நன்கொடை பெறுபவர் கொடுப்பவர் கவனத்துக்கு!

UPI

ற்போது நன்கொடை, நண்பர்களிடையே பணப்பரிமாற்றம் என்பது சாதாரண நிகழ்வாகி விட்டது. இதற்கு UPI பணப்பரிவர்த்தனை முறை எளிமையாக உள்ளது ஆனால், பலர் இது பற்றி அறியாமலே உள்ளனர்.

தற்போது சிரமப்படுகிறவர்களுக்கு உதவுவர்கள் அதிகரித்து வருகின்றனர் ஆனால், உதவி பெறுபவர்கள் பணப் பரிமாற்றம் செய்யும் முறையை எளிமையாக்காமல் கிடைக்கும் உதவியை இழந்து வருகிறார்கள்.

IFSC எண் & வங்கி கணக்கு

அனைவருக்குமே உதவி செய்ய விருப்பம் இருக்கும் ஆனால், அதற்காக அவர்களது IFSC எண், வங்கி கணக்கு, பெயர் என்று அனைத்தையும் உள்ளீடு செய்து அதை வங்கி அனுமதித்துப் பின் பணத்தை அனுப்ப வேண்டும்.

அவசரமான உலகில் இதெல்லாம் மிகப்பெரிய நடவடிக்கையாக, அதிக வேலை உள்ளதாக மாறி விட்டது. இதனாலே பலர் உதவி செய்ய மனமிருந்தும் சோம்பேறித்தனம் காரணமாக உதவத் தவறி விடுகிறார்கள்.

நானே நிறைய முறை இதே போல உள்ளீடு செய்யச் சோம்பேறித்தனப்பட்டு உதவாமல் இருந்து இருக்கிறேன். இக்கட்டுரை எழுத இதுவும் ஒரு காரணம்.

எனவே இதை எளிமைப்படுத்த உதவி கேட்பவர்கள் முயற்சி செய்ய வேண்டும். அப்போது தான் உதவித் தொகை அதிகளவில் பெற முடியும்.

இதில் PayPal, Paytm போன்ற வசதிகள் இருந்தாலும், மிக எளிமையான அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வசதி என்றால் அது UPI தான்.

BHIM செயலி

மத்திய அரசாங்கம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள செயலியான BHIM நம்முடைய பணப்பரிவர்த்தனைகளை எளிமைப்படுத்தியுள்ளது.

துவக்கத்தில் Android இயங்கு தளத்துக்கு மட்டுமே இந்தச் செயலி இருந்ததைத் தற்போது iOS இயங்கு தளத்துக்கும் விரிவுபடுத்தியுள்ளது.

இதை எவ்வாறு பயன்படுத்துவது?

இதில் உங்கள் வங்கி கணக்கை இணைப்பது மிக மிக எளிமையான ஒன்று.

தற்போது BHIM செயலியில் ஒரு வங்கி கணக்கை மட்டுமே இணைக்க முடியும் ஆனால், வேறு வங்கி கணக்கை விருப்பப்பட்டால் பின்னர் மாற்றிக்கொள்ளலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை இணைக்கும் வசதி பின்னாளில் வரலாம்.

உங்களுடைய ஏதாவது ஒரு வங்கி கணக்கை அதாவது நீங்கள் வழக்கமாகப் பணப்பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தும் வங்கி கணக்கை (Primary), இதில் இணைக்க வேண்டும்.

இது உங்களுடைய வங்கியில் இணைக்கப்பட்டுள்ள Mobile எண்ணுக்கு OTP அனுப்பி உறுதிப்படுத்திக்கொள்ளும். பணத்தை அனுப்ப MPIN எனப்படும் ATM PIN போன்ற கடவுச்சொல்லை பதிய வேண்டும்.

இதை நீங்கள் உங்களுடைய பற்று அட்டை (Debit Card) மூலமாகச் செய்து கொள்ளலாம்.

UPI முகவரி / VPA (Virtual Payment Address)

இதை முடித்த பிறகு உங்களுடைய UPI முகவரியை உருவாக்க வேண்டும். BHIM செயலி தானாகவே உங்களுடைய Mobile எண் 9999911111@upi என்று உருவாக்கி விடும்.

ஒருவேளை உங்களுக்கு உங்கள் Mobile எண்ணை மற்றவர்களுக்குத் தெரிவிக்க விருப்பமில்லை என்றால், நீங்கள் உங்கள் பெயரை, எண்ணுக்கு பதிலாகக் கொடுத்து மாற்று முகவரி உருவாக்கிக் கொள்ளலாம்.

உதாரணத்துக்கு giriblog@upi

இது போல முகவரியை உருவாக்கி நன்கொடைக்குக் கொடுத்து விடலாம்.

பணம் அனுப்ப விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய BHIM செயலியிலோ அல்லது அவர்களுடைய வங்கி செயலியின் UPI செயலி மூலமாகவே பணம் அனுப்பலாம்.

உதாரணத்துக்கு giriblog@icici giriblog@hdfcbank என்று எதையும் பயன்படுத்தலாம்.

UPI முறையில் VPA முறையல்லாது வங்கிக்கணக்கு மூலமாகவும் அனுப்ப முடியும்.

பணம் அனுப்ப 1 நிமிடம் கூட ஆகாது.

இந்த முறை மூலம் உங்கள் பணத்தை Wallet ல் வைத்து இருக்க வேண்டிய அவசியமில்லை. இப்பணம் நேரடியாக உங்கள் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து எடுத்து அனுப்பப்படும்.

பணம் அனுப்பக் கட்டுப்பாடு

BHIM செயலியில் ஒரு கட்டுப்பாடு, ஒரு முறை 10,000 ரூபாயும், அதிகபட்சம் ஒரு நாளைக்கு 20,000 மட்டுமே அனுப்ப முடியும். எதிர்காலத்தில் இத்தொகை அதிகரிக்கப்படலாம், பட வேண்டும்.

மற்ற வங்கிகளில் இவ்வளவு குறைந்த கட்டுப்பாடில்லை.

எனவே, நன்கொடை வேண்டும் என்பவர்கள் தங்கள் வங்கி விவரங்களைத் தர வேண்டிய அவசியமில்லை. இந்த UPI முகவரியை மட்டும் கொடுத்தால் போதும்.

எனவே, உதவி வேண்டும் என்பவர்கள் வங்கி கணக்கு, IFSC எண் போன்ற விவரங்களோடு அடுத்த வசதியாக UPI முகவரியையும் சேர்த்தே கொடுங்கள்.

நாம் UPI முகவரியை உள்ளீடு செய்து Verify கொடுத்தால், அந்த முகவரி கணக்கின் உரிமையாளரின் பெயரைக் காட்டும் எனவே, மாற்றி அனுப்பி விடுவோமோ என்று அஞ்சத் தேவையில்லை.

மிக மிக எளிமையான வசதி.

BHIM செயலி அவசியமான ஒன்று

இதைப் படிக்கும் அனைவரையும் BHIM செயலியை தங்கள் திறன்பேசியில் நிறுவி உங்கள் UPI கணக்கை துவங்க வேண்டுகிறேன்.

நண்பர்களிடையே அவசர பணப்பரிமாற்றம், செலவு கணக்குகளைப் பகிர்தல் போன்றவற்றுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும். நான் என்னுடைய நண்பர்களிடையே இதை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தி வருகிறேன்.

அனைவரும் இதன் எளிமை காரணமாக,

எப்படி… தேடல் செய்யக் கூகுள் பண்ணி பாரு, குறுந்தகவல் அனுப்ப WhatsApp பண்ணிடு.. என்று கூறுகிறோமோ! அது போல, இனி பணம் அனுப்ப “BHIM பண்ணிடு” என்று சொல்லும் காலம் வரும்.

இது குறித்து சந்தேகம் இருந்தால் கேட்கலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

“மின்னணு” பரிவர்த்தனை வெற்றியா தோல்வியா?! FAQ

அசத்தலான செயலி “Splitwise”

{ 5 comments… add one }
  • nagendrabharathi March 9, 2017, 8:00 AM

    அருமை

  • Mohamed Yasin March 9, 2017, 8:38 AM

    ரொம்ப தெளிவா, அழகா, நேர்தியா, புரியும்விதத்தில் சொல்லி இருக்கீங்க!!!. எதிர்காலத்தில் கண்டிப்பாக நிறைய நண்பர்களுக்கு பயன் அளிக்கும் என நம்புகிறேன்.. சில நாட்களாக திரைப்பட குறிப்புகள் ஒன்றும் தென்படவில்லையே!!! பகிர்வுக்கு நன்றி கிரி..

  • Sivam Sakthivel March 10, 2017, 5:13 AM

    இணையத்தில் கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து BHIM செயலியை பயன்படுத்தி வருகின்றேன், அருமையாக உள்ளது.

    சிறு சிறு குறைகள் உள்ளது, அவற்றையும் நிவர்த்தி செய்தால் பயன்பாட்டிற்கு இன்னும் எளிமையாக இருக்கும்.

  • Devarajan March 10, 2017, 6:03 AM

    தெளிவான பதிவு.நன்றி. MMID பற்றிய விளக்க கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.

  • கிரி March 12, 2017, 4:12 PM

    அனைவரின் வருகைக்கும் நன்றி

    @யாசின் உங்களுக்காக மாநகரம் 🙂

    @தேவராஜன் நீங்கெல்லாம் இன்னும் என்னுடைய தளத்தை படித்துட்டு இருக்கீங்களா? 🙂 மகிழ்ச்சி.

    MMID யை விட BHIM மற்றும் UPI வசதி எளிதானது.

Leave a Comment