YouTube தெரியும் “YouTube Go” தெரியுமா?

YouTube Go

ற்போது காணொளிகளுக்குக் கிடைக்கும் அபிரிமிதமான வரவேற்பை கருத்தில் கொண்டு கூகுள் YouTube Go என்ற புதிய செயலியை தற்போது இந்தியாக்கு (மட்டும்) அறிமுகப்படுத்தியுள்ளது. தற்சமயம் சோதனை (Beta) பதிப்பில் உள்ளது.

இதுவும் வழக்கமான YouTube செயலி (App) போன்றதே ஆனால், தரவிறக்கம் செய்து Offline ல் பார்ப்பவர்களுக்கு எளிதானது, வசதியானது.

இலவசமாக இணைப்பு கிடைக்கும் போது நமக்கு விருப்பமான காணொளிகளை இந்தச் செயலியின் மூலம் தரவிறக்கம் செய்து கொண்டு பின்னர் நமக்கு நேரம் இருக்கும் போது பார்க்கலாம். குழப்பமில்லாத எளிமையான முறை.

Basic Quality மற்றும் Standard Quality என்ற இரு தரங்களில் காணொளிகளைத் தரவிறக்கம் செய்யலாம்.

தரவிறக்கம் செய்யும் போது காணொளி அளவு எவ்வளவு MB என்பதையும், நம்முடைய திறன்பேசியில் எவ்வளவு இடமுள்ளது என்பதையும் தெளிவாகக் கூறுகிறது.

இதில் இன்னும் Scheduled தரவிறக்க வசதி இல்லை.

இது இருந்தால், காணொளிகளைத் தேர்வு செய்து விட்டு இரவு நேரங்களில் வரம்பற்ற (Unlimited) இலவச தரவிறக்கம் கொடுக்கும் போது தரவிறக்கம் (Download) செய்து பின்னர் பார்க்கலாம்.

இது குறித்து அவர்களுடைய Feedback பகுதியில் குறிப்பிட்டு அனுப்பி இருக்கிறேன்.

சில சிறப்புகள் 

காணொளிகள் நம்முடைய விருப்பத்துக்கு ஏற்ப வரும்படி தானியங்கியாக வடிவமைக்கிறது.

எனவே சில நாட்கள் பார்க்க ஆரம்பித்தால் நம் விருப்பம் அறிந்து நமக்குப் பிடித்த காணொளிகள் முகப்புப் பக்கத்தில் வர ஆரம்பிக்கும். விருப்பப்பட்டால் நாமாகவும் தேடிப் பார்க்கலாம்.

காணொளிகளின் அளவை அதன் தரம் குறையாமல் சுருக்கி (compress) தரவிறக்கம் செய்கிறது.

நீங்கள் தரவிறக்கம் செய்த காணொளிகளை உங்கள் நண்பர்களுடன் எளிதாகப் பகிர்ந்து கொள்ள முடியும்.

எட்டு இந்திய மொழிகளைக் கொண்டுள்ளது, அதில் வழக்கம் போல தமிழும் உள்ளது. இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளுள் தமிழ் குறிப்பிடத்தக்கது.

விருப்பமுள்ளவர்கள் முயற்சித்துப் பாருங்கள்.

The King of Internet

Android beat Microsoft

இணையப் பயன்பாட்டில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு Microsoft Windows இயங்கு தளத்தை Android இயங்கு தளம் மிஞ்சி விட்டது. இனி Android யை Microsoft மிஞ்சுவது என்பது நடவாத காரியம். Image Credit – StatCounter

தற்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் அதிகம் திறன்பேசி (smart phone), tablet போன்ற சாதனங்களையே பயன்படுத்துகிறார்கள் என்பதாலே இந்த மாற்றம். எதிர்காலத்தில் இது அதிகரிக்குமே தவிரக் குறைய வாய்ப்பில்லை.

நான் இணையம் பயன்படுத்த 90% திறன்பேசியையே பயன்படுத்துகிறேன் அலுவலகம் தவிர்த்து. மீதி 10% Blog கட்டுரை எழுத மட்டுமே மடிக்கணினியைப் பயன்படுத்துகிறேன்.

சென்னை வந்த பிறகு தான் ஆப்பிள் திறன்பேசியில் இருந்து Android க்கு மாறினேன்.

என்னுடைய அனுபவத்தில் ஆப்பிள் வன்பொருள் (Hardware) தரத்தை Android திறன்பேசிகள் அடையக் காலம் எடுக்கும் என்றாலும் OnePlus போன்ற Android திறன்பேசிகள் விலை குறைவாகவும் அதே சமயம் தரமானதாகவும் உள்ளது.

Read: சந்தையைக் கலக்கும் கூகுள் திறன்பேசி “Pixel”

Android பயன்பாட்டுக்கு (UI) மிகப் பெரிய ரசிகன் ஆகி விட்டேன். ச்ச்சும்மா அதிருது! 🙂 .

{ 0 comments… add one }

Leave a Comment