ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) ஏன் முக்கியம்?

2
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

ழியர் வருங்கால வைப்பு நிதி என்பது, எதிர்காலத்தில் ஊழியருக்குச் சேமிப்பின் பயனை அடைய உதவும் அருமையான திட்டம். Image Credit

ஊழியர் வருங்கால வைப்பு நிதி

ஊழியர்கள் ஊதியத்தைப் பல்வேறு காரணங்களால் செலவழித்து எதிர்காலத்தில் சிரமப்படக் கூடாது என்று கொண்டு வந்ததே ஊழியர் வருங்கால வைப்பு நிதி.

இத்திட்டத்தின் மூலம் ஊழியரின் அடிப்படை ஊதியத்திலிருந்து 12% பிடிக்கப்படும், நிறுவனமும் பெரும்பாலும் இதே தொகையை ஊழியர் கணக்கில் செலுத்தும்.

சில நிறுவனங்கள் செலுத்துவதில்லை.

அடிப்படை ஊதியம்

உங்கள் ஊதியம் எவ்வளவு அதிகம் என்பது முக்கியமில்லை. உங்கள் அடிப்படை ஊதியம் (Basic Salary) எவ்வளவு என்பதே முக்கியம்.

எடுத்துக்காட்டுக்கு, ₹50,000 ஊதியம் ஆனால், அடிப்படை ஊதியம் ₹20,000 என்றால், இதில் 12% PF என்றால், குறைவாகவே கிடைக்கும்.

ஆனால், ₹40,000 அடிப்படை ஊதியம் என்றால், 12% PF பலன் அதிகளவில் கிடைக்கும்.

சிலர் அதிக ஊதியம் வாங்கியும், PF பணம் குறைவாக இருப்பதற்கு காரணம் அடிப்படை ஊதியம் குறைவாக இருப்பதே.

ஊழியர் நலன் விரும்பும் நிறுவனம் என்றால், அடிப்படை ஊதியத்தை அதிகமாகக் கொடுப்பார்கள்.

மத்திய பாஜக அரசு இதைக் கட்டாயப்படுத்தி சட்டம் கொண்டு வந்ததால், பலரின் அடிப்படை ஊதியம் அதிகரித்துள்ளது. இதனால் PF தொகையும் உயர்ந்துள்ளது.

VPF (Voluntary Provident Fund)

இவையல்லாமல் ஊழியர் விருப்பப்பட்டால் VPF என்று கூடுதலாகவும் செலுத்தலாம்.

RISK எடுக்க விரும்புபவர்கள் VPF க்கு பதிலாக மியூச்சுவல் ஃபண்ட்டில் SIP முறையில் செலுத்தலாம்.

சிலர் தொடர்ந்து VPF செலுத்தி வருகிறார்கள். இவர்களது வைப்பு நிதி வேகமாக வளர்ந்து வரும்.

இது போன்ற சேமிப்புகள் கண்ணுக்குத் தெரியாமல் வளர்ந்து வருவதாகும். ஊதியத்திலிருந்தே பிடித்துக் கொடுக்கப்படுவதால், சேமிக்கப்படுவதே தெரியாது.

வந்த பணத்தைச் சேமிக்க முயலும் போது தான் கடினமாக இருக்கும் ஆனால், ஊதியமே இவ்வளவு தான் என்று மனம் தெளிவாகி விட்டால், குழப்பம் இருக்காது.

எதனால் முக்கியம்?

EPF எனப்படும் ஊழியர் வைப்பு நிதி மிக முக்கியமானதாகும்.

வேறு வருமானம் இல்லாமல் ஊதியத்தை மட்டுமே நம்பி செயல்படுபவர்களுக்கு மிக அவசியமான ஒன்றாகும். இவையே எதிர்காலத்தில் உதவும்.

பலரும் EPF பணத்தை அவசரக்காலத் தேவைக்கு எடுத்து விடுகிறார்கள், இதுவொரு தவறான செயலாகும்.

முடியாத பட்சத்துக்குத் தான் எடுக்கிறார்கள் என்றாலும், முடிந்த வரை இதில் கை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஏனென்றால், தற்போது கஷ்டம் என்று எடுப்பதை விட மோசமான சூழல் பணி ஓய்வு பெற்ற பிறகு வரும். அந்நேரத்தில் தற்போதைய கஷ்டங்கள் ஒன்றும் இல்லாததாகத் தோன்றும்.

எனவே, EPF ல் பணம் இருப்பதையே மறந்து விடுவதே நல்லது.

வரும் ஊதியமே இவ்வளவு தான் என்று மனதைத் தயார் செய்து கொண்டால், இங்கே இருக்கும் பணத்தை எடுப்பதைப் பற்றிய சிந்தனையே வராது.

EPF தளம்

முன்னர் IRCTC & EPF தளங்களின் மீது இந்தியா முழுக்க புகார் இருந்தது.

IRCTC தளம் சீரமைக்கப்பட்டு தற்போதும் PEAK நேரங்களில் திணறுகிறது என்றாலும், முந்தைய நிலையோடு ஒப்பிடும் போது மிகப்பெரிய முன்னேற்றம்.

அதே போல EPF தளம் பலராலும் குறை கூறப்பட்டு வந்தது, குழப்பமான வடிவமைப்பு, பல நேரங்களில் வேலை செய்யாது.

தற்போது தளத்தை மேம்படுத்தியுள்ளார்கள். 100% சிறப்பு என்று கூற முடியாது ஆனால், நிச்சயம் பாராட்டத் தக்க மாற்றம்.

எளிமை

முன்பு குழப்பமான வடிவமைப்பில், தகவல்களுடன் இருந்தது ஆனால், தற்போது எளிதாகப் புரிந்து கொள்ள முடிவதுடன், விவரங்களும் (Graph) எளிதாக உள்ளது.

இரு EPF தளங்களை (UAN & EPF Passbook) ஏன் இணைக்காமல் உள்ளார்கள் என்று புரியவில்லை. UAN தளத்தில் Password மாற்றினால், Passbook தளத்தில் மாற (SYNC) நாட்கள் எடுக்கிறது.

ஆண்டுக்காண்டு ஊதியத்தின் வளர்ச்சி எப்படியுள்ளது என்பதை EPF Passbook தளம் சென்றால் தெரிந்து கொள்ளலாம்.

சீரான வளர்ச்சி உள்ளதா? ஏற்றத் தாழ்வுகள் உள்ளதா? என்பதை Graph உடன் அட்டகாசமாகக் கடந்த 12 வருடங்களுக்குக் காண்பிக்கும்.

ஊதிய உயர்வு, இறக்கத்துக்குத் தகுந்த மாதிரி Graph உயர்ந்து, இறங்கி இருக்கும்.

எதிர்காலம்

காலங்கள் மாறி வருகிறது எனவே, அதீத திட்டங்கள் தேவைப்படுகிறது.

இதை உணராமல் மனம் போன போக்கில் செலவு செய்து வந்தால், மிக மோசமான நிலையை வயதான காலத்தில் எதிர்கொள்ள வேண்டி வரும்.

மோசமான நிலை என்றால், எதற்காக உயிர் வாழ வேண்டும்? எப்படி வாழ்க்கையை நடத்துவது? என்று நினைக்கும் அளவுக்கு. அவமானமே வாழ்க்கையாகி விடும்.

இவ்வாறு கூறுவது மிகைப்பட்டதாகத் தோன்றினால் உங்களுக்கு இதன் முக்கியத்துவம், வீரியம் இன்னும் புரியவில்லை என்றே அர்த்தம்.

முன்பு கூட்டு குடும்பம் இருந்தது எனவே, வயதான காலத்தில் சமாளிக்க முடிந்தது ஆனால், தற்போது நிலையே மாறி விட்டது.

சரியான திட்டமிடலுடன் பணத்தைச் சேமிக்கவில்லை என்றால், கொடுமையான எதிர்காலத்தைச் சந்திக்க வேண்டியது வரும்.

இது விளையாட்டல்ல, பொறுப்புடன் இருங்கள்.

எதிர்காலத்துக்கு EPF மிக முக்கியமானது. எனவே, அதில் கை வைக்காதீர்கள்.

தொடர்புடைய கட்டுரை

EPF கணக்கில் பெயரை மாற்றுவது எப்படி?

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

2 COMMENTS

  1. ஊழியர்கள் ஊதியத்தைப் பல்வேறு காரணங்களால் செலவழித்து எதிர்காலத்தில் சிரமப்படக் கூடாது என்று கொண்டு வந்ததே ஊழியர் வருங்கால வைப்பு நிதி. உண்மை கிரி…

    மத்திய பாஜக அரசு இதைக் கட்டாயப்படுத்தி சட்டம் கொண்டு வந்ததால், பலரின் அடிப்படை ஊதியம் அதிகரித்துள்ளது. இதனால் PF தொகையும் உயர்ந்துள்ளது.
    வரவேற்க்க தக்க ஒன்று..

    சிலர் தொடர்ந்து VPF செலுத்தி வருகிறார்கள். இவர்களது வைப்பு நிதி வேகமாக வளர்ந்து வரும். இது போன்ற சேமிப்புகள் கண்ணுக்குத் தெரியாமல் வளர்ந்து வருவதாகும். ஊதியத்திலிருந்தே பிடித்துக் கொடுக்கப்படுவதால், சேமிக்கப்படுவதே தெரியாது.
    நிச்சயம் இது எதிர்காலத்தில் மிக பெரிய பயனை அளிக்கும்..

    வரும் ஊதியமே இவ்வளவு தான் என்று மனதைத் தயார் செய்து கொண்டால், இங்கே இருக்கும் பணத்தை எடுப்பதைப் பற்றிய சிந்தனையே வராது. கண்டிப்பாக நமது மனதை தயார் செய்து வைத்தால் இந்த பணம் பற்றிய சிந்தனையே வராது..
    வேறு வழியே இல்லாமல் போகும் போது தான் கடைசியில் இதை பற்றிய எண்ணம் வரும்.

    எதிர்காலத்தை நினைத்து பார்த்தால் ஒரு வித அச்சம் உள்ளூர எழுவதை நிச்சயம் தவிர்க்க முடியவில்லை.. அவசியமற்ற செலவுகளை தவிர்த்தாலும், எதிர்பாராத வண்ணம் தீடிரென்று வரும் செலவுகளை சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.. உண்மையில் இந்த பதிவு எனக்கும் உள்ளுற ஒரு எச்சரிக்கையை அளிக்கும் பதிவாக தான் கருதுகிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. @யாசின்

    ” அவசியமற்ற செலவுகளை தவிர்த்தாலும், எதிர்பாராத வண்ணம் தீடிரென்று வரும் செலவுகளை சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.”

    உண்மை தான். இதற்கென்று கொஞ்சம் பணத்தை ஒதுக்கி வைப்பது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!