திண்டிவனம் “ஆர்யாஸ்” உணவகம்

Aaryas restaurant tindivanam

திண்டிவனத்தில் ஒரு நிகழ்வுக்காக என் முன்னாள் அறை நண்பர்களுடன் சென்று இருந்தேன்.

சென்னையில் இருந்து காலை 6 மணிக்கே (காரில்) கிளம்பி விட்டதால், எங்கே சாப்பிடுவது என்ற கேள்வி வந்த போது “ஆர்யாஸ்” உணவகம் நண்பனால் பரிந்துரைக்கப்பட்டது.

சென்னையில் இருந்து வரும் போது திண்டிவனம் புறவழிச்சாலை பிரிவு அருகே திண்டிவனத்துக்கு அரைக் கிலோ மீட்டர் முன்பே உள்ளது வசந்த பவன் மற்றும் ஆர்யாஸ்.

8 மணிக்கே அதிகளவில் கூட்டம் காணப்பட்டது.

என்னய்யா! உண்மையாகவே நன்றாக இருக்கும் போல இருக்கே! 🙂 என்று கூறி விட்டு உள்ளே சென்றால், சிறிது நேரத்துக்குப் பிறகு அமர இடம் கிடைத்தது.

என்ன இருக்கு? 🙂

என்ன இருக்கு? என்று பட்டியல் அனைத்தையும் கேட்டு இறுதியில் இட்லியைக் கொடுங்க என்று கூறாமல் நாங்களே இட்லி வடையைக் கொண்டு வாங்க என்று கூறி விட்டோம் 🙂 .

மேசையில் பொடி, சட்னி, தக்காளி ஊறுகாய் (மாதிரி), சட்னி வைத்துள்ளார்கள். சாம்பார் ஒரு வாளி சிறிதாக வைத்துள்ளார்கள்.

சாம்பார், தேங்காய் சட்னி செம சுவையாக இருந்தது.

தோசை, பூரி அனைத்துமே நன்றாக இருந்தது. நண்பன், “பூரிக்கு இங்கே சாம்பார் நன்றாக இருக்கும்” என்றான், எனக்குத் தான் சாப்பிட விருப்பமில்லை.

மதிய உணவு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை, அடுத்த முறை முயற்சிக்க வேண்டும்.

கூட்டம் அலைமோதுகிறது. பலர் பயணத்தின் போது வழக்கமாக வருபவர்கள் என்று நினைக்கிறேன்.

திண்டிவனம் வழியாக உங்கள் வாகனத்தில் நீங்கள் செல்லவேண்டி இருந்தால், அடுத்த முறை “ஆர்யாஸ்” உணவகம் முயற்சித்துப் பாருங்கள்.

நெடுஞ்சாலை உணவகங்கள் என்றாலே பீதியாக இருக்கிறது. எனவே, இதை முயற்சிக்கலாம்.

{ 5 comments… add one }
 • Jayashankar June 15, 2017, 6:02 AM

  They have opened one for the commuters from Chennai to South.

  Its new n looks fantastic … N as usual service n quality is good..

 • ஜோதிஜி June 18, 2017, 5:10 AM

  சற்று ஆறுதலாக உள்ளது. தமிழ்நாட்டின் மொத்தக் கொள்ளைக்கூடமும் உணவகம் என்ற பெயரில் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். சென்னை முதல் கன்யாகுமரி வரைக்கும்.

 • கிரி June 22, 2017, 12:51 PM

  @ஜெயஷங்கர் தகவலுக்கு நன்றி

  @ஜோதிஜி இதை வழக்கமான நெடுஞ்சாலை உணவகமாக கருத முடியாது.. அதனால் பரவாயில்லை என்று நினைக்கிறேன்.

 • Mohamed Yasin June 27, 2017, 1:53 PM

  கிரி, கடந்த 15 வருடங்களாக பல மரண மொக்கை உணவகங்களை பார்த்து உள்ளதால் இனி எதையும் தாங்கும் சக்தி உண்டு. குறிப்பாக நெடுஞ்சாலை உணவகம் என்றாலே சொல்ல வேண்டியதில்லை. கோவையில் பணிபுரிந்த காலங்களில் ஒரு சிறிய கூரை வீட்டில் இருந்த உணவகத்தில் உண்ட சுவை இதுவரை எங்கும் கிடைக்கவில்லை.. மீண்டும் சாப்பிட வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி.

 • கிரி June 28, 2017, 5:56 AM

  🙂 நெடுஞ்சாலை உணவகங்கள் பலருக்கு திகில் அனுபவத்தை கொடுத்து இருக்கும்.

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz