கூகுளில் கூடுதல் இடத்தைப் பெறுவது எப்படி?

 

google-drive

Google Photos ஒரு அற்புத சேவை ஆனால், இதன் பயனை அறிந்து முழுமையாகப் பயன்படுத்துபவர்கள் குறைவு. இது கொடுக்கும் பயனை தெரிந்து கொள்வோம்.

நமக்குத் தற்போது WhatsApp மற்றும் பல்வேறு சேவைகள் மூலமாகவும் நாம் எடுக்கும் நிழற்படங்கள் மூலமாகவும் தினமும் ஏராளமான நிழற்படங்கள், காணொளிகள் வருகின்றன.

இவற்றைச் சேமிப்பது பற்றி ஏற்கனவே விளக்கி இருக்கிறேன்.

Read: கூகுள் ஃபோட்டோஸ் தரும் அசத்தல் இலவச சேவைகள்

தற்போது நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டு இருந்த வசதி வந்துள்ளது.

கூகுள் ட்ரைவ் 

இலவச கணக்கில் வராமலே நம்முடைய சில நிழற்படங்கள் நம்முடைய இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கும். இதில் எது இடத்தை (கூகுள் ட்ரைவில்) எடுத்துக்கொண்டு இருக்கிறது என்பது தெரியாது. ஒவ்வொரு கணக்குக்கும் 15 GB இலவச இடமுள்ளது.

இதனால், முன்பு நான் அனைத்துப் படங்களையும் தரவிறக்கம் செய்து அளவை மாற்றித் தரவேற்றம் செய்தேன். தற்போது இதெல்லாம் தேவையே இல்லை. ஒரே ஒரு க்ளிக்கில் அனைத்தையும் இலவச கணக்கில் கொண்டு வந்து விடலாம்.

நான் எந்த வசதியெல்லாம் எதிர்பார்க்கிறேனோ கூகுள் அதையெல்லாம் சொல்லிவைத்த மாதிரி கொடுக்குது 🙂 . பயனாளரின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் கூகுளை அடித்துக்கொள்ள இன்னொரு நிறுவனமில்லை.

இதை எப்படி நீங்கள் பெறலாம் என்று கூறுகிறேன். இந்த எடுத்துக்காட்டில் நான் 300 MB இடத்தை மீட்டு இருக்கிறேன்.

Login to Google Photos –> Settings

1

Google Photos

2

Google Photos

3

Google Photos

4

Google Photos

5

Google Photos

இடத்தைப் பெறுங்கள்! மகிழ்ச்சி அடையுங்கள்!! 🙂

{ 4 comments… add one }
 • நல்லது தம்பி…. நன்றி….

  ரொம்பவும் “விளக்கமாக” சொல்லி உள்ளீர்கள்… மீண்டும் நன்றிகள் பல…

  “கூகுள் ட்ரைவ் என்றால் என்ன…?” என்பதே யாருக்கும் தெரியாது… இதில் Google Photos…(!)

  உங்களின் சேவை தொடர வாழ்த்துகள்…

  Contact for any PROBLEM:
  09944345233
  dindiguldhanabalan@yahoo.com

 • Arulanantham Jeevatharshan March 14, 2017, 8:16 PM

  ஒருத்தர் ரெண்டு மூணு கணக்கு வச்சிருந்தால் அனைத்திலும் சேமிக்கலாமா? அல்லது ஒரிஜினல் ஐடி என வெரிபைட் பண்ணியத்துக்கு மட்டும்தானா?

 • கிரி March 15, 2017, 11:04 AM

  @ஜீவதர்ஷன் நலமா? 🙂

  ஆமாம். நீங்கள் எத்தனை கணக்கு வைத்து இருந்தாலும் அத்தனைக்கும் 15 GB இடமுண்டு.

  ஒவ்வொரு கணக்கிலும் தனித்தனியாக லாகின் செய்து நீங்கள் நிழற்படங்களை உங்கள் தகவல்களை Upload செய்து கொள்ளலாம், 15 GB வரை. 15 GB என்பது ஜிமெயில், ட்ரைவ், போட்டோஸ் உள்ளடக்கியது.

 • Balamurali March 20, 2017, 7:06 AM

  தற்போது ஜிமெயில் புகைப்படங்களும் காணொளிகளும் நேரிடையாக பார்க்கலாம் Facebook போல்…. தரவிறக்கம் செய்ய தேவையில்லை…

Leave a Comment