பத்தாவது ஆண்டில் கிரி Blog

Anniversary logoழுத வந்து வெற்றிகரமாக 9 வருடங்கள் முடிந்து 10 வது வருடம் துவங்குகிறது. சமூகத்தளங்களுக்கான வரவேற்புக் கூடி Blog க்கான வரவேற்புகள் பெருமளவு குறைந்து வருகிற நிலையில் இன்னும் தாக்குப் பிடித்துக் கொண்டு இருப்பதே பெரிய விசயம் 🙂 .

Image Credittechcrunch.com

எழுதுவது எனக்கு Passion ஆக இருப்பதாலே இது சாத்தியமாகியுள்ளது அதோடு முக்கியமாகப் பல வருடங்களாக எனக்கு உற்சாகமூட்டி வரும் அருண், யாசின் மற்றும் சிலரின் விமர்சனங்களே நான் இன்னும் தொடர முக்கியக் காரணம்.

உண்மையில் நான் எழுதுவதில் உங்களுக்குப் பயனுள்ளதாக ஏதாவது இருக்கிறது, நான் எழுதும் சில கட்டுரைகளை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், நீங்கள் நன்றி கூற வேண்டியது எனக்கல்ல, அருண் / யாசின் மற்றும் அவ்வப்போது கருத்துக்களைக் கூறும் மற்ற நண்பர்கள் சிலருக்குத் தான்.

இவர்களே நான் தொடர்ந்து எழுத முக்கியக் காரணம். இவர்கள் இல்லையென்றால் நான் எப்போதோ எழுதுவதை நிறுத்தி இருப்பேன், சரக்குத் தீர்ந்தல்ல உற்சாகம் குன்றி.

GiriBlog first post

குட்டிப் பரிசு 🙂

எனக்குப் பல வருடங்களாகச் சலிக்காமல் தொடர்ச்சியாக ஊக்கம் அளித்து வரும் அருண் மற்றும் யாசின் இருவருக்கும் சிறு நன்றியாக 10 ம் ஆண்டுத் துவக்கத்தை முன்னிட்டு http://herotalkies.com/ தளத்தின் ஒரு மாத சந்தா  கொடுப்பதை மகிழ்வாக நினைக்கிறேன்.

HeroTalkies

தலைவர் “லிங்கா” பிரச்சனைக்குப் பிறகு திரையரங்கம் சென்று பார்ப்பதை கிட்டத்தட்ட நிறுத்தி விட்டதால், இணையத்தில் எதில் பார்க்கலாம் என்று யோசித்த தருணத்தில் தான் http://herotalkies.com/ அறிமுகம் கிடைத்தது.

செய்தியில் இவர்கள் நம்ம ஊர்க்காரங்க (சென்னை) அதோடு அனைவரும் இளைஞர்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததைப் பார்த்து, சரி! நாம் இவர்களுக்கு ஆதரவு கொடுப்போம் என்று சந்தா கட்டி பின்னர் அவர்களின் சிறந்த சேவையால் பலருக்கு அறிமுகப்படுத்தினேன்.

இணையத்தில் படம் பார்க்கும் வெளிநாடு வாழ் மக்கள் இதில் சந்தா கட்டி தரமான தரத்தில் சட்ட ரீதியாகப் பார்க்கும்படி பரிந்துரைக்கிறேன். திரையரங்கில் ஒரு படம் பார்க்கும் கட்டணத்தை விட மாத சந்தாக் கட்டணம் குறைவு.

ஒரு மாதம் http://herotalkies.com/ முயற்சித்துப் பாருங்கள், திருப்தி இல்லையென்றால் ரத்துச் செய்து கொள்ளலாம்.

Blog இன்னும் எத்தனை நாள்?

நாளுக்கு நாள் Blog க்கான வரவேற்பு குறைந்து வருவதால், இன்னும் எவ்வளவு மாதங்கள் / வருடங்கள் எழுதுவேன் என்பது உறுதியில்லை. எழுதுவது எனக்கு Passion என்பதால் முழுவதையும் நிறுத்த மாட்டேன் என்றாலும், எண்ணிக்கை நிச்சயம் குறையும்.

நிச்சயம் Writers Block / சரக்குத் தீர்ந்தது காரணமாக இருக்காது 🙂 .

குறிப்பாக இந்த வருடத்தில் சென்னை சென்ற பிறகு எண்ணிக்கையை மிகவும் குறைத்து புதிய முயற்சிகளைச் செய்யலாம் என்ற எண்ணம் இருக்கிறது.

Read: “Blog” அழிந்து வருகிறதா?

தமிழும் அனுபவமும்

எழுத வந்ததால் எனக்கு ஏகப்பட்ட அனுபவங்கள் கிடைத்து இருக்கிறது. என்னைப் பக்குவப்படுத்தி இருக்கிறது, கோபத்தைக் குறைத்து இருக்கிறது, விமர்சனங்களை எதிர் கொள்ள முடிகிறது, புதிய விசயங்கள் கற்றுக் கொள்ள உதவி இருக்கிறது.

ஏனென்றால் சில விசயங்கள் படிப்பவர்களுக்குக் கூறுவதற்காகவே மெனக்கெட்டுப் படித்துத் தெரிந்து கொண்டு எழுதி இருக்கிறேன். இதனாலே நான் தெரிந்து கொண்ட விசயங்கள் ஏராளம். ஒரு கட்டுரை எழுதணும் என்றால் அதற்காக நிறையப் படித்து இருக்கிறேன்.

தமிழை ஆங்கிலக் கலப்பில்லாமல் எளிமையாக அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை என்னுடைய தளமே எனக்குக் கொடுத்தது. பலரும் நினைத்துக் கொண்டு இருப்பது போல ஆங்கிலக் கலப்பு இல்லாமல் எழுதுவது ஒன்றும் கடினமான செயலல்ல.

தமிழை சந்திப் பிழையில்லாமல் எழுத எளிமையான வசதி – நாவி

புத்தகங்கள்

கடந்த வருடம் “இனி புத்தகங்கள் படிக்க வேண்டும்” என்று கூறி இருந்தேன். நானே எதிர்பார்க்காத அளவிற்குப் புத்தகங்கள் படித்து அதை விமர்சனமாகவும் எழுதி விட்டேன் 🙂 . இதற்கு முக்கியக் காரணம் எனக்குப் புத்தகம் கொடுத்து உதவிய நண்பர்கள் பாபு / சூர்யா தான்.

திரையரங்கம் செல்வதைக் கிட்டத்தட்ட நிறுத்தி விட்டதால், தற்போது திரைவிமர்சனங்கள் குறைந்ததை புத்தக விமர்சனங்கள் ஈடு செய்கிறது.

பொன்னியின் செல்வன் புத்தகமே எனக்குப் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை மீட்டுக் கொண்டு வந்தது என்றால் மிகையில்லை.

பள்ளிக் குழந்தைகள் மாணவர்களுக்கான உதவி

எழுத வந்து 10 வருடமாகிறது உருப்படியாக எதையாவது செய்வோம் என்று எங்கள் ஊர் அருகே உள்ளே ஆண்டிபாளையம் கிராம, வசதி குறைந்த பள்ளிக் குழந்தைகள் / மாணவர்களின் படிப்பிற்கு உதவுவோம் என்று நன்கொடை கேட்டு இருந்தேன்.

நண்பர்கள் சிலர் கொடுத்ததோடு நானும் சேர்த்து மொத்தம் ₹40,000 உங்கள் அனைவரின் சார்பாக வினய் யுவன் (ஆகஸ்ட் 15) கொடுத்து விட்டார்கள். படத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஆண்டிபாளையம் கிராமத்தைச் சார்ந்தவர்கள்.

Donation - giriblog

உதவி செய்தவர்களுக்கு / நம்பிக்கை வைத்து மதித்துக் கொடுத்தவர்களுக்குப் பெரிய நன்றி 🙂 .

ShoutMeLoud

நான் என்னுடைய தளத்தை ஐந்து வருடங்களுக்கு முன்பு Blogger ல் இருந்து WordPress க்கு மாற்றினேன். அப்போது இருந்து பெரியளவில் எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை என்றாலும், சில புதுப்பித்தலுக்காக / சிறு பிரச்சனைகளுக்கு கடந்த ஐந்து வருடமாக உதவி வரும் http://www.shoutmeloud.com/ தளத்திற்கு என் நன்றியை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெருமை

Giriஇதே முன்பு என்றால், “நான் என்னங்க பெருசா எழுதிட்டேன் எதோ!! எழுதறேன்” என்று தன்னடக்க Scene போட்டு இருப்பேன் 🙂 . தற்போது அதெல்லாம் இல்லை.

என்னுடைய தளத்தை ஆரம்பித்த போது எந்தத் திட்டமும் இல்லாமல் தான் ஆரம்பித்தேன்.

படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாகக் கூடியதால் ஏற்பட்ட பொறுப்புகளால் பல நல்ல கருத்துகளை, செய்திகளை, தொழில்நுட்பத் தகவல்களைக் கடந்த காலங்களில் பகிர்ந்து இருக்கிறேன். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்காததும் இருக்கலாம் 🙂 .

அனைவரையும் திருப்தி படுத்த நான் நினைப்பதே இல்லை, அது என் வேலையும் அல்ல. எனவே, சுதந்திரமாக என் மனதிற்கு தோன்றுவதை தைரியமாகக் கூற முடிகிறது.

திரைப்படம், பயணம், தொழில்நுட்பம், அரசியல், நிழற்படங்கள், செய்திகள், விமர்சனங்கள், ஆன்மீகம், புத்தகங்கள், வாழ்க்கை அனுபவங்கள் என்று பல்சுவை புத்தகம் போலப் பல தகவல்களைப் பகிர்ந்து இருக்கிறேன்.

பலர் புதிய செய்திகளை என்னுடைய தளத்தின் மூலம் அறிந்து இருக்க முடியும் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். குறிப்பாகத் தொழில்நுட்பச் செய்திகள் பலவற்றை எளிமையாக அனைவருக்கும் புரியும் படி கொடுத்து இருக்கிறேன்.

எனவே, தன்னடக்கப் Scene எல்லாம் இல்லாமல், தமிழில் பல துறைத் தகவல்களை ஒரே தளத்தில் கொடுக்கிறேன் என்று என்னால் பெருமையாகவே கூற முடியும் 🙂 .

Feed

ஒரு வருடம் முன்பு சில காரணங்களால் Reader / மின்னஞ்சல் போன்றவற்றில் முழுப் பகுதியையும் கொடுக்காமல், கொஞ்சம் மட்டும் படிக்கக் கொடுத்து, முழுவதும் படிக்க என்னுடைய தளம் வர வேண்டியது போல மாற்றி அமைத்து இருந்தேன்.

தற்போது ஒரு கட்டுரை வெளியிடுவதற்கு முன்பு பல முறை திருத்தம் செய்வதால், இந்தக் கட்டுப்பாடு அவசியமில்லை என்று கருதுகிறேன்.

இந்த இடுகையில் [Post]  இருந்து இனி முழு இடுகையும் உங்களுக்கு மின்னஞ்சல் / Reader இரண்டிலும் படிக்கக் கிடைக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து படித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

தொடர்ந்து இணைந்து இருங்கள் 🙂 .

{ 24 comments… add one }
 • வாழ்த்துகள்…

 • rayadurai August 16, 2015, 3:47 AM

  நல்லது ……வாழ்த்துகள்…

 • தமிழ்நெஞ்சம் August 16, 2015, 4:01 AM

  வாழ்த்துகள். தொடர்க. எனக்கும் வலையுலகிற்கும் இடையே ஏற்பட்டுள்ள இடைவெளியை குறைக்க உங்கள் தளம் உதவுகிறது.

 • srikanth August 16, 2015, 6:21 AM

  நண்பா கிரி

  உங்களுடைய blogger சேவைக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்

  தலைவர் ரஜினி – நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது
  கிரி – நான் ப்ளாக் ல் எழுதுவதை குறைத்து கொள்ள போகிறேன்

  இரண்டும் ஒன்று போல் தெரிகிறது

 • Mohamed Yasin August 16, 2015, 7:26 AM

  கிரி, எந்த ஒரு செயலும் தொடர்ந்து செய்வது என்பது கடினமான ஒன்று. சில குறிப்பிட்ட வருடங்களுக்கு பின் பல காரணங்களினால் அவை தடைபடுவதுண்டு.

  உங்களின் இந்த தொடர் முயற்சி கண்டிப்பாக பாராட்டுதலுக்குரியது.. ஒன்பது ஆண்டுகள் என்பது சாதாரணமான ஒன்று அல்ல.. இடைப்பட்ட காலங்களில் சில கசப்பான நிகழ்வுகளையும், பல சுவையான அனுபவங்களையும் பெற்றிருக்கலாம்..

  நான் உங்கள் வாசகனாக தொடர்வதற்கு முக்கிய காரணம் : (மேதாவிதனமில்ல மெல்லிய பிழையில்ல உங்கள் தமிழே!!!). பல தெரியாத புதிய தகவல்களை உங்கள் தளம் மூலம் தெரிந்து கொண்டுள்ளேன். குறிப்பாக தகவல் தொழில்நுட்ப செய்திகளை. இதற்கு நன்றி என்ற ஒற்றை சொல் போதுமானதல்ல!!!

  எதிர்காலத்திலும் உங்கள் முயற்சி இன்னும் தொடரவேண்டும். தற்போது பின்னூட்டங்கள் இடுவது குறைவானவர்கள் என்றாலும் தளத்தை தொடர்ந்து படிப்பவர்கள் அதிகம் என்றே எண்ணுகிறேன். பகிர்தமைக்கு நன்றி கிரி.

 • ராஜன் August 16, 2015, 2:36 PM

  நன்றி மிஸ்டர் கிரி கண்டிப்பாக நீங்கள் எழுதிய எழுத்துக்கள் அனைவருக்ககும் பிடிக்ககும் நான் உங்கள் ரசிகன் உங்களது பத்தாவது ஆண்டு வாழ்த்துக்கள்

 • Srinivasan August 16, 2015, 2:59 PM

  வாழ்த்துக்கள் கிரி. உங்கள் நற்பணி தொடரட்டும்!

 • Ashok August 16, 2015, 6:15 PM

  வாழ்த்துக்கள் கிரி ! உங்கள் பணி தொடரட்டும் !

 • Suresh Palani August 16, 2015, 6:29 PM

  அசத்துறிங்க கிரி… இந்த ரசிகனின் உள்ளம் கனிந்த மனமார்ந்த வாழ்த்துகள்..

  மீண்டும் உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும்..

 • Erumbiyur-Muthu August 17, 2015, 1:00 AM

  வாழ்த்துக்கள் கிரி.

  நான் பின்னூட்டம் இடுவது இல்லை எனினும், உங்கள் தளத்தினை தொடரும் வாசகன்.

  தொடர்வீர்கள்! இன்னும் சிறப்பாக.

  வாழ்த்துக்கள்!,
  வரவிருக்கும் இன்னும் வளமான நாட்களுக்காகவும்,
  அவை தரப்போகும் சிறந்த பதிவுகளுக்காகவும். !

 • கோவி.கண்ணன் August 17, 2015, 2:55 AM

  நல்வாழ்த்துகள். எனக்கு வலையுலகில் எழுத்தினால் கிடைத்த நன்மை உன்னைப் போன்றவர்கள் நண்பர்களாகக் கிடைத்ததும் தான்.

 • Senthil August 17, 2015, 5:58 AM

  வாழ்த்துக்கள் கிரி சார்.. தொடரட்டும் உம் பணி..

 • Santhosh August 17, 2015, 10:11 AM

  வாழ்த்துக்கள் கிரி நான் தமிழ் ஹிந்து மூலம் உங்கள் தளத்தை அறிந்தேன் அன்று முதல் நான் தங்களின் தளத்தின் ரசிகன் ஆகிவிட்டேன்.

  இது தான் என் முதல் பின்னூட்டம். நீண்ட நாட்களாக பின்னூட்டம் இட வேண்டும் என்று எண்ணினேன். முடியவில்லை.

  நீ உன் சிறகை விரிக்கும் வரை நீ எட்டும் உயரம் யாரறிவார்.

  வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் !! வாழ்த்துக்கள் !!!

 • Vijay August 17, 2015, 12:58 PM

  வாழ்த்துக்கள் கில்லாடி… உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
  என்றும் இளமையாக இருப்பது எப்படி (உங்களைப்போன்று) என்று நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும்.

 • seelan August 17, 2015, 5:16 PM

  வாழ்த்துக்கள்.

 • Uthaya August 17, 2015, 10:48 PM

  வாழ்த்துக்கள் அண்ணா .. தொடர வேண்டும் ..தொடர்வீர்கள் ..ப்ளீஸ் குறைச்சுறாதீங்க அண்ணா ..நாங்க ரொம்ப பீல் பண்ணுவோம் .. 🙂 all the very best and once again congratzz bro

 • Arun Govindan August 17, 2015, 11:47 PM

  பத்தாவது ஆண்டில் கிரி ப்ளாக்
  – வாழ்த்துக்கள் தல, உங்க நல்ல மனசுக்கு நீங்க இன்னும் நெறைய வெற்றிகள் பெறுவீங்க

  yahoo pulse தலைவி மாளவிகா இமேஜ் பாத்ததும் பழைய ஞாபகம் வருது : )
  தலைவி போட்டோ புது ப்ளாக் ல இல்லாதத கண்டிக்குறேன்

  குட்டிப் பரிசு
  – நன்றி தல

  HeroTalkies
  – நள தமயந்தி படம் அதுல பாத்தேன், நல்லா இருக்கு இந்த வெப்சைட்

  Blog இன்னும் எத்தனை நாள்?
  – உங்க ரசிகனின் வேண்டுகோள் முழுசா எழுதுறத நிறுத்த வேண்டாம்..whatsapp ல எழுதினா கூட ஓகே தான் 🙂

  பள்ளிக் குழந்தைகள் மாணவர்களுக்கான உதவி
  – வாழ்த்துக்கள் தல, பசங்க நல்லா இருக்காங்க போட்டோ ல

  பெருமை, தமிழில் பல துறைத் தகவல்களை ஒரே தளத்தில் கொடுக்கிறேன்
  – நிச்சயம், உங்கள் பதிவுகள் கல்யாண சாப்பாடு மாதிரி எல்லாமே கலந்து இருக்கும், வேணுங்குற content அவங்க அவங்க எடுத்துக்கலாம்

  Feed
  – பார்த்தேன் ஈமெயில் ல நல்லா இருக்கு…

  – அருண் கோவிந்தன்

 • Nathan August 18, 2015, 5:46 AM

  விறு விறுவென ப்ளாக் எழுத ஆரம்பித்து அதே வேகத்தில் காணாமல் போனவர்கள் இங்கே அனேகம் பேர்! தனது தனித்துவத்தினாலும், தன் உயரம் அறிந்து, மாற்றங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு அனேக ரசிகர்களை பெற்று! செயல்புரியும் பதிவர்களில் ஒருவராக திகழும் அன்பு அண்னன் “கிரி” அவர்களுக்கு உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்! மென்மேலும் உயர எல்லாம் வல்ல இறைவன் முருகப்பெருமான் உங்களுக்கு அருள்புரியட்டும்! 🎊🎊💥🎊💥🎊

 • Babu August 19, 2015, 1:00 AM

  சூப்பர் சூப்பர் ஜி…

  வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்…

 • Saleem August 19, 2015, 1:31 PM

  வாழ்த்துகள் கிரி !!! மென் மேலும் எழுத வாழ்த்துக்கள் !!!

 • akila August 20, 2015, 12:01 PM

  வாழ்த்துகள் கிரி.இன்னும் எத்தன வருடங்கள் ஆனாலும் எழுதிட்டே இருங்க.படிக்க நாங்க இருக்கோம் 🙂
  உங்க வலைப்பதிவுகள் சிறந்த தகவல் களஞ்சியம்.உங்களின் மிகச்சிறந்த பதிவுகள ஒரு புத்தகமாகவே போடலாம்.பத்தாண்டுகள் தொடர்ந்து எழுதுவது என்பது மிகப் பெரிய சாதனை தான். தடையில்லாமல் தொடர வாழ்த்துகள்.

 • Mydeen August 24, 2015, 8:25 AM

  வாழ்த்துக்கள் சகோ. கிரி
  கடந்த சில வருடங்களாக உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன் ஆனால் பின்னூட்டம் இட்டதில்லை காரணம் ஆங்கில key போர்ட் இல் தமிழில் எழுதுவது சிரமம்மாக இருக்கிறது .ரஜினி சாரின் மேலுள்ள பிரியத்தால் உங்கள் தளம் அறிமுகமாகியது
  தொழில்நுட்ப செய்திகளால் ஆச்சிர்யப்படித்தியது
  புத்தகங்களை அறிமுகப்படுத்தியது
  பொன்னியின் செல்வன் படித்த ஞாபகங்களை நினைவுபடுத்தியது
  நாமும் எழுதவேண்டும் என்று தூண்டுகிறது
  உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
  மேலும் மேலும் எழுதுங்கள்
  உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்

  மைதீன்

 • Sakthibalan August 25, 2015, 6:31 AM

  வாழ்த்துகள் கிரி. மென் மேலும் எழுத வாழ்த்துக்கள் !

 • திருகிரி அவர்களின் பதிவெழுதும் எண்ணத்தின் 10-ஆவது ஆண்டு வாழ்த்துக்கள், தங்களின் ஒவ்வெறு பதிவும் என் மனதில் இருந்தவை தான், தங்களின் பதிவைப்படிக்கும்போது ஒரு நல்ல நண்பரிடம் உரையாடியடியதைப் போல் உணர்கின்றேன். தங்கள் எழுத்துப் பயணம் பல ஆண்டுகள் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் தொடர வாழ்த்துக்கள்.

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz