த்ரில்லர் கதையாக Gumasthan. Image Credit
Gumasthan
வழக்கறிஞர் அல்ல ஆனால், வழக்கறிஞர் தெரிந்து இருக்காத சட்ட ஓட்டைகளைப் பள்ளிப்பாடன் தெரிந்து வைத்து இருப்பார்.
இவரிடம் வந்து ஆலோசனைகளைக் கேட்டு, வழக்குகளில் தப்பித்து விடுவார்கள். அப்படிப்பட்ட பள்ளிப்பாடனே ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்வார்.
ஊருக்கே வழி சொன்ன பள்ளிப்பாடன் தன் பிரச்சனையில் தப்பித்தாரா? என்பதே Gumasthan.
பள்ளிப்பாடன்
இந்தியாவில் இல்லாத சட்டங்களே இல்லை ஆனால், அந்தச் சட்டங்களில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி குற்றம் செய்தவர்கள் தப்பித்து விடுகிறார்கள்.
வழக்கறிஞர் இல்லையென்றாலும், பள்ளிப்பாடன் கேட்கும் கேள்விகள், நடந்து கொள்ளும் முறை மிரட்டலாக உள்ளது.
சத்தம் பிடிக்காத இவர் காட்சிகள் சமுத்திரம் படத்தில் பிரமிட் நடராஜன் நடிப்பை நினைவு படுத்தியது 🙂 .
பள்ளிப்பாடனுக்கு Migraine பிரச்சனையுள்ளதால் இயல்பாகவே சத்தம் ஆகாது.
சிக்கல்
இவ்வாறு போய்க் கொண்டு இருக்கையில், பள்ளிப்பாடன் ஒரு கொலை வழக்கில் சிக்கிக் கொள்வார்.
ஊருக்கே ஆலோசனை கூறும் பள்ளிப்பாடன் எப்படித் தன் வழக்கில் தப்பிப்பார் என்று பலரும் ஆர்வமாக இருப்பார்கள்.
இதற்காக இவர் திட்டமிடும் செயல்கள் அசத்தல் ரகமாக இருக்கும். இதற்கிடையே இவர் எப்போது சிக்குவார் என்று காத்துக்கொண்டு இருக்கும் ஒரு காவல் அதிகாரி.
இது போன்ற படங்கள் குற்றவாளிகளுக்குப் பாடம் எடுப்பது போலவே உள்ளது. திரைப்படங்களைப் பார்த்துக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்குப் பொருத்தமான படம்.
ஒரு தவறை எப்படி மறைப்பது? எப்படி முன்கூட்டி திட்டமிடுவது? அடையாளங்களை எப்படி மறைப்பது? என்று அனைத்தையும் கூறுகிறது.
சில ட்விஸ்ட்கள் சுவாரசியமாக உள்ளது.
குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கும் பள்ளிப்பாடனுக்கு இறுதியில் நடப்பது #கர்மா என்றே தோன்றுகிறது.
காட்சிகள்
ஒரு கிராமம் அதைச்சுற்றிய காட்சிகள் அவ்வளவே!
செலவே கிடையாது ஆனால், அட்டகாசமாக திரைக்கதை அமைக்கிறார்கள். எங்கே இருந்து கதைகளைப் பிடிக்கிறார்களோ!
ஒளிப்பதிவும் பின்னணி இசையும் ரொம்ப நன்றாக இருந்தது. இரைச்சல் பின்னணி இசையாக இல்லாமல், ரசிக்கும்படியாக இருந்தது.
‘நான் என்னங்க சொல்லப்போறேன், trying trying keep on trying, Better Luck Next Time‘ என்று பெப்சி உமா கூறுவது போல மலையாளப்படங்களைப் பாராட்டிச் சலித்து விட்டது 🙂 .
யார் பார்க்கலாம்?
த்ரில்லர் படங்களை விரும்புபவர்கள் அனைவரும் பார்க்கலாம்.
இக்கதையில் சிலவற்றைக் கூறினால், பார்க்கும் போது முன்கூட்டியே கணித்து விடுவீர்கள், சுவாரசியமாக இருக்காது என்பதால், அளவோடு கூறி உள்ளேன்.
பாருங்கள், ஏமாற்றமளிக்காது.
பரிந்துரைத்தது ஸ்ரீனிவாசன். Amazon Prime ல் காணலாம்.
Directed by Amal K. Joby
Written by Riyaz Ismat
Produced by Muzafir Abdulla
Starring Bindhu Sanjeev, Nibin Navas, Aathira Rajeev, Bibin George, Dileesh Pothan
Cinematography Kunjunni S. Kumar
Edited by Ayub Khan
Music by Stephen Devassy
Release date 27 September 2024
Country India
Language Malayalam
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி. நெட்பிளிக்ஸ்ல ஸ்குவிட் கேம் (squid game)வெப் சீரிஸ் பாருங்க. வேற லெவல். இப்ப சீசன் 2 வந்திருக்கு. பணத்திற்கு கஷ்டப்படும் மக்களை கேம் விளையாடு கூப்பிட்டு அதில் வெற்றி பெற்றால் கோடி கணக்கில் ரூபாய் கிடைக்கும். தோற்றால் அங்கேயே கொன்று விடுவார்கள்.
மனிதனின் சுயநலம் பணத்தாசை எப்படி எல்லாம் அழிவில் கொண்டு விடும் என்று அவ்வளவு சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்கள். விளையாட்டு எல்லாம் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டாக தான் இருக்கும் ஆனால் அதில் தான் டிவிஸ்ட் உள்ளது. சீசன் 3 இந்த வருடம் ஜூனில் வருகிறது அதி தான் கடைசி சீசன். அவ்வளவு பரபரப்பு. நிச்சயம் குழந்தைகளுடன் பார்க்க முடியாது அவ்வளவு வன்முறை. 2 நாட்களாக என் மூளையில் squid game பிஜிஎம் இசை தான் ஓடிக்கொட்டிருக்கிறது. முதல் சீசன் 9 எபிசோடு. 2வது சீசன் 7 எபிசோடு. ஒவ்வொரு எபிசோடும் 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை வரும்.
கிரி.. இது வரை இந்த படத்தை பற்றி அறியவில்லை.. ஆனால் படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் இயல்பாகவே ஏற்படுகிறது.. மலையாள சினிமா வேறு ஒரு தரத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.. இங்கு நமக்கு பொங்கல் விடுமுறைக்கே சரியான படம் ஏதும் இல்லாதது போல தோன்றுகிறது.. தரவுகளை வைத்து பார்த்தால் 12 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்து கிடப்பில் கிடந்த மதகத ராஜா தான் பொங்கல் விடுமுறையில் அதிக வசூல் செய்யும் என எண்ணுகிறேன்..
மலையாள படங்களையும் / மற்ற மொழிப்படங்களையும் compare செய்யமுடியதா வகையில் முற்றிலும் வேறு தளத்தில் மலையாள திரையுலகம் பயணப்பட்டு கொண்டிருக்கிறது.. இன்னும் சில ஆண்டுகளில் உச்சத்தை தொடுவார்கள் என எண்ணுகிறேன்.. சாதாரணமான ஒரு படத்தை பார்த்தலே படம் அசத்தலாக இருக்கிறது.. பெரிய நடிகர் / நடிகை / இயக்குனர் / பிரமாண்டம் எதுவும் இல்லாமல் படம் செம்மையாக இருக்கிறது.. புது புது இயக்குனர்கள் நிறைய படங்களை இயக்கி வருகிறார்கள்.. பெரும்பாலும் எல்லா படங்களும் வித்தியாசமான கதைக்களம் கொண்டதாக இருக்கிறது..
Hiii ungaluku unga website ah vachu money earn pannanum naa contact me
9600849617
@ஹரிஷ்
பார்க்க வேண்டிய பட்டியலில் உள்ளது ஆனால், நேரம் அல்லது சூழ்நிலை இல்லை.
@யாசின்
“இங்கு நமக்கு பொங்கல் விடுமுறைக்கே சரியான படம் ஏதும் இல்லாதது போல தோன்றுகிறது.”
இதற்கு காரணம், இடது சாரிகள் தமிழ் சினிமாவை நாசம் செய்து விட்டார்கள். எனவே தான் 12 வருட பழைய படம் கூட நன்றாக ஓடுகிறது.
இதுவே கூறுகிறது, மக்கள் எதற்கு காத்து இருக்கிறார்கள் என்று. இதைப்பற்றிய கட்டுரையை எழுதுகிறேன்.
கடுப்பாக உள்ளது.
“பெரும்பாலும் எல்லா படங்களும் வித்தியாசமான கதைக்களம் கொண்டதாக இருக்கிறது.”
ஆமாம், இவர்களுக்கு மட்டும் எப்படி கதை கிடைக்கிறது? என்று புரியவில்லை. எனக்கு இவர்கள் படமே அதிகம் பிடிக்கிறது.
இவர்கள் அனைத்து வகை படங்களையும் எடுக்கிறார்கள் ஆனால், அளவான முதலீட்டில்.
இங்கேயும் கடந்த வருடம் எவ்வளவோ கோடி நட்டம் என்று செய்தியில் படித்தேன்.
@Sundaresan
தற்போதைக்கு எந்த எண்ணமும் இல்லை. அப்படி தேவைப்பட்டால் தெரிவிக்கிறேன்.