Miracle in Cell No. 7 [2013 Korean]

Miracle in Cell No 7

மிழில் வந்த தெய்வமகள் (I Am Sam என்ற படத்தைச் சுட்டு எடுத்த படம்) படம் போல ஆனால், வேறு மாதிரியான திரைக்கதை.

நாயகன் Ryu Seung-ryong மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்டவர் அல்ல, விக்ரம் கதாப்பாத்திரம் போலத் தான் என்ன செய்கிறோம் என்று தெரிந்த கதாப்பாத்திரம்.

பணிக்கு செல்வார், தாயை இழந்த ஆறு வயது பெண் குழந்தையைப் பாசமாகப் பார்த்துக்கொள்வார். தாய் பற்றிய தகவல் திரைப்படத்தில் இல்லை.

ஒருநாள் இவர் சாலையில் ஒரு சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி கொல்வது போல காட்சியைப் பார்த்துப் பெண் கூச்சலிட, இவரைக் காவல்துறை கைது செய்து விடும்.

ஒட்டுமொத்த ஊரும் இவரை அடிக்கப் பாய, தந்தையைக் காணாமல் வரும் குழந்தை Kal So-won “அப்பா அப்பா” என்று அலற அவர் காவல்துறையால் அழைத்துச் செல்லப்படுவார்.

நான் “அப்பா அப்பா” என்று மொழி மாற்றிக் கூறவில்லை, அந்தக் குழந்தை கூறுவதே “அப்பா அப்பா” என்று தான். எனக்கு இதைக் கேட்க மிக மகிழ்ச்சியாக இருந்தது.

சிறை வாழ்க்கை தொடர்பான படங்களைப் பார்த்து இருந்தீர்கள் என்றால் புரியும், அரசியல்வாதிகளுக்கும் பணம் இருப்பவர்களுக்கும் மட்டுமே சிறை சொகுசான இடம். மற்றவர்களுக்கு சிறை கொடூரமான இடம்.

ReadPrison Break [2005 – 06] – Terrific Thriller

சிறை அதிகாரி இவர் செய்த குற்றம் கண்டு கடுப்பாகி பின்னி எடுத்துவிடுவார், சக அதிகாரிகள் அவரைத் தடுத்து அமைதிப்படுத்துவார்கள்.

Ryu Seung-ryong அறை எண் 7 ல் நுழைய இவர் சக கைதிகள் இவர் எதனால் வந்தார் என்று அறிந்து இவரை அடித்துத் துவைத்து விடுவார்கள் ஆனால், இவரின் வித்யாசமான நடவடிக்கைகளைக் கண்டு குழம்பி விடுவார்கள்.

பின்னர் இவர் அப்பாவி என்பதை உணர்ந்து இவருக்கு உதவுவார்கள். இதில் சில காட்சிகள் நம்ப முடியாததாக இருந்தாலும், திரைக்கதையின் சுவாரசியத்தில் இவை மறக்கடிக்கப்படுகின்றன.

Kal So-won

இப்படத்தில் நாயகன் Ryu Seung-ryong அற்புதமான நடிப்பு என்றால், சிறுமி Kal So-won யம்மாடி! நீங்க நம்புறீங்களோ இல்லையோ இதை எழுதும் போதே என் உடல் சிலிர்த்தது 🙂 .

இது போலக் குழந்தைகள் நடிக்கும் போது, எனக்கு எப்போதும் “எப்படி இந்தச் சிறு வயதில் தத்ரூபமாக நடிக்கிறார்கள்!?” என்று வியப்பாக இருக்கும்.

இந்தச் சிறுமி வயதில் நான் எப்படி இருந்தேன் என்று நினைத்துப் பார்த்தேன். இயக்குநர் கூறுவதை உள்வாங்கி இந்த வயதில் நடிப்பதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

என்ன சொல்வது போங்க.. என் மனசு என் கிட்ட இல்ல! வியப்பு, சிரிப்பு, பயம், மகிழ்ச்சி, அழுகை என்று தாறுமாறான நடிப்பு. அடடா! என்னவொரு திறமை!

இறுதிக்காட்சியில் இவர்கள் இருவர் நடிப்பில் கலங்காத மனம் இருக்க முடியாது, அப்படி ஒரு உணர்ச்சிகரமான காட்சிகள். நான் செமையா அழுதுட்டேன் 🙂 🙂 .

ரொம்ப நாளைக்குப் பிறகு என்னை ரொம்பப் பாதித்த படம். எப்படியெல்லாம் நடிக்கறாங்கப்பா!

கொரியன் படங்களிலேயே அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக இப்படம் உள்ளது. அதோடு மிகப்பிரபலமான நடிகர்கள் எவரும் இல்லை என்பதும் பெரும் வியப்பு.

இப்படத்தைப் பார்க்க உங்களைத் தாறுமாறாகப் பரிந்துரைக்கிறேன் 🙂 . Subtitle உதவியுடன் முழுப்படத்தையும் YouTube ல் பார்க்க https://www.youtube.com/watch?v=0LctKiPbHqE

ரேடியோ பெட்டி

Radio Petti

ரேடியோ பெட்டி என்ற படம் பார்த்தேன். இது பெரிய குறும்படம் படம் போல உள்ளது. 15 நாட்களில், ஒரு கோடி முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படம்.

வயதான ஒரு நபரின் உணர்வுகளைக் கூறி இருக்கிறார்கள். குறும்படம் பார்த்த உணர்வு என்றாலும், எனக்குப் படம் பிடித்தது.

இது போலத் திரைப்படங்களைப் பார்க்கும் போதெல்லாம் “பெற்றவர்களைக் கண்டுகொள்ளாத போது அவர்களின் நிலை என்ன ஆகும்?!” என்ற யோசனை எனக்கு இருக்கும்.

Readவயதானவர்களின் நிலை என்ன?

பெற்றோரை இன்னும் சரியாகக் கவனித்துக்கொள்ள வேண்டும், அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று இப்படத்தைப் பார்க்கும் போது தோன்றுகிறது.

இதில் நடித்த பெரியவர் ஆகச் சிறந்த நடிப்பு. இறுதியில் அவர் கதவை சாத்திக்கொண்டு குதூகலமாக இருக்கும் காட்சி ரொம்ப அழகு.

படம் நாடகத்தன்மையுடன் மெதுவாகச் செல்வதால், அனைவருக்கும் பிடிக்கும் என்று கூற முடியாது. படம் முழுக்க பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளது.

நண்பர் மற்ற படங்களுடன் இப்படத்தைக் கொடுத்தார்.

இப்படம் YouTube ல் 250 / 390 க்கு விற்பனைக்கு உள்ளது, 100 பணம் கட்டிப் பார்க்கலாம். நல்ல கதை, நடிப்பு, முயற்சியைப் பாராட்ட 390 (HD) கொடுத்து வாங்கினேன்.

{ 7 comments… add one }
 • Ram September 12, 2017, 12:30 AM

  Could you write review on online music players. Interested to hear from a best Google user

 • Mohamed Yasin September 17, 2017, 12:56 PM

  நீண்ட நாட்களுக்கு பிறகு பிற மொழி படங்களின் விமர்சனத்தை பார்க்க முடிகிறது. பிற மொழி படங்களின் மீது எப்போதும் ஆர்வம் கொண்டவன் நான். ஆனால் தற்போதைய சூழல் காரணமாக என்னால் பல பிடித்த விசியங்களை செய்ய முடியவில்லை. இருப்பினும் குறித்து கொள்கிறேன் நேரம் இருக்கும் போது பார்க்கிறேன்.

  கிரி, நம்ம வளந்த சூழ்நிலையே வேற!!! தற்போதைய குழந்தைகளின் திறன்களோடு, நம்முடைய பருவத்தை ஒப்பிடமுடியாது. தொழில்நுட்பம் இக்கால குழந்தைகளோடு சேர்த்து பயணிப்பதால் அவர்களின் திறன்களில் மேம்பாடு உண்டு. பெற்றோர்களின் கூடுதல் கவனிப்பும் இக்கால சந்ததிகளுக்கு கிடைக்கிறது…

  கல்லூரி பருவத்தில் (முதுகலை) நடந்த ஒரு சின்ன சம்பவம். நாளை அனைவரும் (18 பேர்) 5 நிமிடம் ஆங்கிலத்தில் பேச வேண்டும். என்ன வேண்டுமானாலும் பேசலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை, என்பது துறை தலைவர் ஆணை. அவர் சொன்ன அடுத்த நொடியே மாணவிகள் பயிற்சியை ஆரம்பித்து விட்டார்கள்.

  மாணவர்கள் வழக்கம் போல இன்னும் ஒரு நாள் முழுசா இருக்கு நாளை பார்க்கலாம் என்று இருந்து விட்டோம். வகுப்பு மேடை ஏறுவது என்பது புதுசு!!! அதிலும் 5 நிமிடம் ஆங்கிலம் என்பது… முடியாத ஒன்று… தப்பி தவறி ஏதோ உளறி என்னுடைய TURN முடிந்தது.. ஏதோ சாதனை செய்தது போல ஒரு கம்பீரமா சீட்டில் உட்கார்ந்தேன்.

  அடுத்து என்னுடைய நெருங்கிய நண்பன் (பெயர் வேண்டாம்) .. நேர மேடைக்கு சென்று குட் மார்னிங். அனைவரும் திருப்பி குட் மார்னிங். (துறை தலைவர் உட்பட).. திரும்பவும் குட் மார்னிங்… எல்லோருக்கும் அதிர்ச்சி… நண்பன் கூறினான் எனக்கு ஆங்கிலத்தில் தெரிந்தது இது மட்டுமே!!! என்று கூறி உட்கார்ந்து விட்டான்… துறை தலைவருக்கு அதிர்ச்சி….

  வகுப்பறை முழுக்க ஒரே சிரிப்பலை!!!! இவன் யார் என்றால் (இன்னும் ஒரு நாள் முழுசா இருக்கு நாளை பார்க்கலாம்) என்று முதலில் கிளப்பியவன் இவனே!!!! இது தான் நாங்கள் கற்ற கல்வி….அது ஒரு வசந்த காலம்…பகிர்வுக்கு நன்றி கிரி.

 • Mohamed Yasin September 19, 2017, 2:05 PM

  கிரி, என்னுடைய பின்னுட்டம் இதில் பதியப்படவில்லை..

 • கிரி September 20, 2017, 9:39 AM

  @ராம் தனியா ஒரு கட்டுரை எழுதும் அளவுக்கு தகவல்கள் தெரியாது.. வேறு கட்டுரையில் இடையில் குறிப்பிடுகிறேன்.

  @யாசின் உங்க கவனம் முழுவதும் புது நிறுவனம் அமைப்பதில் இருக்க வேண்டும் 🙂

  “திரும்பவும் குட் மார்னிங்… எல்லோருக்கும் அதிர்ச்சி… நண்பன் கூறினான் எனக்கு ஆங்கிலத்தில் தெரிந்தது இது மட்டுமே!!! என்று கூறி உட்கார்ந்து விட்டான்”

  என்னைப்போல ஒருவன் 🙂 🙂

  உங்க கருத்து SPAM பகுதிக்கு சென்று விட்டது. மன்னிக்க.

  • Mohamed Yasin September 20, 2017, 1:54 PM

   கிரி, ரொம்ப பெரிய நிறுவனம் இல்லை.. சிறிய அளவிலான தொழில் தான். (கவுண்ட மணி சாரின் மன்னன் காமெடியை நினைவில் கொள்ளவும் – புண்ணாக்கு & குண்டூசி) ஆனால் இதிலும் இருக்கின்ற பதட்டம், பயம், மகிழ்ச்சி, போட்டி, பொறாமை, கோபம், நண்பர்களின் சூழ்ச்சி… etc என கூறிக்கொண்டே போகலாம். எல்லாவற்றையும் ரசிக்க முடிகிறது… களவும் கற்று மற!!! என்பது போல் தொழிலும் செய்து பழகு!!!.. நன்றி கிரி.

 • Ram September 20, 2017, 10:01 AM

  @Giri nan Android-l miss panrathu iTunes mathiri onnu illayenu than ( mainly smart playlists) . Using smart playlists we can delete unnecessary songs holding space in our mobile. Do u know anything like that in Android?

 • Suresh Palani October 7, 2017, 3:19 PM

  கிரி,

  நான் இந்த படம் பார்த்து சுமார் மூன்று வருடங்கள் ஆகிறது… கொரியன் படத்திலேயே அதிகம் கவர்ந்த படம், அதிகம் முறை பார்த்த படம்…

  படம் பார்த்த பிறகு ஒரு பீலிங் வரும் பாருங்க…இச்ச.. அட இவ்வளவு நாளா இந்த படத்தை பார்க்காம மிஸ் பண்ணிடோட்டோம் என்று… அப்படி ஒரு திருப்தி…

  கிளைமாக்ஸ் காட்சி சான்ஸ் இல்ல… நாம நினைப்போம் அது நடக்க வேண்டும் என்று… பட் நடந்தது வேற…… அனைவரையும் கண் கலங்க வைக்கும் இறுதி காட்சி…

  முடிந்தால் இந்த படத்தையும் பார்க்க பரிந்துரைக்கிறேன்…

  Cold Eyes (2013)

  இப்படிக்கு
  சுரேஷ் பழனி

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz