Accused (2023) | வெடிகுண்டு வைத்தது யார்?

2
Accused

ண்டனில் நடக்கும் கதையாக Accused. Image Credit

Accused

ரயிலில் வீட்டுக்குச் சென்று கொண்டு இருக்கிறீர்கள்.

நீங்கள் கிளம்பிய ரயில் நிலையத்திலேயே வெடிகுண்டு வெடித்து இறந்தார்கள் என்ற செய்தியையும் ரயிலில் படித்துக் கொண்டே வீட்டுக்கு வருகிறீர்கள்.

வந்த பிறகு ‘குண்டு வெடிப்பில் காவல்துறை சந்தேகப்படும் நபர் உன்னை மாதிரி இருக்கிறார்!‘ என்று நண்பர் அழைத்துக் கூறுகிறார்.

செய்தியில் பார்த்தால், நீங்கள் தான் அது!

கொஞ்ச நேரத்தில் காவல்துறையும், நீதித்துறையும் முடிவு செய்யும் முன்னே ட்விட்டர் போராளிகள், உங்களைக் குற்றவாளி என்று முடிவு செய்து விடுகிறார்கள்.

மொத்த இணையமும் உங்களுக்கு எதிராக உள்ளது, மிரட்டல் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

உங்கள் நிலை என்ன? அதுவே Accused.

சமூகவலைத்தளம்

சமூகவலைத்தளம் நல்ல செயல்களுக்கு உதவுகிறது, விழிப்புணர்வை ஏற்படுத்துவதைப்போலப் பிரச்சனைகளையும் கொண்டு வருகிறது.

இது போன்ற திடீர் நீதிபதிகளால் பாதிக்கப்படுபவரின் கதையே Accused.

இணையத்தில் எளிதாக ஒருவரைக் கண்டு பிடித்துவிட முடியும். காரணம், அவர்களின் சமூகத்தளக் கணக்குகள், அதோடு நண்பர்களின் தொடர்புகள்.

நாயகன் Harri Bhavsar பொருத்தமான நடிப்பு, தவறே செய்யாமல் தவறு செய்து விட்டதாக அனைவரும் தன்னை பற்றி விவாதிக்கும் போது எப்படியிருக்கும்?

இதைவிட மோசமாக, எப்படியோ இருவர் இவர் வீட்டின் முகவரியைக் கண்டுபிடித்துக் கொல்ல வந்து விடுவார்கள்.

பயம்

வீட்டில் இவரும் இவரது நாயும் மட்டுமே!

தொடர்ச்சியான அழைப்புகளால் தொலைப்பேசியை எடுக்கவே பயமாக இருக்கும். இதனால் தொலைப்பேசியை அணைத்து விடுவார்.

Harri Bhavsar குடும்பம் இந்தியர்கள் போலத்தான் தோன்றுகிறார்கள். எனவே, வேற்று நாட்டு நபர் என்பதும் இவருக்குப் பாதகமாக முடிந்து விடுகிறது.

குடியுரிமை பெற்று அந்நாட்டிலேயே பல தலைமுறையாக இருந்தாலும், பிரச்சனை என்று வந்தால், வேற்று நாட்டவர் தான்.

நாய் மிக சாது, Pet Dog. திருடனை எல்லாம் கடிக்காது, பிடிக்காது. சொல்லப்போனால் Harri Bhavsar யை விட அதிகம் பயந்து இருக்கும்.

இந்த நாயின் முகபாவனை சிறப்பு. எப்படி நடிக்க வைத்தார்கள் என்று தெரியலை! மனிதனைப் போலக் கவலை, பயம் அதன் முகத்தில் நன்கு தெரியும்.

லாஜிக்

இதற்கிடையில் காவல்துறைக்கு அழைத்து, ‘நான் எதுவும் செய்யவில்லை ஆனால், அனைவரும் மிரட்டுகிறார்கள்‘ என்று கூறுவார்.

படத்திலேயே லாஜிக் பிரச்சனையுடன் இருந்த பகுதி இது மட்டுமே. அதாவது காவல்துறையை அழைத்துக் கூறியும் அவர்கள் உடனே வர மாட்டார்கள்.

வழக்கமாக இது போன்ற வெளிநாட்டுப் படங்களில் காவல்துறை எங்கே இருந்து வருவார்களோ தெரியாது, 2 நிமிடங்களில் கும்பலாக வந்து விடுவார்கள்.

ஆனால், இப்படத்தில் அவ்வளவு நேரம் ஆகியும் வர மாட்டார்கள். இது ஒன்று மட்டுமே ஏற்புடையதாக இல்லை, மற்றபடி அட்டகாசமான உருவாக்கம்.

ஒளிப்பதிவு பின்னணி இசை

ஒளிப்பதிவு சிறப்பாக எதுவுமில்லை ஆனால், பின்னணி இசை நன்றாக இருந்தது.

இப்படத்தில் செலவே கிடையாது. மலையாளப்படம் போலச் செலவே இல்லாமல், ரயில் பயணம், ஒரே ஒரு வீடு, அருகே உள்ள பகுதிகள் அவ்வளவு தான் படமே!

அதிகபட்சம் 12 மணி நேரத்திற்குள் நடக்கும் கதையாகவும், பெரும்பாலான பகுதி இரவிலும் நடப்பதாக உள்ளது.

பயம், பதட்டம், குழப்பம், அப்பாவித்தனம், மன உளைச்சல், ஏமாற்றம் என்று அனைத்து உணர்வுகளையும் இயல்பாக Harri Bhavsar பிரதிபலித்துள்ளார்.

இப்படம் பார்க்கும் போது நமக்கு இப்படியொரு நிலை என்றால் என்ன செய்வோம்?! என்ற சிந்தனையே வந்தது.

யார் பார்க்கலாம்?

அனைவரும் பார்க்கலாம், த்ரில்லர் படங்களை விரும்பிப்பார்ப்பவர்கள் தவறாது பார்க்க வேண்டும்.

Amazon Prime ல் உள்ளது.

இது போன்று சமூகத்தளங்களால் பாதிக்கப்படும் படமாக Vikrithi (2019 மலையாளம்) | சமூகவலைத்தள தவறுகள்

Directed by Philip Barantini
Starring Chaneil Kular, Lauryn Ajufo, Nitin Ganatra
Music by Aaron May, David Ridley
Cinematography by Matthew Lewis
Editing by Alex Fountain
Release date September 22, 2023 (United Kingdom)
Country of origin United Kingdom
Language English

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

2 COMMENTS

  1. இது போல எதார்த்தமான கதைக்களம் கொண்ட படம் படங்கள் இயல்பாகவே எனக்கு பிடிக்கும்.. வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயம் இந்த படத்தை பார்க்கிறேன்..இதே படம் தமிழில் பெரிய இயக்குனர்கள் யாரவது எடுத்து இருந்தால் அந்த லண்டன் காட்சிகளை முற்றிலும் இங்கேயே ஸ்டுடியோவில் செட் போட்டு எடுத்து தயாரிப்பாளரை கதற விட்டு இருப்பார்கள்… சில பெரிய இயக்குனர்கள் படத்தை பார்க்கும் போது யப்பா முடியலடா என்பது போல உள்ளது…

  2. @யாசின்

    “இதே படம் தமிழில் பெரிய இயக்குனர்கள் யாரவது எடுத்து இருந்தால் அந்த லண்டன் காட்சிகளை முற்றிலும் இங்கேயே ஸ்டுடியோவில் செட் போட்டு எடுத்து தயாரிப்பாளரை கதற விட்டு இருப்பார்கள்”

    😀 😀

    ” சில பெரிய இயக்குனர்கள் படத்தை பார்க்கும் போது யப்பா முடியலடா என்பது போல உள்ளது…”

    அவசியமற்ற செலவுகள் தவிர்க்கப்பட வேண்டியதே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!