உளவியல் த்ரில்லராக Bougainvillea. Image Credit
Bougainvillea
குஞ்சகோ போபன், ஜோதிர்மயி செல்லும் கார் விபத்தில் சிக்கி ஜோதிர்மயி நினைவுத்திறன் பிரச்சனையை எதிர்கொள்கிறார்.
மருத்துவரான குஞ்சகோ போபன் தனது மனைவியான ஜோதிர்மயியை நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்.
காணாமல் போன முக்கிய பிரமுகரின் பெண்ணுக்கு ஜோதிர்மயி தொடர்பு இருப்பதாக விசாரிக்கக் காவல்துறை அதிகாரியான ஃபகத் பாசில் வருகிறார்.
காணாமல் போன பெண்ணுக்கும் நினைவுத்திறன் குறைவாக அல்லது அடிக்கடி மறந்து போகும் ஜோதிர்மயிக்கும் என்ன தொடர்பு?
இதற்கான விடையே Bougainvillea.
ஐரோப்பா
நகரத்தைத் தாண்டிக் கிராமப்பக்கம் சென்றால், கேரளா கிட்டத்தட்ட ஐரோப்பா போல உள்ளது.
தனிமையான பிரம்மாண்டமான வீடுகள், ஆளரவமற்ற சாலைகள், அடர்ந்த காடுகள், கூட்டமில்லா இடங்கள் ஆகியவை ஐரோப்பாவை நினைவு படுத்துகிறது.
முழுப்படமே கூட்டமில்லா காட்சிகளாக உள்ளது.
துவக்க அரை மணி நேரம் குழப்பத்துடன் மெதுவாக நகர்கிறது. படத்தை மாற்றி விடலாமா என்று நினைத்துத் திரும்பத்தொடர்ந்து பார்த்து முடித்து விட்டேன் 🙂 .
அரை மணி நேரக் குழப்பத்துக்குப் பிறகு நமக்கான கேள்விகள், சந்தேகங்கள் எழுகிறது. இதுவே படத்தைச் சுவாரசியமாக்குகிறது.
ஃபகத் பாசில் பிரபலமான நடிகர் ஆனால், இதில் பத்தோடு பதினொன்றாக வந்து செல்கிறார், எப்படி ஒத்துக்கொள்கிறார் என்று வியப்பாக உள்ளது!
நினைவுத்திறன்
ஜோதிர்மயி இப்படியொரு தோற்றத்தில் பார்க்கவே வியப்பாக உள்ளது, தலைநகரம் படத்தில் வடிவேலு வேடத்தைப் பார்த்து மயங்கிச் சரிவாரே அவரே தான்.
இதில் வயதான தோற்றத்தில், நினைவுத்திறன் குறைபாட்டுடன் நடித்துள்ளார்.
நினைவுத்திறன் குறைந்தவர்கள் ‘ஏன் என்னிடம் கூறவில்லை?‘ என்று கேட்டால், முன்னரே இரு முறை கூறி விட்டேன் என்று சிலர் கூறிவிடுவார்கள்.
ஏனென்றால், அதை உண்மை என்று அவர்கள் நம்புவார்கள்.
ஜோதிர்மயி கோபமாக நடந்து கொள்ளும் போது கணவனாக குஞ்சகோ போபன் பொறுமையாகக் கையாள்வதும், ஃபகத்துக்கு பதில் அளிப்பதும் சிறப்பு.
திரும்பப் பெண்கள் காணாமல் போகும் போது இது எதோ விவகாரமா இருக்கும் போலையே என்று தோன்றி பரபரப்பாகிறது.
யார் காரணமாக இருக்கும்? என்ற ஆர்வம் வந்து விடுகிறது.
ஒளிப்பதிவு பின்னணி இசை
ஒளிப்பதிவு மிக அழகாக உள்ளது.
இது போன்ற த்ரில்லர் படங்களுக்குச் சில நேரங்களில் அமைதியும், நெரிசலற்ற இடங்களும் கூடுதல் அழகை கொடுக்கும்.
கேரளா என்றால் பசுமை, அதிலும் இது போன்ற கிராமப்பகுதி என்றால், மேலும் அழகாகக் காண்பிக்க முடியும்.
இவையல்லாமல் ஒளிப்பதிவே பளிச்சென்று உள்ளது.
த்ரில்லர் படங்களுக்கு உரித்தான பின்னணி இசையுடன் அமைதியைக் கெடுத்து விடாத இசையாக உள்ளது சிறப்பு.
யார் பார்க்கலாம்?
அதிரடி, பரபரப்பான படங்களை விரும்புபவர்களுக்குண்டான படமல்ல.
மேற்கூறியபடி, முதல் 30 நிமிடங்கள் மிகவும் மெதுவாக, குழப்பமாக செல்லும், இதையும் தாண்டித் தொடர்ந்தாலே படத்தைப் பார்க்க முடியும்.
ஐரோப்பா போன்ற காட்சியமைப்பு மட்டுமல்ல, கதையும் அந்தச் சாயலில் உள்ள ஒரு த்ரில்லர் படம் என்பதால், விருப்பமாகப் பார்த்தேன்.
எனவே, இதையொட்டி முடிவு செய்து படத்தைப் பார்க்கவும். படத்தின் தயாரிப்பாளர்கள் குஞ்சகோ போபன், ஜோதிர்மயி 🙂 .
SonyLiv ல் காணலாம்.
Directed by Amal Neerad
Written by Lajo Jose, Amal Neerad
Additional dialogues RJ Murugan, Venkatesh V. S. A
Based on Ruthinte Lokam, by Lajo Jose
Produced by Jyothirmayi, Kunchacko Boban
Starring Kunchacko Boban, Jyothirmayi, Fahadh Faasil
Cinematography Anend C. Chandran
Edited by Vivek Harshan
Music by Sushin Shyam
Release date 17 October 2024
Running time 144 minutes
Country India
Language Malayalam
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, மலையாளத்தில் அவ்வவ்போது படங்கள் பார்த்தாலும் வெகுசில நடிகர்களின் நடிப்பின் மீது அலாதி ஆர்வம் இருக்கும்.. அவற்றில் குஞ்சகோ போபன் முதன்மையான ஒருவர்.. இவர் நடிப்பில் வந்த பெரும்பான்மை படங்கள் வித்தியாசமாக இருக்கும்.. குறிப்பாக கதைக்களம்.. ஒரு கொடூர வில்லனுக்கு உண்டான முக பாவமும், எல்லாவற்றையும் இழந்த ஒரு அப்பாவிக்கான முக பாவமும் இவருக்கு உண்டு..
தமிழில் குறிப்பாக சில நடிகர்களுக்கு எந்த பாத்திரம் கொடுத்தாலும் ஒரே reaction தான்.. அதில் முதலிடம் சித்தார்த்.. ஆனால் பேசும் போது தேன் ஒழுக பேசுவார்.. விஜய் ஆண்டனியும் கிட்டத்திட்ட same தான்.. நடிப்பது தொழில் என்று வந்த பிறகு அதில் மெனக்கிடல்கள் எடுப்பது ஒரு நடிகனாக மிக மிக அவசியம்.. ஆனால் பெரும்பாலும் நடிகர்களின் எண்ண ஓட்டம் வேறு மாதிரி உள்ளது..
நீங்கள் குறிப்பிட்ட படத்தை இது வரை பார்க்கவில்லை.. வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயம் பார்க்கிறேன்.. Vettah 2016 (நடிப்பு : குஞ்சகோ போபன் / மஞ்சு வாரியார் / இந்திரஜித் சுகுமாரன்) இல் வந்த இந்த படத்தை இது வரை பார்க்கவில்லை என்றால் பாருங்க கிரி.. படம் நிச்சயம் உங்களை ஏமாற்றாது.. நான் youtube இல் தமிழில் பார்த்தேன்.. படம் நேர்த்தியாக இருந்தது..
@யாசின்
“ஒரு கொடூர வில்லனுக்கு உண்டான முக பாவமும், எல்லாவற்றையும் இழந்த ஒரு அப்பாவிக்கான முக பாவமும் இவருக்கு உண்டு..”
ஆமாம். நீங்கள் கூறிய பிறகே யோசித்துப்பார்த்தேன். கொடூர வில்லன்னு சொல்ல முடியல ஆனால், வில்லனாகவும் பொருத்தமாக உள்ளார்.
“தமிழில் குறிப்பாக சில நடிகர்களுக்கு எந்த பாத்திரம் கொடுத்தாலும் ஒரே reaction தான்.. அதில் முதலிடம் சித்தார்த்.”
🙂
“விஜய் ஆண்டனியும் கிட்டத்திட்ட same தான்.”
ஆமாம்.
“நடிப்பது தொழில் என்று வந்த பிறகு அதில் மெனக்கிடல்கள் எடுப்பது ஒரு நடிகனாக மிக மிக அவசியம்.. ஆனால் பெரும்பாலும் நடிகர்களின் எண்ண ஓட்டம் வேறு மாதிரி உள்ளது..”
வித்தியாசம் காண்பித்தாலே பார்ப்பவர்களுக்கு சலிப்பில்லாமல் இருக்கும்.
“Vettah 2016 (நடிப்பு : குஞ்சகோ போபன் / மஞ்சு வாரியார் / இந்திரஜித் சுகுமாரன்) இல் வந்த இந்த படத்தை இது வரை பார்க்கவில்லை என்றால் பாருங்க கிரி.”
பார்க்க முயல்கிறேன் யாசின்.