத்தில் 2000 ஆண்டு வாக்கில் அடிப்படைவாத முஸ்லிம்கள் இல்லை அல்லது மிக மிகச்சிறு அளவில் இருந்தனர்.

சவூதி செல்பவர்கள் எண்ணிக்கை 90’s க்கு பிறகு அதிகரித்ததில், அங்கே வாழ்ந்து இங்கே வந்தவர்கள், இங்கேயும் மத கட்டுப்பாடுகளைப் பின்பற்றத் துவங்கினர்.

சவூதி அரசு இந்தியாவில் அடிப்படைவாதத்தைக் கொண்டு செல்லத் துவக்கத்தில் நடவடிக்கை எடுத்தது (கூகுளில் தேடினால் விரிவாக கிடைக்கும்).

அப்போது தீவிரமடைந்தது தான் வஹாபியிசம். முன்னர் இல்லாத பழக்க வழக்கங்கள் தற்போது தமிழகத்தில் பரவலாகிவிட்டது, ஆக்கப்பட்டு வருகிறது.

அடிப்படைவாதம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து அடுத்த கட்டத்துக்குச் சென்று விட்டாலும் ஒப்பீட்டளவில் வடமாநிலங்களை விடத் தமிழகத்தில் குறைவு.

உலக நாடுகள்

தற்போது நடைபெற்று வரும் அகதிகள் வருகையால் மேற்கத்திய நாடுகள் பெருமளவில் பாதிப்படைந்து வருகின்றன குறிப்பாக ஐரோப்பா நாடுகள்.

மத்தியக் கிழக்காசிய நாடுகளில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை முறை வேறு, ஐரோப்பாவில் வாழ்பவர்களின் வாழ்க்கை முறை வேறு.

இன்னொரு நாட்டுக்கு அகதிகளாக அல்லது சட்ட ரீதியாகச் சென்றால், அந்த நாட்டில் என்ன சட்டம் உள்ளதோ அதைத்தான் பின்பற்ற வேண்டும்.

ஆனால், துவக்கத்தில் அமைதியாக இருப்பவர்கள், இவர்களின் எண்ணிக்கை அதிகரித்த பிறகு கட்டுப்பாட்டைத் தங்கள் பொறுப்பில் எடுக்க விரும்புகிறார்கள்.

விரைவில் ஷரியா சட்டத்தைக் கொண்டு வருவோம், இந்நாட்டைக் கைப்பற்றுவோம் என்று, அடைக்கலம் சென்ற நாட்டையே கைப்பற்ற முயல்கிறார்கள்.

புர்கா அணியாத ஸ்வீடன் நாட்டுப்பெண்ணை அகதியாக வந்த முஸ்லிம்கள் துன்புறுத்தியதால், அவர் அழுது கொண்டே பேசியது வைரலானது.

அண்டை நாடுகள்

பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் நாடுகள் அடிப்படைவாதிகளால் ஆட்சி செய்யப்படுகிறது.

ஷேக் ஹசீனா இருந்தவரை இவர்களை அனுமதிக்காமல் இருந்தார், இவருக்குப் பின் அடிப்படைவாதிகளின் கட்டுப்பாட்டுக்கு வங்கதேசம் சென்று விட்டது.

பாகிஸ்தான் இவர்களால் ஆட்சி செய்யப்படவில்லை என்றாலும், அந்நாட்டு மக்களிடையே அடிப்படைவாதமே மேலோங்கியுள்ளது.

அடிப்படைவாதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் நாடுகளைக் கவனித்தால், அந்த நாடுகளில் கலவரம், அடக்குமுறை என்று எப்போதும் அமைதியற்றதாகவே இருக்கும்.

இதெல்லாம் கண்முன்னே இருக்கும் எடுத்துக்காட்டுகள் அதிலும் குறிப்பாக ஷேக் ஹசீனா மாறி அடிப்படைவாதிகள் கட்டுப்பாட்டில் வந்த பிறகு உள்ள வங்கதேசம்.

இவர்களை அனுமதிக்காத கஜகஸ்தான் போன்ற நாடுகள் அமைதியாக உள்ளன.

அதிகரிக்கும் எண்ணிக்கை

அடிப்படைவாதிகளுக்கு, தீவிரவாதிகளுக்கு நிதி, அடைக்கலம் கொடுத்து அவர்களை ஊக்குவித்து வரும் நாடுகளில் ஒன்று கத்தார்.

உலக நாடுகள் முழுவதிலும் அடிப்படைவாதிகள் தங்கள் கருத்துகளைக் கொண்டு சென்றுள்ளார்கள், மத ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றனர்

இந்தியாவிலும் இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொடர்ச்சியான பரப்புரையால், இளைஞர்களை மூளைச்சலவை செய்கின்றனர்.

பங்களாதேஷ், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு போலி ஆதார் அட்டைகளை உருவாக்கிக் கொடுத்து, அவர்களை இந்திய மாநிலங்களில் நுழைத்து வருகிறார்கள்.

இவர்கள் பகுதியில் குற்றச்செயல்கள் நடைபெற்று சர்ச்சையாகும் போது சிறுபான்மையினர், அப்பாவிகள் போர்வையில் ஒளிந்து கொள்கிறார்கள்.

அடிப்படைவாத முஸ்லீம்கள் எதார்த்தத்தோடு இணையாதவர்கள், இதனாலையே உலகளவில் மற்ற சமூகத்தினரோடு இவர்களால் ஒத்துப்போக முடியவில்லை.

நிம்மதியைத் தொலைக்கும்

முஸ்லீம் நாடுகளைப் போல இந்தியாவிலும் ஷரியா சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.

அரசியல் கட்சிகளும் வாக்கு அரசியலுக்காக இவர்களை ஆதரித்துப் பேசி வருவதால், இவர்களின் வளர்ச்சி, பலம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இவர்களின் வளர்ச்சிக்கு மிக முக்கியக்காரணம், பல்வேறு வகைகளில் இவர்களுக்குக் கிடைக்கும் நிதி, வாக்கரசியல்.

இவர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு அரசியல்வாதிகள் கொண்டு சென்று விட்டனர். அடிப்படை வாதத்தைக் கட்டுப்படுத்துவது கைமீறிச் சென்று விட்டது.

எங்கு முஸ்லிம் அடிப்படைவாதிகள் அதிகரிக்கின்றனரோ அங்கே மத ரீதியான பிரச்சனைகள் ஏற்படும், அப்பகுதி நிம்மதியைத் தொலைக்கும்.

இந்தியாவும் இந்த நிலையை நோக்கித்தான் சென்றுகொண்டுள்ளது.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

7 COMMENTS

  1. கிரி நீங்கள் சொல்வது உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.

    உலகில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் நம்பர் 1 நாடாக இந்தியாவைக் ‌கொண்டு வந்து

    மாட்டிறைச்சி சாப்பிட்டால் கொலை

    மாட்டிறைச்சி குளிர்சாதன பெட்டியில் ‌இருந்தால் கொலை

    மாட்டை வண்டியில் கொண்டு போனால் கொலை

    மாட்டை காரில் கொண்டு போனதால் (அப்படி கொண்டு போக முடியாது) முஸ்லிம் என்று நினைத்து முஸ்லிம் அல்லாத ஒரு பையன் கொலை.

    மாட்டிறைச்சி சாப்பிட்டால் ஹாஸ்டலில் இருந்து வெளியேற்றம்

    ரயிலில் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்று நினைத்து சமீபத்தில் ஒரு ‌முதியவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம்.

    இப்படி மாட்டினை‌‌ வைத்து இரட்டை வேட அரசியல் செய்பவர்கள், அந்த அரசாங்கத்தை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் உங்கள் போன்றவர்கள் யார்?

    விருப்பமான‌ உணவைக் கூட‌ சாப்பிட முடியாது. சாப்பிட்டால் கொலை செய்கின்ற‌ கூட்டத்தை, அதை‌ சரி காணும் அரசாங்கத்தை, அதை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் உங்கள் போன்றவர்கள் யார்?

    அப்பாவிகளா?

    எங்களை நோக்கி ஒரு விரலை காட்டும் உங்கள் கை‌ உங்களை நோக்கி நான்கு விரல்களை காட்டும்.

    அதை‌ மறந்து விட‌வேண்டாம்

  2. @Fahim

    வைத்துக்கொள்வதெல்லாம் வேண்டாம், அது உண்மை தான்.

    நடப்பதையே எழுதியுள்ளேன். கூறியுள்ளதில் எது தவறு என்று கூறினால் விளக்கம் அளிக்கிறேன்.

    கட்டுரையில் கூறி இருப்பது சித்தாந்த மாற்றத்தைப் பற்றி, நீங்கள் கூறி இருப்பது சம்பவம்.

    இரண்டும் வேறு.

    நீங்கள் குறிப்பிட்டது போல அது முதியவரோ மற்றவரோ யாராக இருந்தாலும் தவறு தான். அதற்கு சட்டத்தில் என்ன தண்டனையோ கொடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

    யாரும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ள முடியாது. அதை என்றுமே ஆதரிக்க மாட்டேன்.

    அரசாங்கம் செய்வதில் எனக்கு பிடித்தவற்றை ஆதரிக்கிறேன், பிடிக்காதவற்றை எதிர்க்கிறேன்.

    கண்மூடித்தனமாக எந்தத் தவறை ஆதரித்தேன்? என்பதை ஆதாரங்களோடு (Link) கூறுங்கள்.

  3. கண்மூடித்தனமாக எந்தத் தவறை ஆதரித்தேன்? என்பதை ஆதாரங்களோடு (Link) கூறுங்கள்.

    அரசாங்கத்தின் அனைத்து நலவுகளையும்‌ பட்டியல் போடும் நீங்கள் தவறுகளை பட்டியல் போட்டது உண்டா?

    உங்கள் மௌனம் தான் ஒரே ஆதாரம்.

  4. ஒவ்வொரு மனிதனும் எனக்கு பிடித்த முறையில் வாழ வேண்டும் என்று வற்புறுத்துவதும் ஒரு தீய சித்தாந்தம் தான். அந்த சித்தாந்தத்தின் தீய விளைவுகள் தான் நான் கூறிய சம்பவங்கள்.

  5. கிரி, தனிப்பட்ட முறையில் என் பார்வையில் தோன்றுவதை இங்கு பகிர்கிறேன். பொதுவாக உலக அளவிலும், இந்தியாவிலும் முஸ்லீம்களை பார்க்கும் பார்வையே முற்றிலும் வேறுமாறாக உள்ளது. இதற்கு பல்வேறான காரணங்கள் உண்டு. தற்போதும் திரைப்படங்களில் அதிகம் முஸ்லீம்களை தான் தீவிரவாதியாகவும் / குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களாவும் காண்பிக்கின்றனர்.

    90 களில் ஆரம்பித்தது 2024 ளிலும் தொடந்து வருவது தான் நிஜம். இந்திய சுதந்திரத்தில் முஸ்லீம்களின் பங்கு என்ன என்பதை சரித்திரத்தை கொஞ்சம் தெளிவாக புரட்டினால் அறியும். ஆனால் இன்னும் சில வருடங்களில் அந்த சரித்திரமே வேறு மாறி கூட எழுதப்படலாம்.

    எல்லா மதத்திலும் கயவர்கள் இருப்பது போல முஸ்லீம் மதத்திலும் இருப்பார்கள்.. ஆனால் பொதுவாக முஸ்லிம்களை மட்டும் தனிப்பட்ட முறையில் பெரும்பான்மை குற்றத்திற்கும் காரணமாக கருதுவது முறையல்ல.. ஜனநாயக நாட்டில் சட்டத்தின் பார்வையில் எல்லோரும் சமம்.. யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

    உலக அளவில் முஸ்லிம்களின் மீதான பார்வைக்கு பல்வேறான காரணங்கள் உள்ளது.. அது மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் பிரச்சனை வேறு விதமாகவும் / ஐரோப்பாவில் உள்ள பிரச்சனை வேறு விதமாகவும் உள்ளது.

    இஸ்லாத்தை பொறுத்தவரை ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எவ்வாறு வாழ வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டு உள்ளது. இதில் எந்த குழப்பமும் இல்லை.. யார் குழப்பினாலும் உண்மையான முஸ்லீம் தன் நிலையிலிருந்து மாற மாட்டான்.. இது தான் உண்மை. இந்தியாவில் ஷரியா சட்டத்தைக் கொண்டு வர முயற்சிப்பது வாய்ப்பில்லாத ஒன்று.. அதற்கு யார் முட்டு கொடுத்தாலும் நடைபெறாது.

  6. @Fahim

    “அரசாங்கத்தின் அனைத்து நலவுகளையும்‌ பட்டியல் போடும் நீங்கள் தவறுகளை பட்டியல் போட்டது உண்டா?”

    நான் எதற்கு பட்டியல் போடணும்ன்னு கேட்கிறேன்?

    நீங்க பேசும் போது நீங்க ஆதரிக்கும் விஷயங்களில் நடக்கும் தவறுகளை எல்லாம் பட்டியல் போட்டுப் பேசிக்கொண்டு உள்ளீர்களா?

    நான் நடுநிலை கிடையாது என்று 100 முறை கூறி இருப்பேன். என்னிடம் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?

    ஊருல இருக்குறவங்க எல்லாம் அவங்களுக்கு சரி என்று படுகிற கருத்தைக் கூறலாம் ஆனால், நான் மட்டும் நடுநிலையாக எல்லாவற்றையும் கூறிட்டு இருக்கணுமா?

    என்னங்க நியாயம் இது!

    நான் கூறியதில் தவறு இருந்தால் கேளுங்க விளக்கம் அளிக்கிறேன். அதை விட்டுட்டு அதை ஏன் கூறவில்லை, இதை ஏன் கூறவில்லை என்றால்..?!

    “உங்கள் மௌனம் தான் ஒரே ஆதாரம்.”

    அப்படியென்றால் இந்தியா முழுக்க நடக்கும் அடிப்படைவாத குற்றங்களைப் பற்றி நீங்க எதுவும் கூறாமல் அமைதியாக இருக்கிறீர்கள்.

    அதை ஏன் என்று கேட்டு, உங்கள் மௌனம் தான் ஆதாரம் என்று கூறலாமா?!

    கூறாமல் இருப்பதால், அனைத்தையும் ஏற்றுக்கொண்டதாக ஆகாது.

    “ஒவ்வொரு மனிதனும் எனக்கு பிடித்த முறையில் வாழ வேண்டும் என்று வற்புறுத்துவதும் ஒரு தீய சித்தாந்தம் தான். ”

    சரியா சொன்னீங்க, இந்தக்கட்டுரையே அதைப் பற்றியது தான்.

    “அந்த சித்தாந்தத்தின் தீய விளைவுகள் தான் நான் கூறிய சம்பவங்கள்.”

    உங்களைப்போல நானும் சம்பவங்களைக் கூறினால் அதற்கு தனிக்கட்டுரை தான் எழுதணும், அவ்வளவு உள்ளது.

  7. @யாசின்

    “தற்போதும் திரைப்படங்களில் அதிகம் முஸ்லீம்களை தான் தீவிரவாதியாகவும் / குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களாவும் காண்பிக்கின்றனர்.”

    இதற்கு காரணம், பெருமளவில் தீவிரவாத செயல்களை செய்தது முஸ்லீம் தீவிரவாத அமைப்புகள், அது உலகளவிலும் நடந்ததால், நடப்பதால் இவ்வாறு வந்து விடுகிறது.

    அல்கொய்தா, போகோஹரம், ISIS தீவிரவாதிகள் செய்வதெல்லாம் நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.

    கோவை, பெங்களூரு சிலிண்டர், டிஃபன் பாக்ஸ் குண்டு வைத்தவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகள் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளார்கள்.

    இவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் கிடையாது என்று கைகழுவ முடியாது. அவர்கள் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாதததாலையே அவர்கள் முஸ்லீம் இல்லை என்று ஆகி விட மாட்டார்கள்.

    செய்வது யார் என்று தான் சமுகம் பார்க்கும், அதனால் என்ன பாதிப்பு என்று தான் பார்க்கும்.

    Fahim சொன்ன சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இந்துக்கள் ஆனால், இப்படி செய்பவர்கள் இந்துக்களே இல்லை, இந்து மதத்தில் இவ்வாறு செய்யக் கூறப்படவில்லை என்று கூறினால் சரியாக இருக்குமா?

    கூறினால் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வார்களா? அல்லது பொது சமூகம் தான் ஏற்றுக்கொள்ளுமா?

    நான் கூறுவதை கோபப்படாமல் தற்போது உலகளவில் நடப்பதை பாருங்கள்.

    ஹமாஸ், ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை ஆதரிக்காமல், பொதுமக்களும் அரசும் அப்போதே துரத்தி இருந்தால், இந்நாடுகளுக்கு இந்நிலை வந்து இருக்குமா?

    தீவிரவாதிகளை வளர்த்து விடும், ஆதரிக்கும் எந்த நாடும் நிம்மதியாக இருக்காது. இன்னொரு எடுத்துக்காட்டு பாகிஸ்தான்.

    இவையல்லாமல் மத்திய கிழக்கு முஸ்லீம் அகதிகளால் ஐரோப்பா முழுவதும் கலவரம் , வன்முறை, பாலியல் குற்றங்கள்.

    இந்தியாவில் பங்களாதேஷ், ரோஹிங்யா முஸ்லிம்களால் தேசிய பாதுகாப்பு பிரச்சனைகள்.

    பெரும்பான்மை பிரச்சனைகள் இவர்களால் உலகளவில் நடக்கும் போது அப்படி தோன்றுவது இயல்பு தானே!

    நீங்களே சொல்லுங்க இது போன்ற பாதிப்பு முஸ்லீம் அல்லாத எந்தச் சமூகத்தினரால் உலகம் முழுவதும் நடக்கிறது என்று!

    அதாவது நான் மேற்கூறியது போல வேறு எந்த சமூகம் இவ்வாறு செய்துள்ளது என்பதை தீவிரவாத அமைப்புகளின் பெயர்களுடன் கூறுங்கள்.

    “இஸ்லாத்தை பொறுத்தவரை ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எவ்வாறு வாழ வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டு உள்ளது. இதில் எந்தக் குழப்பமும் இல்லை.. யார் குழப்பினாலும் உண்மையான முஸ்லீம் தன் நிலையிலிருந்து மாற மாட்டான்.. இது தான் உண்மை. ”

    நீங்கள் கூறுவதை மாற்றுக்கருத்து இல்லாமல் ஏற்றுக்கொள்கிறேன்.

    மாறாதவர்களை பற்றிப் பிரச்சனையே இல்லையே யாசின்.

    இங்கே மாறி விட்டவர்களையும், மாற்ற முயல்பவர்களையும் பற்றித்தானே இக்கட்டுரை .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!