இணையத் தொழில்நுட்பச் செய்திகள் [Nov 2016]

YouTube Red

YouTube விளம்பரமில்லாமல் காணொளிகளைக் காண YouTube Red என்ற கட்டணச் சேவையை அறிமுகப்படுத்தியது, அதோடு கூகுள் மியூசிக் போன்ற வசதிகளும் உள்ளன. வழக்கம் போல அமெரிக்கா உட்படச் சில நாடுகளில் மட்டுமே இச்சேவை அறிமுகமானது.

இதுவரை 1.5 மில்லியன் பயனாளர்கள் மட்டுமே இச்சேவையைப் பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது. இது எதிர்பார்த்த எண்ணிக்கையை விடக் குறைவு என்று கூறுகிறார்கள்.

கூகுளோ “இது நாங்க எதிர்பார்த்த எண்ணிக்கை தான். இச்சேவையை மற்ற நாடுகளுக்கு விரிவு படுத்தும் போது பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்று கூறியுள்ளது.

சமீபமாக ஃபேஸ்புக்கின் கடும் போட்டியை YouTube சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LastPass

LastPass என்ற சேவையைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

முன்பெல்லாம் இணையக்கணக்கு என்றால், யாஹூ, ஜிமெயில் என்று அதிகபட்சம் நான்கு கணக்குகள் இருக்கும் ஆனால், தற்போது குறைந்த பட்சம் 20 முதல் 30 கணக்குகள் உள்ளன. இவை அனைத்துக்கும் ஒரே கடவுச்சொல்லை வைக்க முடியாது.

அப்படித் தனித்தனி என்றால், அனைத்தையும் நினைவு வைத்துக்கொள்ள முடியாது. இவற்றை நினைவு வைக்க முடியாததால், இவற்றைச் சேமிக்கப் பல வசதிகள் உள்ளன.

அதில் ஒன்று தான் LastPass.

இது நம்முடைய கடவுச்சொற்களைச் சேமிக்க உதவுகிறது. இதுவரை கணினியில் பயன்படுத்தும் போது இலவசமாகவும் திறன்பேசிகளில் பயன்படுத்த கட்டணச் சேவையாகவும் இருந்தது. தற்போது திறன்பேசிகளிலும் இலவசமாக்கி விட்டது.

Chrome speed increased 15%

குறுகிய காலத்தில் மைக்ரோசாஃப்ட்டின் Internet Explore உலவியைக் கடந்து அதிகப் பயனாளர்களைப் பெற்று உலகளவில் முதலிடத்தில் உள்ள க்ரோம் உலவி தற்போது தனது வேகத்தை 15% கூடுதலாக்கி இருக்கிறது.

க்ரோம் மீது உள்ள குற்றச்சாட்டு அதிகளவில் நினைவக (Memory) சக்தியை எடுக்கிறது என்பது. இதைக் குறைக்க முயற்சிகளை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளது.

க்ரோம் அறிமுகமாகிய காலத்தில் இருந்து இன்று வரை க்ரோம் மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். அசத்தல் சேவை!

Mobile / Tablet Internet

internet-usage

திறன்பேசிகளின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு பலரும் இணையத்தைக் கணினியிலோ அல்லது மடிக் கணினியிலோ பார்ப்பது குறைந்து விட்டது. அலுவலகத்தில் மட்டுமே இவற்றைப் பயன்படுத்துகிறார்கள். Image Credit – Statcounter

எங்கும் திறன்பேசிகளின் பயன்பாடு நிறைந்து இருப்பதால், இணையத்தை அனைவரும் திறன்பேசிகளிலே பார்த்து கணினிகளைப் புறக்கணித்து வருகிறார்கள்.

தற்போது வெற்றிகரமாக இணையத்தைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணினிகளில் குறைந்து திறன்பேசிகளில் அதிகரித்து விட்டது.

இக்கட்டுரையையும் கூட நீங்கள் உங்களுடைய திறன்பேசியிலேயே படித்துக்கொண்டு இருக்க வாய்ப்புள்ளது 🙂 .

முன்பெல்லாம் என்னுடைய மடிக்கணினியின் பயன்பாடு அதிகமாக இருந்தது, தற்போது குறைந்து Blog எழுத மட்டுமே இதை எடுக்கிறேன். அந்த அளவுக்குத் திறன்பேசிகளே அனைத்தையும் பார்க்க / படிக்க உதவுகிறது.

அலுவலகங்களில் மட்டுமே கணினி மற்றும் மடிக்கணினி பயன்பாடு அதிகமாக உள்ளது. இங்கேயும் Tablet வரவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

YouTube Kids

YouTube ல் காணொளிகளைப் பார்க்கும் போது மிகவும் சங்கடமான சூழ்நிலை என்னவென்றால், நாம் பார்க்கும் காணொளிகளின் தொடர்புடைய காணொளிகள் என்று ஏடாகூடமான காணொளிகள் வரும்.

பொதுவா இது போன்ற காணொளிகளை நாம் பார்க்கும் போது நம்முடைய History யை வைத்து, அது தொடர்பாக வருவது தான் ஆனால், இது போன்ற காணொளிகளைப் பார்க்கவில்லை என்றாலும், ஏடாகூடமாக வருகிறது.

நானும் எப்படியெப்படியோ சோதித்துப் பார்த்து விட்டேன் ஆனாலும், இதைக் குறைக்க முடிந்ததே தவிரத் தவிர்க்க முடியவில்லை. இதனால் குழந்தைகளுக்கு Rhymes காட்டும் போது பயமிருக்கும்.

தற்போது இப்பிரச்சனையைக் கூகுள் YouTube Kids வசதியின் மூலம் சரி செய்து இருக்கிறது. மற்ற இடங்களில் ஏற்கனவே அறிமுகமாகி இருந்தாலும், இந்தியாவில் தற்போது தான் அறிமுகமாகி இருக்கிறது.

எனவே, உங்கள் வீட்டுக் குழந்தைகள் பயன்படுத்தும் Tablet போன்ற சாதனங்களில் வழக்கமான YouTube செயலியை நீக்கிவிட்டு YouTube Kids நிறுவிக்கொள்ளுங்கள்.

{ 5 comments… add one }
 • Someswaran November 11, 2016, 12:15 PM

  Superb post sir, at first I came to your blog through the article “adivaangiyum thirunthaatha google”. Daily we are using net by some way but what to notice, what to learn kind of things are important, you are guiding us. First time I am reading your blog in smartphone.

 • சின்னமலை November 12, 2016, 2:28 AM

  ரொம்ப நாட்களுக்கு பிறகு தொழில்நுட்ப செய்திகள் இதை போல மாதம் ஒரு முறையாவது எழுதுங்க அண்ணா.

  Youtube எப்போதும் பலானா வீடியோ தான் வருது.chrome cast மூலமா வீட்டில் வீடியோ play செய்தால் அந்த மாதிரியான வீடியோ வந்து மானத்தை வாங்கி விட்டது.புது அக்கௌன்ட் ஆரம்பித்தால் கொஞ்ச நாளில் அதிலேயம் அதே மாதிரியான வீடியோ வருது.யூடூப் கிட்ஸ் உபயோகமா இருக்கும்ன்னு நினைக்கிறன்.

 • நீங்கள் சொல்லியுள்ள கடைசி விசயம் கடந்த சில வாரங்களாக போராடிக் கொண்டிருக்கின்றேன். என்ன ஒரு ஒற்றுமை. மேலே உள்ள தமிழ் நம் பெருமை நன்றாக உள்ளது. நிறத்தை மாற்றவும்.

 • கிரி November 17, 2016, 4:37 AM

  @சோமேஸ்வரன் நன்றி 🙂

  @சின்னமலை மாதம் ஒரு முறை எழுத நிச்சயம் முயற்சிக்கிறேன்.

  @ஜோதிஜி YouTube Kids மிகப் பயனுள்ளது. இப்ப பசங்க இதைத் தான் பார்த்துட்டு இருக்காங்க. எனக்கும் பிரச்சனையில்லை.

  நிறத்தை மாற்றி விட்டேன். இதை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருப்பேன்.

 • Mohamed Yasin November 17, 2016, 7:30 AM

  கிரி. Lastpass இதுவரை கேள்விப்படாத ஒன்று. பயனுள்ள ஒன்று தான். youtube kids இதுவரை நான் அறிந்திடாத ஓன்று. மிகவும் பயனுள்ள ஒன்று. தகவலுக்கு நன்றி கிரி.

Leave a Comment