தெறிக்கும் வேகம் ஃபேஸ்புக் Instant Article

facebook instant article

Blog உச்சக்கட்டத்தில் (2008 – 2010) இருந்த போது Hits எனப்படும் பார்வையாளர் எண்ணிக்கை மிகப்பெரிய விசயமாகவும் கவுரவமாகவும் பார்க்கப்பட்டது.

காலமாற்றத்தில் பெரும்பாலானவர்கள் எளிமையான ஃபேஸ்புக் ட்விட்டர் Video Blogging என்று நகர்ந்து விட்டார்கள். Images Credit – facebook Media

Hits Hits Hits

எழுதுபவர்கள் Hits க்காக Feed ல் முழுவதும் படிக்கக் கொடுக்காமல் கொஞ்சம் மட்டும் கொடுத்து தளத்துக்குப் படிக்க வர வைப்பது வழக்கம்.

ஆனால், இப்போதெல்லாம் படிக்க வைப்பதே பெரிய விசயமாகி விட்டது.

WhatsApp காலத்தில் ஏர்டெல் காரன் குறுந்தகவலுக்கு (SMS) பண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைப் போல Feed restrict செய்வது நகைச்சுவையாக உள்ளது 🙂 .

என்னுடைய தளத்தை இன்னும் பழைய வாசகர்கள் சிலர் படிக்கிறார்கள் என்றால் Reader மற்றும் மின்னஞ்சலில் Feed முழுமையாகக் கொடுப்பதால் தான்.

இதெல்லாம் இல்லையென்றால் எப்பவோ என்னை புறக்கணித்து இருப்பார்கள்.

அதிகரித்துள்ள திறன்பேசி வழியாகப் படிப்பவர்கள் எண்ணிக்கை!

தற்போது என்னுடைய தளத்துக்கு அதிகளவில் வருபவர்கள் ஃபேஸ்புக்கில் இருந்து தான்.

ஃபேஸ்புக் எல்லாம் ட்வெண்ட்டி 20 ஆகி விட்டது. சுட்டியை (Link) க்ளிக் செய்து படிக்கும் அளவுக்கெல்லாம் தற்போது யாருக்கும் பொறுமையில்லை.

கொஞ்சம் பெரிதாக இருந்தாலே “அடப் போய்யா” என்று அடுத்ததுக்குத் தாவி விடுகிறார்கள்.

இதில் சுட்டியை க்ளிக் செய்து நம் தளத்துக்கு வரவைப்பது எல்லாம் கூவத்தூரில் இருப்பவர்களை அழைத்து வருவது போல  சிரமம் ஆகி விட்டது 🙂 .

3 நொடிகளுக்கு மேல் காத்திருக்க ஒருவருக்கு பொறுமையில்லை என்று ஆய்வு கூறுகிறது.

ட்விட்டர் ஃபேஸ்புக்கில் நான்கு வரி நிலைத்தகவலுக்கு (Status) கிடைக்கும் வரவேற்பு ஒரு பக்கத்துக்கு எழுதும் Blog க்கு கிடைக்காது. இது தான் நிதர்சனம்.

என்னுடைய தளத்துக்கு வருபவர்களில் 75% பேர் திறன்பேசி வழியாகத் தான் படிக்கிறார்கள். நீங்களும் கூட இதை உங்கள் திறன்பேசி வழியாகப் படித்துக்கொண்டு இருக்கலாம் 🙂 .

Accelerated Mobile Pages (AMP)

எனவே, திறன்பேசியில் படிப்பவர்களுக்கு வசதியாக வேகமாக இருக்க வேண்டும் என்று செயல்படுத்தியது தான் AMP. இந்த முறையில் மிக வேகமாகப் பக்கங்கள் திறக்கும்.

Read: கூகுள் தெரியும் “கூகுள் AMP” தெரியுமா?

facebook Instant Article

facebook instant article

Instant Article பற்றி ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்குத் தெரிந்து இருக்கும். மின்னல் குறியீடு போல இருக்கும் சுட்டியை க்ளிக் செய்தால் மிக வேகமாகத் திறக்கும்.

இதற்குக் காரணம் நம்முடைய தளத்தின் கட்டுரை ஃபேஸ்புக் தளத்தில் இருப்பதே!

இந்த வசதி மூலம் திறன்பேசி வழியாக ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் மிக வேகமாகக் கட்டுரையைத் திறந்து படிக்க முடியும். தளத்துக்கு நேரடியாக வர வேண்டிய தேவையில்லை.

நீங்க சொன்னால் நம்பித்தான் ஆகணும், இவ்வளவு வேகமாகப் படிக்கக் கொடுத்தும் இதைப் படிக்கவே பொறுமையில்லை என்று 100 ல் 40 பேர் தான் படிப்பார்கள்.

அந்த 40 ல் 20 பேர் தான் முழுதாகப் படிப்பார்கள் 😀 .

மாற்றம் ஒன்றே மாறாதது

கால மாற்றத்துக்கு ஏற்ப நாமும் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் பின் தங்கி விடுவோம் அல்லது காணாமல் போய் விடுவோம்.

தொடர்பில் இருங்கள் 🙂 .

என்னுடைய தள facebook Instant Article படிக்க விரும்புவர்கள் https://www.facebook.com/giriblog  ல் இணைந்து கொள்ளுங்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

“Blog” அழிந்து வருகிறதா?

படிப்பதில் Skip தெரியும்.. “Skim” தெரியுமா?!

{ 3 comments… add one }
 • Better to change http://www.giri.com

  டெஸ்ட் மேட்ச் காணாமல் போனால்…?

  தம்பி விவேகம் சிறந்தது…

  புரிந்தால் நன்றி…

 • Mohamed Yasin March 19, 2017, 11:35 AM

  நான் எப்போதும் பழமையின் காதலன், இதுவரை ஒரு கட்டுரை கூட FB மூலம் படித்தது இல்லை; படிக்கவும் தோன்றியது இல்லை. 20 / 20 இல்லை 10 / 10 வந்தாலும் டெஸ்ட் போட்டிகளின் மீது கொண்ட காதல் என்றும் மாறாது… ஆனால் வாசகர்களின் நிலை எவ்வாறு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் நிச்சயம் உங்களை பொறுத்தவரை மாற்றம் என்பது மிக அவசியமானது… பகிர்வுக்கு நன்றி கிரி.

 • கிரி March 21, 2017, 6:41 AM

  @திண்டுக்கல் தனபாலன் நல்லது சொன்னா நமக்கு எங்க புரியுது 🙂

  @யாசின் உங்களை போலவே எனக்கு இது போல எழுதுவது / படிப்பது விருப்பம் ஆனால், நம்மைப் போல இருப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

  எனவே, என்னுடைய தளத்தில் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் வசதியை செயல்படுத்தி இருக்கிறேன். அவரவருக்கு விருப்பப்படும் வகையில் படித்துக் கொள்ளலாம்.

Leave a Comment