இணையத் தொழில்நுட்பச் செய்திகள் [ஆகஸ்ட் 2015]

YouTube New Look

ஃபேஸ்புக் தரும் கடும் போட்டியின் காரணமாகக் கூகுள் தன்னுடைய YouTube வடிவமைப்பில் மாற்றங்களைச் செய்து வருகிறது. YouTube பயன்படுத்துபவர்கள் இதைக் கவனித்து இருக்கலாம். YouTube பயனாளர்களிடையே இந்த மாற்றம் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது.

பின்வரும் YouTube காணொளியைப் பயன்படுத்தும் போது இதை நீங்கள் உணரலாம்.

Google Buy

கூகுள் விளம்பர வருவாயை அதிகரிக்கும் நோக்குடன் விளம்பரங்களில் “Buy” Button வைக்கப்போகிறது. இதன் மூலம் விளம்பரப் பொருட்களை வாங்க விருப்பமுள்ளவர்கள், நேரடியாக இதன் மூலம் எளிதில் வாங்கலாம்.

பணப்பரிமாற்ற முறையையும் கூகுள் மூலமே செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது. இவை வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மையைக் கொடுக்கலாம்.

Twitter 140

ட்விட்டர் என்றாலே 140 எழுத்துக்கள் என்ற கட்டுப்பாடு தான் பிரபலம். தற்போது தனிப்பட்ட தகவலாக (Private Message) ஒருவருக்கு அனுப்பும் போது 140 எழுத்துக்கள் கட்டுப்பாட்டை நீக்கி இருக்கிறார்கள்.

Timeline ல் போடப்படும் தகவல்களுக்கு 140 எழுத்துக்கள் கட்டுப்பாடு தொடரும், அதில் மாற்றமில்லை.

Google Photos

கூகுள் தன்னுடைய “கூகுள்+ Photos” பகுதியை படிப்படியாக நீக்கி வருகிறது. ஆகஸ்ட் 1 முதல் Android இயங்கு தளத்திலும் விரைவில் iOS மற்றும் உலவி மூலம் பார்க்கும் முறையிலும் நீக்கப்படும் என்று அறிவித்து விட்டது.

இதன் பிறகு கூகுள் Photos பயன்படுத்த விரும்புவர்கள் அதற்கான செயலியிலும் https://photos.google.com தளத்திலும் பார்க்க முடியும்.

iCloud help

கிரீஸில் நடைபெறும் நிதி நெருக்கடி நிலை பற்றி அறிந்து இருப்பீர்கள். ATM ல் பணம் எடுக்கக் கூடத் தடை உள்ளது.

இந்த நேரத்தில் சிரமப்படுகிறவர்களுக்குப் பணம் கட்டாததால் தங்களுடைய iCloud கணக்கை இழக்க வேண்டிய நிலையில் இருந்து ஒரு மாதத்திற்கு விலக்கு அளித்து இருக்கிறது. அதாவது ஒரு மாதக் கட்டணம் இலவசம்.

Google Map in Google Drive

Google Map in Google Drive

கூகுள் மேப்பின் அசத்தலான சேவையை இதைப் பயன்படுத்துபவர்கள் அறிவார்கள். தற்போது கூடுதல் வசதியாக இனி கூகுள் பயன்படுத்துபவர்கள் தாங்கள் பயணித்த விவரங்களை மேப்பில் இருந்து கூகுள் டிரைவில் சேமிக்க முடியும். Image Credit – Google

இதன் மூலம் இதை நண்பர்களிடம் பகிரவும், நாம் எங்கெங்கு எப்படிச் சென்றோம் என்பதையும் எளிதாகக் காண முடியும். முன்கூட்டி திட்டமிட இவ்வகை விரவங்கள் உதவும்.

Adobe security issue

Adobe நிறுவனம் தனது Flash மென்பொருளில் ஏற்பட்ட குறையச் சமீபத்தில் சரி செய்தது. ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியது போல Flash பாதுகாப்பற்ற மென்பொருளாக மாறி வருகிறது. விரைவில் Flash முற்றிலும் மூடப்பட்டு HTML 5 அனைத்து இடங்களிலும் வந்து விடும்.

Google Chrome fixed Bookmark issue

கூகுளிடம் உள்ள ஒரு மிகச் சிறந்த வழக்கம் நாம் தினமும் எதிர்நோக்கும் சில சிறு பிரச்சனைகளைக் கூடக் கவனித்து அதைச் சரி செய்வது தான். எனக்குக் கூகுள் சேவையில் பிரச்சனையென்றால், எப்படியும் சில நாட்களில் சரி செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுண்டு.

நம்பிக்கையைக் குலைக்காமல் இன்றுவரை பல பிரச்சனைகளைச் சரி செய்து இருக்கிறார்கள். அதில் ஒன்று கூகுள் க்ரோமில் Bookmark செய்யும் போது எளிமையாக இருந்த வசதியை மிக மிகக் கடினமாக்கி விட்டது.

பின்னர்ப் பலரின் எதிர்ப்புக் காரணமாகத் திரும்பப் பழைய முறையிலேயே கொண்டு வந்து விட்டது.

சொல்லப்போனால் பழைய முறையில் இருந்த சிறு பிரச்சனையையும் நீக்கி அட்டகாசமாகக் கொண்டு வந்து விட்டது. நான் கூறும் பிரச்சனை என்ன என்பதை அடிக்கடி Bookmark செய்பவர்கள் அறிவார்கள். மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதை விளக்குவது சற்று சிரமமே!

Windows 10

விண்டோஸ் 10 ஜூலை 29 வெளியாகி சக்கைப் போடு போட்டு வருகிறது. பலரும் தற்போது விண்டோஸ் 10 க்கு மாறி வருகிறார்கள். நானும் முயற்சி செய்து பார்த்தேன். பெரிய வித்யாசம் இல்லையென்றாலும் பயன்படுத்த நன்றாக இருக்கிறது.

உங்கள் கணினியில் விண்டோஸ் 7 / 8 வைத்து இருந்தால், நீங்கள் விண்டோஸ் 10 க்கு இலவசமாக மாற முடியும். எப்படி மாறுவது? LINK

கூகுள் CEO சுந்தர்

Icon Gகூகுள் CEO வாக அமெரிக்கா வாழ் தமிழர் / இந்தியர் சுந்தர் பிச்சை அவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

நிர்வாகத்தைச் சரியாகக் கொண்டு செல்ல நிர்வாகச் சீரமைப்புச் செய்து புதிதாக Alphabet என்ற நிறுவனத்தைத் துவங்கி அதைத் தாய் நிறுவனமாக அறிவித்து அதன் கீழ் கூகுள் வரும் படி செய்து இருக்கிறார்கள்.

பின்வரும் படம் கூகுள் நிர்வாகச் சீரமைப்பை எளிதாக உங்களுக்குப் புரிய வைக்கும்.  Image Credit – http://www.theguardian.com

Google restructure

Alphabet நிறுவனத்தின் CEO வாக Larry Page மற்றும் President ஆக Sergey Brin இருப்பார்கள். இதன் கீழ் வரும் கூகுளுக்குச் சுந்தர் CEO வாக நியமிக்கப்பட்டுள்ளார்.

“இது தங்கள் பணிகளைப் பிரித்து எளிமைப் படுத்தி மேலும் சிறப்பாகச் செயல்பட உதவும்” என்று Larry Page கூறி இருக்கிறார். வரவேற்கப்பட வேண்டிய விசயம்.

கொஞ்ச நாள் முன்பு கூகுளுக்குத் தலைவலியாகும் ஃபேஸ்புக் என்ற கட்டுரை எழுதி இருந்தேன். கூகுளின் தற்போதைய நடவடிக்கை இதையொட்டிய காரணங்களாகக் கூட இருக்கலாம்.

Larry Page தற்போது வருமானம் குறைவாக உள்ள பிரிவுகளில் கவனம் செலுத்தவே இதை நடைமுறைப்படுத்தி இருக்கிறார் அதோடு புதிய முயற்சிகளில் ஈடுபடத் தற்போதைய பொறுப்புத் தடையாக இருக்கும் என்று இதில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு இருக்கிறார்.

தற்போது Larry Page செய்து இருப்பதைச் சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் கூகுள் என்ற பெரிய கோடு அருகே அதைவிட பெரிய கோடு போட்டு கூகுளை சிறியதாக்கி இருக்கிறார் 🙂 .

நல்ல முடிவு. கூகுள் மேலும் பல சாதனைகளைச் செய்ய அதி தீவிர ரசிகர்களில் ஒருவனின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙂 .

{ 4 comments… add one }
 • Arun Govindan August 13, 2015, 2:12 PM

  தல,
  பதிவு ரொம்ப short and sweet டா இருக்கு..

  “Google Chrome fixed Bookmark issue ” – நானும் இதை உணர்ந்தேன்

  google map மட்டும் எனக்கு பழசு தான் புடிச்சது specially street navigation இப்ப உள்ள maps ரொம்ப slow வா feel பண்ணுறேன்

  – அருண் கோவிந்தன்

 • Mohamed Yasin August 13, 2015, 2:21 PM

  இணையத் தொழில்நுட்பச் செய்திகள் கலவையாக அருமையாக உள்ளது.. கூகுள் நிர்வாகச் சீரமைப்பை புரிய வைக்கும் படம் நன்றாக இருக்கிறது. பதிவிற்கு ஏற்ப புகைப்படங்கள் & காணொளிகள் இருப்பது இன்னும் அழகு..

  கூகுள் CEO வாக அமெரிக்கா வாழ் தமிழர் / இந்தியர் சுந்தர் பிச்சை அவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்தியர் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி..

  ஒரு காலத்தில் உலக நாடுகள் பலவற்றை ஆண்ட கிரீசின் நிலைமை இன்று பரிதாபமான ஓன்று.. காலமாற்றத்தில் ஏதும் நிகழலாம் என்பதற்கு இதுவும் சிறந்த உதாரணம்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 • தமிழ்நெஞ்சம் August 13, 2015, 10:33 PM

  அருமை. தொடர்க. வாழ்க வளமுடன்.

 • கிரி August 15, 2015, 2:06 PM

  @அருண் மேப்ஸ் நான் அதிகம் பயன்படுத்தியதில்லை அதனால் தெரியவில்லை. ஊருக்குச் சென்ற பிறகு பயன்படுத்த அதிக வாய்ப்புக் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

  @யாசின் & தமிழ் நெஞ்சம் நன்றி

Leave a Comment