ச்சும்மா… விர்ர்ர்ருன்னு படிப்போம் வாங்க! :-)

Speed

ன்னுடைய தளத்தில் தொழில்நுட்ப கட்டுரைகளுக்கு வரவேற்பு இருக்கிறது ஆனால், கடந்த இரு வருடங்களாக நேரமின்மை காரணமாக அதிகம் எழுத முடியவில்லை.

காரணம் பெரிதாக ஒன்றுமில்லை, சிறு செய்திகளைச் சேர்த்து எழுதலாம் என்று நினைக்கும் போது தாமதத்தால் பழைய செய்தியாகி எழுதாமலே விட்டு விடுகிறேன்.

இரண்டு நிமிட செய்திகள்

அதனால், இனி ஒரு செய்தி என்றாலும் அதைச் சிறிய அளவில் எழுதி வெளியிட்டால் பலருக்கு பயனாக இருக்கும் என்று கருதுகிறேன். அதோடு எனக்கும் எழுதுவது எளிது.

தளத்தைப் படிக்கும் அனைவரும் புதிய தொழில்நுட்ப செய்திகளைத் தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.

என்னுடைய தள ஃபேஸ்புக் பக்கத்தில் கேட்ட போது பலரும் வரவேற்பு கொடுத்தனர்.

தற்போது பெரிய கட்டுரை படிப்பவர்கள் குறைந்து வருகிறார்கள் எனவே, சுருக்கமாக எழுதும் போது இன்னும் பலர் படிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இவையல்லாமல் வழக்கமாக எழுதும் விமர்சனங்கள், கட்டுரைகள் எப்போதும் போலத் தொடரும். இவற்றைச் சுருக்கி எழுதினால், கட்டுரைக்கே மதிப்பு இருக்காது.

Tech news in Tamil

9 வருடங்கள்

கடந்த 9 வருடங்களாக மாதம் 10 கட்டுரைகளுக்கு மேல் எழுதக்கூடாது என்ற கட்டுப்பாடை பின்பற்றி வருகிறேன். காரணம், எழுத்துக்கு அடிமை ஆகி விடக்கூடாது என்பதால்.

தற்போது எண்ணிக்கை அதிகரிக்கும், பார்ப்போம் எப்படிப் போகிறது என்று 🙂 . சரியாக வந்தால் தொடர்வேன்.. இல்லையா பழைய முறையிலேயே தொடர்வேன்.

தொடர்பில் இருங்கள்.

அன்புடன்
கிரி

கொசுறு

இன்னும் விரைவாக படிக்க விரும்புபவர்கள் என்னுடைய தள https://www.facebook.com/giriblog Like செய்து கொள்ளுங்கள். Instant Article வசதியை செயல்படுத்தி இருப்பதால், கட்டுரைகளை  திறன்பேசியில் இருந்து படிக்கும் போது நொடியில் திறந்து படிக்க முடியும்.

தொடர்புடைய கட்டுரைகள்

தெறிக்கும் வேகம் ஃபேஸ்புக் Instant Article

கூகுள் தெரியும் “கூகுள் AMP” தெரியுமா?

படிப்பதில் Skip தெரியும்.. “Skim” தெரியுமா?!

{ 1 comment… add one }
  • Mohamed Yasin February 11, 2018, 1:49 PM

    கிரி, கண்டிப்பாக இந்த முயற்சி வெற்றி அடையும் என எண்ணுகிறேன்.. நீங்கள் குறிப்பிட்டது போல் சில செய்திகளை பின்பு தொகுத்து விரிவாக எழுதலாம் என்று தள்ளிப்போடும் போது, நேரமின்மை, மறதி, இன்னும் சில காரணங்களால் எழுதமுடியாமலே போக வாய்ப்புண்டு.. இது நல்ல புதிய முயற்சி.. வெற்றியடையும் என நம்புகிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி.

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz