Mail RSS Feed

காலி குடங்களுடன் வறட்சியான சென்னை என்னை வரவேற்கும் என்று நினைத்து இருந்தால், நீந்தி வரும் படி செய்து விட்டது. வணக்கம் சென்னை :-) . Image Credit - Wikipedia விடுமுறை முடிந்து கடந்த வாரம் தான் பணியில் இணைந்தேன். தற்போது என் அக்காவின் வீட்டில் தற்காலிகமாக இருக்கிறேன். இதன் பிறகு பசங்களுக்குப் பள்ளியைத் தேட வேண்டும். இதை நினைத்தால் செம்பரம்பாக்கம் ஏரித்தண்ணீரில் மாட்டிக்கொண்டது போலக் கிறுகிறுக்கிறது. நமக்குன்னு ஒண்ணு கிடைக்காமையா போய்டும்! சிங்கப்பூரில் இருந்து வந்த [...]

{ 7 comments }

எப்போது எப்போது என்று எதிர்பார்த்து ஒருவழியாக இந்தியா திரும்புகிறேன். சிங்கப்பூர் 2007 ல் வந்த போதே நிரந்தரமாகத் தங்கும் திட்டமில்லை. Image Credit - packages.qantas.com வெளிநாடு சென்று பார்க்கணும் பணி புரியணும் என்ற அனைவருக்குமான இயல்பான ஆசை இருந்தாலும் நான் சிங்கப்பூர் வந்தது எங்கள் குடும்பத்துக்கு இருந்த கடனைக் கட்டவேண்டும் என்ற நெருக்கடி காரணமாகவே! இங்கேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் துவக்கத்தில் இருந்தே இல்லை. எனவே PR (Permanent Resident) கூட விண்ணபிக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் [...]

{ 43 comments }

YouTube RED கடந்த 2014 மார்ச் எழுதிய கட்டுரையில் YouTube விரைவில் கட்டண முறையை அறிமுகப்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை, 5$ என்றால் கூட எங்கேயோ போகிறதே! என்று குறிப்பிட்டு இருந்தேன். Image Credit - fossbytes.com தற்போது 28 அக்டோபர் 2015 முதல் YouTube RED என்ற கட்டண வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் விளம்பரங்கள் கிடையாது, Offline வசதி மூலம் இணையம் இல்லாமல் காணொளிகளைப் பார்க்க முடியும், பின்னணியில் பாடலை ஒலிக்க விட்டு மற்ற செயலிகளை (App) பயன்படுத்த [...]

{ 6 comments }

புகைமூட்டம் (Haze) இந்த வருடம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாகச் சிங்கப்பூர் மற்றும் மலேசியா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது வருடாவருடம் ஏற்படும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளதால் சிங்கப்பூர் அரசாங்கம் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. புகைமூட்டம் காரணமாகச் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைகிறது, நாட்டில் வியாபாரம் குறைகிறது காரணம் பலரும் வீட்டை விட்டு வெளியே வரவே யோசிக்கிறார்கள். இப்புகைப் பிரச்சனை இந்த ஆண்டு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி வரை தொடரும் என்று அறிவித்து இருக்கிறார்கள். [...]

{ 3 comments }

காலத்தால் அழியாத பொன்னியின் செல்வன் என்ற நாவலைக் கொடுத்த கல்கி அவர்களின் நாவல் "பார்த்திபன் கனவு". சோழ மன்னன் பார்த்திப மகாராஜா தன் சோழ நாடு எப்படி இருக்க வேண்டும் என்று கனவு கண்டு அதை ஓவியமாக வரைகிறார். பல்லவ நரசிம்மவர்ம சக்கரவர்த்திப் பெரும் படையுடனான போரில் பார்த்திப மகாராஜா தோல்வி அடைந்து இறக்கிறார். பின்னர் அவருடைய மகன் விக்ரமன் திரும்ப நாட்டைப் பெற்றாரா பார்த்திப மகாராஜா கனவு நிறைவேறியதா என்பதே நாவல். இந்த நாவலை கால்வாசி [...]

{ 7 comments }

பலரும் கூறியதால் சல்மான் Bajrangi Bhaijaan பார்க்க வேண்டும் என்று நினைத்து, எந்த எதிர்பார்ப்புமில்லாமல் கடந்த வாரம் தான் பார்த்தேன். சத்தியமாகச் சல்மான் படம் இப்படி என்னைக் கண்கலங்க வைக்கும் என்று நான் நினைத்ததே இல்லை. சல்மான் படம் என்றாலே வெளிநாடு, பாடல், ஆட்டம் பாட்டம், பணக்காரக் குடும்பம் என்று வழக்கமான பாலிவுட் படம் என்பதால் பார்க்கணும் என்று எனக்குத் தோன்றியதே இல்லை. கடைசியாகப் பார்த்த சல்மான் படம் எது என்று கூட நினைவில்லை. இப்படத்தில் சேர்த்து [...]

{ 3 comments }

மைக்ரோசாஃப்ட் மடிக்கணினியை முதன் முதலாக அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதற்கு முன் Surface Pro என்ற Tablet அறிமுகம் செய்து இருந்தது. அதில் 1 & 2 வரவேற்பை பெறவில்லை ஆனால், SufacePro 3 வெற்றிப் பெற்றது. தற்போது வந்துள்ள SurfacePro 4 ம் வெற்றி பெற்றுள்ளது. புதிய மாடல் 4 இதனுடைய முந்தைய மாடலை விட பாதி எடை குறைவு. இவற்றைத் தொடர்ந்து மடிக்கணினியிலும் Surface Book என்ற பெயரில் இறங்கியுள்ளது. கூகுள் Chromebook மைக்ரோசாஃப்ட் க்கு [...]

{ 4 comments }

"நண்பரின் மனைவி குளிப்பதை ரசிக்க நண்பர் வீட்டு குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய என்ஜினீயர் கைது" - Image Credit - sweethomedesignideas.com இச்செய்தியைப் தினத்தந்தியில் பார்த்ததும் அடப் போங்கப்பா! இவங்களுக்கு இந்தக் கள்ளக்காதல், குளிப்பதைப் பார்த்தான், கூட்டிட்டு ஓடிட்டான்னு இதே செய்தி தான் என்று கடுப்பானது. இது போன்ற செய்திகளைப் பார்த்தாலே எரிச்சலாகிறது அதனால் இவற்றைப் அப்படியே புறக்கணித்து விடுவேன் ஆனால், அதில் "ரகசிய கேமரா" என்று பார்த்தது நினைவுக்கு வர தெரிந்த விசயம் [...]

{ 6 comments }

In the blood ஒரு ஜோடி தேனிலவுக்கு வேறு நாட்டிற்குச் செல்ல அங்கே கணவன் கடத்தப்படுகிறார். அவரை அவரது மனைவி எப்படி மீட்கிறார் என்பதே கதை. இதைப் படித்தால் தமிழில் வந்த புதுமைப் பெண் / புரட்சிப் பெண் போல உங்களுக்கு நினைவு வரலாம் ஆனால், அதெல்லாம் அமைதி போராட்டம் இங்கேயோ அதிரடிப் போராட்டம். யம்மாடி.. என்னா அடி.. என்னா உதை. நாயகி Gina Carano அனைவரையும் பின்னி பெடலெடுக்கிறார். யார்ரா இது.. இவரைப் பார்த்தால் எதோ [...]

{ 9 comments }

தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைத்து சாதனங்களும் சிறிதாகிக் கொண்டு வருகிறது. Hard disk / SSD பற்றிக் கொஞ்ச நாள் முன்னாடி விளக்கி இருந்தேன். அதோடு இனி எதிர்காலம் SSD தான் என்றும் கூறி இருந்தேன். கொஞ்ச நாள் முன்பு என்னுடைய அலுவலகத்தில் பணி புரியும் ஒருவருக்கு அவருடைய மடிக்கணினியில் பிரச்சனை ஆனால், எதனால் என்று கண்டு பிடிக்க முடியவில்லை. வழக்கமாக எங்கள் நிறுவனத்திற்கு Dell கணினி தான் வாங்குவோம். Dell சேவையை எவராலும் அடித்துக்க முடியாது. அசத்தல் [...]

{ 10 comments }

சிறைச்சாலைப் படங்கள் என்றால் எனக்கு அலாதிப் பிரியம். இவ்வகைப் படங்களைத் தேடித் தேடிப் பார்ப்பேன். அது என்ன மாதிரியான படமாக இருந்தாலும் அது பற்றிப் பிரச்சனையில்லை. நண்பர் வருண் Orange Is The New Black என்ற அமெரிக்க நாடகம் பற்றிக் கூறியிருந்தார். பெண்கள் சிறைச்சாலை பற்றிய நாடகம். அங்கே பெண்களுக்குள், அங்கே பணி புரியும் ஆண்களுக்குள்ளே நடக்கும் பிரச்சனைகள். லெஸ்பியன் செக்ஸ், திருட்டு, போதை மருந்து என்று அங்கே நடக்கும் சிறைச்சாலை பிரச்சனைகளை விரிவாகக் கூறி [...]

{ 16 comments }

"Mani Iyer Mess" Hindoo Rd (Little India) என்னது சிங்கப்பூரில் மெஸ்ஸா?! என்று நீங்கள் ஆச்சர்யப்படுவது தெரிகிறது :-) . பெயர் தான் மெஸ் ஆனால், வழக்கமான உணவகம் போலத் தான் இருக்கும். இந்த உணவகம் மிகத் தாமதமாகத்தான் அறிமுகமானது. இங்கே சாப்பிட்டு வெறுத்தே போயிட்டேன். அட! இது தெரியாம பல நாள் எங்கெங்கோ சாப்பிட்டோமோ என்று :-) . நம்ம வீட்டில் சாப்பிட்டால் எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது. ஊருக்கு கிளம்புற நேரத்தில் இந்த [...]

{ 11 comments }