சினி மசாலா மிக்ஸ் – ஏப்ரல் 2015

Kanchana 2

ஓ! காதல் கண்மணி & காஞ்சனா 2

ஓ! காதல் கண்மணி, காஞ்சனா 2 இரண்டு படங்களுமே சிறப்பாக வசூல் செய்து வருகிறது. அதிலும் காஞ்சனா 2 பட்டையக் கிளப்பி வருகிறது. நான் இன்னும் இரண்டு படங்களையும் பார்க்கவில்லை. Image Credit – movieimagegallery.blogspot.com

காஞ்சனா “பேய்” ஓட்டம் ஓடுவதாக அனைத்து ஊடகங்களும் கூறி வருகிறார்கள். நீண்ட காலத்துக்குப் பிறகு வந்த  சன் குழுமத்துக்கு மச்சம் தான்.

அலைபாயுதே படத்திற்குப் பிறகு மணிரத்னம் குறிப்பிட்டுக் கூறும் வெற்றிப் படத்தைக் கொடுத்து இருக்கிறார். இவருடைய தோல்விக்குக் காரணம் இவர் தமிழ் இந்தி என்று இரு மாநில மக்களைத் திருப்தி படுத்தி எடுக்க நினைத்ததே.

லிங்கா கூட இதில் சேர்க்கலாம். தெலுங்கு மக்களைத் திருப்தி படுத்த தெலுங்கு நடிகர்களைப் போட்டு இறுதியில் இருவருக்குமே திருப்தியில்லாமல் ஆகி விட்டது.

அனைவரையும் திருப்தி படுத்த நினைத்தால் சொதப்பல் தான் ஆகும்.

“கடல்” தமிழ் பார்வையாளர்களுக்காக எடுக்கப்பட்டு இருந்தாலும், வெகு ஜன வாழ்க்கையில் இருந்து விலகிய படமாகப் போய் விட்டதே தோல்விக்குக் காரணம். இயல்புத் தன்மை இல்லை.

எப்படியோ பெரிய வெற்றி இல்லையென்றாலும் மோசமில்லை என்ற பெயரை எடுத்த வரையில் ஓ! காதல் கண்மணி திருப்தி தான்.

உத்தமவில்லன் / பாபனாசம் / விஸ்வரூபம் 2

கமலின் உத்தமவில்லன் மே 1 வெளியாகிறது. பாபனாசம் / விஸ்வரூபம் 2 விரைவில் வெளியாகப் போகிறது.

விஸ்வரூபம் படத் தயாரிப்பாளருடன் எந்தப் பிரச்சனையுமில்லை. ஏன் ஆஸ்கார் ரவிச்சந்திரன் இன்னும் படத்தை வெளியிடாமல் இருக்கிறார் என்று தெரியவில்லை!” என்று கமல் கூறி இருக்கிறார்.

எனக்கு ஒரு பெரிய சந்தேகம்?

இந்தப் படம் 60 கோடியில் தயாரித்து இருப்பதாக வைத்துக் கொள்வோம். படம் முடிந்து ஒரு வருடம் மேல் ஆகப் போகிறது. ஒரு வருடத்திற்கு வட்டி என்ன ஆவது? நான் வீட்டுக்கடன் வாங்கி அதற்கு மாதம் EMI கட்டுவதே பெரும்பாடாகி விட்டது.

60 கோடிக்குக் குறைந்த பட்சம் 1 ருபாய் வட்டி வைத்தால் கூட மாதத்திற்கு 60 லட்சம் வருகிறது. ஒரு வருடத்திற்குக் குறைந்த பட்சம் 7 கோடி வருகிறது. எப்படித்தான் சமாளிக்கிறார்களோ! இன்னும் படம் எப்போது வரும் என்று தெரியவில்லை!!

“ஐ” படத்திற்கு வாங்கிய கடனைக் கட்டாததால் ஜெயம் ரவி நடித்து ஆஸ்கார் தயாரிப்பில் வெளி வர இருந்த “பூலோகம்” படத்தை வெளியிட தடை வாங்கி இருக்கிறார்கள்.

திரையுலகம் மர்மமாகவே இருக்கிறது. என்ன நடக்கிறது? எப்படிச் சமாளிக்கிறார்கள்? என்று கடவுளுக்கே வெளிச்சம்.

“டன்டனக்கா”

“ரோமியோ ஜூலியட்” படத்தில் “டன்டனக்கா” பாடலில், தான் மேடையில் பேசிய காணொளியை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதற்காக 1 கோடி மான நட்ட ஈடும் வழக்குச் செலவாக 1000 ரூபாயும் கொடுக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்து இருக்கிறார் டி ராஜேந்தர்.

இதில் ஜெயம் ரவி டி ராஜேந்தர் ரசிகராக நடித்து இருப்பதாகவும், அவரைப் புகழ்ந்தே படத்தில் பேசி இருப்பதாகவும் தயாரிப்புப் பக்கம் இருந்து கூறி இருக்கிறார்கள்.

உண்மையில் இந்த “டன்டனக்கா” வை கிண்டலாக யார் ஆரம்பித்தது என்று தெரியுமா?

8 – 9 வருடங்களுக்கு முன்பு பண்பலை அலைவரிசை அனுமதி வழங்கிய போது தமிழில் துவக்கமாகப் பட்டையக் கிளப்பியது “ரேடியோ மிர்ச்சி” இதன் பிறகே மற்ற நிறுவனங்கள் வந்தன.

அப்போது பல நடிகர்கள் பேசுவது போல மிமிக்ரி செய்து வெளியிடப்பட்ட பேச்சுக்களில் இந்த “டன்டனக்கா” பிரபலம் ஆகியது ஆனால், பின்னர் இதை நிறுத்தி விட்டார்கள்.

இவர்கள் நிறுத்தி விட்டார்கள் ஆனால், மற்றவர்கள் ஆரம்பித்து விட்டார்கள் 🙂 . எது எப்படியோ இந்தப் பாட்டு செம்மையா இருக்கு. இமான் இசை அட்டகாசம். இந்தப் பாட்டுல அனிருத் கலக்கி இருக்காரு. ஆளுக்கும் குரலுக்கும் சம்பந்தமே இல்லை.

YouTube ல 17 லட்சம் பார்வைகளைத் தாண்டி தாறுமாறா ஓடிட்டு இருக்கு!

டி ராஜேந்தர் இது போலப் பேசும் ஒரு இடத்தில் “தோளை தட்டுற தமிழன்” என்று கூறுவார்!!

தில்லுமுல்லு படத்தில் தேங்காய் சீனிவாசன்…

சட்டைல என்ன பொம்மை?

பூனை சார்

அதுல என்ன பெருமை? என்று நேர்முகத் தேர்வுக்கு வந்தவரைப் கேட்பாரே! அது தான் நினைவிற்கு வந்தது 🙂 .

தோளை தட்டுறதுக்கும் தமிழுக்கும் என்னங்க சம்பந்தம்? இவரும் எதையாவது கூற YouTube ல விதவிதமா காணொளி உருவாக்கிப் போடுறாங்க.. இவரோட suppression depression Anthem YouTube ல செம பிரபலம் 🙂 .

தலைவர் & ஷங்கர்

தலைவர் ஷங்கர் இணையப் போவதாகச் செய்தி சுற்றிக் கொண்டு இருக்கிறது. இணைந்தால் நன்றாக இருக்கும்.

“லிங்கா” ரசிகர்களைத் திருப்திப் படுத்தவில்லை, க்ளைமாக்ஸ் சொதப்பல் மற்றும் மெதுவான திரைக்கதையால் வரவேற்பைப் பெறவில்லை. அதோடு விநியோகஸ்தர்கள் என்ற பெயரில் படத்தையே அழித்து விட்டார்கள்.

ஷங்கரின் “ஐ” குறிப்பிடும் படி ஓடி இருந்தாலும் வழக்கமான ஷங்கர் படம் போலப் பரபரப்பாக இல்லாமல் இழுவையாக இருந்தது. நகைச்சுவை, சண்டை, திரைக்கதை என்று எல்லாமே சுமாராக இருந்தது. சிலர் சுஜாதா இல்லாததால் ஷங்கர் பிரகாசிக்கவில்லை என்று கூறினார்கள்.

தற்போது தலைவர் & ஷங்கர் இருவருமே திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். எனவே, இருவருமே தங்களோட BEST கொடுப்பார்கள், கொடுக்கணும் அதோடு இந்த வெற்றியின் முக்கியத்துவத்தை இருவருமே உணர்ந்து இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராதவரை எதுவுமே உறுதியில்லை.

கீதப்ப்ரியன்

இவருடைய தளத்தைப் பலர் அறிந்து இருக்கலாம். தெரியாதவர்களுக்குச் சிறு அறிமுகம். கார்த்திகேயன் என்பவர் இந்தத் தளத்தில் திரைப்படங்கள் குறித்து நிறைய எழுதி வருகிறார். ரொம்பச் சுவாரசியமாக உள்ளது.

நிறையப் பகிர்ந்து கொள்ள விருப்பம் கொண்டுள்ளார் என்பது இவரது எழுதும் ஆர்வத்தைப் பார்த்தாலே புரிகிறது. நிறைய இடுகைகளுக்குக் கருத்துக் கூறனும் என்று நினைப்பேன் ஆனால், நிறைய எழுதுவதால் சேர்ந்து தள்ளிச் சென்று விட்டது.

கமல் மற்றும் இளையராஜா ரசிகர். பாலச்சந்தர் மற்றும் பல்வேறு இயக்குநர்கள், எழுத்தாளர்கள் பற்றியும் எழுதி வருகிறார். ஆர்வம் உள்ளவர்கள் படிக்கலாம். தளம் http://geethappriyan.blogspot.com

ராஜதந்திரம்

இந்தப் படம் செமையா இருக்கு. துவக்கத்தில் இருந்து இறுதி வரை பரபரப்பாகக் கொண்டு சென்று இருக்கிறார்கள். இதில் நாயகனாக வருபவர் “நடுநிசி நாய்கள்” படத்தில் நடித்தவர் தானே?!

இவருடைய நண்பராக வரும் ஒருவரின் நடிப்பு, நகைச்சுவை ரசிக்கும்படி இருந்தது. கடைசி வரை நம்பும் படி கதையைக் கொண்டு சென்றது பாராட்டத்தக்கது.

தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்

இன்னொரு இனிய அதிர்ச்சி இந்தப் படம். ரொம்ப ரொம்ப ரசித்துப் பார்த்தேன். இரண்டு முறை பார்த்து விட்டேன். தினேஷ் மற்றும் நகுல் இயல்பான நடிப்பு. இருவரில் நகுல் ரொம்பச் சிறப்பு. என்ன… குரல் தான் பொருந்த மாட்டேங்குது.

நாயகியாக வருபவர், மனோபாலா நடிப்பு ரொம்பப் பிடித்தது.

மனோபாலா ரசிகராக நான் மாறி வருவது போலத் தெரிகிறது 🙂 . இவரை இவருடைய மாணவர்கள் உட்பட அனைவரும் கலாயிப்பது, இறுதியில் நகுல் இவர் கல்லூரியைக் கூறியதும் அப்பாடா! நம்மைச் சொல்லிட்டான் என்று குஷியாவது என்று கலக்கி இருக்கிறார்.

நாயகி, இவருடைய தோழி, சதீஷ் அவரது ஜோடி, ஊர்வசி, அவரும் நகுலும் பண்ணுற குறுந்தகவல் நகைச்சுவை என்று கூற நிறைய இருக்கு. விட்டால் விமர்சனம் அளவுக்கு வந்துடும் போல இருக்கு 🙂 .

இதுவரை பார்க்கவில்லை என்றால் மேற்கூறிய இரு படங்களையும் அவசியம் பாருங்கள்.

{ 11 comments… add one }
 • Arun April 23, 2015, 6:06 AM

  ஸ்ஸ்சபாட,இப்ப தான் ப்ரோ உங்க போஸ்ட் ரொம்ப நாள் கழிச்சு இன்ட்றேஸ்டா இருக்கு.. 🙂

 • நீண்ட காலத்துக்குப் பிறகு வந்த சன் குழுமத்துக்கு மச்சம் தான்.

  படம் தயாரித்தது மட்டும் சன். வாங்கி வெளியிடும் உரிமை பெற்றவர் ராம.நாராயணன் மகன் முரளி.

  ரொம்பவே ஆச்சரியப்படுத்திய படம் தமிழ் எண்ணுக்கு1 ஐ அழுத்தவும்.

 • நான் கார்த்திகேயன் April 23, 2015, 2:09 PM

  ஹாய் அண்ணா .. எப்படி இருக்கீங்க உங்கள் தளம் ஒரு பக்கா கமர்சியல் சினிமாவை போல இருக்கிறது…. தொடர வாழ்த்துக்கள்

  ஜோதிஜி அவர்களுக்கு- காஞ்சனா தயாரித்தது ராகவேந்திரா புரொடக்சன் . அவர்கள் படத்தை சன் னுக்கு விற்றுவிட்டார்கள். சன் விநியோக உரிமையை (தமிழ்நாடு )தேனாண்டாள் பிலிம்ஸ் முரளிக்கு கொடுத்துள்ளது .. இது நான் கேள்விப்பட்ட தகவல்

  கிரி னா adware பத்தி எப்ப எழுதுவிங்க அண்ணா

 • NadodiPaiyan April 23, 2015, 4:01 PM

  நல்ல விமர்சனம். நன்றி.

 • rajesh v April 23, 2015, 7:05 PM

  60 கோடிக்குக் குறைந்த பட்சம் 1 ருபாய் வட்டி வைத்தால் கூட மாதத்திற்கு 60 லட்சம் வருகிறது. ஒரு வருடத்திற்குக் குறைந்த பட்சம் 7 கோடி வருகிறது. எப்படித்தான் சமாளிக்கிறார்களோ!திரையுலகம் மர்மமாகவே இருக்கிறது. என்ன நடக்கிறது? எப்படிச் சமாளிக்கிறார்கள்? என்று கடவுளுக்கே வெளிச்சம்.
  —————————————————————————

  ஆமாம் அண்ணே! பாதி பேரு ரீல் விடுறாங்க… ஓடாத படத்தை ஓடுதுன்னு சொல்லுவாங்க… கம்மியா செலவு பண்ணிட்டு நிறைய செலவு ஆச்சுன்னு சொல்லுவாங்க.. இப்படி நெறைய பொய்கள் அந்த இண்டஸ்ட்ரில இருக்கு 🙁

 • Arun Govindan April 23, 2015, 7:19 PM

  தல,
  ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம தளத்துல சினிமா நியூஸ் படிக்கச் சந்தோசமா இருக்கு.. ஏதோ மிஸ் பண்ண மாதிரி பீல் பண்ணேன் 🙂

  ரொம்ப நல்லா இருக்கு பதிவு..ராஜதந்திரம், தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் ரெண்டுமே சூப்பர் ரா இருக்கு, பாத்துட்டேன்…

  ரஜினி, ஷங்கர் – இணைஞ்சா சந்தோசம் தான்

  டன்டனக்கா – பாட்டு சூப்பர் ஆனா TR ர ரொம்பவே கிண்டல் அடிச்ச மாதிரி தான் நான் நினச்சேன் பாட்டு கேட்டதும்..யாரு தான் அவர கிண்டல் பண்ணலனு கேட்டா அதுக்கு பதில் இல்லை என்கிட்ட 🙂

  உத்தமவில்லன் – பெருசா எனக்கு interest இல்லை இந்த படத்து பேர்ல.. பாபநாசம் ரொம்ப எதிர் பாக்குறேன் நான்…

  காஞ்சனா 2 – எனக்கு second half அவ்வளவு புடிக்கல
  கண்மணி – ஒரு டைம் நிச்சயம் பார்க்க கூடிய படம்

  – அருண் கோவிந்தன்

 • rajesh v April 23, 2015, 7:20 PM

  தோளை தட்டுறதுக்கும் தமிழுக்கும் என்னங்க சம்பந்தம்?

  LOL 😀 😀

 • Mohamed Yasin April 25, 2015, 6:26 AM

  கிரி, சில படங்கள் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்து செல்லும் போது, படம் மொக்கையாக இருக்கும்.. நமக்கும் தல சும்மா கிறுகிறுன்னு சுத்தும்… எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம, பார்க்கிற படம் சும்மா பட்டாச இருக்கும்..

  அது மாதிரி படங்களை மீண்டும், மீண்டும் பார்க்க தூண்டும்.. வெகு சமீபத்தில் பார்த்த திருடன் போலீஸ் (நடிகர் : தினேஷ்) எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.. சென்ற வருடத்தில் பார்த்த நெடுஞ்சாலை படம் இன்னும் கண்ணுக்குள் ஓடிக்கொண்டு இருக்கிறது..

  நேரம் இருப்பின் இரு படங்களை பார்க்கவும்.. உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்… ராஜதந்திரமும் வித்தியாசமான கதை களத்துக்காக பார்க்கலாம்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 • சபரிராஜ் April 25, 2015, 11:51 PM

  வணக்கம்

  நல்ல விமர்சனம் அண்ணா

 • காத்தவராயன் May 3, 2015, 3:49 PM

  கிரி,

  நீங்க சொன்ன பின்னர்தான் ராஜதந்திரம் என்று ஒரு படம் வந்ததே தெரியும் 🙂 இத்தனைக்கும் தினமும் தினத்தந்தி படிப்பவன் 🙂

  படம் உன்மையிலே அருமை. வில்லன் நடிப்பு செம்ம்ம….. ராதாரவியின் மாதிரி இருந்தார். ஏன் இப்படி நல்ல படங்கள் கூட வருவதும் போவதும் தெரியாமல் உள்ளதோ ? தமிழ் சினிமாவின் சாபக்கேடு.

 • கிரி May 4, 2015, 9:00 AM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @ஜோதிஜி கார்த்தி கூறுவது சரி.

  @கார்த்தி விரைவில் எழுதுகிறேன். இதை தனியா எழுத முடியாது.. எனவே, பல செய்திகளை எழுதும் போது இதையும் சேர்த்து கூறி விடுகிறேன்.

  @ராஜேஷ் எல்லோருக்கும் தெரியும்.. ஆனாலும் பண்ணிட்டு இருக்காங்க.. என்னத்தை சொல்றது.

  @அருண் அப்படியா.. ரொம்ப நாள் ஆகிடுச்சோ..!

  காஞ்சனா ஓகே கண்மணி இரண்டும் இன்னும் பார்க்கவில்லை..விரைவில் பார்த்து விடுவேன்.

  @யாசின் நெடுஞ்சாலை , திருடன் போலிஸ் இரண்டுமே பார்த்து விட்டேன். திருடன் போலிஸ் ரொம்ப நன்றாக இருந்தது.. இதிலேயே குறிப்பிட்டு இருக்க வேண்டும். மறந்துட்டேன்.

  @காத்தவராயன் நீங்க சொன்ன மாதிரி வில்லன் அசத்தல் நடிப்பு. எனக்கு ரொம்பப் பிடித்தது. அந்த வயதுக்குண்டான கெத்தை நன்கு காட்டி இருப்பார். அதோடு மிரட்டுவதையும் அலட்டிக்காம செய்து இருப்பாரு.

  ரொம்ப ஆச்சர்யப்பட்டேன். இவரை இதுக்கு முன்னாடி பார்த்தது போல நினைவில்லை.

Leave a Comment