மிரட்டும் தமிழும் கூகுள் மொழிமாற்றியும்!

Google Translator

ந்தியாவில் அதிகம் இணையத்தில் பயன்படுத்தப்படும் மொழி எது தெரியுமா?! தமிழ் மொழிக்கு எந்த மொழி போட்டி தெரியுமா?!

நம்மால் பெரும்பான்மை மொழிகளைப் படிக்க முடியும் தெரியுமா?!

வாங்க என்னவென்று பார்ப்போம்!

உலகில் 15% மக்கள் மட்டுமே ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறார்கள் ஆனால், உலகில் 50% தளங்கள் ஆங்கிலத்திலேயே உள்ளது என்று கூகுள் கூறுகிறது.

எனவே,

அனைத்து மொழி மக்களும் தங்கள் தாய் மொழியில் படிக்க வசதியை ஏற்படுத்தினால், இதன் மூலம் அதிக லாபத்தையும் பயனாளர்களையும் பெற முடியும் என்று நம்புகிறது.

இதற்குத் துவக்கமாகக் கூகுள் மொழிமாற்று வசதியை ஏற்படுத்தியது.

அனைவரிடையே வரவேற்பைப் பெற்றாலும் தமிழ் போன்ற சில மொழிகளை அதன் தனித்தன்மை காரணமாகக் கூகுளால் சிறப்பாக மொழிமாற்றம் செய்ய முடியவில்லை.

மொழி மாற்றம் செய்யப்பட்டவை, தொடர்ச்சியான வாக்கியமாக இல்லாமல் மொழி மாற்றிய வார்த்தைகள் மட்டும் சிதறி, இலக்கணப் பிழையுடன் அர்த்தமில்லாமல் இருந்தது.

உதாரணத்துக்கு, I Love You என்றால் “நான் காதல் நீ” என்று நேரடியாக மொழி மாற்றப்பட்டது. தற்போது “நான் உன்னை காதலிக்கிறேன்” என்று முழுமையாக்கப்பட்டுள்ளது.

Neural Machine Translation

துவக்கத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் Phrase Based Translation. இதைக் கடந்த வருடம் Neural Machine Translation என்ற தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்தியது.

இந்த தொழில்நுட்பம் அசத்தலாக வேலை செய்கிறது.

100% சரியாக இல்லையென்றாலும் சிறப்பாக மொழி மாற்றம் செய்கிறது. எதிர்காலத்தில் நிச்சயம் மிகச் சரியான மொழி மாற்றியை தரும் என்று நம்பலாம்.

என்னால் நிச்சயமாக வித்யாசத்தை உணர முடிகிறது. சோதித்துப் பாருங்கள் https://translate.google.com/

நீங்களும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவலாம்!

கூகுள் தனது பயனாளர்களிடம் உதவி கேட்டு அவர்கள் தந்த பரிந்துரையில் சிறப்பாக மேம்படுத்தியுள்ளது. இதில் எவரும் எந்த மொழி பேசுபவரும் தங்கள் பங்கை ஆற்றலாம்.

தமிழ் மொழிக்காக நானும் என் பங்கை ஆற்றியுள்ளேன். https://translate.google.com/community

தமிழுக்காக உட்கார்ந்த இடத்தில் உங்கள் பங்கையாற்ற அற்புதமான வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இந்தி கண்ணாடியை கழட்டுங்கப்பா!

Highest language Internet users in India

India govt services in Local languages

Highest language Internet users in India in News is Tamil

Highest language Internet users in India in 2021

Highest language Internet users in India and digital payment

ஒரு நிறுவனம் உலகின் பெரும்பான்மை மொழிகளை அவரவர் மொழியில் மொழி மாற்றம் செய்து படிக்க உதவுகிறது. Image Credits – Google and inc42.com

ஆனால், நம் அரசாங்கம் தன்னுடைய அரசு தளங்களையும் மற்ற சேவைகளையும் தங்கள் நாட்டின் மொழிகளில் மாற்றித் தர ஏதேதோ காரணம் கூறி புறக்கணித்து வருகிறது.

இந்தி கண்ணாடியை கழட்டினால் தான் மற்ற மொழிகள் புலப்படும்.

எதிர்காலத்தில் தமிழின் போட்டியாளர் இந்தி அல்ல கன்னட மொழியே! 🙂 . இது இந்தியாவில் மட்டுமே.. உலகளவில் கணக்கெடுப்பு எடுத்தால் “தமிழ்” தொட முடியாத உச்சத்தில் இருக்கும்.

கூகுள் வழிகாட்டியில் (Map) மொழிமாற்றி

Google Map Reviews

மேற்கூறிய வசதியோடு கூகுள் வழிகாட்டியில் காட்டும் உணவகங்கள், கடைகள், இருப்பிடங்கள் குறித்த விமர்சனங்களையும் (Reviews) நம் மொழியில் மாற்றித்தருகிறது.

எனவே, நாம் எந்த நாட்டுக்கு சென்றாலும் நம் மொழியிலே அனைத்தையும் படிக்க முடியும். செம்மையா இருக்குல்ல 🙂 .

Google Gboard

இது கூகுளுடைய Keyboard செயலி. இதன் மூலம் எளிதாக நம் மொழியில் தகவல்களைப் பரிமாறலாம் அதோடு தேடல் இயந்திரமாகவும் பயன்படுத்தித் தகவலை மற்றவருக்கு அனுப்பலாம். காணொளியைப் பாருங்கள்.

கூகுள் தேடல்

Google Search

கூகுள் தேடலில் உங்களது மொழியினைத் தமிழாக வைத்து இருந்தால், நீங்கள் ஏதாவது ஒரு தகவலை தேடும் போது அவை வேறு மொழியில் இருந்தால், உங்களால் தமிழிலேயே மொழி மாற்றிப் படிக்க முடியும்.

பாருங்க.. கூகுள் நமக்கு எவ்வளவு வசதியை செய்து தருகிறது என்று 🙂 . கூகுளின் வசதிகளைப் பயன்படுத்துவோம் நம் தாய் மொழியில் படித்துப் பயன்படுத்தி இன்புறுவோம்.

தமிழைப் பயன்படுத்துங்கள்! தமிழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்!!

தொடர்புடைய கட்டுரைகள்

தமிழ்

தமிழ்ச் சொற்கள்

தமிழ் ஊடகங்களுக்குத் தாழ்மையான வேண்டுகோள்

facebook “முகநூல்” என்றால் Lady Gaga “பெண் காகா” வா?

படிப்பதில் Skip தெரியும்.. “Skim” தெரியுமா?!

இந்தித் திணிப்பு அழிக்கும் தமிழ் அடையாளம்! [FAQ]

{ 3 comments… add one }
  • 'பசி’பரமசிவம் April 28, 2017, 6:38 AM

    மிக மிக மிகப் பயனுள்ள பதிவு. நன்றி…நன்றி…நன்றி.

  • someswaran April 28, 2017, 1:48 PM

    அருமை, அசத்தல். நல்ல அல்ல பயங்கரமான முன்னேற்றம்.

  • Mohamed Yasin April 29, 2017, 7:38 AM

    அசத்தலான பதிவு கிரி. நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷியங்களில் 90 % எனக்கு தெரியாது. படிக்கும் போது ஆச்சரியமாகவும், சுவாரசியமாகவும் இருக்கிறது. பின்பு சோதித்து பார்க்க வேண்டும். கூகிள் மென்மேலும் ஆச்சரியம் அளித்து கொண்டே போகிறது. பகிர்வுக்கு நன்றி கிரி.

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz