நேபாள் – Dubsmash – எழுத்தாளர்கள் – சிரியா

நேபாள்

Budda - Nepal Earth Quake

நேபாளில் நடந்த மோசமான அழிவுக்கு அங்குக் கட்டப்பட்டு இருந்த கட்டிடங்கள் உறுதியானவையாக இல்லாததும் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.

இது போலச் சமயங்களில் அதிசயமாகத் தப்பித்தவர்கள் பற்றிய செய்தி வராமல் இருக்காது. Image Credit – www.theguardian.com

Nepal Earth quake - Kid

இந்த அழிவிலும் பல மணி நேரத்திற்குப் பிறகு நான்கு மாதக் குழந்தையும் ஒரு ஆணும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். இதோடு 101 வயது தாத்தாவும் 7 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டு இருக்கிறார் 😮 . தாத்தாவுக்கு ஆயுசு செம்ம கெட்டி. Image Credit – Vikatan.com

நிவாரண நிதி

நான் நண்பர்களிடையே நேபாள் நிவாரண நிதி வசூல் செய்யலாம் என்று கேட்ட போது பெரும்பாலானவர்கள் ஏற்கனவே நன்கொடை அளித்து இருந்தார்கள்.

இதுவரை பல சம்பவங்களுக்கு நண்பர்களிடையே வசூல் செய்து கொடுத்து இருக்கிறேன் ஆனால், இந்த முறை போல யாரும் ஆர்வமாக முன்பே கொடுத்தது இல்லை.

மக்களுக்கு உண்மையாகவே உதவி செய்யணும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது. அதோடு இணையத்தில் எளிதாக நன்கொடை அளிக்கும் படி வசதி வந்ததும் மிக முக்கியக் காரணம். ரொம்பச் சந்தோசமாக இருந்தது.

ஃபேஸ்புக்கில் இரண்டு நாட்களில் 60 கோடிக்கும் மேல் நன்கொடை வசூலித்து இருக்கிறார்கள்.

நான் இங்கே (சிங்கப்பூரில்) வசூல் செய்து இந்தியாக்கு அனுப்பி நேபாள் தூதரகப் பஞ்சாப் வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம் என்று திட்டமிட்டு இருந்தேன் அதாவது இந்தியா கொடுப்பது போல. நம் நாடு அதிகம் கொடுத்தால் நமக்குத் தானே பெருமை! என்று நினைத்தேன்.

ஆனால், இங்கே நண்பரின் நிறுவனத்தில் 100$ கொடுத்தால் அவர்கள் நிறுவனம் உடன் 200$ கொடுக்கிறது (100$ + 200$) . மூன்று மடங்கு பணமாகப் போகிறது.

எனவே, யார் கொடுத்தால் என்ன.. செல்லும் பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருந்தால் சரி என்று இங்கேயே கொடுத்து விட்டேன். கொடுத்த நண்பர்களுக்கு நன்றி.

இதில் வழக்கம் போல 2010 ல் நடந்த நிலநடுக்கத்தில் எடுக்கப்பட்ட நீச்சல் குள காணொளியை யாரோ நேபாள் என்று WhatsApp ல் விட்டு இருந்தார்கள். இதில் என்ன ஒரு அல்ப சந்தோசமோ!

இதையும் நம்பி ஊடகங்களும் விசாரிக்காமல் வெளியிட்டது காலக் கொடுமை.

இந்திய ஊடகங்கள்

இந்திய ஊடகங்கள் TRP க்கு செய்த வேலையைப் பார்த்து கடுப்பாகி நேபாள் மக்கள் “தயவு செய்து இடத்தைக் காலி பண்ணுங்க” என்று காறித் துப்பாத குறையாகக் கூறி விட்டார்கள்.

நம் இந்திய ஊடகங்களைப் போலக் கேவலமான ஊடகங்களைப் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.

மும்பை குண்டு வெடிப்பின் போது இராணுவ வீரர்கள் செய்த மீட்புப் பணிகளை நேரடி ஒளிபரப்புச் செய்து தீவிரவாதிகளுக்கு வசதி செய்து கொடுத்த ஈனப் பிறவிகள் தானே இவர்கள்.

அதிலும் வட இந்திய ஊடகங்களுக்கு ஏதாவது ஒரு செய்தி கிடைத்தால் போதும் பார்க்கிறவங்களுக்கு / பாதிக்கப்பட்டவர்களுக்குப் பைத்தியம் பிடிக்கும் வரை விட மாட்டார்கள்.

எனவே, இவர்கள் நேபாள் விசயத்தில் நடந்து கொண்டதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. தற்போது பழைய துணிகளை அனுப்பாதீர்கள் என்று நேபாள் வேண்டுகொள் விடுத்து இருக்கிறது.

சுஜாதா விருது

சுஜாதா விருதையோட்டி செம சண்டை நடந்து இருக்கிறது. ஜெயமோகன், இணைய மாஃபியா என்று மனுஷ்ய புத்திரனை கூறுகிறார். மனுஷ்ய புத்திரன் ஜெயமோகனை பைத்தியகாரன் என்கிறார்.

எனக்கு ஒரு சந்தேகம்?!

எப்பப் பாரு இந்தத் தமிழ் எழுத்தாளர்கள் சண்டைப் போட்டுட்டே இருக்காங்களே..! இது போலச் சண்டை போட்டுக் கொள்வது தமிழ் எழுத்தாளர்களிடையே மட்டும் நடக்குதா… இல்லை அனைத்து மொழி எழுத்தாளர்களும் இப்படிக் குழாயடி சண்டை போட்டுக் கொண்டு இருப்பார்களா?!

தன்னை முன்னிலைப்படுத்த சர்ச்சையை உருவாக்குவது அதன் மூலம் வெளிச்சத்தில் இருப்பது என்று எரிச்சலடைய வைக்கிறார்கள்.

வலைப்பதிவர்கள் முன்பு செம சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள். தற்போது பெரும்பாலானவர்கள் ஃபேஸ்புக் ட்விட்டர் கூகுள்+ என்று நகர்ந்து விட்டார்கள். எங்கே சென்றாலும் யாராக இருந்தாலும் சண்டை மட்டும் நிற்கவில்லை.

சிரியா போர்

நேபாள் சம்பவத்திற்குப் பிறகு அது தொடர்பான காணொளிகள் நிழற்படங்கள் உலா வருவது இயல்பு. அது போல வந்த காணொளி இது.

சிரியா போரில் இடிந்த கட்டிடத்தின் மண்ணில் புதைந்த… ஆமாம் நீங்கள் சரியாகத் தான் படிக்கிறீர்கள். மண்ணில் புதைந்த குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

சில நேரங்களில் சில விசயங்களை நம்பவும் முடிவதில்லை நம்பாமல் இருக்கவும் முடிவதில்லை. சத்தியமா இதை என்னால் நம்பவே முடியவில்லை.

இந்தக் குழந்தை எப்படி உயிரோடு இருக்கிறது?

முழுக்க மண்ணில் புதைந்து இருக்கிறது..! எப்படிப் பிழைத்தது?!

உடல் சிலிர்த்து விட்டது. நீங்களும் பாருங்கள்.. உங்களாலும் நம்ப முடியாது. அதில் ஒருவர் கூறியிருந்தார்.. யார் எப்போது சாகனும் என்று கடவுள் தான் முடிவு செய்யணும் என்று.. உண்மை என்று தான் தோன்றுகிறது.

ஒரு விசயத்தின் தொடர்ச்சியைத் தேடுவது என்னுடைய வழக்கம். இதன் பிறகு இந்தக் குழந்தை என்ன ஆனது என்று இயல்பான ஆர்வத்தில் தேடிய போது அதுபற்றிய காணொளி கிடைத்தது. சந்தோசமாக இருந்தது.

தற்போது காணொளியை Private ஆக்கி விட்டார்கள். நல்லவேளை நான் பார்த்துட்டேன் 🙂 .

ஷகீலா

நடிகை ஷகீலா பேட்டி கொடுத்து இருக்காங்க. ரொம்ப இயல்பா இருக்கு. நீங்க நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது? என்று கேட்ட போது “அப்படியெல்லாம் எதுவுமில்லை” என்று முடித்து விட்டார்.

பேட்டி எடுத்தவர் ஏன் தலையைக் குனிந்து கொண்டே பேட்டி எடுத்தார் என்று தான் புரியலை. கேள்விகள் ஓரளவு அனைத்தையும் தொட்டு வந்தது.

ஷகீலா கிட்ட இருக்கிற கெட்ட பழக்கங்கள் என்னென்ன என்பதை கேட்டு வாங்க முயற்சித்தார், அதற்கு ஷகீலாவின் பதில் நன்றாக இருந்தது.

பலரும் கிண்டல் பண்ணுறாங்க.. பாவம் இவங்க வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனை.

சிரியா

சிரியாவில் உள்ள ஜோர்டான் அகதி முகாமில் செஞ்சிலுவை சங்க உறுப்பினர் ஒருவர் கடந்த நவம்பர் மாதம் முதல் அங்குச் சேவை செய்து வந்தார்.

Syria war - Kid

அவர் அங்குள்ள பெண் குழந்தையைப் படம் பிடிப்பதற்காகத் தனது கேமராவை எடுத்த போது அதைத் துப்பாக்கி என நினைத்த அக்குழந்தை தனது கைகளைத் தூக்கி சரண் அடையும் எண்ணத்துடன் அழுகையைக் கூட்டியது. பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.

இந்தப் படம் இன்னொரு கறுப்பு வெள்ளை படத்தை நினைவுபடுத்தும் என்று நினைக்கிறேன். செய்தி & படம் நன்றிhttp://www.maalaimalar.com/

இந்திப் படங்கள்

கடந்த வார மூன்று நாள் விடுமுறையில் ஏகப்பட்ட திரைப்படங்கள் பார்த்தேன். குறிப்பாக இந்திப் படங்கள். இது குறித்துத் தனி இடுகையாக எழுதுகிறேன்.

Sukanya Samriddhi Yojana 

என்னுடைய நண்பன் விஜயகுமார், 10 வயதிற்குள் இருக்கும் பெண் குழந்தைகளுக்குப் பின்வரும் வசதியை கூறினான். எனக்குப் பொண்ணு இல்லை 🙂 எனவே, இருக்கிறவங்க பயன்படுத்திக்குங்க. ரொம்பப் பயனுள்ளதாக இருக்கிறது.

பெண்ணின் திருமணத்திற்கோ உயர் படிப்பிற்கோ மிகவும் உதவிகரமாக இருக்கும்.

பசங்களுக்கு இந்த வசதி இல்லை. என்ன கொடுமை சார்.. இப்பெல்லாம் பசங்க தான் திருமணத்திற்குச் சிரமப் படுறாங்க.. அதனால பசங்களுக்கும் கொடுங்க 🙂 .

http://www.onemint.com/2015/03/03/sukanya-samriddhi-yojana-tax-free-small-savings-scheme-for-a-girl-child/

http://www.onemint.com/2015/03/09/sukanya-samriddhi-yojana-calculating-maturity-value-after-21-years/

Points to note

· 100% tax free.

· Interest rate is not fixed and subject to change every year.

· One of the highest rates of interest offered by Government on small savings scheme.

· Interest is calculated on yearly basis and compounded yearly.

· Interest earned is tax free.

· PPF offers 25 basis points higher than the yield of 10-year government bonds where as SSY offers 75 basis points      higher than the yield of 10-year government bonds so Sukanya Samriddhi Yoajana may always give a little higher  return than PPF.

· Pre-mature closure of the account is permitted in case of the death of the account holder or when it is causing  extreme hardship to the depositor to carry on the operation of the account.

· Partial withdrawal up to 50% is permitted in case of higher education or marriage of the girl child.

· Partial withdrawal is allowed only when the account holder girl child attains the age of eighteen years.

· After the marriage of the girl child SSY account has to be closed.

Baltimore

அமெரிக்காவின் Baltimore நகரில் ஒரு கறுப்பு இனத்தவரை காவல்துறை கொன்று விட, பெரிய கலவரம் ஆகி விட்டது.

அதில் சின்னப் பசங்க எல்லாம் கலவரம் செய்ததால், காவல்துறை பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்து இது மாதிரி செய்யுற பசங்களைக் கூட்டிட்டுப் போங்க என்று ட்விட்டர்ல கேட்டுக்கிட்டாங்க.

இதைப் பார்த்து ஒரு பையனோட அம்மா தன் மகன் இப்படித் தறுதலையாவதைப் பொறுக்காமல் கலவரம் நடந்த இடம் சென்று செவுள்ளையே நாலு போட்டு கூட்டிட்டு வராங்க பாருங்க 🙂 .

தலைவர் / ரஞ்சித் / சந்தோஷ் நாராயணன் / தாணு

இந்தக் கூட்டணி அமையும் என்று எவருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். செம கூட்டணி. இது பற்றி அனைவரும் பேசினாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்பதால், வந்தவுடன் இது பற்றி எழுதுகிறேன்.

இந்தப் பட அறிவிப்பையொட்டி தலைவர் ரசிகர்கள் முள்ளும் மலரும் படத்தின் காளியையும், மெட்ராஸ் படத்தின் ஜானியையும் வைத்து வெளியிடும் டீசர்கள் அசத்தல் ரகம். எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கறாங்களோ! செமையா பொருந்தி வருது.

Dubsmash

இப்ப இணையத்தைக் கலக்குவது Dubsmash தான் 🙂 . செமையா பண்ணுறாங்க.. ஆனால், சில மாதங்களில் இதுவும் காணாமல் போய்டும் அது வேற விசயம். பசங்க கோபமா பேசுற வசனம் பேச முயற்சி பண்ணுறாங்க.. ஆனால், சிலருக்குத் தான் பொருத்தமாக இருக்கு.

எனக்கு இதுவரை பார்த்ததில் மூன்று Dubsmash ரொம்பப் பிடித்தது. ராதிகாவும் அவர் பெண்ணும், ஒரு பெண் பல வடிவேல் வசனங்களைப் பேசி முகப் பாவனைகளை அசத்தலாகக் கொடுத்தது, கடைசியா ஒரு குழந்தை செய்தது. அட்டகாசம்.

இந்தக் குழந்தையோட அப்பா ஃபேஸ்புக்ல இதைப் போட்டதும் Hits ஆட்டோ மீட்டர் மாதிரி பறந்தது 🙂 .

{ 7 comments… add one }
 • Dubsmash குழந்தைகளுடன் ரசித்தோம்

 • Prakash May 6, 2015, 1:27 PM

  போஸ்ட் ஆபீஸ் திட்டம் உண்மையாகவே நல்ல திட்டம்…… நேபால் நிவாரணத்திற்கு உதவிய இந்தியா விற்கு ஒரு ஷொட்டு. ஊடகங்களுக்கு ஒரு கொட்டு…..

 • rajesh v May 6, 2015, 4:36 PM

  இந்தக் கூட்டணி அமையும் என்று எவருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.
  ——————
  nanum romba shock agitten….

 • நான் கார்த்திகேயன் May 7, 2015, 3:25 PM

  கிரி அண்ணா என் நண்பனின் தங்கை +2 இல் 705 மதிப்பெண் பெற்று உள்ளான். +2 இல் அவன் computer science with maths group
  அடுத்து b.sc computer science or BCA பண்ணலாம்னு இருக்கான் இது சரியா அல்லது இதில் 2 இல் எது படித்தால் நன்றாக் இருக்கும். pls help னா

 • Arun Govindan May 7, 2015, 10:49 PM

  தல,
  நேபாள் – ரொம்ப வருத்தமா இருக்கு
  நிவாரண நிதி – நன்றி தல

  Dubsmash- அட்டகாசம் அந்த பையன்

  தலைவர் / ரஞ்சித் / சந்தோஷ் நாராயணன் / தாணு
  – பட்டய கிளப்பட்டும் சூப்பர் ஸ்டார்

  Baltimore – நானும் கேள்வி பட்டேன் இது சில angle ல கரெக்ட் தான். மொழி கடந்து தாய்மை ஒன்று தான்

  Sukanya Samriddhi Yojana – நன்றி

  சிரியா போர் – செம அதிர்ஷ்டம் பையன் கு

  சுஜாதா விருது – நோ ஐடியா தல

  இந்திய ஊடகங்கள் – என்னத்த சொல்ல

  இந்திப் படங்கள் – waiting for your review

  – அருண் கோவிந்தன்

 • Surya May 10, 2015, 9:28 PM

  சிரியா குழந்தை மீட்டெடுக்கப்படும் காணொளி நிஜமாகவே சிலிர்ப்பூட்டும் ஒன்று. இன்னமும் என் கண்களை நம்பமுடியவில்லை. பகிர்ந்தமைக்கு நன்றி

 • கிரி May 11, 2015, 2:58 AM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @ கார்த்தி மின்னஞ்சல் செய்து இருக்கிறேன்.

  @அருண் Dubsmash பொண்ணு & தப்பித்ததும் பொண்ணு 🙂

  இந்திப் படங்கள் பற்றி இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் எழுதுகிறேன்.

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz