கபாலி – மிரட்டிய ரசிகர்கள்

Kabali Teaser

நீண்ட நாட்களுக்குப் பிறகு தலைவர் பற்றி எழுதுவது உற்சாகமாக இருக்கிறது 🙂 . தலைவர் பற்றி எழுதுவது என்றாலே தனி உற்சாகம் தான் 😀 .

உலகம் வெற்றி அடைந்து கொண்டு இருப்பவரை மட்டுமே கவனிக்கிறது. எவ்வளவு வெற்றிகள் பெற்றாலும் ஒரே ஒரு தோல்வியில் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

லிங்கா

கபாலி பற்றிப் பேசும் போது என்னால் தவிர்க்க முடியாத ஒரு படம் லிங்கா. மனதளவில் தலைவர் ரசிகர்களைக் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய படம்.

லிங்கா ரொம்பவே சுமார் படம் என்பதை ஒத்துக்கொள்வதில் எந்தக் கூச்சமோ வருத்தமோ இல்லை.

லிங்கா எனக்கு முதலில் இருந்தே பிடிக்கவில்லை. முதல் பார்வை தலைவர் நிழற்படம் பிடிக்கவில்லை, ராக்லைன் வெங்கடேஷ் தன்னுடைய YouTube Channel ஐ பிரபலப்படுத்த வெளியிட்ட Motion Picture பிடிக்கவில்லை.

டீசர் வெளியிடப்பட்டுத் திடீரென்று நீக்கப்பட்டு HITS போனது.

பாடல் அறவே பிடிக்கவில்லை “உண்மை ஒரு நாள் வெல்லும்” தவிர்த்து. இதை அன்றே கூறி விட்டேன் அதோடு பாடல்களுக்கு விமர்சனம் எழுதவும் பிடிக்கவில்லை.

சரி படமாவது நன்றாக இருக்கும் என்றால் அரதப் பழசான கதை / காட்சியமைப்பு என்று செம்ம கடுப்பாகி விட்டது.  வெளியே வந்த உடனே கூறி விட்டேன் எனக்குப் பிடிக்கவில்லை என்று.

முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆனது.

ஆனால் கபாலி அப்படியில்லை முதல் பார்வையில் இருந்து தற்போது வரை முழுத் திருப்தி அளித்துக் கொண்டு இருக்கிறது.

சமூகத்தளங்களில் மிரட்டிய ரசிகர்கள்

Kabali Record

ரஜினிக்கு வயசு ஆகிடுச்சு, இவருக்கு மார்க்கெட் போய்டுச்சு, ரசிகர்களுக்கு வயசாகிடுச்சு. இனி இவர் படமெல்லாம் ஓடாதுன்னு வாய்க்கு வந்ததையெல்லாம் பேசினார் இந்தச் சிங்காரவேலன். அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்று கருத்துக் கணிப்புகள் வெளியிட்டார்கள்.

இதன் பிறகு சமீபத்தில் ஒரு வீணாப் போன இந்தி நடிகர் “ரஜினி ரசிகர்கள் எல்லாம் படிக்காதவர்கள், அவர்களுக்குக் கூகுள் கணக்கு கூட இருக்காது, சமூக வலைதளங்களில் இவர்கள் ஒன்றுமே இல்லை” என்று விமர்சனம் செய்தார்.

இவை அனைத்துமே தலைவர் ரசிகர்களை உசுப்பேற்றியது. மேற்கூறிய நடிகர் கூறியது போலப் பல தலைவர் ரசிகர்கள் சமூகத்தளங்களில் ஆர்வம் இல்லாமல் இருந்தார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை YouTube சாதனைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை வசூல் தான் சாதனை என்பதாகும்.

இது உண்மை தான் என்றாலும் ரொம்பச் சீண்டும் போது பொறுமையிழந்து இந்த முறை சமூகத் தளங்களில் மிரட்டி விட்டார்கள். சும்மா இருந்தவர்களை எல்லோரும் சொறிந்து விட்டு வெறியாக்கி விட்டார்கள்.

இதில் முக்கியப் பங்கு வகித்தது தலைவரின் இளம் ரசிகர்களே!

Rajinifans.com, RBSI, Memeology, Rajinism Forever என்று பல குழுக்கள் இதை முன்னெடுத்தன. இவர்கள் இல்லாமல் இவ்வளவு எதிர்பார்ப்புச் சமூகத்தளங்களில் சாத்தியமில்லை.

உண்மையில் இந்த மிகப் பெரிய டீசர் வெற்றி ரசிகர்களால் மட்டுமே சாத்தியமானதல்ல… அப்படி இருந்தால், பாபா, குசேலன், லிங்கா படங்கள் தோல்வி அடைந்து இருக்காது.

ரசிகர்கள் அல்லாமல் பொதுமக்கள் / யாருக்கும் ரசிகர் அல்லாதவர்கள் / மற்ற நடிகருக்கு ரசிகர் என்றாலும் தலைவரை “Ever Green” விருப்ப நடிகராக வைத்து இருப்பவர்களாலுமே இந்த மிகப்பெரிய எண்ணிக்கை சாத்தியமானது.

தாணு

இவற்றோடு தாறுமாறான கூட்டத்தால் டீசர் பார்வை எண்ணிக்கையை YouTube சரியாக காட்டாத போது தாணு அவர் பக்கம் இருந்து தகவல்களைக் கொடுத்து சிறப்பாக தன் பங்கைச் செய்தார்.

தாணு சும்மாவே கலக்குவாரு கபாலி சலங்கைய வேற கட்டி இருக்காரு…  🙂 . தாணுவின் இன்னொரு முகத்தை இனி வரும் காலங்களில் பார்ப்போம் என்று நினைக்கிறேன்

ஓரிரு வருடம் முன்பு விஜய் தொலைக்காட்சிப் பேட்டியில் “தனக்கு ரஜினி சாரை வைத்து தயாரிக்கும் வாய்ப்பு கிடைப்பது போல உள்ளது. அனைத்தும் சரியாகச் சென்றால் அது வேறு லெவெல்ல இருக்கும்” என்று கூறி இருந்தார் (இதே போல அல்ல.. ஆனால் இது மாதிரி) .

தாணுவின் மிரட்டலுக்காக “காத்திருக்கிறோம்” 😉 .

One Man Rajinikanth

https://twitter.com/superstarrajini

30 லட்சம் பின்தொடர்பவர்களை ட்விட்டரில் வைத்துக் கொண்டு தலைவர் தற்போது வரை டீசரை பகிரவில்லை. அதோடு படத்தைப் பற்றியும் எதுவும் பேசவில்லை. தலைவர் தனது ட்விட்டர் கணக்கில் கபாலி டீசரை விரைவில் பகிர வேண்டும் என்று விரும்புகிறேன்.

தன்னுடைய படத்தைப் பற்றி பாடல் வெளியீடு தவிர வேறு எங்குமே பேசுவதில்லை. நிருபர்கள் வம்படியாகக் கேட்டாலும் ஒரு வார்த்தையில் பதில் கூறி கடந்து சென்று விடுகிறார்.

Fan made posters / Teaser

கபாலிக்கு வந்த Fan Made Posters போல எந்தப் படத்துக்கும் இது வரை வந்ததில்லை. அதிகாரப்பூர்வமான நிழற்படமா! அல்லது ரசிகர்கள் உருவாக்கிய நிழற்படமா என்று குழம்பும் அளவுக்கு கலக்கியிருந்தார்கள்.

அதோடு ரசிகர்கள் டீசரும் விட்டு அசத்தி இருந்தார்கள். இவை எல்லாம் இளம் நடிகர்களின் ரசிகர்கள் கூட செய்யாதது. Fan Made Posters / Teasers என்று கற்பனைத் திறனை காட்டியிருந்தார்கள்.

ரஞ்சித் குழுவுக்கு இதை விட சிறப்பாக கொடுக்க வேண்டும் என்ற நெருக்கடியே ஏற்பட்டு இருக்க வேண்டும். அதே போல அவர்களும் ரசிகர்களை விட சிறப்பான Poster அறிவித்து தங்கள் பங்குக்கு திறமையைக் காட்டியிருந்தார்கள்.

கபாலி என்ற அடியாள் மாயை

கபாலி, “தளபதி” பாணியில் இருக்கும் என்று நினைத்தேன் ஆனால், நான் நினைத்ததற்கு முற்றிலும் வேறு மாதிரி உள்ளது.

முதல் முறை பார்க்கும் போதே “மரு வச்சுட்டு மீசை முறுக்கிட்டு” வசனம் சிவாஜி படத்தில் வரும் “பொட்டு வைத்துட்டு பொங்கல் சாப்பிடுறவன்னு நினைத்தியா.. ஆதிடா!” என்று சுமன் கூறும் வசனத்தை நினைவு படுத்தியது.

கபாலி என்ற பெயர் காலங்காலமாக அடியாட்களுக்கு மட்டுமே வைக்கப்படும் பெயராகும் அல்லது அந்தப் பெயரில் உள்ளவர்கள் அடியாட்களாகவே தமிழ் படங்களில் காட்டப்பட்டு வந்து இருக்கிறார்கள்.

எனவே கபாலி படம் பெயர் வெளியிடப்பட்ட போது “பொன்னம்பலம்” கபாலி என்ற பெயரில் நடித்ததை வைத்து (வால்டர் வெற்றிவேல்) சிலர் கிண்டல் கூடச் செய்தார்கள் ஆனால், எனக்குப் பெயர் அறிவித்தவுடனே பிடித்த விட்டது.

தலைவர் ரசிகர்களுக்குச் சிலருக்குக் கூடப் பிடிக்க நாளானது.

தலைவர் போன்ற நபர் இது போல வசனத்தைக் கூறினால் மட்டுமே அந்தப் பிம்பத்தை உடைக்க முடியும். கூறுவதற்கும் மதிப்பு இருக்கும். ஒரு வரி பஞ்ச் வசனத்தில் இதைச் செய்ய முடியாது.

இதைத் தலைவர் தனது வித்யாசமான உடல் மொழியால் சாத்தியப்படுத்தி இருக்கிறார். முழுப் பாராட்டும் ரஞ்சித்துக்கே செல்கிறது.

கபாலி டா! என்று தலைவர் கூறிய விதம் இந்தப் பெயரின் மதிப்பை ஒரே நாளில் எங்கேயோ கொண்டு சென்று விட்டது. திரும்பப் பழைய படங்கள் பார்க்கும் போது “கபாலி” என்று அடியாளை அழைத்தால், பார்க்கும் நமக்குத் தற்போது வேறு உணர்வு இருக்கும் என்பது உண்மை!

நீண்ட வருடங்களுக்குப் பிறகு பழைய 90 தலைவரின் வேகத்தை, ஸ்டைலை இதில் காண முடிந்து இருக்கிறது. செமையாக உள்ளது. இதோட பழைய Title Card கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது.

Live Places

எனக்குப் படங்களில் செட்டிங்க்ஸ் போட்டு எடுக்கப்படும் காட்சிகள் பிடிக்காது, உண்மையான இடங்களில் எந்த ஒரு சினிமாத்தனமும் இல்லாமல் இருக்கும் படத்தின் ஒளிப்பதிவு தான் பிடிக்கும். மெட்ராஸ் படம் எனக்குப் பிடித்ததுக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.

கபாலியிலும் பெரும்பாலான மலேசியா இடங்கள் “Live” இடங்கள் என்று பேட்டி கொடுத்து இருக்கிறார்கள். எனவே, ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன். அதோட மலேசியா நடிகர்களை எப்படிப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று பார்க்கவும் விருப்பப்படுகிறேன்.

ரஞ்சித் படங்களில் சினிமாத்தனமான ஒப்பனையாக இல்லாமல் காட்சிக்கான கதாப்பாத்திரமாக இருப்பார்கள். இதை இவருடைய அட்டக் கத்தி, மெட்ராஸ் படங்களில் நீங்கள் கவனித்து இருக்கலாம்.

Nativity

Kabali

மலேசியா நடிகர்களுக்கு / மக்களுக்கு என்று உடல் மொழி, சிகையலங்காரம், உடை இருக்கிறது. இதை ரஞ்சித் எப்படிக் கையாண்டு இருப்பார் என்று ஆர்வமாக இருக்கிறது. நான் நினைப்பது போல இருந்தால், செம்மையாக இருக்கும்.

எப்போதுமே ஒரு படம் எடுக்கும் போது அந்தப் படத்தின் காட்சிக்கு அந்த இடத்தின் நேட்டிவிட்டி ரொம்ப முக்கியம். அதனால் தான் “Slum Dog Millionaire” அசத்தியது. எனவே, ரஞ்சித் மலேசியாவின் நேட்டிவிட்டியை சிதைத்து இருக்க மாட்டார் என்று நம்புகிறேன்.

சும்மா “Can Can” மற்றும் Can la கூறினால் மலேசியா நேட்டிவிட்டி வந்து விட்டதாக அர்த்தமில்லை. (Can = OK)

தலைவர் ஒரு காட்சியில் அணிந்து வரும் சட்டை கூடச் சில மலேசிய தமிழர்கள் அணிவது போல உள்ளது. படம் வெளிவந்த பிறகு இந்தச் சட்டைக்கு Demand வருமோ! 🙂 .

தமிழ்த் (இந்தியத்) திரைப்படங்களின் பெருமை!

Kabali Record

அப்புறம் வழக்கம் போல நிறையப் பேர் தலைவரை கிண்டல் அடிப்பதையும் திட்டுவதையும் பார்க்கிறேன். எல்லோரும் ஒண்ணு தெரிஞ்சுக்குங்க நம்ம தமிழ் படம் உலகளவில் கவனம் ஈர்த்து இருக்கிறது. தமிழைப் பலரிடம் கொண்டு சேர்த்து இருக்கிறது.

இது போலப் பல பெருமைகளை “ரஜினி” என்ற ஒரு நபர் செய்து இருக்கிறார் ஆனால், நீங்களோ ஏதேதோ காரணங்கள் காட்டி அவரை இழிவுபடுத்திச் சிறுமைப்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்.

இன்று உலகளவில் அதிகப் பார்வையாளர்களை வைத்து இருக்கும் இந்தி மொழித் திரைப்படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டுத் தமிழ் மொழியை முன்னுக்குக் கொண்டு சென்று இருக்கிறது கபாலி.

கிஷோர் படத்தில் கேட்பது போல “யாருடா இந்தக் கபாலி?” என்று பலரையும் திரும்பிப் பார்க்க வைத்து இருக்கிறது. இதெல்லாம் யாருக்கு பெருமை?! தமிழர்களாகிய நமக்குத் தான்.

தலைவரை விமர்சிக்க வேண்டாம் என்பது என் கோரிக்கையல்ல அது நியாயமும் அல்ல. விமர்சனத்தையும் பாராட்டையும் அதற்கான நேரத்தில் செய்யுங்கள்.

ரஜினி தமிழ்த் (இந்தியத்) திரைப்படங்களின் பெருமை!

தொடர்புடைய கட்டுரைகள்

“தளபதி” நினைவுகள் [1991]

சூப்பர் ஸ்டார் ரஜினி

தலைவர் ரஜினி

மெட்ராஸ் [2014]

லிங்கா [2014]

கொசுறு

மனிதன்” படம் பார்த்தேன் ரொம்ப நன்றாக இருந்தது. ராதாரவி, பிரகாஷ்ராஜ் நடிப்பு அசத்தல் அதிலும் ராதாரவி அலட்டிக்கொள்ளாமல் கலக்கி விட்டார்.

ஒரு அறிமுக வக்கீல் பலம் வாய்ந்த திறமையான பிரகாஷ்ராஜ் உடன் மோதுவதை மிகைப்படுத்தாமல் எதார்த்தமாகக் கொடுத்து இருக்கிறார்கள்.

உதயநிதி நன்றாக நடித்து இருக்கிறார். மற்ற படங்களை விட இதில் நன்கு முன்னேற்றம். இறுதியில் பேசி விட்டுக் கை நடுக்கத்துடன் தண்ணீர் குடிக்கும் காட்சி அசத்தல்.

ஹன்சிகா பொம்மை போல வந்து செல்லாமல் ஓரளவு நடிக்க வாய்ப்பு. இவரின் உடையும் நாகரீகமாக இருந்தது. விவேக் அவ்வபோது கலகலப்பூட்டுகிறார்.

லிங்கா படம் வந்த போது இனி ராதாரவி / விஜயகுமாரை எல்லாம் தலைவர் படத்தில் நடிக்க வைக்காதீர்கள் என்று பலர் கூறினார்கள். இந்தப் படத்தைப் பார்த்தால் பிரச்சனை ராதாரவியிடம் இல்லை, இவரை வீணடித்த லிங்கா குழுவினரையே சாரும் என்று புரியும்.

முத்து படத்தில் அம்பலத்தாராக வந்து மிரட்டிய ராதாரவியை மறக்க முடியுமா?

இதில் ஒரு தாத்தா வில்லன் போல வருகிறார். யம்மாடி! இவரை எங்கே பிடித்தார்கள். மிரட்டிப் புட்டார் மிரட்டி. “தளபதி” படத்தில் வரும் அம்ரீஷ் பூரி அண்ணன் மாதிரி இருக்காரு. கொஞ்ச நேரமே வந்தாலும் பார்வையாலையே பயத்தைக் கொண்டு வந்து விட்டார்.

எல்லோருமே திறமையானவர்கள் தான் ஆனால், அவர்களை எப்படி நடிக்க வைத்து வேலை வாங்குகிறார்கள் என்பதில் தான் ஒருவரின் வெற்றி அடங்கி இருக்கிறது. ஒட்டு மொத்தமாக இப்படத்தில் என்னுடைய வாக்கு “ராதாரவி” க்கே.

அவசியம் படத்தைப் பார்க்க பரிந்துரைக்கிறேன். “மனிதன்” தலைப்புத் தமிழ் இல்லை என்று வரிவிலக்கு மறுக்கப்பட்டு இருக்கிறது.

இனி உதயநிதி படம் பெயர் வைத்தால் முன்னரே வரி விலக்குத் தருபவர்களிடம் சென்று அவர்களுடைய “ரகசிய தமிழ் அகராதி“!! யில் இத்தலைப்புத் தமிழ் தானா?! என்று சோதித்துக் கொள்வது நல்லது.

{ 11 comments… add one }
 • காயத்ரிநாகா May 3, 2016, 6:28 AM

  தலைவரின் டீசர் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 8 மில்லியனைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.எண்பதுகளில் பார்த்த அதே துறு துறு ரஜினி…#மகிழ்ச்சி

 • Mohamed Yasin May 3, 2016, 7:10 AM

  தலைவரின் கபாலி மாஸ் ஹிட் ஆகபோகுது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனக்கு ரஜினி சாரின் தற்போது படங்களின் மீது பெரிய ஆர்வம் இல்லை. அதற்கு காரணம் அவர் விரும்பியோ, விரும்பாமலோ அவர் மீது தீணிக்கப்பட்ட பிரமாண்டமும், மக்களின் அதிக எதிர்பார்ப்பும். ஆனால் கபாலி எல்லாவற்றிற்கும் மாறுபடானது. இயக்குனர்களின் தேர்வு குறித்த முடிவை தலைவர் இன்னும் கொஞ்ச ஆண்டுகள் முன்பு எடுத்து இருக்கலாம்.

  வெகு விரைவில் கபாலியின் வெற்றி குறித்த பதிவை எதிர்ப்பார்க்கிறேன். மனிதன் படத்தினை பார்க்கணும் போல தோணுதே!!!! நடிகர்களிடம் நடிப்பை சரியாக வாங்குவது இயக்குனர்களின் திறன். பாத்திர தேர்வும் அப்படிதான்… பகிர்வுக்கு நன்றி கிரி.

 • Santhosh May 5, 2016, 6:17 AM

  ஹாய் கிரி

  தலைவர் ரஜினி பிடிக்காதவர்கள் கூட இந்த கபாலி டீசர் பிடிக்கும் (போற்றுவர் போற்றட்டும் துற்றுவர் துற்றட்டும்)

  மனிதன் படம் பார்த்தேன். உதயநிதி நடிப்பு அருமை. இது JOLLY LLB என்னும் ஹிந்தி படத்தின் ரீமேக் ஒரிஜினல் மாற்றாமல் அப்படியே எடுத்தது அருமை (ஐஸ்வரியா கேரக்டர் தவிர ). ஹிந்தி ஜட்ஜ் கேரக்டர் செய்தவர் (Saurabh Shukla(ஹேராம் படத்தில் கமல் மற்றும் ஷாருக் உடன் வரும் நண்பர் ) ) அவர் நடிப்பு மிக அருமையாக இருக்கும். அதற்காக அவருக்கு அந்த வருடத்தின் சிறந்த துணை நடிகர் காண நேஷனல் அவார்ட் வாங்கினர்

 • கபாலி Teaser-ரே படம் வெளியானதைப் போல இருக்கிறது, இதில் தலைவரின் தோற்றம் பாட்ஷா படத்தை நினைவூட்டுகிறது.

  எனக்கு Robo படம் பிடிக்கவில்லை ,காரணம் தலைவரின் ஸ்டைலே அதில் இருக்காது , சிவாஜி பாடத்திற்குப் பிறகு கபாலியில் தான் தலைவரை முழுமையாக ரசிக்கலாம் என நினைக்கின்றோன்.

  தலைவரின் படம் தலைவரின் ரசிகர்களுக்குத்தான் அவ்விதத்தில் தலைவரின் படத்தைக் கேலி செய்பவர்களுக்குத் தலைவரின் ஸ்டைலில் ஒரே பதில்தான் “எ வழி தனி… வழி சீண்டாத தாங்க மாட்ட”

  சின்ன சந்தேகம் கிரி bro ,”மனிதன்”தமிழ் வார்த்தை என்ன? நிசமா எனக்குத் தெரியலை.

 • Sb May 9, 2016, 5:29 PM

  BABA – 7 crore investment – 35 crore collection (50 crore taken from distributors returned back)
  Kuselan – guest role. Success / failure credit doesn’t go to guest actor.
  LINGAA -around 85 investment. 140 is கோல்லேச்டின்
  (160 crore taken from distributors returned back)
  All these movies may be average reviews but good revenue.

 • கிரி May 10, 2016, 2:34 AM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @காயத்ரி நாகா 🙂

  @யாசின் “இயக்குனர்களின் தேர்வு குறித்த முடிவை தலைவர் இன்னும் கொஞ்ச ஆண்டுகள் முன்பு எடுத்து இருக்கலாம்.”

  ஏற்றுக் கொள்கிறேன்.

  @சந்தோஷ் “இது JOLLY LLB என்னும் ஹிந்தி படத்தின் ரீமேக் ஒரிஜினல் மாற்றாமல் அப்படியே எடுத்தது அருமை ”

  ரீமேக் என்பது தெரியும்.. ஆனால், அப்படியே எடுத்து இருக்கிறார்களா என்று தெரியாது. விரைவில் இந்தி பார்க்க முயற்ச்சிக்கிறேன்.

  @கார்த்திக் என்னது எந்திரன் பிடிக்கலையா?! 🙂 இதில் தலைவர் ஸ்டைல் இல்லை என்பது என்றாலும் சிட்டி அந்தக் குறையை சரி செய்து இருக்கும்.

  தலைவரின் டாப் ஐந்து படங்களில் எந்திரன் என்னுடைய தேர்வு 🙂

  தலைவரை கேலி செய்வது நமக்குப் புதிதா என்ன? 🙂 இவங்க இப்படியே கதறிட்டு இருக்க வேண்டியது தான். படம் வெளியான பிறகு இவர்கள் கதறல் இன்னும் அதிகமாக இருக்கும்.

  படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு காத்து இருக்கிறேன்.

  மனிதன் 🙂 🙂

  எனக்கும் புரியல.. மனுஷன் என்றால் வட மொழிச் சொல் என்று கூற வாய்ப்பு இருக்கு.. இதில் என்ன வட மொழி என்று புரியவில்லை.

  வேறு எப்படி சொல்வது?

  @SB லிங்காவை பொருத்தவரை இரு பெரிய தவறுகள்.

  1. அதிக கை மாறியது. இதனால் போலியாக அதிக விலை உருவாகியது.

  2. எந்த அனுபவமும் இல்லாத விநியோகஸ்தர்களிடம் படத்தை கொடுத்தது. இதனால் தான் படம் வெளியாகி ஒரு வாரம் கூட முடியாத நிலையில் முட்டாள் தனமாக பிரச்சனை செய்தார்கள்.

 • Sb May 10, 2016, 5:27 PM

  Giri,
  Even am telling the same. They are not failured but less profit.

 • Sb May 10, 2016, 5:29 PM

  One more. None of the actor can get such a huge opening if they act in animation movie. Hope you agree with this.

 • கிரி அவர்களே ரோபோ படம் பிடிக்கவில்லை என்பதன் காரணம் இது முழுவதும் இயக்குநர் சங்கர் அவர்களின் படமாகத்தான் தெரிகின்றது , இதில் வரும் தலைவரின் வசிகரன் கதாப்பாத்திரம் பெயருக்கு இருப்பதைப் போல இருக்கும் ,ஒரு தலைவரின் ரசிகனாக இப்படிப் பார்க்கும்போது இது சுத்தமாக பிடிக்கவில்லை , சிட்டி கதாப்பாத்திரத்தில் தலைவரை ஒரு சில காட்சிகளில் ரசிக்கலாம் மற்றபடி ஒரு ரோபோ போலத்தான் இருக்கும், சிட்டி கதாப்பாத்திரம் தலைவரின் வில்லன் கதாப்பாத்திரத்திற்கு மாஸாக இருக்கும் ஆனால் Hero வாக தலைவருக்கு வசிகரன் கதாப்பாத்திரம் ரசிக்கும் படி இல்லை, மற்றபடி எந்திரன் படம் தமிழ்த் திரைப்படத்தை உலக திரைப்படங்களின் தரத்திற்கு உயர்த்தியுள்ளது என்பது உண்மைதான்.

 • kolanginathan May 14, 2016, 6:42 AM

  Dear giri
  teaser romba arumai. rajni oda anthu style ellam Sema.. but enaku oru doubt rajni sira Thalaivar nu solluringalae…avar nattuku entha poratathil thalaimai thingi nadathi irukar… kabali padam moolama Tamil valarum nu sollurathu Elam kinjam overall iruku…matha padi enakum Rajni sira romba pidikum…..

 • கிரி May 20, 2016, 10:09 AM

  @Sb ஏற்றுக்கொள்கிறேன். அதோடு அவர்கள் அறிவித்த தேதியில் வெளியாகி இருந்தால் இன்னும் அதிக வசூலை பெற்று இருக்கும். பணப் பிரச்சனை காரணமாக இறுதி நேரத்தில் இரண்டு வாரம் தள்ளி வைக்கப்பட்டதால் ஆர்வம் குறைந்து வசூலும் பாதிக்கப்பட்டது.

  இது ரசிகனாக எனக்கு வருத்தம் 🙁

  @கார்த்திக் இது முழுக்க ஷங்கர் படம் தான். ஒரு வித்யாசமான தலைவர் படத்தை காண முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி. துவக்கமே எந்த ஒரு தலைவர் படத்துக்கான ஆரம்பமாக இல்லாமல் சாதாரணமாக இருக்கும்.

  வசீகரன் சண்டை எதுவும் போடாமல் ஓடுவது போலவும் இருக்கும். ஓரளவு இயல்பாக இருந்தது. சிட்டி அதகளம் செய்து இருந்தது பெரும் மகிழ்ச்சி.

  படத்தின் பின்னணி இசை எனக்கு ரொம்பவும் பிடித்து இருந்தது. ரகுமான் கலக்கி இருந்தார். இப்பவும் கேட்டாலும் சலிக்காத பின்னணி இசை. மிக ரசித்துப் பார்த்தேன்.

  2.0 வை ஆவலாக எதிர்பார்க்கிறேன்.

  @kolanginathan உங்கள் “தலைவர்” பற்றி கேள்விக்கு நான் 2011 ஆம் ஆண்டே பதில் அளித்து விட்டேன்.

  நேரம் இருக்கும் போது படித்துப் பாருங்கள்.

  http://www.giriblog.com/2011/05/thalaivar-rajini.html

  அதே போல பின்வரும் கட்டுரையின் இறுதியிலும் கூறி இருக்கிறேன். ஒருவேளை உங்களுக்கு தலைவர் என்று கூறியது பிடிக்காமல் இருந்ததால், நீங்கள் முழுதும் படிக்காமல் இருந்து இருக்கலாம்.

  http://www.giriblog.com/2015/08/thalapathi-nostalgia.html

  கபாலி மூலம் தமிழ் வளரும் என்று நான் எங்கேயும் கூறவில்லை. தமிழ் திரைப்படங்களின் பெருமையை / எல்லையை அதிகப்படுத்தி இருக்கிறார் என்று மட்டுமே கூறி இருக்கிறேன்.

  YouTube ல் சென்று Kabali Reaction என்று தேடிப்பாருங்கள் எத்தனை வெளிநாட்டவர் கபாலி டீசர் குறித்து விமர்சித்து இருக்கிறார்கள் என்று புரியும்.

  தமிழ் பற்றி தெரியாதவர்கள் கூட கபாலி என்ன படம்? யார் இவர்கள்? ஏன் இவ்வளவு பரபரப்பு என்று தேடுகிறார்கள். இது தாமாகவே நம் தமிழ் மீது ஒரு கவனிப்பை கொண்டு வருகிறது.

  சீன நடிகர் இது வரை பாலிவுட் மட்டுமே கேள்விப்பட்டு இருக்கிறேன் தற்போது தான் தமிழ் மற்றும் பல தென்னிந்திய படங்களும் இந்தியாவில் உள்ளது என்று அறிகிறேன் என்று கூறியிருக்கிறார்.

  இது எதனால் சாத்தியமானது?

  இதை இல்லை என்று மறுக்க மாட்டீர்கள் என்று கருதுகிறேன்.

  kolanginathan நான் ரஜினி ரசிகன் தான் ஆனால், கண்மூடித்தனமான ரசிகனில்லை. எது சரி என்று படுகிறதோ அதை மட்டுமே ஏற்றுக்கொள்வேன் அது தலைவராக இருந்தாலும்.

  அதனாலே எவர் கேள்வி கேட்டாலும் என்னால் மழுப்பாமல் பதில் கூற முடிகிறது.

Leave a Comment