கனவு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் | 3

2
கனவு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் | 3

உட்கட்டமைப்பு

இங்கு தான் என்னை மிகவும் பொறாமைப்பட வைக்கிறது உபி. Image Credit

நெடுஞ்சாலைகள், புதிய சாலைகள், விமான நிலையங்கள், மெட்ரோ / ரயில் நிலையங்கள், அகலப்படுத்தப்படும் சாலைகள், பொலிவு பெறும் பழைய இடங்கள், ஆக்கிரமிப்பு அகற்றல் என்று தெறிக்க விட்டு வருகிறார்.

கிட்டத்தட்ட முக்கிய நகரங்களைப் புதிய நெடுஞ்சாலைகளால் இணைத்து விட்டார், இதோடு நிறுத்தாமல் மேலும் புதிய சாலை அமைக்கும் பணி தொடர்கிறது.

நாட்டின் மத்தியில் உபி இருப்பதால், கடல் வழி வணிகம் இல்லை. எனவே, சாலைப்போக்குவரத்து மட்டுமே சரக்குகளைக் கையாள ஒரே வழி.

இதை உணர்ந்த யோகி குறுகிய காலத்தில் ஏராளமான நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளார், அமைத்துக்கொண்டே இருக்கிறார்.

Expressway Pradesh என்று செல்லமாக உபி அழைக்கப்படுகிறது.

ஏராளமான பெரிய நிறுவனங்கள் தற்போது உபியில் அமைக்கப்பட்டு வருகின்றன. அதில் தமிழகத்தின் பெருமையான ZOHO நிறுவனமும் ஒன்றாகப்போகிறது.

2025 Project Completion (Credit – UP Index)

  • Gorakhpur Link Expressway
  • Kanpur Lucknow Expressway
  • India’s largest airport will open in Noida (also known as Jewar) this year
  • Entire 82 kms of Delhi Meerut Rapid Rail will be completed
  • Meerut will become the seventh city in UP to have Metro network
  • India’s longest expressway to be completed in one single phase, Ganga Expressway will open in second half of 2025
  • Kanpur Metro Line-1 will be fully operational this year
  • One of India’s largest cable stayed river bridge will be completed over Ganga river in Prayagraj

முழுமையான தகவல்களுக்கு Projects in Uttar Pradesh தளம் செல்லவும்.

விரைவு

யோகியின் ஆட்சி மீது பொறாமையும் எரிச்சலும் ஒரே சேர வருவதே இவர்களின் விரைவான பணிகளால் தான்.

கோவிட் காலத்தில் கோயம்பேடு பாலம் 1.7 கிமீ தூரத்தைக் கட்ட எடுத்த நேரத்தில் உபியில் 340 கிமீ பூர்வாஞ்சல் நெடுஞ்சாலை அமைத்தார்கள்.

சென்னையில் நான்கு வருடங்களாக டைடல் பூங்கா பாலத்தைக் கட்டி வருகிறார்கள். அதிலொரு பகுதி முடிக்கப்பட்டு 3+ மாதங்களாகியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்படவில்லை.

ஆனால், உபியில் மெட்ரோ பணிகள், நெடுஞ்சாலை பணிகள், மருத்துவக் கல்லூரிகள், கட்டிடங்கள் அசுர வேகத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வருகிறது.

போக்குவரத்தில் யோகி பெரும் புரட்சியே செய்து கொண்டுள்ளார்.

இவற்றைப்பார்த்து ஏக்கம் மட்டுமே பட முடிகிறது. நம் மாநிலத்தில் இதுவெல்லாம் கனவே. கட்டியவையும் அடுத்த வாரமே உடைந்து விழுகிறது, எதிலும் தரமில்லை.

அதைவிட மோசமாக 180 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் திமுக கொடி கட்ட துளை போடப்படுகிறது.

புதிய தரமான பாலத்தையும் கட்ட முடியவில்லை, ஏற்கனவே உள்ள தரமான பாலத்தையும் சேதப்படுத்துகிறார்கள். நெஞ்சு பொறுக்குதில்லையே!

யார் சிறந்த நிர்வாகி?

உபி தற்போதைய தமிழகத்தை விட 100 மடங்கு மோசமான மாநிலமாக இருந்தது. எனவே இவற்றைச் சரி செய்ய 15 வருடங்கள் போதாது.

ஆனால், யோகி ஆட்சி தமிழகத்திலிருந்தால் தமிழகத்தைச் சீர்படுத்த 6 மாதங்கள் போதுமானது காரணம், இங்குள்ளவர்கள் கடந்த வருடங்களில் மாறியவர்களே.

இவ்வளவு செய்தும் இன்னும் உபி மாற்றம் பெற 10 வருடங்கள் போதாது என்றால், எம்மாதிரியான மோசமான நிலையிலிருந்து மாறி வருகிறது என்று உணரலாம்.

எனவே, ஏற்கனவே நன்றாக இருந்த மாநிலத்தை மோசமாக்கியதற்குத் திராவிடம் பெருமைப்பட எதுவுமில்லை ஆனால், மிக மோசமாக இருந்த மாநிலத்தைக் குறுகிய காலத்தில் மாற்றும் யோகியே சிறந்த நிர்வாகி.

கனவு முதலமைச்சர் யோகி

யோகி போன்ற ஒருவர் தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேவை.

இவரைப் போன்றவர்களாலே மாநிலம் வளர்ச்சி, பாதுகாப்பை பெறும்.

கடந்த 70 வருடங்களில் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் செய்யாததை 7 வருடங்களில் யோகி சாதித்துள்ளார்.

குற்றங்கள் செய்தவர்கள் தப்பிக்க முடியாது, ஆக்கிரமிப்பு செய்ய முடியாது, வளர்ச்சித் திட்டங்கள் ஏராளம், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கிறது. அரசு வேலைகள் சரியாக நடக்கவில்லையென்றால், அதிரடி நடவடிக்கை.

இதைவிட ஒரு பொதுஜனத்தின் எதிர்பார்ப்பு என்னவாக இருந்து விடப்போகிறது?!

யோகி ஆட்சி மேலும் தொடர்ந்தால் போலிப்பெருமையில் குளிர் காய்ந்து வரும் தமிழகத்தை, உபி விரைவில் தாண்டிச்செல்லப் போவது 100% உறுதி.

இதை ஆணித்தரமாக, சவாலாகக் கூறுகிறேன்.

யோகியின் மீதும் விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால், ஒட்டுமொத்தமாக ஒருவரின் செயல்பாடுகள் தீர்மானிக்கப்பட வேண்டுமே தவிர, ஓரிரு சம்பவங்களை வைத்து விமர்சிப்பது சரியல்ல. 100 / 100 யாராலும் முடியாது குறிப்பாக நிர்வாகத்தில்.

அனைவரையும் திருப்தி செய்ய நினைப்பவன் தலைவனாக இருக்கத் தகுதியற்றவன். நியாயமாக நடப்பது வேறு, அனைவரையும் திருப்தி செய்ய நினைப்பது வேறு.

யோகி போன்ற ஓர் முதலமைச்சரே என் விருப்பம்.

கொசுறு 1

மேற்கூறியதில் பொய் இருப்பதாக, மிகைப்படுத்தப்பட்டதாக எவர் கருதினாலும் விவாதத்துக்கு வரலாம்.

என்னால் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியும்.

கொசுறு 2

உபி மற்றும் குஜராத் சென்று அதன் உட்கட்டமைப்பையும், நகரங்கள் எவ்வாறு உள்ளது என்பதையும் பார்க்க வேண்டும் என்பது பல நாள் விருப்பம்.

நிச்சயம் நடக்கும், அப்படி நடக்கையில் பயணக் கட்டுரைகளை எழுதுகிறேன் 🙂 .

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

2 COMMENTS

  1. கிரி.. முதல்வர் யோகியை குறித்து எனக்கு 10% கூட தெரியாது.. காரணம் நான் ஆரம்பத்தில் இவரை குறித்து அறிந்த சில தகவல்கள் சரியானதாக இல்லை.. அதனால் இவரை குறித்து தெரிந்து கொள்வதில் எந்த ஆர்வமும் இல்லை.. எனக்கு தெரிந்த சில தகவல்கள் கூட நீங்கள் உங்கள் பதிவுகளில் இவரை குறித்து எழுதியது தான்..

    3 பதிவுகளையும் முழுவதும் படித்த பிறகு இவரை குறித்து மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இயல்பாகவே ஏற்படுகிறது.. ஒரு முதல்வர் தன் நிலையில் சரியாக இருந்தால் எதுவும் சாத்தியமே!!! பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. @யாசின்

    உங்களுக்கு இவரைப்பற்றி தவறாக தெரிந்ததற்கு இரு காரணங்கள் இருக்கலாம்.

    1. தமிழக ஊடகங்கள் வழக்கமாக பாஜக மீதுள்ள வெறுப்பில் பரப்பும் பொய் செய்திகள், தவிர்க்கும் நல்ல செய்திகள்.

    2. உங்கள் சமூகத்தினர் அவர் மீதுள்ள கோபத்தில் (இந்து மான்க் என்பதால்) அவர் பற்றி எதிர்மறை செய்திகளை கூறி இருக்கலாம்.

    ஆனால், இவர் நல்லவருக்கு நல்லவர், கெட்டவர்களுக்கு அவர்களை விட மோசமானவர்.

    இவர் செய்துள்ள சாதனைகள் அளவற்றவை.

    எனக்கு உட்கட்டமைப்பு பற்றி அதிக ஆர்வம் உள்ளதை நீங்கள் அறிவீர்கள். எனவே , இது குறித்த செய்திகளை அதிகம் தேடிப்படிப்பேன்.

    அவ்வாறு படித்ததில் உபியில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. எப்படியொரு நபர் இவ்வாறு அசுரத்தனமாக வேலை செய்ய முடியும்? என்று வியக்க வைக்கிறார்.

    புள்ளி விவரங்களை கொடுத்தால் ஆர்வமாக படிக்க மாட்டார்கள் என்பதால், குறைந்தளவில் கொடுத்து விட்டு அவர் செயல்களை மட்டும் விளக்கினேன்.

    உபியில் அடிப்படைவாத முஸ்லிம்கள் ஏராளம் உள்ளனர். அவர்கள் பெருமளவில் குற்றச்செயல்களை செய்து வருகின்றனர்.

    இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் போது அதை முஸ்லிம்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையாக பரப்புகிறார்களே தவிர, குற்றவாளி என்ற எண்ணத்தில் சிந்திப்பதில்லை.

    தமிழக செய்திகளில் இவர் செய்யும் நல்ல செயல்கள் மறைக்கப்பட்டு அங்கு நடைபெறும் குற்றச்செயல்கள் பரப்பப்படுகிறது.

    இங்குள்ள ஊடகங்கள் இந்து மத எதிர்ப்பு ஊடகங்கள் எனவே, அங்கு அடிப்படைவாத முஸ்லிம்கள் செய்யும் குற்றங்கள் செய்திகளை மறைத்து, இந்துக்கள் என்றால் மட்டும் வெளியிடுகிறார்கள்.

    இதனால், உபியில் என்ன நடைபெறுகிறது என்பதை இவர்கள் கூறியே மக்கள் தெரிந்து கொள்வதால், பலருக்கும் அங்குள்ள உண்மை நிலை தெரிவதில்லை.

    குறித்து வைத்துக்கொள்ளுங்கள் இன்னும் சில வருடங்களில் தமிழக ஜிடிபியை உபி எளிதாகக் கடந்து செல்லும்.

    யோகி ஆட்சியில் தமிழகம் இருந்தால், இந்தியாவிலேயே மஹாராஷ்டிரா க்கு பிறகு தற்போதுள்ளதை விடச் சிறந்த மாநிலமாக தமிழகம் மாறியிருக்கும்.

    உட்கட்டமைப்பு, சுற்றுலா, வளர்ச்சி திட்டங்கள், சாலை போக்குவரத்து என்று அனைத்திலும் தூள் கிளப்பியிருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!