NEET தேர்வு கட்டுப்பாடல்ல கிறுக்குத்தனம்!

NEET Exam 2017

NEET தேர்வு சர்ச்சை மனித உரிமை மீறல் ஆணையம் வரை சென்றுள்ளது.

துவக்கத்திலேயே என்ன உடை அணிந்து வரலாம், என்ன ஆபரணங்கள் அணிந்து வரக்கூடாது என்று விதிமுறைகளில் தெரிவித்து இருக்கிறார்கள். இதையெல்லாம் தெரிந்தும் சிலர் இவற்றைச் செய்து இருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

நான் இக்கட்டுரை எழுத நினைக்கக் காரணம் மேற்கூறியதல்ல, உலகத்திலேயே எங்கேயும் இது போல ஒரு தேர்வு நடந்து இருக்காது என்று கருதுகிறேன். அந்த அளவுக்குக் கட்டுப்பாடு.

என்னதான் கவனமாக இருந்தாலும் ஏதாவது ஒன்றுக்கு (ஹூக் கூட) பீப் சத்தம் கொடுக்கத்தான் செய்யும். அதுக்குன்னு உள்ளாடையைக் கழட்டக் கூற உரிமையை யார் கொடுத்தது?

இதே வேற ஒரு சாதாரணமான தேர்வாக இருந்தால், அப்பெண் சண்டை போட்டு இருக்க வாய்ப்புள்ளது ஆனால், இது அவர்கள் எதிர்காலம் எனும் போது சகிக்க வேண்டியதாகி விட்டது.

இத்தனை மன உளைச்சலோடு சென்று எப்படி எழுத முடியும்? ஒழுங்கான மனநிலையில் சென்றாலே பதட்டத்தில் பாதி மறந்து விடும். இந்த நிலையில் இது போல நடந்தால்?!

அப்படி என்ன உலகத்தில் நடக்காத தேர்வு!

சரி எனக்கு உண்மையாகவே புரியவில்லை… அப்படி என்னங்கடா தேர்வு நடத்துறீங்க.. உலகத்தில் நடக்காத தேர்வு!

இவ்வளவு முக்கியம் என்றால் ஒவ்வொரு தேர்வு வகுப்பிலும் வழக்கமான சோதனை முடிந்து CCTV நிழற்படக் கருவி வைத்துப் பிடிங்க. பிட்டு அடிக்குறாங்களா இதில் பிடித்துத் தகுதி நீக்கம் செய்யுங்க. யார் கேட்கப்போறாங்க?

இன்னைக்கு ஆடை கழட்டல் நிகழ்வை நியாயப்படுத்திப் பேசுகிறவர்கள் உங்களையும் அறியாமல், எச்சரிக்கையாக இருந்தும் உங்கள் வீட்டுப்பெண்ணுக்கு நடந்து இருந்தால், ஏற்றுக்கொள்வீர்களா? என்பதை மனசாட்சியுடன் யோசித்துப்பாருங்கள்!

நான் ஆடை கழட்டல் நிகழ்வை மட்டும் வைத்துக் கூறவில்லை, ஒட்டுமொத்தமாகவே இவர்களின் கட்டுப்பாடுகள் பைத்தியக்காரத்தனமாக உள்ளது.

மாணவர்களைத் தேர்வு எழுதும் போது உளவியல் ரீதியாகப் பாதிப்புள்ளாக்கி தேர்வு வைத்து எதைச் சாதிக்கப் போகிறீர்கள்?

தேர்வுக்குக் கட்டுப்பாடுகள் நிச்சயம் அவசியமே! ஆனால், இதன் பெயர் கட்டுப்பாடல்ல முழுக்க கிறுக்குத்தனம்.

கொசுறு

எதிர்காலத்தில் NEET தேர்வில் அணிய உடை, ஒப்பனை வகுப்பு, பயிற்சி வகுப்பு, சிகையலங்கார வகுப்பு  என்று துவங்கப்பட்டாலும் வியப்படைய எதுவுமில்லை.

{ 4 comments… add one }
 • காத்தவராயன் May 9, 2017, 12:44 PM

  இத்தனை கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு பதில்;

  எல்லோரும் “அம்மணமாக” வரவேண்டும் என்ற ஒரே ஒரு கட்டுப்பாட்டை மட்டும் விதித்திருந்தால் போதுமானது. 🙁 யாரும் நீட் தேர்வை எதிர்த்திருக்க மாட்டார்கள்.

  உங்கள் பாணியில் சொல்வதென்றால்;
  வடா இந்தியன் முட்டாள் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளான்.

 • someswaran May 9, 2017, 3:54 PM

  // இவ்வளவு முக்கியம் என்றால் ஒவ்வொரு தேர்வு வகுப்பிலும் வழக்கமான சோதனை முடிந்து CCTV நிழற்படக் கருவி வைத்துப் பிடிங்க. பிட்டு அடிக்குறாங்களா இதில் பிடித்துத் தகுதி நீக்கம் செய்யுங்க. யார் கேட்கப்போறாங்க? //

  டிஜிட்டல் இந்தியாவில் இந்த திட்டம் நல்ல திட்டம்

 • ராஜ்குமார் May 10, 2017, 6:40 AM

  கிரி அவர்கள் மீதும் தப்பில்லை.. டெக்னாலஜி அவ்வளவு வளர்ந்து விட்டது – காதுக்குள் அடங்கும் மைக்ரோ போன் பரவலாக கிடைக்கிறது – ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்பு புளூடூத் அடங்கிய பனியன் பறிமுதல் செய்யப்பட்டது. வசூல் ராஜா படம் வெளிவரும் முன்பே ஒரு மருத்துவ கல்லூரியில் புளூடூத் மூலம் காப்பி அடிக்கப்பட்டது.

  மருத்துவ கல்லூரி பேப்பர் சேசிங்கில் ஜாமீன் கொடுக்க நீதிபதியை (ஒரு அமைச்சரை) வைத்து மிரட்டியது நம் தமிழ் நாடு.. என்பதை மறந்துவிட்டனர்.

  எந்தவொரு டாக்டரிடமும் யாரும் ஏன் சொந்தக்காரர்கள் கூட எத்தனை அரியர் அல்லது எவ்வளவு வருடத்தில் அதனை முடித்தீர்கள் எ ன்று கேட்டதில்லை.

  ஒரு சாதாரண கல்லூரியில் மருத்துவ படிப்பின் பீஸ் 1500000 ஒரு வருடத்திற்கு.. 2016
  ஒரு மாணவன் முதல் வருட பயோகெமிஸ்ட்ரி பாடத்தை முடித்தது ஆறாவது வருடத்தில்.
  அனேகம் பேர் சேர்க்கப்படுவதின் காரணம் – பெற்றோர் மருத்துவராக இருப்பார்,. அவர் கட்டிய கிளினீக் அல்லது ஹாச்பிடலை மேற்கொண்டு நடத்தவேண்டும்.. இதற்கு பல உதாரணங்கள் காட்ட முடியும்.
  தவிர.. மருத்துவர்களும் சாதாரண மனிதர்கள் தான் ஆனால் நாம் தான் நம் வசதிக்கேற்ப கடவுள் என்று தலை மீது வைத்து கொண்டாடுகிறோம்.

 • கிரி May 11, 2017, 4:38 AM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @ராஜ்குமார் கட்டுரையில் கூறியுள்ளபடி கட்டுப்பாடுகள் தேர்வுகளுக்கு நிச்சயம் அவசியமே! ஆனால், இது கட்டுப்பாடு என்பதையும் தாண்டி வேற மாதிரி போயிட்டு இருக்கு.

  தேர்வு விதிமுறைகளில் இருந்தும் அதை பின்பற்றாமல் உடை, ஆபரணங்கள் அணிந்து வந்தது மாணவர்கள் தவறே! இதில் எனக்கும் உடன்பாடில்லை. இதை கட்டுரையிலே குறிப்பிட்டு இருக்கிறேன்.

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz