மோடி கூறியதைக் கவனித்தீர்களா?

3
மோடி கூறியதைக் கவனித்தீர்களா?

ட்ஜெட் தாக்கலின் முன்பு, இந்த முறை ஒன்றை கவனித்தீர்களா? என்று மோடி கேட்டார். Image Credit

மோடி

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றக் கூட்டத்தொடரின் போது ஏதாவது சம்பவம் நடக்கும் அதை வைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் கூச்சல் குழப்பம் செய்வார்கள்.

ஆனால், 2025 – 2026 நிதி நிலை அறிக்கை தாக்கலின் போது எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை.

வழக்கமாக, Hindenburg, மணிப்பூர், Pegasus என்று எதாவது ஒரு பிரச்சனையைக் கிளம்புவார்கள். சொல்லிவைத்துப் போல நடக்கும், கூட்டத்தொடரை முடக்குவார்கள்.

எந்த விவாதத்தையும் நடத்த விட மாட்டார்கள், மக்களின் வரிப்பணம் தினமும் வீணாகும்.

இந்த முறை என்ன நடந்தது?

இந்த முறை அவ்வாறு எந்தப்போராட்டமும் நடைபெறவில்லை, பிரச்சனை கிளம்பவில்லை. எனவே, எதிர்க்கட்சிகள் கூச்சல் குழப்பம் செய்ய முடியாமல், வெளிநடப்பு செய்து விட்டனர்.

எப்படி?

முக்கியக்காரணம், அமெரிக்காவில் நடந்த ஆட்சி மாற்றம்.

ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாக்கு எதிராகச் செயல்படும் Deep State வகையறாக்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.

Deep State பிரச்சனை இந்தியாக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கும் தான்.

ராகுல்

முன்பு ராகுல் அமெரிக்கா சென்று வந்தாலே, புது பிரச்சனையை ஆரம்பிப்பார். காரணம், அவருக்குக் கொடுக்கப்படும் வேலையே அது தான்.

சாதி ரீதியான பிளவைப் பேசுவார் அல்லது மத ரீதியான பிரச்சினைகளைக் கூறி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவார்.

தற்போது பட்ஜெட் தயாரிப்பில் OBC நபர்கள் இல்லை என்று உளறினார்.

சைனாவை ஆதரித்துக் கூட்டத்தொடரில் பேசி வரும் ராகுல் கையில் ஆட்சி கிடைத்தால் என்ன ஆகும்! என்று யோசித்துப்பார்த்தாலே பயமாக உள்ளது 🙁 .

ட்ரம்ப் கடுமையான இடது சாரி எதிர்ப்பு நிலையைக் கொண்டவர்.

எனவே, ராகுல் போன்று இந்தியாக்கு எதிராகச் செயல்படுபவர்களுக்கு எந்த உதவியும் அவரிடமிருந்து கிடைக்காது.

தற்போது ஆட்சி மாற்றம் நடந்து நிதியை ட்ரம்ப் நிறுத்தி விட்டதாலும், இடதுசாரிகள் குழப்ப நிலையில் உள்ளதாலும், இந்த முறை எந்தப் பிரச்சனையும் நடக்கவில்லை.

USAID

USAID (United States Agency for International Development) நிதி வழங்கும் துறையை ட்ரம்ப் கிட்டத்தட்ட தடை செய்து விட்டார்.

இதன் இணைய தளம், X கணக்கு முடக்கப்பட்டு விட்டது.

USAID is run by radical lunatics‘ என்று ட்ரம்ப்பும் ‘USAID is a criminal organization‘ என்று எலன் மஸ்க்கும் விமர்சித்துள்ளனர்.

வருமானம் இழந்த இடது சாரிகள் DOGE பொறுப்பில் உள்ள எலன் மஸ்க்கை திட்டிப் போராட்டம் நடத்திக்கொண்டுள்ளார்கள் 🙂 .

போராட்டங்களுக்கு நிதி

இதிலிருந்து வரும் நிதியை இந்தியாவில் உள்ள அமைப்புகள், ஊடகங்கள் பெற்றுக்கொண்டு இந்தியாக்கு எதிராக செயல்பட்டு வந்தன.

இந்தியாவின் வளர்ச்சி திட்டத்தை (எடுத்துக்காட்டு, துறைமுகம், பசுமைச் சாலை, அணுசக்தி) போராட்டம் நடத்தி முடக்குவது.

ஸ்டெர்லைட் பிரச்சனை போராட்டத்தில் ‘மக்கள் அதிகாரம்’ என்ற அமைப்பு அந்நிய சக்திகளுக்காக இயங்கியது கண்டறியப்பட்டது.

இவையல்லாமல் CAA, NRC போராட்டங்கள், ஷாஹின்பாக், மணிப்பூர், டெல்லி வன்முறை ஆகியவற்றிலும் பங்குள்ளது.

வரும் காலங்களில் போராட்டங்கள், மதமாற்றங்கள் தீவிரம் குறைய வாய்ப்புள்ளது.

இடது சாரிகள் நாட்டுக்கு உலகுக்கு கேடு என்பது வெறும் பேச்சல்ல, நடைமுறை எதார்த்தம்.

மோடி

இரண்டாவது முக்கியக்காரணம் மோடி நடவடிக்கைகள்.

வெளிநாட்டிலிருந்து இந்தியாக்கு மறைமுகமாகக் குடைச்சல் கொடுக்கும் ஜார்ஜ் சோராஸ், அவரைப் போல உள்ளவர்கள் பலர் நடத்தும் NGO க்கள்.

இவர்கள் இந்திய மக்களுக்கு உதவுவது போல நடந்து கொண்டு பின்னணியில் அரசுக்கு எதிராகப் போராட்டங்களைத் தூண்டுவது, திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் தடுப்பது, மதமாற்றம் செய்வது போன்றவற்றில் ஈடுபடுவார்கள்.

மணிப்பூரில் 6 மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தைக் கூட்டத்தொடரின் போது அப்போது தான் நடந்தது போலப் பிரச்சனையை உருவாக்குவார்கள்.

இவர்களையே அந்நிய சக்திகள் என்று மோடி குறிப்பிட்டார்.

வழக்கமான அரசியல்வாதிகள் அல்ல

மோடி அமித்ஷா பற்றி ஏற்கனவே கூறியுள்ளேன். இவர்கள் வழக்கமான அரசியல்வாதிகள் அல்ல. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்பட மாட்டார்கள்.

சாதாரணமானவர்களுக்கு இவர்கள் எதுவுமே செய்யாதது போலத் தோன்றும் ஆனால், இறுதியில் தான் அவர்கள் பின்னணியில் செய்தது தெரிய வரும்.

அதில் ஒன்று தான் NGO. மேற்கூறிய செயல்களைச் செய்து வந்த NGO க்கள் உரிமத்தைத் தொடர்ந்து ரத்து செய்து வருகிறார்கள்.

பல சத்தம் இல்லாமல் நடக்கும். பாதிக்கப்பட்ட NGO புலம்பினால் மட்டுமே தெரியும்.

மோடி ஏன் அதை செய்யக் கூடாது? என்று கேட்பது எளிது ஆனால், அதன் பின்னணியில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன, அவை நமக்குத்தெரியாது.

எனவே, நம்மைப் போல உணர்ச்சிவசப்பட்டு தடாலடியாக எதையும் செய்ய முடியாது.

Anti India NGO’s

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் NGO (Gates Foundation) பல மொள்ளமாரித்தன வேலைகளைச் செய்து வருகிறது.

மேலோட்டமாக பார்த்தால், ‘அட! என்ன மனுசன்யா!‘ என்று தான் தோன்றும்.

ஆனால், பின்னணியில் இவர்கள் செய்யும் திருட்டுத்தனம் கவனித்துப் பார்ப்பவர்களுக்கே புரியும்.

இவர்களைப் போன்ற ஏராளமான NGO க்கள் இந்தியாவில் உள்ளன. ட்ரம்ப் செய்வது போல அதிரடியாக எல்லாவற்றையும் முடக்க முடியாது.

காரணம், இந்திய சட்ட வழிமுறைகள் சிக்கலானது. எனவே தான், மோடி அமித்ஷா போன்றவர்கள் மெதுவாகக் காய்களை நகர்த்தி வேலையை முடிக்கிறார்கள்.

எதனால் அமெரிக்கா போலக் கள்ளக்குடியேறிகளை இந்தியா அதிரடியாக வெளியேற்ற முடியவில்லை என்பதை யோசித்தால், மேற்கூறியவற்றுக்கான விடை கிடைக்கும்.

பொறுமை அவசியம்

எதைச்செய்தாலும் உச்சநீதிமன்றம் எதையாவது கூறி தடை போடும்.

எனவே, அவசரப்பட்டால் காரியம் கெடும். எனவே, தரவுகளை, ஆதரவை உறுதி செய்து நடவடிக்கை எடுப்பார்கள்.

கள்ளக்குடியேறிகளை வெளியேற்றினால், Deep State அறிவுறுத்தலில் நாட்டை நாசமாக்கும் இடது சாரிகள் பெரிய போராட்டம் நடத்துவார்கள்.

காரணம், இவர்களுக்கு நாட்டைப் பற்றியோ, நாட்டு மக்களைப் பற்றியோ, அவர்கள் பாதுகாப்பு பற்றியோ எந்தக்கவலையும் இல்லை.

சுருக்கமாக, யார் நாசமா போனாலும் கவலையில்லை, அவர்களுக்குப் பணம் வருகிறதா, அதிகாரம் கிடைக்கிறதா என்பது மட்டுமே குறி.

சுருக்கமாக ராகுல் மனநிலை.

எட்டப்பன்கள்

இந்தியாவை அந்நிய சக்திகளிடமிருந்து காப்பாற்றுவது எளிது ஆனால், அவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு எட்டப்பனாக செயல்படுவர்கள் தான் பிரச்சனையே.

இந்த முறை பட்ஜெட் கூட்டத்தொடர் பிரச்சினை இல்லாமல் துவங்கியதற்கு முழு முதற் காரணம், அமெரிக்காவில் ஆட்சி மாறி ட்ரம்ப் வந்தது.

இரண்டாவது, மோடி அமித்ஷா எடுத்து வரும் நடவடிக்கைகள்.

வரும் காலத்தில் Deep State யைத்தொடர்ந்து ட்ரம்ப் எதிர்ப்பாரா? இந்தியாக்கு எதிராகச் செயல்படுபவர்கள் ஒடுக்கப்படுவார்களா? என்பதைப் பார்ப்போம்.

திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆதரவாளர்கள், நாட்டுக்கு எதிராக செயல்படும் இவர்களின் உண்மை நிலையைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

இவர்களை ஆதரித்து மாநில, நாட்டின் வளர்ச்சியைக் கெடுக்கும் இவர்களின் செயல்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ துணை போகாதீர்கள்.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

3 COMMENTS

  1. Anna please share your political related articles in your Twitter account as well, very informative and a must read articles about current politics for all people…

  2. @Leela Krishnan

    Thank you 🙂 .

    @Suthkar

    Earlier I was sharing in FB and Twitter page but the reach is less so it was like “Yarume illatha kadaiyil tea aatruvathu pola irunthathu'” 🙂 so I stopped to share there.

    I’m sharing in my WhatsApp Channel.

    Thank you for your appreciation 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!