கொசுத் தொல்லைக்கு கூகுள் க்ரோம் போட்ட பூட்டு

Google Chrome Browser

மக்கு ஏதாவது ஒரு தளம் விருப்பத்தளமாக இருக்கும் ஆனால், அதனுள் சென்றால், Auto Play Video / Audio போன்றவற்றால் திடீர் என்று சத்தம் வரும். Image Credit – Top Mobile Trends

நாம் Mute ல் இருந்தால் பிரச்சனையில்லை ஆனால், மறந்து இருந்தால், திடீர் சத்தத்தால் தர்மசங்கடமான நிலை ஏற்படும்.

இதைத் தவிர்க்க க்ரோம் உலவி முதலில் Mute Tab என்று வசதியை அறிமுகம் செய்தது ஆனாலும், இது தற்காலிகமானது.

அதாவது அந்த Tab யை மூடிவிட்டு திறந்தால், அந்த வசதி போய் விடும். திரும்ப ஒரு முறை அதே போல Mute செய்யணும்.

Mute Site

தற்போது க்ரோம் பதிப்பு 64 ல் “Mute Site” என்ற வசதியை செயல்படுத்தினால், நீங்களாக மாற்றும் வரை Mute லியே இருக்கும், உலவியை மூடித் திறந்தாலும்.

இதை எப்படிச் செய்வது?

நீங்கள் சத்தம் வேண்டாம் என்று நினைக்கும் தளத்துக்குத் சென்று அந்த Tab ல் right click செய்து Mute Site தேர்வு செய்தால், அந்தத் தளத்தில் என்ன கதறினாலும் வெளியே கேட்காது 🙂 .

Mute Site

அவ்வளோ தாங்க விசயம்!

கொசுறு

இது போல சுருக்கமாக இனி தொழில்நுட்ப செய்திகள் எழுத தீர்மானித்துள்ளேன், தேவையான போது விரிவான தொழில்நுட்ப கட்டுரைகளும் வரும்.

உங்களுக்கு இக்கட்டுரை ஏற்புடையதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தொடர்புடைய கட்டுரை

ச்சும்மா… விர்ர்ர்ருன்னு படிப்போம் வாங்க! 🙂

Share Tech News

{ 4 comments… add one }
 • Varadaradjalou .P February 8, 2018, 4:58 AM

  Super

 • Mohamed Yasin February 11, 2018, 1:51 PM

  நான் பல ஆண்டுகளாக FIREFOX பயன்படுத்தி வருகிறேன். குரோம் மீது பெரிய ஆர்வம் இல்லை.. தகவலுக்கு நன்றி..

 • Karthikeyan February 12, 2018, 6:53 AM

  சூப்பர் அண்ணா…செம ..

 • Vijay February 15, 2018, 9:38 AM

  Superb கில்லாடி. பயன் படுத்தி பார்த்துடுவோம் 🙂

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz