தங்கல் [2016]

Thangal Movie review

மிகத்தாமதத்துக்குப் பிறகு தற்போது தான் “தங்கல்” படம் பார்த்தேன்.

இப்படம் தயாரிக்க அதிகபட்சம் 40 கோடி ஆகி இருக்கலாம் அமீர் சம்பளம் தவிர்த்து ஆனால், வசூல் செய்ததோ 2000 கோடி ருபாய்.

உண்மையிலேயே தரமான வெற்றி.

படத்தைப் பிரம்மாண்டமாகப் பார்க்கவும் மக்கள் விரும்புகிறார்கள் அதே சமயம் சாதாரணப் படத்தைச் சிறப்பான கதையம்சம் திரைக்கதையுடன் கொடுத்தால், அதைப் பார்க்கவும் தயாராக இருக்கிறார்கள்.

இரண்டு படங்களுக்கும் பொதுவான அம்சம் என்று பார்த்தால், நல்ல கதையம்சம் தேவை, சிறப்பான திரைக்கதை இருக்க வேண்டும். இந்த இரண்டும் இருந்தால், அப்படம் பெரும் வெற்றிப் பெறுகிறது.

“தங்கல்” படத்தில் அமீர் நடிப்பு என்று பெரியளவில் கூற முடியாது அவர் உடலை ஏற்றி இறக்கியதைத் தவிர்த்து. நடிப்பை பாராட்டும்படியான காட்சிகள் அவருக்கு அதிகளவில் இல்லை ஆனால், திரைக்கதை.. அசத்தல்!

முரண்

3 இடியட்ஸ் படத்தில் பெற்றோர்கள் அவர்கள் விருப்பத்தை மாணவர்கள் மீது திணிக்கக் கூடாது என்று கூறினார், “தங்கல்” படத்தில் அதற்கு முற்றிலும் எதிராக நடித்து இருப்பது முரண் 🙂 .

மூத்த பெண் கட்டுப்பாடுடன் இருந்து, சுதந்திரமான சூழ்நிலையை அனுபவித்து அதனால் கிடைக்கும் இன்பங்களால் பாதை மாறி பின் தன் தவறை உணர்ந்து திரும்புவது நல்ல திருப்பம்.

நான் கூட இளைய மகள் அமீரின் ஆசையை நிறைவேற்றுவாரோ! என்று நினைத்தேன். ஏனென்றால், காட்சிகள் அப்படித்தான் செல்லும்.

பயிற்சியாளர்

படத்திலேயே எனக்குத் திருப்தி இல்லாத கதாப்பாத்திரம் என்றால், பயிற்சியாளராக வருபவர் தான். அந்தக் கதாப்பாத்திரத்தை இன்னும் மிரட்டலாகக் கொடுத்து இருக்கலாம் அதாவது ஆளுமை மிகுந்த பாத்திரமாக.

“இறுதிச்சுற்று” படத்தில் அதே போல ஒரு கதாப்பாத்திரம் படத்துக்கு எவ்வளவு வலு சேர்த்தது என்பதை நாம் கண்டு இருப்போம்.

எப்படி அமீர் இதை முக்கியத்துவம் கொடுக்காமல் போனார் என்று வியப்பாக இருந்தது.

வசூலில் பிரம்மாண்டம்

என்னுடைய நண்பர் சீனாவில் அவருடைய அலுவலக நண்பர்கள் பலர் “தங்கல்” பார்த்ததாகக் கூறினார். எனவே, சீனாவிலும் மிகப்பெரிய வெற்றியே! ஊடகங்களில் வந்தது போல.

இறுதியில் வரும் நமது தேசிய கீதத்தைப் பாகிஸ்தானில் வெட்டக் கூறியதால், தங்கல் படம் பாகிஸ்தானில் வெளியாகவில்லை என்று ஊடகங்களில் வந்தது.

வெளியாகி இருந்தால், நிச்சயம் இங்கேயும் மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்கும்.

இப்படத்தை அனைவரும் பார்த்து இருப்பீர்கள். இதுவரை பார்க்கவில்லை என்றால், அவசியம் காணுங்கள். நிச்சயம் உங்களை ஏமாற்றாது.

கொசுறு

எங்க அம்மா ராணி

“எங்க அம்மா ராணி” (தன்ஷிகா) படம் தொலைக்காட்சி நாடகம் போல இருந்தது. பாடல்கள் நன்றாக இருந்தது, பின்னணி இசை சில இடங்களைத் தவிர ரொம்பச் சுமார். இசை இளையராஜா.

படத்தை நாடகம் பார்ப்பது போன்ற உணர்வையே ஒளிப்பதிவு தந்தது.

படம் மலேசியாவில் எடுக்கப்பட்டு இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் (கபாலி) பிறகு திரும்பச் சிங்கப்பூர், மலேசியா தமிழ் கேட்க வாய்ப்புக் கிடைத்தது மகிழ்ச்சி.

எனக்கு இவர்கள் தமிழ் பிடிக்கவில்லை என்றாலும், இடைவெளி விட்டுத் திரும்பக் கேட்கும் போது மகிழ்ச்சி இருப்பது உண்மையே 🙂 (புதியவர்களுக்கு! நான் சிங்கப்பூரில் 8 வருடங்கள் இருந்து இருக்கிறேன்).

எய்தவன்

கலையரசன் நடித்த “எய்தவன்” படம் கல்லூரிகளில் நடக்கும் ஊழல்களைக் காண்பித்தது.

இதில் நடித்த அடிதடி ஆட்கள் நடிப்பு மிக இயல்பாக இருந்தது, பொருத்தமான தேர்வு. கலையரசன் உடல் எடையைக் குறைக்க வேண்டும். ஊதிப்போய் உள்ளார்.

வில்லனாக வருபவர் நடிப்பு மிக நன்றாக இருந்தது. அலட்டிக்கொள்ளாமல் அதே சமயம் மிரட்டலாக நடித்து இருக்கிறார்.

கொள்ளை அடிக்க வந்தவர்கள் இவரை ஜட்டியுடன் உட்கார வைக்க, அங்கு ஆரம்பிக்கும் இவரின் அதிரடி இறுதி வரை தொடர்கிறது.

{ 5 comments… add one }
 • karthikeyan June 16, 2017, 11:26 AM

  எல்லா படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் ல பாத்திங்களா அண்ணா

 • karthikeyan June 16, 2017, 11:30 AM

  மன்னித்துவிடுங்கள் அண்ணா நீங்கள் இணையத்தில் பணம் கட்டி பார்ப்பவர் என்பதை மறந்து விட்டேன்

 • கிரி June 19, 2017, 8:12 AM

  🙂

 • Mohamed Yasin June 27, 2017, 1:44 PM

  லகான் படம் பார்த்த பின் அமீர்கானின் ரசிகனாகி விட்டேன். இவரது படங்களில் அனைத்திலும் வித்தியாசம். குறைகள் இருந்தாலும் வித்தியாசமான கதை களம் அதை மறக்கடிக்கிறது. தங்கள் / இறுதிச்சுற்று என்றால் என் பார்வையில் முதலிடம் இறுதிச்சுற்று தான். பகிர்வுக்கு நன்றி கிரி.

 • கிரி June 28, 2017, 5:58 AM

  இறுதிச் சுற்று செம்ம படம், சந்தேகமே இல்லை.

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz