கூகுள் தெரியும் “Google Go” தெரியுமா?

கூகுள் நிறுவனம் “குறைந்த திறன்” திறன்பேசிகளைப் பயன்படுத்துபவர்களுக்காக “Google Go” என்ற (Oreo) இயங்கு தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் குறைவான திறன் கொண்ட திறன்பேசிகளைப் பயன்படுத்தும் Android பயனாளர்கள் அதிகமுள்ளதால், அவர்களைக் குறி வைத்து இதை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் மிக அவசியமான வசதிகளை மட்டும் உள்ளடக்கி வெளியிட்டுள்ளதால், மிகக் குறைந்த திறன் அதாவது 512 MB உள்ள திறன்பேசிகள் கூடப் பயன்படுத்தும் படி உள்ளது.

குறைந்த சேமிப்பு இடத்தைக் கொண்ட திறன்பேசிகள் அடிக்கடி இடப்பற்றாக்குறை பிரச்சனையை எதிர்கொள்ளும், அவர்களுக்கு இந்த இயங்குதளம் பயனுள்ளது.

Google Go இயங்குதளம், Go செயலிகள் 50% இடத்தைக் குறைக்கிறது, வழக்கமான வேகத்தை விட 15% கூடுதல் வேகமாகச் செயல்படும் என்று கூகுள் கூறியுள்ளது.

Files Go

கூகுள் வெளியிட்டுள்ள “Files Go” செயலியை நிறுவிக்கொண்டால், தேவையற்ற படங்களை, Duplicate காணொளிகள், படங்களை எளிதாக நீக்கலாம், இடத்தை மிச்சப்படுத்தும்.

இதை எந்த Android பயனாளரும் நிறுவிக் கொள்ளலாம், நான் பயன்படுத்துகிறேன் மிக உதவியாக உள்ளது. இரு திறன்பேசிகளுக்கிடையே (Smart Phone) கோப்பு பரிமாற்றமும் எளிது.

Google Go க்காக இதுவரை வெளியாகியுள்ள செயலிகள்

Google Maps Go, Files Go, Google Go, YouTube Go, Google Assistant Go.

Read: YouTube தெரியும் “YouTube Go” தெரியுமா?

Share Tech News

{ 1 comment… add one }
  • Mohamed Yasin February 17, 2018, 7:02 AM

    பயனுள்ள தகவல்… நன்றி கிரி

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz