இணையம் மூலம் பணம் சேமிக்கலாம் வாங்க!

Start making money online

ணையம் பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு அது ஒரு அற்புதமான சேவை. பலர் இணையம் என்றால் கூகுள் ஃபேஸ்புக் ட்விட்டர் WhatsApp பிட்டுப் படம் பார்ப்பதற்கு மட்டுமே பயன்படும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

Image Credit – ugandanfreelancer.com

இது போலப் பொழுதுபோக்குகளையும் தாண்டி நாம் ஏராளமாகச் சேமிக்கலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை. வாங்க என்னவென்று பார்ப்போம்.

மொபைல் என்றாலே செயலி என்றாகி விட்டது. கடும் போட்டி காரணமாகப் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு சலுகைகளை அளித்து வருகின்றன.

பல நிறுவனங்கள் சேவைகளை வழங்கி வந்தாலும் நான் அதிகம் பயன்படுத்தும் மூன்று செயலிகளை மட்டும் இங்கே கூறுகிறேன்.

Paytm Mobikwik Payzapp

Paytm

பணமதிப்பிழப்பு நடந்த பிறகு அதிக லாபம் பெற்றது Paytm நிறுவனம் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று.

Paytm நீங்கள் பயன்படுத்தும் பல்வேறு சேவைகளுக்கு Cashback Offer உட்படப் பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது.

இதைப் பயன்படுத்தும் போது நீங்கள் சில்லறை தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டியதில்லை அதோடு பணத்தைச் செலுத்துவதும் சுலபம்.

இதற்கு நீங்கள் உங்கள் கடனட்டை மூலம் பணத்தை Wallet ல் செலுத்துவதன் மூலம் உங்கள் கடனட்டையில் Points அதிகப்படுத்தலாம், இதன் மூலம் பரிசுகளைப் பெறலாம்.

இதையே நீங்கள் பணமாகக் கொடுத்துச் செலவு செய்தால், இது போலப் பயன்களைப் பெற முடியாது. இது அனைத்து செயலிகளுக்கும் பொருந்தும்.

Readகடனட்டை [Credit Card] என்றாலே பிரச்சனைகள் மட்டும் தானா!

Mobikwik

இந்தச் செயலியை அதிகம் கேள்விப்பட்டு இருக்க மாட்டீர்கள், கேள்விப்பட்டு இருந்தாலும் பயன்படுத்தி இருக்க மாட்டீர்கள். நானும் ஒரு மாதமாகத் தான் பயன்படுத்துகிறேன்.

பயன்படுத்திய பிறகு தான் “இது தெரியாம பல நாள் இருந்துட்டேனேனப்பா” என்றாகி விட்டது.

Paytm போல ஆனால், Paytm யை விட அதிக லாபம் எனக்கு இதில் தான் கிடைத்து வருகிறது. ஒருவேளை இவர்கள் பிரபலமாக இது போலக் கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

எதாக இருந்தாலும் நமக்கு லாபம் என்றால் பயன்படுத்த வேண்டியது தானே!

SuperCash Offer

இச்செயலியை பயன்படுத்தி நீங்கள் செலவு செய்யும் போது உங்களுக்கு SuperCash என்ற பணம் கிடைக்கும். இதை நீங்கள் வங்கிக்கு அனுப்ப முடியாது ஆனால், செலவு செய்யும் போது கிட்டத்தட்ட 10% தள்ளுபடி கிடைக்கும்.

உதாரணத்துக்குச் சரவண பவன் செல்கிறீர்கள், மதிய உணவு 110 க்குச் சாப்பிடுகிறீர்கள் என்றால், இதன் மூலம் பணத்தைச் செலுத்தினால் 6+ ருபாய் உங்களுக்குத் தள்ளுபடி.

சுருக்கமாக அவர்களுக்கு 110 செலுத்தியதாகக் காட்டும் ஆனால், நீங்கள் 104 ருபாய் தான் செலுத்தி இருப்பீர்கள்.

மொத்த விலையில் / கட்டணத்தில், நமக்கு இரண்டு ருபாய் குறைவு என்றாலும் லாபம் தானே!

கொஞ்சம் சின்னதா கணக்குப் போட்டுப் பாருங்க!

ஒரு நாளைக்கு இது போலப் பல செலவுகளைச் செய்யும் போது உங்களுக்கு SuperCash கூடிக்கொண்டே செல்லும் அதோடு தள்ளுபடியும் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

நீங்கள் செய்ய வேண்டியது இதைப் பயன்படுத்திப் பணம் செலுத்துவது மட்டுமே!

இது எப்படிச் செயல்படுகிறது என்பதை அவர்கள் தளத்தில் FAQ ல் படித்து விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.mobikwik.com/

PayZapp

இது HDFC வங்கியின் செயலி. இதுவும் Mobikwik போலவே நிறையச் சலுகைகளைத் தருகிறது. இதையெல்லாம் பயன்படுத்த ஆரம்பித்தால் அடடா! எவ்வளவு பணத்தை இவ்வளோ நாளா வீணடித்து விட்டோமே என்று நினைப்பீர்கள்.

வோடபோனுக்கு இதன் மூலம் பணம் கட்டி நண்பர் ஒருவர் செமையா சேமித்து விட்டார்.

PayZapp ல் கடனட்டை மூலமாக பணத்தை Wallet க்கு அனுப்பி பைசா செலவில்லாமல் நம் வங்கிக்கணக்குக்கு அனுப்பிடலாம். இதன் மூலம் வட்டியில்லா 50 நாட்கள் கடன் 🙂 . இதை தொடர்ச்சியாக செய்தால் ஒருவேளை உங்கள் கடனட்டை இதில் முடக்கப்படலாம்.

அவசரத்துக்கு மட்டும் இந்த வசதியைப் பயன்படுத்துங்கள்.

https://www.hdfcbank.com/htdocs/PayZapp/index.html

டேய் ஏர்டெல்…!

எனக்கு இருக்கும் செம்ம்ம கடுப்பு என்னவென்றால், ஏர்டெல் தவிர அனைத்துக்கும் சலுகை இருக்கும். நான் ஏர்டெல் பயன்படுத்துவதால் வயித்தெரிச்சலாக உள்ளது.

எந்தச் செயலி சென்றாலும் சலுகை ஏர்டெலுக்கு மட்டும் கிடையாது என்று இருக்கும்… கிர்ர்ர்ர்ர்ர்

இந்த ஏர்டெல் ****** ஏன் கொடுக்க மாட்டேங்குறான்னு தெரியல.. இதற்காகவே வேற நிறுவனம் மாறிடலாமா என்று யோசித்துட்டு இருக்கேன்.

பின்ன என்னங்க! நம்ம கண்ணு முன்னாடி எல்லோரும் சலுகை வாங்குறாங்க நமக்கு மட்டும் பிம்பிளிக்கி பிளாப்பி என்றால் கடுப்பா இருக்காதா!

எனக்கு வர ஆத்திரத்துக்கு ஏர்டெல்காரன் மட்டும் சிக்கினான்.. மவனே செத்தான்.

உலகத்துலயே கார் வச்சிருக்கிற ஒரே கரகாட்ட கோஷ்டி நம்ம கோஷ்டி தான்

தென் இந்தியாவிலேயே மின்னணு பரிவர்த்தனையில் உருப்படாத அரசு என்றால் அது நம்ம தமிழ்நாடு தான். ஒரு வெங்காயச் சேவையும் கிடையாது. எங்கே வேண்டும் என்றாலும் போய்ப் பாருங்க நம்ம தமிழ்நாடு மட்டும் பட்டியல்ல இருக்காது.

மின்சாரக் கட்டணத்தை இந்தச் செயலிகள் மூலம் கட்டினால் ரூபாய் 100 முதல் பல்வேறு Cashback Offer உள்ளது. நாம் ஆறுமுறை வருடத்துக்கு மின்சாரக்கட்டணம் கட்டுகிறோம்.

100 என்றால் கூடக் குறைந்தது 500 ருபாய் வருடத்துக்குச் சேமிக்கலாம்.

இதற்குத் தமிழக அரசு, தமிழக மின்சார வாரியம் தங்களை இது போன்ற சேவைகளில் இணைக்க வேண்டும் ஆனால், இவர்கள் எதோ மொள்ளமாரித்தனம் செய்ய இதைத் தள்ளிப்போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

இதுல என்ன கடுப்புனா தென் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு மட்டும் இல்லை.

இதனால நான் சொல்லிக்கிறது என்னவென்றால்..

IRCTC, Movie Tickets (Book My Show & Ticket Now) , Prepaid, Postpaid, DTH, Bus Ticket, கடைகளில் பொருட்கள் வாங்குவது, உணவகங்களில் பணம் கொடுப்பது போன்றவற்றைக் கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்யாதீர்கள்.

உங்கள் கண் முன்னே ஏராளமான சலுகைகள் உள்ளது. இதையெல்லாம் பயன்படுத்தித் தள்ளுபடி பெறுங்கள்.

இந்தச் செயலி தான் என்று ஒன்றிலேயே சுற்றிக்கொண்டு இருக்க வேண்டாம். இவற்றில் அப்போதைக்கு நமக்கு எது லாபமோ அந்தச் செயலியைத் தான் பயன்படுத்த வேண்டும்.

எனவே, எந்தச் செலவையும் செய்யும் முன்பு Offer பகுதி பார்வையிட்டு எது லாபம் என்று முடிவு செய்து பின் வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்துங்கள்.

மறக்காம ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்..

ஒரு செலவு செய்தால் அதில் நமக்கு லாபம் இருக்க வேண்டும், இல்லையென்றால், டாட்டா பை பை தான் 🙂 . வேற யாராவது கொடுப்பாங்க.. நமக்கு யாரா இருந்தால் என்ன..!

Wallet ல் பணத்தைச் சேர்க்கும் முன் அதற்கும் Offer இருக்கிறது. எனவே, படக்குனு பணத்தைப் போட்டுடாதீங்க.. Promocode பயன்படுத்திப் பணத்தை Wallet ல் ஏற்றினால் லாபமுண்டு.

செலவில் லாபம் கண்டு பயன்பெறுங்கள்.

இதை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதோடு உங்களுக்கு தெரிந்த  இது போல செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். நான் நிச்சயம் முயற்சிப்பேன் 🙂 .

{ 6 comments… add one }
 • karthikeyan May 4, 2017, 7:35 AM

  நான் பேடிஎம் தான் பயன்படுத்துகிறேன் அண்ணா அதில் நான் மொபைல் ரீசார்ஜ் மட்டுமே செய்கிறேன் இதுவரை எந்த ஒரு லாபமோ நட்டமோ வந்தது இல்லை . இனி நீங்கள் கூறிய மற்றவற்றை முயற்சி செய்து பாக்கிறேன் . நான் இப்போது சென்னையில் தான் இருக்கிறேன் அண்ணா . இங்கே வந்த பிறகு செலவுகளை மிகவும் குறைத்து விட்டேன் . நான் செலவு செய்வது டீ குடிக்கவும், உணவு சாப்பிடவும் , பேருந்தில் டிக்கட் எடுப்பது மட்டுமே. இதில் எங்கே நான் இந்த செயலிகளை பயன்படுத்துவது.

 • Thavakumaran May 5, 2017, 5:41 AM

  தெரிய தகவல்கள்..நன்றி சகோ

 • tamilnenjam May 5, 2017, 5:59 PM

  You can Load Mobikwik super cash into CCD Cafe Coffee Day app.

  You can Load Mobikwik super cash to Zopnow, MyMoreStore apps.

  you can just transfer 10% of super cash money / transaction.

  But you can completely move 100 INR super cash within 36 transactions.

  Thats just a game.

 • tamilnenjam May 5, 2017, 6:11 PM

  ICICI Pockets,
  DBS Rupizo e-wallet,
  Olamoney,
  JioMoney,
  Vodafone m-pesa,
  Oxygen,
  Future Pay (Bigbazzar’s),
  Slonkit,
  Freecharge,
  IdeaMoney,
  airtelmoney,
  SBIBuddy,
  PayuMoney,
  Citruswallet

  I got more cashback from Freecharge till Feb, 2017.
  Now Olamoney Fuel offer is going on
  Jio Money offered 1100 Rs OFF for Lenskart and got 200 Rs cashback for BESCOM electricity
  Future Pay (Bigbazzar) gives 5%, 10% instant cashback while loading money
  Rupizo gives 1% to 2% cashback for utility payments
  (I pay > 35,000 for electricity, water etc., and getting 350 to 700 as cashback in Rupizo (Powered by DBS)

  Its really good idea to use the wallets.
  While booking Movie tickets I used most of the abovesaid wallets got cashback every time.

 • Mohamed Yasin May 6, 2017, 1:47 PM

  கிரி, பல வருடங்களாக அயல் நாட்டில் இருப்பதால் நீங்கள் குறிப்பிட்ட பல விஷியங்கள் எனக்கு தெரியவில்லை. ஆனால் நன்மையோ / தீமையோ கடன் மற்றும் கடனட்டை பக்கம் செல்ல வேண்டாம் என்று எப்போதோ தீர்மானித்து விட்டேன்.

  என் அலுவலகத்தில் கடனட்டை இல்லாத ஒரே வேலையாள் நான் மட்டும் தான். இதை பெருமைக்காக கூறவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பம் இல்லை. நிறைய நண்பர்களை பார்த்துள்ளேன் கடனட்டை பிரச்சனையில் மாட்டிக் கொண்டு முழிப்பதை,

  என்னுடைய நெருங்கிய நண்பன் கடனட்டை பிரச்சனையை தீர்க்க அலுவலக பணத்தை எடுத்து ஒரு பிரச்சனையை தீர்க்க போய் நிறுவனத்திற்கு தெரிந்து அவன் வேலையே போயி விட்டது.

  சில நண்பர்கள் இதுபோன்ற செயலிகள் மூலம் செலவே செய்யாமல் பல சலுகைகளை (சினிமா டிக்கெட், தள்ளுபடி, Cashback Offer ) அனுபவித்து வருகின்றனர். அது அவர்களின் திறமையும் / அறிவையும் பொறுத்தது. அது சத்தியமா எனக்கு கிடையாது. பகிர்வுக்கு நன்றி கிரி.

 • கிரி May 7, 2017, 3:30 PM

  @கார்த்திக் Apps ல நிறைய தள்ளுபடி இருக்கு.. Paytm மட்டுமே நம்பிட்டு இருக்காதே..

  சென்னை எப்படி இருக்கு… உன்னோட எண்ணை எனக்கு FB ல Inbox பானு.

  @தமிழ்நெஞ்சம் எப்படி இருக்கீங்க? இன்னும் என்னுடைய தளம் படுத்துட்டு இருக்கீங்களா..?!

  பரிந்துரைக்கு நன்றி.. நான் முயற்சித்துப்பார்க்கிறேன். Freecharge FuturePay முயற்சித்தேன்.. ஆனால் அதில் எனக்கு பயனாக ஒன்றுமில்லை.. திரும்ப பார்க்கணும்.

  @யாசின் என்னோட கடனட்டை கட்டுரையை படித்துப் பாருங்கள்.. பயன்படுத்த தெரியாதவர்களுக்குத் தான் கடனட்டை செலவு.

  14 வருடங்களாக கடனட்டை பயன்படுத்துகிறேன்.. இதனால் எனக்கு லாபம் மட்டுமே கிடைத்து இருக்கிறது. ஒரு ருபாய் கூட நான் இழந்தது இல்லை.

  நாம் சரியாக திட்டமிட்டால் லாபம் பெறலாம்.

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz