IDFC FIRST Wealth Credit Card Review

4
IDFC FIRST Wealth Credit Card

ண்டுக்கட்டணமில்லா கடனட்டைகளில் குறிப்பிடத்தக்கவை IDFC கடனட்டைகள். அதில் IDFC FIRST Wealth Credit Card பற்றிப் பார்ப்போம். Image Credit

IDFC FIRST Wealth Credit Card

IDFC பல்வேறு வகையான ஆண்டுக்கட்டணம் இல்லா கடனட்டைகளை வெளியிட்டுள்ளது. அவற்றில் சில குறிப்பிட்ட சேவைகளுக்காக விரும்பப்படுகிறது.

எனவே, இதில் வழக்கமான கடனட்டைகளுக்கு என்ன வசதிகளோ அவற்றைத் தவிர்த்து, என்ன முக்கியமான சேவை என்பதைப்பார்ப்போம்.

IDFC FIRST Wealth வாங்குவதற்கு இரு காரணங்கள் மட்டுமே!

  • ஒரு காலாண்டுக்கு இலவச 4 Railway Lounge உள்ளது.

அதாவது, சென்னை மத்திய ரயில் நிலையம் சென்றவர்கள் தற்போது அங்குள்ள ஓய்வறையை கவனித்து இருக்கலாம்.

₹179 கட்டணம் செலுத்தினால், இரண்டு மணி நேரம் குளிர் சாதன அறையில் அமரலாம். இங்கே அந்நேரத்து உணவு மற்றும் தேநீர் கிடைக்கும்.

  • மாதத்துக்கு இரு முறை திரைப்பட டிக்கெட் சலுகையுடன் (25%-75%) பெறலாம்.

இவையல்லாமல் சேவைகள் என்றால், காப்பீடு உட்பட பல்வேறு சேவைகளுக்கு Rewards Points கிடைக்கும், அவற்றைப் பயன்படுத்தலாம்.

Railway Lounge

இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட Railway Lounge ல் இக்கடனட்டையை பயன்படுத்தலாம்.

சென்னை மத்திய ரயில் நிலையத்தில் உள்ள குளிர்சாதன ஓய்வறை பயனுள்ளதாக உள்ளது ஆனால், உணவு தரமானதாகவோ, சுவையானதாகவோ இல்லை.

எதோ கடமைக்குச் செய்து வைக்க வேண்டும் என்பது போல உள்ளது.

கடனட்டை பயன்படுத்தி இலவசமாக செல்பவர்களுக்கு இது ஒரு பெரிய குறையாக தெரியாது ஆனால், ₹179 செலுத்தி வருபவர்களுக்கு இதுவொரு குறையே!

குறைந்தது மாதமொருமுறை அல்லது இரண்டு மாதத்துக்கு ஒருமுறை ரயிலில் ஊருக்குச் செல்வதால், இக்கட்டணமில்லா முறை பயனுள்ளதாக உள்ளது.

பிற்சேர்க்கை

Complimentary Railway Lounge Access (as applicable) will now require a minimum spend of ₹20,000 in the previous calendar month.

Example : Spends of ₹20,000 or more in March 2025 will enable complimentary lounge access for April 2025.

Movie Ticket

  • Paytm வழியாக முன்பதிவு செய்து, இக்கடனட்டை வழியாக பணம் செலுத்தினால், சலுகை கிடைக்கும்.
  • குறைந்தது இரு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய வேண்டும்.
  • மாதம் இரு முறை பயன்படுத்தலாம்.
  • இணையத்தின் வழியாக முன் பதிவு செய்யும் போது ₹30 – ₹35 ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள்.
  • IDFC FIRST Wealth Credit Card வழியாக முன்பதிவு செய்யும் போது இக்கூடுதல் கட்டணத்தைத் தவிர்ப்பதோடு, சலுகையையும் பெறலாம்.

எனவே, எப்படிப்பார்த்தாலும் இலாபமே!

தற்போது Paytm Movie சேவையை Zomato வாங்கி விட்டது. முன்பதிவு செய்யும் தளம் பின்னர் மாறலாம்.

குறிப்பிட்டதக்க சேவைகள்

  • Personal Accident cover of upto ₹10,00,000.
  • Reward points that never expire.

மற்ற சேவைகள் வழக்கமாக அனைத்து கடனட்டைகளிலும் வருவது தான்.

யார் வாங்கலாம்?

மேற்கூறிய Movie Ticket Offer தேவைப்படுகிறவர்கள் வாங்கலாம்.

இவர்கள் அல்லாமல், ஆண்டுக்கட்டணம் விரும்பாத ஆனால், கடனட்டை வேண்டும் என்று நினைப்பவர்கள் (Life Time Free) வாங்கலாம்.

கடனட்டை பலன்கள்

8 கடனட்டைகள் பயன்படுத்தி வருகிறேன், இதுவரை ஒருமுறை கூட அபராதம் செலுத்தியதில்லை.

எங்கெங்கு எந்தக் கடனட்டையைப் பயன்படுத்தினால் பயனோ அங்கெல்லாம் அதற்குத் தகுந்த கடனட்டையை பயன்படுத்துவேன்.

இதுவரை நான் பயன்படுத்திய கடனட்டைகளில் கூடுதல் Cashback பெற்று பயனடைவது என்றால் பின்வரும் கடனட்டைகள்.

AXIS Ace

AXIS Airtel

இதன் பிறகு அவ்வப்போது பயன் பெறுவது SBI Cashback Card. மற்றவை வெவ்வேறு காரணங்களுக்காக வைத்துள்ளேன், சரியாக பராமரித்து வருகிறேன்.

இதற்கு CRED App மிகவும் உதவியாக உள்ளது.

RuPay UPI

HDFC Regalia RuPay கடனட்டையை முழுக்க UPI க்கு மட்டுமே பயன்படுத்துகிறேன்.

நகைக்கடைகளில் சில நேரங்களில் கடனட்டையை பயன்படுத்த அனுமதிக்காத நேரத்தில் UPI பயன்படுத்த அனுமதிக்கிறார்கள்.

அந்நேரத்தில் RuPay UPI மிக உதவிகரமாக உள்ளது.

அதாவது கடனட்டையை பயன்படுத்தி வாங்கவும் முடிகிறது, அதே சமயம் வங்கிக்கணக்கிலிருந்து செலுத்துவதையும் தவிர்க்கிறது.

இதுவரை இணையத்தில் Cashback, Rewards Points மூலம் எவ்வளவு சேமித்துள்ளேன் என்பதை பின்னர் தனிக்கட்டுரையாக எழுதுகிறேன்.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

4 COMMENTS

  1. கடனட்டைகள் மீது ஆரம்பத்திலிருந்தே பெரிதான ஆர்வம் இல்லை.. காரணம் என்னுடன் பணி புரிந்த சில நண்பர்கள் ஏதோ ஒரு ஆர்வத்தில் கடனட்டை வாங்கி விட்டு பின்பு அதை சரியாக பயன்படுத்த தெரியாமல், சந்தித்த பிரச்சனைகளை பார்த்த பிறகு இந்த பக்கமே எட்டி பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்..

    மேலும் வேறு ஒரு நாட்டில் பணியில் இருக்கும் போது, தேவையில்லாமல் எந்த சுமைகளையும் ஏற்றி கொள்ள வேண்டாம் என்று இதை முற்றிலும் தவிர்த்து விட்டேன்.. இன்று வரை கடனட்டை வாங்க வில்லை.. எதிர்காலத்திலும் வாங்க வாய்ப்பு மிக மிக குறைவு..

    நீங்கள் சரியாக திட்டமிட்டு 8 அட்டைகளை பயன்படுத்தி வருவது உண்மையில் வியப்பை தருகிறது.. மேலும் நீங்கள் சிறந்த முறையில் திட்டமிடுபவர் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.. எனக்கு தெரிந்த நட்பு வட்டத்தில் 8 அட்டைகள் வைத்து இருப்பது நீங்கள் ஒருவர் மட்டுமே!!!

    8 அட்டைகள் வைத்து இது வரையிலும் சிறப்பாக கையாண்டு வருவது மேலும் சிறப்பு!!! நீங்கள் எவ்வாறு திட்டமிட்டு அதை முறையாக பயன்படுத்தி வருகிறீர்கள் என்பதை ஒரு பதிவாக வெளியிட்டால், அது நிச்சயம் நிறைய பேருக்கு உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன்..

    காரணம் தற்போது பெருபான்மை மக்களிடம் கடனட்டை இருக்கிறது.. ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் நிறைய பேர் சிக்கிக் கொள்கிறார்கள். குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு திட்டமிடல் என்பது சற்று கடினமாக ஒன்று..

  2. Amazon Pay கண்டிப்பா எட்டில் ஒன்று என நினைக்கின்றேன். இதைவிட வேறு கார்டில் கேஷ் பேக் அதிகம் உள்ளதா?

  3. @யாசின்

    “வேறு ஒரு நாட்டில் பணியில் இருக்கும் போது, தேவையில்லாமல் எந்த சுமைகளையும் ஏற்றி கொள்ள வேண்டாம் என்று இதை முற்றிலும் தவிர்த்து விட்டேன்”

    நீங்கள் கூறுவது சரி.

    ஆனால், இதில் தெரியாமல் மாட்டிக்கொள்வதற்கு வாய்ப்பில்லை , தெரிந்தே தான் விழுகிறார்கள். காரணம், ஆசை.

    ஆசையைக் கட்டுப்படுத்த தெரிந்தவர்கள், சரியாக திட்டமிடுபவர்களுக்கு கடனட்டை ஒரு வரப்பிரசாதம்.

    “இன்று வரை கடனட்டை வாங்க வில்லை.. எதிர்காலத்திலும் வாங்க வாய்ப்பு மிக மிக குறைவு”

    வாங்கியே ஆக வேண்டும் என்பதில்லை ஆனால், இதனால் பல்வேறு நன்மைகளும் உள்ளன.

    “நீங்கள் சிறந்த முறையில் திட்டமிடுபவர் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.”

    உண்மை தான் யாசின். சரியாக திட்டமிடுவேன்.

    திட்டமிட்டதாலே மிகப்பெரிய கடன் சுமையிலிருந்து என்னால் வெளியே வர முடிந்தது. திட்டமிட்டதால் மட்டுமே வேறு எங்கும் சிக்கிக்கொள்ளாமல் நிதானமாக வாழ்க்கை சென்று கொண்டுள்ளது.

    8 கடனட்டைகளை வைத்து இருந்தாலும் அதிலும் ஒரு ஒழுங்கை பின்பற்றுகிறேன். தேதி சரியாக திட்டமிடுதல், அனைத்து கட்டணங்களையும் ஒரே நேரத்தில் செலுத்துதல் ஆகியவற்றை பின்பற்றுகிறேன்.

    CRED App இதற்கு எனக்கு பெருமளவில் உதவுகிறது. இது இல்லையென்றால், மேலாண்மை செய்வது கடினம் ஆனால், முடியாது என்பதல்ல.

    “நீங்கள் எவ்வாறு திட்டமிட்டு அதை முறையாக பயன்படுத்தி வருகிறீர்கள் என்பதை ஒரு பதிவாக வெளியிட்டால், அது நிச்சயம் நிறைய பேருக்கு உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன்.”

    பரிசீலிக்கிறேன் யாசின். எவ்வளவு சேமித்துள்ளேன் என்பதை கட்டுரையாக எழுதும் எண்ணம் உள்ளது ஆனால், எப்படி கடனட்டையை பயன்படுத்துகிறேன் என்பதை இதுவரை விரிவாக எழுதவில்லை.

    காரணம், இதில் பல்வேறு தனிப்பட்ட செயல்களைக் கூற வேண்டி வருவதால், இது பாதுகாப்பானதாக இருக்குமா? என்ற சந்தேகம் உள்ளது.

    எனவே, இதை எப்படி எழுதலாம் என்று திட்டமிட்டு, பிரச்சனை வராத அளவுக்கு எழுத முடியும் என்ற நம்பிக்கை வந்த பிறகு எழுதுகிறேன்.

    “தற்போது பெருபான்மை மக்களிடம் கடனட்டை இருக்கிறது.. ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் நிறைய பேர் சிக்கிக் கொள்கிறார்கள்.”

    உண்மை.

    சமீபத்தில் கூட, தெரிந்த ஒருவர் கடனட்டையால் பல லட்சங்களை இழந்துள்ளார். கேட்கவே எரிச்சலாக இருந்தது.

    இதற்கு காரணம் பயன்படுத்தத் தெரியாதது, அதோடு கட்டுப்பாடில்லாத செலவுகள்.

    இவ்வளவு கூடுதல் கட்டணம் வரும் என்று தெரிந்தும் தவறை செய்பவர்களை என்ன சொல்வது? முட்டாள்கள் தான்.

    இவர்களை நம்பித்தான் கடனட்டை நிறுவனங்கள் வாழ்கின்றன.

    “இளைய தலைமுறையினருக்கு திட்டமிடல் என்பது சற்று கடினமாக ஒன்று..”

    சிலர் சரியாக திட்டமிடுகிறார்கள் சிலர் கஷ்டப்பட்டு வளராததால் பணத்தின் அருமை தெரியாமல் கண்டபடி செலவு செய்கிறார்கள்.

    சிலர் செய்யும் செலவுகளைப் பார்த்தால் பயமாக உள்ளது. எப்படி இது போல முட்டாள்தனமாக நடந்து கொள்கிறார்கள்? எதிர்காலத்தை நினைத்துப் பயமே இல்லையா? என்று தோன்றுகிறது

  4. @அரி

    “Amazon Pay கண்டிப்பா எட்டில் ஒன்று என நினைக்கின்றேன். இதைவிட வேறு கார்டில் கேஷ் பேக் அதிகம் உள்ளதா?”

    ஆமாம்.

    ICICI Amazon Card பயன்படுத்துகிறேன், ஆண்டுக்கட்டணம் கிடையாது.

    அமேசானில் பொருட்கள் வாங்கினால் மட்டுமே இதில் பயன் (5% தள்ளுபடி), மற்றபடி பெரியளவில் பயன்படுத்துவது கிடையாது.

    ஏற்கனவே இது பற்றி எழுதியுள்ளேன்.

    https://www.giriblog.com/hdfc-credit-card-vs-icici-credit-card-vs-sbi-credit-card-which-is-best/

    இதுவரை பயன்படுத்தியதில் அதிக இலாபம் / Cashback பெற்றது AXIS ACE கார்டு தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!