கடலில் மீனவர்களின் வாழ்க்கையை ஓரளவு நெருக்கமாகப் பார்க்கும் படமாக Kondal.
Kondal
ஒரு ஒரு சம்பவத்துக்கு வர்கீஸை காவல்துறை தேடுகிறது.
அதிலிருந்து தற்காலிகமாகத் தப்பிக்கக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மிகப்பெரிய படகில் பலரோடு இவரும் ஒப்பந்தமாகிறார். Image Credit
படகில் சென்ற பிறகு அங்குள்ளவர்களுக்கு வர்கீஸ் வந்தது வேறொரு காரணத்துக்காக என்ற சந்தேகம் வருகிறது.
வர்கீஸ் வந்த நோக்கம் கதையில் த்ரில்லிங்காக செல்கிறது. இறுதியில் என்ன ஆனது என்பதே Kondal.
கடல் வாழ்க்கை
கதை வழக்கமான பழிவாங்கும் கதை தான்.
ஆனால், சுவாரசியமாக இருந்தது என்னவென்றால், இதுவரை பார்க்காத, காணாத மீனவர்களின் கடல் வாழ்க்கை இதில் உள்ளது.
மீனை எப்படி பிடிக்கிறார்கள்? கொக்கி போடுவது, பிடித்த மீனைப் பதப்படுத்துவது என்று பல விஷயங்கள் காண்பிக்கப்படுகிறது.
இவையெல்லாம் கேள்விப்பட்டுள்ளேன் ஆனால், இது போன்று பார்த்ததில்லை.
இது போன்ற படகுகளில் கழிப்பறை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பது உட்பட எல்லாமே புதியது, இதெல்லாம் கேள்விப்பட்டது கூட இல்லை.
பரபரப்பான சுறா மீன் காட்சி வருகிறது, முடிந்தவரை கிராஃபிக்ஸ் செய்துள்ளார்கள்.
கடலுக்குள்ளே செல்பவர்களுக்குப் பிரச்சனையானால் என்ன செய்வார்கள்? கொலை செய்யப்பட்டால் எப்படி மறைக்கிறார்கள்? என்று பலதும் வருகிறது.
திரைக்கதை
துவக்கத்தில் சுமாராகச் சென்றாலும், கடலுக்குள் படகு சென்ற பிறகு வரும் காட்சிகள் அனைத்தும் பரபரப்பாகவே உள்ளது.
சண்டைக்காட்சிகளும் நன்றாக எடுத்துள்ளார்கள்.
ஒளிப்பதிவும், பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது. கடலிலும், சில காட்சிகளை கிராஃபிக்சிலும் எடுத்துள்ளார்கள்.
ஒரு படகுக்குள் பெரும்பான்மையான காட்சிகளை அமைப்பது எளிதல்ல, கடின உழைப்பை கொடுத்துள்ளார்கள்.
அதோடு பரந்து விரிந்த கடலுக்குள் பயணிப்பது த்ரில்லிங்காக உள்ளது.
யார் பார்க்கலாம்?
முன்னரே கூறியபடி இது வழக்கமான பழிவாங்கல் கதை தான்.
ஆனால், இதில் வரும் கடல் பகுதி காட்சிகள் பலருக்கும் புதிய அனுபவமாக இருக்கும். எனவே, இதைப் பார்க்க விரும்புபவர்கள் படத்தைப் பார்க்கலாம்.
NETFLIX ல் காணலாம். தமிழிலும் உள்ளது.
Directed by Ajith Mampally
Written by Ajith Mampally, Roylin Robert, Satheesh Thonakkal
Produced by Sophia Paul, Manuel Cruz Darwin
Starring Antony Varghese, Raj B. Shetty, Shabeer Kallarakkal
Cinematography Deepak D. Menon, Jithin Stanislaus
Edited by Sreejith Sarang
Music by Sam C. S
Release date 13 September 2024
Running time 147 minutes
Country India
Language Malayalam
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. இது வரை இந்த படத்தை பற்றி கேள்விப்பட்டதில்லை.. ஆனால் இந்த பதிவை படித்த உடன் படத்தை பார்க்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளுக்குள் எழுகிறது.. குறிப்பாக இது போல கதைக்களம் (கடல் பகுதி காட்சிகள்) எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று.. பகிர்வுக்கு நன்றி..