பல வருடங்களுக்குப் பிறகு தேசியப் பற்றை தமிழர்களுக்கு நினைவுபடுத்தும் படமாக அமரன் வந்துள்ளது. image Credit
அமரன்
இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் இளமைக்கால வாழ்க்கை, குறுகிய காலத்தில் உயர்ந்த நிலையை அடைந்து, வீர மரணம் அடைந்தார் என்பதே அமரன்.
எதிர்பார்ப்பு குறைவு
அமரன் பட முன்னோட்டம் வெளியான போது பலரை கவரவில்லை, இப்படம் ஓடும் என்ற நம்பிக்கையே எனக்கில்லை ஆனால், அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி தாறுமாறு வெற்றி பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன் இக்கதாபாத்திரத்துக்கு மிகப்பொருத்தமாக உள்ளார். இளமைக் காலக் காட்சிகளை மிக நாகரீகமாக, இயல்பு மீறாமல் எடுத்துள்ளார்கள்.
ஒரு இராணுவ வீரன் கதையைக் கூறும் போது நாயகிக்கு என்ன முக்கியத்துவம் இருந்து விடப்போகிறது? என்ற எண்ணத்தைத் தவிடு பொடியாக்கி விட்டது.
அக்கதாபாத்திரத்துக்கு உயிரோட்டம் கொடுத்ததே சாய் பல்லவியின் நடிப்பு. ‘முகுந்தே‘ என்று கூறி அவர் பேசுவது அப்படியொரு இயல்பாக உள்ளது.
சிவாக்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ அதே போல சாய் பல்லவிக்கும்.
கதை அனைவருக்கும் தெரிந்தது தான், அதோடு பலரும் எழுதி விட்டார்கள்.
ஒரு நல்ல படத்தை குறிப்பாகத் தேசியத்தை, நாட்டுப்பற்றை ஊக்குவிக்கும் படத்தை இத்தளத்தில் பதிய வைக்க வேண்டும் என்றே எழுதுகிறேன்.
ஜம்மு காஷ்மீர்
எப்படி எப்படியெல்லாம் பிரச்சனைகள்!
முகுந்திடம் ‘இதற்கெல்லாம் என்ன தீர்வு?‘ என்று கேட்கும் போது ‘சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கணும்‘ என்று விரக்தியாகக் கூறுவார்.
ஆனால், பணமதிப்பிழப்புக்கு பின் கல்லெறி சம்பவங்கள் முற்றிலும் நின்றது, Article 370 ரத்துக்கு பிறகு ஜம்மு காஷ்மீரின் வாழ்க்கை முறையே மாறி விட்டது.
இராணுவ கட்டுப்பாட்டில் அனைத்தையும் சரி செய்து 2024 நடந்த மாநில தேர்தலில் ஒரு வன்முறை கூட இல்லாமல் தேர்தல் முடிந்தது.
தீவிரவாதிகளின் பிடியிலும், உள்ளூர் அரசியல்வாதிகளின் பிடியிலும் சிக்கி சின்னாபின்னமாகி இருந்த ஜம்மு காஷ்மீர் மக்கள் தற்போது நிம்மதியாக உள்ளனர்.
இன்றும் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறுகின்றன ஆனால், ஒப்பீட்டளவில் அமைதியான வாழக்கையை வாழ்ந்து வருகின்றனர்.
இது போன்ற ஒரு நிலையை அடைய நினைத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் ஆத்மா இதையெல்லாம் பார்த்துத் தற்போது மன நிம்மதியடைந்து இருக்கும்.
நாட்டை காக்க எத்தனையோ நபர்கள் உயிரைக் கொடுத்துள்ளனர்! இவர்களின் தியாகம் நிச்சயம் வீணாகவில்லை.
பிரிவினைவாதிகள்
இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு தனி நாடு போலவும் பேசும் திராவிடியாக்களை செருப்பால் அடித்தது போல உள்ளது.
இந்தியாவை, இந்திய இராணுவத்தை, பாரத அன்னையை இழிவுபடுத்தும் கிறுக்கன்கள், கிறுக்கிகள் சூழ் நாட்டில் வாழ வேண்டிய நிலை.
குடும்பத்தை விட்டு, மனைவி குழந்தைகளைப் பிரிந்து ஆண்டுக்கணக்கில் எல்லையில் போராடி வருபவர்களை விமர்சிக்கும் போது ஆத்திரமாக உள்ளது.
வீரர்களும், குடும்பத்தினரும் செய்த தியாகத்தைப் பார்க்கும் போது கண்ணீர் வருவதை தடுக்க முடியாது.
இது போன்ற படங்கள் அவ்வப்போது வருவதோடு மட்டுமல்லாமல், பெரிய வெற்றியைப் பெற்று, தேசத்தை இழிவுபடுத்துபவர்களைக் கதற விட வேண்டும்.
விமர்சனங்கள்
மேஜர் முகுந்த் சாதிய அடையாளத்தை ஏன் மறைத்தார்கள்? என்ற சர்ச்சை கிளம்பியது. இயக்குநர் விளக்கம் கூறினாலும் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை.
சரி அவர்கள் செய்தது தவறு என்றே வைத்துக்கொண்டாலும், இது ஒன்றுக்காக படத்தை விமர்சிப்பது சரியில்லை.
நமக்குப் பிடித்த மாதிரியே ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்றால், நாமே தயாரித்து, நாமே இயக்கினால் மட்டுமே சாத்தியம்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அனைவருக்கும் நாட்டுப்பற்றை ஊட்டும் விதத்தில் படம் எடுத்து இருப்பதை, பாராட்டுவதே சிறப்பு.
Professional
இப்படத்தைத் தயாரித்த கமல் அவர்களுக்கும், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அவர்களுக்கும் மிக்க நன்றி.
அமரன் Professional ஆக இருந்ததே பலரின் பாராட்டைப் பெறக் காரணம்.
ஏனென்றால், பெரும்பாலும் நாட்டுப்பற்றைக் காட்டுகிறேன் என்று இராணுவத்தை, இராணுவ வீரர்களை நகைச்சுவையாக்குவார்கள் அல்லது கோமாளித்தனமாக ஏதாவது செய்து வைப்பார்கள்.
அவ்வாறு எதுவும் இல்லாமல் தரமான இயக்கம்.
யார் பார்க்கலாம்?
இதைப்படித்துக்கொண்டு இருக்கும் ஒவ்வொருவரும், இதுவரை பார்க்கவில்லையென்றால் அவசியம் பார்க்க வேண்டும்.
கடந்த ஞாயிறு (Nov 10) இரவு 10.30 காட்சி சென்றோம், படம் ஹவுஸ்ஃபுல்.
Directed by Rajkumar Periasamy
Screenplay by Rajkumar Periasamy, Stefan Ritcher
Based on India’s Most Fearless: True Stories of Modern Military Heroes by Shiv Aroor, Rahul Singh
Produced by Kamal Haasan, R. Mahendran, Vivek Krishnani
Starring Sivakarthikeyan, Sai Pallavi, Bhuvan Arora, Rahul Bose
Cinematography CH Sai
Edited by R. Kalaivanan
Music by G. V. Prakash Kumar
Production companies Raaj Kamal Films International, Sony Pictures Films India
Release date 31 October 2024
Running time 169 minutes
Country India
Language Tamil
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
ஒரு தரமான படம் கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுகள் நன்றிகள் ,.. The Best Film and.best acting given by both of them.
தமிழில் வெளிவந்த ஒரு அருமையான படம் .,
மெய்யழகன் படம் பாருங்க. நல்லா இருக்கு. மை ஆல் டைம் ஃபீல் குட் மூவி
கிரி.. இது வரை படத்தை பார்க்கவில்லை.. SK வின் திரையுலக பயணத்தில் நிச்சயம் இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும்.. படம் திரைக்கு வந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் கூட்டம் திரையரங்கை நோக்கி இன்னும் வருவது வியப்பை தருகிறது.. படம் நன்றாக இருந்தால், அது மக்களை ரசிக்கும் வகையில் இருந்தால் மக்கள் படத்தை இன்னும் திரையில் கொண்டாடுவார்கள் என்பதால் எந்த சந்தேகமும் இல்லை..
அதை விட்டு விட்டு தயாரிப்பாளர்கள் பெரிய நடிகர், இயக்குனர் என்று தேவையில்லாமல் மிக பெரிய முதலீடு செய்து, படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் தோல்வி அடையும் போது யார் யாரையோ காரணம் காட்டி கூப்பாடு போடுவது சரியில்லை..
@சுரேஷ் உண்மை
@ஹரிஷ் பார்த்து விடுகிறேன். பையன் தேர்வுக்குப் படிப்பதால், பார்ப்பது தள்ளிச்சென்று கொண்டுள்ளது.
@யாசின்
“SK வின் திரையுலக பயணத்தில் நிச்சயம் இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும்.”
உறுதியாக. அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது.
“படம் நன்றாக இருந்தால், அது மக்களை ரசிக்கும் வகையில் இருந்தால் மக்கள் படத்தை இன்னும் திரையில் கொண்டாடுவார்கள் என்பதால் எந்த சந்தேகமும் இல்லை..”
உண்மை
“அதை விட்டு விட்டு தயாரிப்பாளர்கள் பெரிய நடிகர், இயக்குனர் என்று தேவையில்லாமல் மிக பெரிய முதலீடு செய்து, படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் தோல்வி அடையும் போது யார் யாரையோ காரணம் காட்டி கூப்பாடு போடுவது சரியில்லை..”
நீங்கள் கூறுவது சரி தான் . . ஆனால், அவ்வாறு இருந்தால், எந்திரன், பாகுபலி, KGF போன்ற படங்கள் கிடைத்து இருக்காது.
அதிக முதலீடு செய்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.