க்ரோம் உலவியை மிரட்டும் ஃபயர்பாக்ஸ்

Firefox

பயர்பாக்ஸ் புதிய வசதிகள் எங்க தலைவன் க்ரோம் உலவிக்கு கடும் போட்டி கொடுத்து வருகிறது 🙂 . ஃபயர்பாக்ஸ் புதிய பதிப்பில் “Tracking Protection / Ad Block” சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.

I Movie Bodybuilding

வழக்கமாக “Cookies” என்ற கோப்பில் நாம் தளத்தில் பார்த்த, தேடிய தகவல்கள் சேமிக்கப்படும்.

இதை வைத்து நாம் கண்காணிக்கப்படுவோம், விளம்பரங்களும் நமக்குத் தெரிகின்றன.

“அமேசான்” தளத்துல நீங்க சென்று எதையாவது தேடி இருப்பீங்க, அப்புறம் பார்த்தால், அது குறித்த விளம்பரமே உங்கள் கண்ணில் அடிக்கடி பட்டு உங்களுக்கு வலை விரிக்கும்.

ஆஹா! வலை விரிக்குறான் வலை விரிக்குறான்” என்று வடிவேல் கணக்கா யோசித்து இருப்பீங்க. இவை நம் கண்ணில் பட்டு ஆர்வத்தைத் தூண்டும்.

நம்மை கண்காணிப்பதையும், சில விளம்பரங்களையும் புதிய பதிப்புத் தடுக்கிறது.

எனவே, நீங்கள் ஃபயர்பாக்ஸ் பயன்பாட்டாளர் என்றால், இப்பதிப்பை (Firefox 58) நிறுவி பின்வரும் வசதியை செயல்படுத்திக் கொள்ளுங்கள்.

க்ரோம் உலவியிலும் இந்த வசதி இருப்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் இது ஃபயர்பாக்ஸில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Firefox Tracking option

இதன் மூலம், உங்கள் உலவி வேகமாகவும், அதே சமயம் தொல்லை இல்லாமலும், முக்கியமா பாதுகாப்பாகவும் இருக்கும்.

Preferences –> Privacy & Security –> Tracking Protection –> Always

புதிய பதிப்பை நிறுவ – Download Firefox

பின்வரும் காணொளி உங்களுக்கு எளிமையாக விளக்கும்.

Share Tech News

{ 2 comments… add one }
  • Mohamed Yasin February 11, 2018, 2:01 PM

    நிச்சயம் பயனுள்ள தகவல்.. நான் பல ஆண்டுகளாக FIREFOX தான் பயன்படுத்தி வருகிறேன். இன்னும் முயற்சி செய்து பார்க்கவில்லை.. இது போன்ற இன்னும் பல தகவல்களை எதிர்பார்க்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  • Vijay February 15, 2018, 9:36 AM

    பயனுள்ள பதிவு கில்லாடி. இதைத்தான் எதிர்பார்க்குறோம் 🙂 :).
    நன்றிகள் பல

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz