பதினொன்றாவது ஆண்டில் “கிரி Blog”

11 Years

த்தாவது ஆண்டு நிறைவடைந்து இன்று பதினொன்றாவது ஆண்டு துவங்குகிறது.

நான் எழுத வந்த போது பலர் மிகத் தீவிரமாக Blog எழுதி வந்தார்கள். தற்போது பலரும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டருக்கு நகர்ந்தால், கடந்த இரண்டு வருடங்களாக தனித்து விடப்பட்டது போல உணர்வு இருந்தது.

புதிதாக எழுதுபவர்கள் பலர் இருந்தாலும் என்னுடன் எழுதியவர்கள் பெரும்பான்மையானவர்கள் இல்லாதது எனக்குச் சிரமமாக இருந்தது. தொடர்ச்சியாக எழுதி வந்தாலும் ஏனோ எதையோ இழந்து தனிமையாக இருப்பது போல ஒரு உணர்வு.

தற்போது இனி அந்த வாழ்வு கிடைக்காது என்பது நிதர்சனமாகத் தெரிந்து விட்டதால், மனதை தேற்றிக்கொண்டு தனியாகவே தொடர பழகிக்கொண்டேன். அதற்கேற்றாற்போலச் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்தது எழுதுவதைக் குறைத்தது.

சென்னை வந்த பிறகு எழுதுவது குறையப் பின்வரும் காரணங்களே!

1. இணையக் கணக்கு பெறவில்லை. இரண்டு மாதங்களாகத் தான் ACT பயன்படுத்தி வருகிறேன்.

2. பசங்க இரவு தூங்க மாட்டேங்குறாங்க.. 🙂 அவர்களைத் தூங்க வைக்க நான் தூங்க வேண்டியதாக இருப்பதால், எழுத முடியவில்லை. இதுவே காரணம் வேறு ஒன்றுமில்லை.

ஆர்வம் தொடர்கிறது

GiriBlog first post

இடையில் Blog வரவேற்பு குறைந்ததால் கொஞ்சம் சலிப்பு ஏற்பட்டது. பின்னர் விடாமல் அவ்வப்போது எழுதி வந்தேன். தற்போது படிப்பவர்கள் எண்ணிக்கை திரும்ப அதிகரித்து இருப்பது உற்சாகத்தை அளிக்கிறது என்பது உண்மை.

இதற்கு என்னுடைய https://www.facebook.com/giriblog பக்கம் உறுதுணையாக இருக்கிறது. ஏனென்றால், இங்கே இருந்து என்னுடைய தளத்திற்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

இதுவரை எழுதி என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததில் கடந்த வாரம் எழுதிய “Foreign Return”வாழ்க்கை எப்படி இருக்கு?! கட்டுரை பலரை கவர்ந்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.

நிறையப் பேரின் எண்ணவோட்டங்களைப் பிரதிபலித்ததால் இருக்கலாம் என்று கருதுகிறேன்.

புத்தகங்கள் படிப்பதில் கவனம் செலுத்துவதால், தற்போது புத்தக விமர்சனங்கள் எழுத முடிகிறது.

எனக்குத் தெரிந்த விசயங்களை மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும், பல நல்ல செய்திகளைக் கூற வேண்டும் என்ற ஆர்வம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

விரிவாக எழுத நேரம் இல்லாத போது முக்கிய செய்திகளைப் பகிர https://www.facebook.com/giriblog பக்கம் உதவிகரமாக இருக்கிறது.

இனி வரும் நாட்களில் சில முக்கியக் கட்டுரைகளைப் பகிரப் போகிறேன். நிச்சயம் உங்களுக்கு அவை பயனுள்ளதாக அமையும்.

அதில் ஒன்று “எதிர்மறை எண்ணங்களால் ஏற்படும் இழப்புகள்” பற்றி. இது எனக்குத் தாமதமாகப் புரிந்தது. எனவே, எனக்குப் புரிந்ததை உங்களுடன் பகிர்ந்து நீங்களும் எப்படி மேம்படலாம் என்று கூறுகிறேன்.

பிற்சேர்க்கை

Read: எதிர்மறை எண்ணங்களால் ஏற்படும் இழப்புகள்

மாற்றுக் கருத்துகள்

நானும் சராசரி நபரே! எனவே, மாற்றுக் கருத்துகள் உங்களுக்குத் தோன்றுவது இயல்பே. இருப்பதில் எவ்வளவு ஒத்துப் போகிறேன் என்பதை மட்டும் பாருங்கள். நீங்கள் நினைத்த மாதிரியே எழுத வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

நான் மட்டுமல்ல அந்தக் கடவுளால் கூட முடியாது. அனைவரையும் திருப்தி செய்வது என் வேலையல்ல. இதை நான் ஒவ்வொரு முறையும் ஆண்டுத் துவக்கத்தில் கூறுகிறேன்.

நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. எனக்குச் சரி என்று தோன்றுவதை எழுதுவேன். உங்களுக்குத் தவறு என்று தோன்றினால் மாற்றுக் கருத்து என்று கடந்து செல்லுங்கள் அல்லது விமர்சியுங்கள்.

ரஜினி

நான் ரஜினி பற்றிக் குறிப்பிடுவது உங்களில் சிலருக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். மன்னிக்கவும். இதற்கு நான் எதுவும் செய்ய முடியாது, யாருக்காகவும் விட்டுத்தர முடியாது.

ஏனென்றால், இவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட விசயங்கள் ஏராளம். எனவே, இவர் குறித்து அவ்வப்போது திணிக்கப்படாமல் சரியான நேரத்தில் என்னுடைய எழுத்துக்களில் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

உங்களுக்கு இது பிடிக்கவில்லை என்றால் ஒரே வழி என்னை / என் தளத்தைப் புறக்கணிப்பது தான்.

தலைவர் கூறிய ஒரு விசயத்தை வைத்து கட்டுரை தரப்போகிறேன். எனக்கு ரொம்ப நாளாகப் புரிந்தும் புரியாமலும் இருந்த ஒரு விசயத்தை இவருடைய ஒரு பேச்சுத் தெளிவாக்கியது. நடுத்தரக் குடும்பத்தில் வந்த ஒவ்வொருவரின் வழக்கமான பிரச்சனை.

விரைவில் இது குறித்து எழுதுகிறேன்.

பிற்சேர்க்கை

Read: நடுத்தர வகுப்பு மக்கள் என்பவர்கள் யார்?

விமர்சனங்கள்

தொடர்ந்து படியுங்கள். விமர்சனங்களை முன் வையுங்கள். ஆரோக்கியமானதாக இருந்தால், நிச்சயம் என்னை மாற்றிக் கொள்வேன். தவறுகளில் இருந்து பாடம் கற்பது எனக்கு மிகப் பிடித்தது.

மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் என்பது போல, என் எழுத்துக்களில் எனக்கு நம்பிக்கையுள்ளது. எனவே, யார் கேள்வி கேட்டாலும் என்னால் பதில் தர முடியும், தவறு என்றால் ஏற்றுக் கொள்ள முடியும். எனவே, எனக்கு எந்த நெருக்கடியுமில்லை.

துவக்கத்தில் அனைத்துக்கும் கருத்துக் கூறிக் கொண்டு இருந்தேன். இது என்னை நெருக்கடியில் தள்ளியது. அதாவது “அதுக்குச் சொன்னே.. இதுக்கு ஒன்னும் சொல்லலையே!” என்றானது. எனவே, எனக்குக் கூறனும் என்று தோன்றும் செய்திகளுக்கு மட்டுமே கூறுகிறேன்.

இந்த மாற்றம் என்னை நெருக்கடியில் இருந்து விடுவித்ததோடு சுதந்திரமாக எழுதவும் உறுதுணையாக இருக்கிறது.

இவ்வளவு வருடங்களாகத் தொடர்ந்து படிப்பவர்களுக்கும் புதிதாகப் படிக்கத் துவங்கியவர்களுக்கும் நன்றி. தொடர்பில் இருங்கள்.

மகிழ்ச்சி! 🙂

{ 18 comments… add one }
 • காயத்ரிநாகா August 16, 2016, 5:19 AM

  மென்மேலும் நல்ல பதிவுகளைத் தர வேண்டுகிறேன். பதினோராம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது மிக்க மகிழ்ச்சி!

 • Vijay August 16, 2016, 7:57 AM

  கில்லாடி,
  உங்களுடைய தொழில்நுட்ப செய்திகளை ரொம்பவும் மிஸ் பண்ணுகிறோம். கண்டிப்பாக எழுதவும். உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

 • Azhagar August 16, 2016, 11:08 AM

  வாழ்த்துக்கள் ! தொடர்ந்து எழுதுங்கள் . உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது . நானே பல முறை உங்கள் தளத்தை வந்து பார்த்து செல்கிறேன் . தாமதம் ஆனால் எப்போது அடுத்த பதிவு வரும் என்று எதிர்பார்க்கிறேன்

 • ராமலக்ஷ்மி August 16, 2016, 1:10 PM

  “மகிழ்ச்சி 🙂 !”

  தொடர்ந்து பயணியுங்கள். வாழ்த்துகள்!

 • Mohamed Yasin August 16, 2016, 1:33 PM

  கிரி, உங்கள் எழுத்து பயணம் தொடரும் வரை, எங்கள் தொடர்பும் தொடரும்… ஒரு குறிப்பிட பணியை ஒன்று, இரண்டு ஆண்டுகள் தொடர்வதே கடினம்… 10 ஆண்டுகள் …. யோசிக்க கூட முடியவில்லை!!!! நிச்சயம் இந்த உழைப்பிற்கு பின் நாங்கள் அறியா பல சிரமங்கள் உண்டு….. தொடர்ந்து படியுங்கள்…. தொடர்ந்து எழுதுங்கள்…… பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி கிரி..

 • Sathyanarayanan Srinivasan August 16, 2016, 4:23 PM

  வாழ்த்துக்கள் கிரி, பத்தாண்டுகள் தொடர்ந்து எழுதுவது மிகப் பெரிய விஷயம் இது மேலும் தொடரட்டும்.

 • வேகநரி August 16, 2016, 8:49 PM

  நீங்க தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

 • மாதவன் August 17, 2016, 3:07 AM

  நான் உங்க ப்ளாக்கை 8வருடங்களாக படித்துக்கொண்டு இருக்கிறேன். கருத்து எதுவும் போட்டது இல்லை. சமீபமாக சில கருத்துக்களை எழுதினேன். அவ்வளவே. ஆனால் நான் மிகவும் ரசித்து படிக்கும் ப்ளாக்குகளில் உங்களுடைய ப்ளாக்கும் ஒன்று.

  சினிமா விமர்சனம் ப்ளாக்கில் எழுதிக்கொண்டு இருந்தவர்கள் பலபேர் இப்போது யூடியூபில் சினிமா விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இருந்தாலும் காவிரிமைந்தன் ப்ளாக், வீடுதிரும்பல், கேபிள்சங்கர், என்று சில பேர் இன்னமும் ப்ளாக்கில் ஆக்டிவாக செயல்படுகிறார்கள்.

  என்ன தான் அனைத்தும்யூ டியூபில் பார்த்தாலும் மனதிற்குள் ஒரு சந்தோஷம் படிக்கும் போது தான் உண்டாகிறது. நியூஸ் டிவியில் பார்த்தாலும் பேப்பரில் 📄 படிக்கும் அனுபவத்தை விஷுவல் மீடியா தரமுடியாது. வாழ்த்துக்கள்.

  நீங்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருங்கள். இன்னொன்று ஒரு யோசனை. உங்கள் அனுபவங்களை எண்ணங்களை யூடியூபில் நீங்கள் சொன்னால் என்ன?

  அதுவும் நன்றாக இருக்குமே? எனக்கு தோன்றியது சொன்னேன். நன்றி கிரி.

 • மகிழ்ச்சி. நானும் அடுத்த பயணத்தைத் தொடங்க ஆவலாக உள்ளேன். விரைவில் எழுதத் தொடங்கலாம் என்று நினைத்துள்ளேன்.

 • Kameswara Rao Vallur Nattar August 18, 2016, 11:53 AM

  “மகிழ்ச்சி

 • yarlpavanan August 18, 2016, 11:50 PM

  தங்கள் எழுத்துப் பயணம் மேலும் மேலும் தொடர வாழ்த்துகள்

 • கிரி August 19, 2016, 3:19 AM

  அனைவரின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

  @விஜய் எழுத முயற்சிக்கிறேன். இதில் என்ன என்ன பிரச்சனையென்றால், கொஞ்சம் தாமதம் ஆனாலும் செய்தி Outdated ஆகி விடும். இதனாலே என்னால் தற்போது எழுத முடிவதில்லை.

  @மாதவன்

  “நியூஸ் டிவியில் பார்த்தாலும் பேப்பரில் 📄 படிக்கும் அனுபவத்தை விஷுவல் மீடியா தரமுடியாது.”

  இது முற்றிலும் உண்மை. இருப்பினும் தற்போது மக்கள் மெதுவாக Video Blogging க்கு நகர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதிலும் சுருக்கமாக எதிர்பார்க்கிறார்கள்.

  Video Blogging (YouTube) ல் பணம் கிடைப்பதால் இதற்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது.

  எனக்கு Video Blogging செய்வதில் தற்போது விருப்பமில்லை. எதிர்காலத்தில் செய்ய வாய்ப்பு இருக்கலாம்.

  உங்கள் ஆலோசனைக்கு நன்றி 🙂 .

  @ஜோதிஜி விரைவில் எழுதத் துவங்குங்கள்.

  உங்களுடைய “ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்” அதிகம் தரவிறக்கம் செய்யப்பட நூல்களில் 7வது இடத்தில் இருந்ததைப் பார்த்தேன். வாழ்த்துகள் 🙂 .

 • akila August 20, 2016, 2:01 PM

  தொடர்ந்து எழுதவும்.வாழ்த்துகள் கிரி.

 • Srinivasan August 21, 2016, 8:56 PM

  அன்புள்ள கிரி,

  நிச்சயமாக பத்தோடு பதினொன்று – அத்தோடு இது ஒன்று என்று உங்கள் Blog -கைக் கூறி விட முடியாது. உங்கள் பயணம் மென்மேலும் தொடரட்டும்.

 • Ansari August 23, 2016, 5:16 AM

  ப்ளீஸ் நீங்க எழுதுவதை விடாதீர்கள், உங்களுடைய எழுத்தில் நேர்மை, கண்ணியம் உள்ளது.

 • கிரி September 1, 2016, 5:58 AM

  அகிலா ஸ்ரீனிவாசன் அன்சாரி நன்றி 🙂

 • someswaran September 27, 2016, 11:20 AM

  அருமை சார் அருமை, தெளிவான விளக்கம். தொடரட்டும் உங்கள் எழுத்து. இன்றுதான் முதன்முதலாக உங்கள் தளத்திற்கு வருகிறேன் தமிழ்மணம் மூலம், 3 எதிர் கருத்துக்களையும் இட்டாகிவிட்டது. இனி உங்கள் பயணத்தில் தொடர்ந்து வருகிறேன்.

 • கிரி October 3, 2016, 3:18 AM

  நன்றி 🙂

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz