கனவு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் | 2

0
கனவு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் | 2

குறை தீர்ப்பு

இதுவரை பொதுமக்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியவற்றை அரசியல்வாதிகள் அனுபவித்துக்கொண்டு இருந்தனர். Image Credit

இதனால், இங்குள்ள மக்கள் இது தான் வாழ்க்கை என்று பழகி விட்டார்கள்.

யோகி வந்த பிறகே நலத்திட்ட பலன்கள் நேரடியாக மக்களைச் சென்றடைந்தன. நிதி உதவி நேரடியாக மக்கள் (ஜன்தன்) வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

குறிப்பிட்ட கால இடைவெளியில் யோகியே நேரடியாக மக்களைச் சந்தித்து அவர்களது குறைகள் அடங்கிய விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்கிறார்.

சிலவற்றுக்கு உடனடி தீர்வும் கிடைக்கிறது.

துவக்கத்தில் இதுவொரு விளம்பரம் என்று நினைத்தேன் ஆனால், இன்றுவரை இது தொடர்கிறது. இதில் பெண்கள் அதிக ஆர்வத்துடன் கலந்து கொள்கிறார்கள்.

முஸ்லிம் பெண்கள் அதிகளவில் கலந்து கொள்கின்றனர். முஸ்லிம் பெண்கள் எதனால் யோகிக்கு வாக்களிக்கிறார்கள் என்பதற்கு இதுவும் முக்கியக்காரணம்.

பொதுமக்கள் அனைவரும் இருக்கையில் அமர்ந்து இருக்க, யோகி ஒவ்வொருவரிடமும் வந்து விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்கிறார்.

இவ்வாறு கொடுக்கும் போது யாரும் எழுந்து நிற்கக் கூடாது, அதையும் மீறி அனிச்சையாக எழ முயல்பவர்களை அவர்கள் பின்புறம் உள்ள பெண் காவல் அதிகாரிகள் அவர்களை அமர வைத்து விடுவார்கள்.

எவரும் தப்பிக்க முடியாது

எதையாவது பேசிவிட்டோ, சமூகத்தளத்தில் காணொளி வெளியிட்டோ தமிழகம் போலத் தப்பித்து விட முடியாது.

தவறு செய்தவர்கள் தர்ம அடி வாங்கி மன்னிப்பு கேட்டுக் காணொளி வெளியிடும் சம்பவம் உடனடியாக நடக்கும்.

இவர்கள் எல்லாம் எங்கே தண்டிக்கப்படப்போகிறார்கள்! என்று வெறுப்பாகக் கடந்து செல்லும் நிகழ்வுகளுக்கெல்லாம் உடனடி நடவடிக்கை பார்க்கையில் அப்படியொரு நிம்மதியாகவும், வியப்பாகவும் உள்ளது.

கடவுள் சிவனை இழிவுபடுத்திப் பேசிய U2 Brutus எந்தத் தண்டனையும் பெறாமல் தமிழகத்தில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டு இருப்பது இன்றுவரை மனம் அமைதி கொள்ளவில்லை.

பலர் மறந்து இருக்கலாம் ஆனால், நான் மறக்கவில்லை, மறக்க மாட்டேன்.

இது போன்று திமுக ஆட்சியில் குற்றம் செய்து தப்பித்தவர்கள், எந்த நடவடிக்கையும் இல்லாமல் சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டு இருப்பவர்கள் ஏராளம்.

கைது செய்யப்படாமல் தைரியமாக உலவுகிறார்கள், தொடர்ந்து குற்றம் இழைக்கிறார்கள் ஆனால், மாற்றுக்கட்சியினர் என்ன செய்தாலும் உடனடி கைது.

ஆனால், மதம், கட்சி சாராமல் குற்றம் செய்தவர் எவராக இருந்தாலும், உபியில் தண்டிக்கப்படுகையில் அப்படியொரு திருப்தியை அளிக்கிறது.

ஆக்கிரமிப்பு

உபியில் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது ஆக்கிரமிப்புகள். பெரும்பாலும் இவற்றைச் செய்வது அதிகாரத்தில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள்.

கருணையே பார்க்காமல் அனைத்தும் இடிக்கப்பட்டு இடம் மீட்கப்பட்டு வருகிறது.

கேங்ஸ்டர்களிடமிருந்து கைப்பற்ற இடங்களில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டு, வீடுகள் இல்லாதவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

யோகிக்கு புல்டோசர் பாபா என்ற பெயரும் உண்டு.

இவருக்கு வாக்களித்தவர்களாக இருந்தாலும் ஆக்கிரமிப்பு செய்தவர்களாக இருந்தால், ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது. இதை என்னால் நம்பவே முடியவில்லை.

யோகி நிலையில் இருந்தால், செய்யத் தயக்கமாக இருக்கும் அல்லது செய்யமாட்டேன்.

தலைவனாக இருப்பவன் இதயம் கூறுவதற்கு மதிப்பு கொடுக்கலாம் ஆனால், அறிவு சார்ந்தே முடிவு எடுக்க வேண்டும்.

அடிக்கடி நான் கூறுவது யோகிக்கு 100% பொருந்தும்.

பொதுமக்கள் விரும்புவதைச் செய்பவன் தலைவன் அல்ல, எதைச் செய்தால் பொதுமக்களுக்கு நல்லதோ அதைச் செய்பவனே சிறந்த தலைவன்‘.

அனைவருக்கும் பிடித்தவனாக ஒரு தலைவன் இருக்க முயற்சித்தால், மோசமான, ஆபத்தான, நியாயமற்ற ஆட்சியையே வழங்க முடியும்‘.

யோகி ஓர் சிறந்த தலைவன்.

இதயம் கூறுவதைக்கேட்கலாமா?

இதை எளிதாக புரிந்து கொள்ள ஒரு எடுத்துக்காட்டு,

Aylan என்ற அகதி சிறுவன் படகில் வரும் போது கவிழ்ந்து அவன் உட்பட பலர் இறந்தது மிகப்பெரிய அதிர்வலையை உலகம் முழுவதும் எழுப்பி அகதிகளை ஐரோப்பாவினர் வரவேற்றனர்.

ஆனால், அகதிகள் அல்லாத குற்றப்பின்னணி கொண்டவர்களும் இதைப்பயன்படுத்தி ஐரோப்பாவில் நுழைந்தனர். தற்போது ஐரோப்பா மிகப்பெரிய சிக்கலில் உள்ளது.

ஒரு குழந்தையின் மீதான பரிதாபம், பல நூறு குழந்தைகளைக் காவு வாங்கி விட்டது, வாங்கிக்கொண்டு இருக்கிறது. ஐரோப்பா இதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைந்து விட்டது.

எனவே, எதில் இதயம் சார்ந்து முடிவு எடுக்கப்பட வேண்டுமோ அதில் மட்டுமே எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் அதற்கான விளைவுகள் மோசமாக இருக்கும்.

சொந்தச் செலவில் சூனியம்

உபியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அவர்களது இடம் எளிதாக அரசால் கையகப்படுத்தப்பட வேண்டும் என்றால், அவர்கள் குற்றங்கள் செய்தால் போதும்.

தரமான ஆப்பு உடனடியாகக் கிடைக்கும், அதாவது சொந்தச் செலவில் சூனியம்.

தற்போது குற்றம், கலவரம் செய்பவர்கள் இதுவரை தப்பித்து இருந்தால், உடனடியாக அவர்களது ஆக்கிரமிப்பு இடங்களை இழக்க வேண்டியதிருக்கும்.

சம்பல் பகுதியில் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், ‘ஏன் செய்தோம்’ என்று நொந்து கொள்ளும் அளவுக்குப் புரட்டி எடுத்துக்கொண்டுள்ளார்.

அங்குள்ள ஆக்கிரமிப்பு கோவில் மீட்கப்பட்டது. இதுவரை மின்சாரக் கட்டணமே செலுத்தாமல் இருந்தவர்கள் மாட்டிக்கொண்டார்கள்.

இதுவரை மின்கட்டணமே செலுத்தாமல் இருந்த சமாஜ்வாடி கட்சி MP Ziaur Rahman Barq க்கு ₹1 1/2 கோடி கட்டணம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

எதனால் இங்கே இவ்வளவு நாட்களாக மின்சார வாரிய ஊழியர்கள் செல்லவில்லை என்றால், சென்று கேள்வி கேட்டால், அடிவாங்காமல் அல்லது உயிரோடு திரும்ப முடியாது என்பதால்.

தற்போது மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியாக மாறி வருகிறது.

இதன் தொடர்ச்சி அடுத்த கட்டுரையில்….

Read : கனவு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் | 1

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!