கூகுளோடு ஊர் சுற்றலாமா!

Google Trips

கூகுள் வழிகாட்டி (Map) சக்கைப் போடு போடுவதால், அதையொட்டி பல சேவைகளைக் கூகுள் வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் “Google Trips” .

தற்போது துவக்க நிலையில் இருப்பதால், இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை.

இதில் என்ன பயன்கள் உள்ளது என்று பார்ப்போம்

இதைப் பயன்படுத்த நீங்கள் ஜிமெயில் கணக்குப் பயன்படுத்த வேண்டும்.

ஏனென்றால், நம்முடைய மின்னஞ்சலுக்கு வரும் பயணச் சீட்டு குறித்த விவரங்களைப் படித்துத் தானியங்கியாக இதனுடைய விவரங்களை எடுத்து அதிலிருந்து நமக்குத் தகவல்களைத் தரும்.

உதாரணத்துக்கு IRCTC யில் முன்பதிவு செய்தவுடன் நமக்கு மின்னஞ்சல் வரும், அதை கூகுள் கணக்கில் எடுத்துக்கொள்ளும். இதே போல விமானத்தில் முன்பதிவு செய்யும் போது வரும் மின்னஞ்சலை சேர்த்துக்கொள்ளும்.

நம்முடைய முன்பதிவு விவரங்களைச் செயலி தனியாகக் காட்டும். இவையல்லாமல் நாமும் நம்முடைய பயணத் திட்டங்களை இதில் சேர்க்கலாம்.

இந்த ஊரில் என்ன சிறப்பு?

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு, சுற்றுலாத்தலங்கள் இருக்கும் ஆனால், இது நமக்குத் தெரியாது, மற்றவரிடம் கேட்க கூச்சம் இருக்கலாம்.

இந்தச் செயலியை வைத்து இருந்தால் இந்தப் பிரச்சனைகள் இல்லை. இதுவே சுற்றுவட்டார பகுதிகளில் எந்த இடம் பிரபலம், பார்க்க வேண்டிய இடங்கள் குறித்த தகவல்கள் என்று அனைத்தையும் நமக்குத் தெரிவிக்கும்.

நமக்குப் பிடித்த இடத்தை இதில் தேர்வு செய்து வழியைச் சொடுக்கினால் கூகுள் வழிகாட்டி செயலி திறந்து நாம் செல்லவேண்டிய இடத்துக்கு வழியை எப்போதும் போலக் காட்டும்.

Google Trips

பிரபலமான உணவகங்கள்

சுற்றுலா இடங்கள் மட்டுமல்லாது பிரபலமான உணவகங்கள் இருக்கும் இடத்தையும் காட்டும்.

முன்னரே கூறியபடி இந்தச் செயலி ஆரம்ப நிலையில் தான் உள்ளது. எனவே, பல இடங்கள் இதில் காட்டப்படவில்லை.

இதைப் பயன்படுத்துபவர்கள் தவறவிடப்பட்ட இடங்களைச் சேர்க்க கூகுளுக்குப் பரிந்துரைக்கலாம்.

{ 2 comments… add one }
  • Mohamed Yasin May 21, 2017, 2:25 PM

    கலக்கலான பதிவு கிரி, நிச்சயம் நிறைய நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கூகிளின் சேவைகளை நினைக்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அடுத்த என்ன?? அடுத்து என்ன??? என்ற கேள்வி தொடர்ந்து கொண்டே வருகிறது. பகிர்ந்தமைக்கு நன்றி கிரி.

  • கிரி May 29, 2017, 7:22 AM

    நன்றி யாசின் 🙂

Leave a Comment