தமிழக இடது சாரி ஊடகங்கள், இந்துக்களின் மீது வெறுப்புணர்வு வரும்படியான செய்திகளை வெளியிடுகின்றன. Image Credit
தமிழக ஊடகங்கள்
தமிழக இடதுசாரி ஊடகங்கள் வெறுப்புணர்வைக் கட்டமைக்கவே நிறுவனங்களை நடத்திக்கொண்டுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இவை அதிகரித்து விட்டது.
திமுக கட்டுப்பாட்டில் ஊடகங்கள் இருந்தாலும், ஊடகங்களே இடது சாரி எண்ணத்தில் இருப்பதால், திமுகவுக்கு வசதியாகி விட்டது.
ஊடகங்களுக்கு கரும்பு தின்னக் கூலி என்பது போல உள்ளது.
இந்துக்கள், பாஜக குறித்த என்ன எதிர்மறை செய்திகள் வந்தாலும் உடனடியாக விதவிதமான தலைப்புகளில் பகிரும் ஊடகங்கள், மாற்று மதங்களில் நடக்கும் தவறுகளைக் கூறுவதில்லை.
கூறுவதில்லை என்பதை விட மறைத்து விடுகிறார்கள்.
உத்தரப்பிரதேசம்
தமிழகத்தில் நடக்கும் கொள்ளை, கொலை, பாலியல் குற்றங்கள், மருத்துவமனை அவலங்கள், சாதிச் சண்டைகள் எதுவுமே தமிழக ஊடகங்களுக்குத் தெரியாது.
ஆனால், உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் ஒவ்வொன்றும் அத்துப்படி.
அதிலும் இந்துக்கள் பற்றிய குற்றச் செய்திகள் என்றால், ஒரு செய்தி விடாமல் பதிந்து விடுவார்கள்.
அங்கே முஸ்லீம் அடிப்படைவாதிகள் செய்யும் அட்டூழியங்கள் தமிழகச் செய்தி ஊடகங்களில் வருவதில்லை. அனைத்தையும் மறைத்து விடுகிறார்கள்.
இங்கே இருக்கும் அரைவேக்காடுகளுக்கும் என்ன ஏதென்று பார்க்கத் தெரியாது, உலகில், இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது தெரியாது.
உடனே யோகியை, பாஜகவை திட்டிக் கருத்திடுவார்கள்.
குற்றம் யார் செய்தால் என்ன? தவறு தானே! அதென்ன இந்துக்கள் என்றால் மட்டும் செய்தி, மற்ற மதத்தினர் என்றால் புறக்கணிப்பு.
அதிலும் இந்த ஏரித்திருடன் சேனல் இருக்கு பாருங்க, இந்துக்களை இழிவுபடுத்தவே சேனல் நடத்துகிறானோ என்று சந்தேகம்.
திருப்பரங்குன்றம்

மதச்சண்டையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே ஆட்டை வெட்டுவோம் என்கிறார்கள், அசைவ பிரியாணியை எடுத்துச்சென்று சாப்பிடுகிறார்கள்.
உடன் வந்தவர்கள் பிரியாணி சாப்பிட்டதை X ல் பதிவும் செய்கிறார் MP நவாஸ் கனி. எவ்வளவு தைரியம்! இவரெல்லாம் எப்படிப்பட்ட நபராக இருக்க முடியும்?!
இவருக்கு வாக்களித்த இராமநாதபுரம் இந்துக்களை சொல்லணும்.
முருகனின் அறுபடை வீட்டில் முதல் கோவிலான திருப்பரங்குன்ற மலையில் சென்று திமிருக்குன்னே சாப்பிடுகிறார்கள்.
திமுக அரசு ஆதரவு உள்ளது. யார் என்ன செய்து விட முடியும்? என்ற எண்ணம் தானே!
இதை ஒரு செய்தி நிறுவனம் கூட தங்கள் சமூக வலைத்தளத்தில் செய்தியாகப் பகிரவில்லை. நானும் ஒவ்வொரு தளமாகத் தேடிப்பார்த்து விட்டேன்.
எவ்வளவு பெரிய மோசமான செயல்.
நடவடிக்கை இல்லை
வெறுப்புணர்வை, பொய்களைப்பரப்பும் ஊடகங்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத L முருகன், தனது பதவியை ராஜினாமா செய்து விட்டுச் செல்லலாம், எந்த நடவடிக்கையும் எடுக்காத இவருக்கெல்லாம் எதற்கு பதவி?!
அடுத்த நாள் H ராஜா செல்கிறார் அதன் பிறகு அதை என்னவோ மதப்பிரச்சனை செய்பவரைப் போலத் தலைப்பு வைத்து எழுதுகிறார்கள்.
இதன் பிறகு வேறு வழி இல்லாமல் அசைவ பிரியாணி பற்றிய செய்தி வெளியாகிறது.
எப்படி பாருங்க!
அசைவ பிரியாணி சாப்பிட்டவர்களைப் பற்றி எழுத வக்கில்லை ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவிலுக்குப் போகிறவர் குறித்து தவறான விமர்சனம்.
இந்து அமைப்புகளில் யாராவது மசூதி அருகே சென்று பன்றிக்கறியைச் சாப்பிட்டு இருந்தால், தமிழக ஊடகங்கள் அனைத்தும் கொந்தளித்து இருக்கும்.
உலகமே அழிந்து விட்டது போலக் கூப்பாடு போட்டு, விவாதம்மேல் விவாதம் நடத்தி ஒரு வாரத்துக்கு ஓட்டுவார்கள்.
வெட்கம் கெட்டவர்கள்.
X, WhatsApp இல்லையென்றால், தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாது.
இதில் ஆறுதலளிக்கும் செய்தி, அடிப்படைவாத முஸ்லிம் அமைப்புகள் தான் இந்த வேலையைச் செய்தது, இவர்களின் செயலுக்கு மற்றவர்கள் ஆதரவு அளிக்கவில்லை.
இந்துக்களே!
தமிழகத்தில் இந்துக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள், ஒருதலைப்பட்சமாக நடத்தப்படுகிறார்கள். அது அரசியலாக இருந்தாலும், ஊடகமாக இருந்தாலும்.
இது எதுவுமே புரியாமல் கட்சிக்காக, நடிகருக்காக என்று இவர்களை ஆதரிக்கும் கண்மூடித்தனமான கேடுகெட்ட செயலைச் செய்யாதீர்கள்.
இந்து மதத்தை அழிக்கும், அவமானப்படுத்தும் ஊடகங்களின், அரசியல்வாதிகளின் செயலுக்குத் துணை போகாதீர்கள்.
உங்கள் விரலாலே உங்கள் கண்ணைக் குத்துகிறார்கள் ஆனால், அறியாமல் உள்ளீர்கள்.
திமுகவும், தமிழக ஊடகங்களும் மிகப்பெரிய துரோகத்தை இந்துக்களுக்குச் செய்து கொண்டுள்ளார்கள்.
இது எதுவுமே புரியாமல் ஆதரித்துப் பேசாதீர்கள்.
Read : இடது சாரிகள் நாட்டுக்கு உலகுக்கு கேடு
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
வேண்டுமென்றே ஒரு பிரச்சனையை அமைதியாக இருக்கும் இடத்தில் உருவாக்க வேண்டும் என்று நினைக்கும் கயவர்களை நிச்சயம் யார் என்று கண்டறிந்து அவர்கள் செய்த செயலுக்கான தண்டனையை நிச்சயம் தர வேண்டும்.. அவர்கள் யாராக இருந்தாலும் சரி.. பாரபட்சம் பார்க்காமல் தண்டனை அளிக்கப்பட வேண்டும்..
எது உண்மை என்பதை மக்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.. ஆட்சியில் இருப்பவர்களும் / காவல் துறையும் / நீதி மன்றங்களும் சரியான முறையில் விசாரித்து நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியம்… இல்லையென்றால் எதிர்காலத்தில் பல தேவையில்லாத பிரச்சனைகள் தமிழகத்தில் எழுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு..
இது போல ஏற்படும் பிரச்சனைகளை ஆரம்பத்திலே கிள்ளி ஏறிய வேண்டும்.. தற்போது சமூக வலைத்தளங்களில் தங்களை ஒரு பெரிய ஆள் போல காட்டி கொள்ள வேண்டும் என்பதற்காகவும் , தனிப்பட்ட முறையில் சமுதாயத்தில் கவனம் பெற வேண்டும் என்பதற்காகவும் மற்றும் பணத்திற்காகவும், பல தேவையில்லாத செயல்களை திட்டமிட்டே செய்து வருகின்றனர்.. இதை செய்தால் இந்த விளைவு தான் ஏற்படும் என்பதை தெளிவாக உணர்ந்தே செய்கிறார்கள்.. இவர்களை ஒடுக்குவது மிக மிக அவசியம்..
@யாசின்
சரியாகக் கூறினீர்கள்.
வாக்குவங்கி அரசியலுக்காக அரசியல்வாதிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால், பிரச்சனைகள் பெரிதாகிறது.
நீதிமன்றம் தலையிட்டு சரியான தீர்வை வழங்க வேண்டும்.