மின்னல் வேகம் அது தான் “SSD”

Speed

ம்முடைய கணினியில் தகவல்களைச் சேமிக்கும் சேமிப்பகத்தின் பெயர் தான் வன்தட்டு, ஆங்கிலத்தில் Hard Disk சுருக்கமாக HDD. தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்களால் HDD வடிவமைப்பும் வேகமும் மாறி வருகிறது. அது பற்றித்தான் நாம் பார்க்கப் போகிறோம்.

HDD ல் பலவகை உண்டு அவற்றைப் பற்றி அனைத்தையும் விரிவாகப் பார்க்காமல் பழைய வேகத்தை ஒன்றாகவும் புதிய வேகத்தை இன்னொன்றாகவும் வைத்து பார்ப்போம். இது குழப்பத்தைத் தவிர்க்கும். Image Credit – gizmodo.com

வன்தட்டில் இதுவரை வந்தவை IDE, SCSI, SATA, AHCI, SSD. இதில் புரிதலுக்காக HDD Vs SSD என்று எடுத்துக்கொள்வோம். பழைய IDE, SCSI, SATA, AHCI அனைத்தையும் HDD என்றும் இதில் இருந்து SSD எவ்வாறு வேகமாகவும் வேறுபட்டும் இருக்கிறது என்று பார்ப்போம்.

IDE – Integrated Drive Electronics

SCSI – Small Computer System Interface

SATA – Serial Advanced Technology Attachment

AHCI – Advanced Host Controller Interface

SSD – Solid State Drive

அதிகமாகக் கொடுக்கப்படும் தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்தி, தெரிந்து கொள்ள நினைப்பவர்களின் ஆர்வத்தைக் குறைக்கும் என்பதால், அவசியமான தகவல்களை மட்டும் பகிர்கிறேன். Image Credit – www.geckoandfly.com

HDD Vs SSD

HDD  என்றால் என்ன?

கணினியில் தகவல்களைச் சேமிக்க உதவும் சாதனம். IDE, SCSI, SATA, AHCI போன்ற வன்தட்டுகளின் பொதுவான பெயர் HDD.

இவ்வகை வன்தட்டுகள் உள்ளே மோட்டார் மற்றும் காந்தங்களைக் கொண்டு இயங்குபவை. இதன் பயன்பாட்டின் போது மோட்டார் இயக்கம் காரணமாக இரைச்சல், சூடாகுதல் ஆகியவை ஏற்படும்.

இவ்வகை வன்தட்டுகள் மோட்டார் மூலம் இயங்குவதால், பழுதாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மோட்டாரின் இயக்கம் நின்றாலோ அதில் சிறு தடையேற்பட்டாலோ இதனைப் பயன்படுத்த முடியாது. நாளடைவில் மோட்டாரின் வேகம் குறைந்து கணினி வேகம் மட்டுப்படும். மோட்டாரில் பழுது ஏற்படும் போது “டிக் டிக்” சத்தம் கேட்பதை நீங்கள் அறிந்து இருக்கலாம்.

நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் இயங்குதளம் (OS) நாளடைவில் மெதுவடைந்து வருவதை நிச்சயம் உணர்ந்து இருப்பீர்கள். இதற்கு இரண்டு காரணம் உள்ளது.

ஒன்று, விண்டோஸ் இயங்கு தளத்தில் வரைமுறையில்லாமல் இலவச மென்பொருட்களை நிறுவுவதால் இவை இயங்கு தளத்தைப் பாதித்து வேகத்தைக் குறைத்து விடும்.

இரண்டாவது, வருடங்கள் கடக்கும் போது உங்கள் கணியில் உள்ள HDD மோட்டாரின் செயல்திறன் குறைந்து அதனால், வேகம் குறைந்து கொண்டே வரும்.

இவ்வகை வன் தட்டுகள் வாங்கிய அடுத்த நாளே கூடச் செயலிழக்க வாய்ப்பிருக்கிறது. 7 வருடங்கள் ஆனாலும் எந்தப் பிரச்சனையும் செய்யாமல் ஓடுபவையும் இருக்கின்றன, நம்முடைய அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. ஆனாலும், வேகம் குறைந்து வரும் என்பதைத் தவிர்க்க முடியாது.

இவ்வகை வன் தட்டுகளே கணினியில் இதுவரை உலகம் முழுவதும் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

SSD என்றால் என்ன?

உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் நவீன தொழில்நுட்பம் SSD. இதன் சிறப்பு வேகம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன்.

SSD மோட்டார் மூலம் இயங்குவதல்ல, சிப் மூலம் இயங்குவதால் இதன் வேகம் எப்போதுமே குறையாமல் தொடர்ந்து அதே செயல்திறனில் இருக்கிறது அதோடு சத்தம், சூட்டை ஏற்படுத்தாது. எனவே, SSD செயலிழப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. பழுதானால்  சரி செய்வது என்பதும் மிகக் கடினம்.

SSD எப்படி இருக்கும்?

நீங்கள் பயன்படுத்தும் USB Stick ன் மேம்படுத்தப்பட்ட வசதி தான் SSD. உங்கள் USB Stick ன் உள்ளே மோட்டார் எதுவுமில்லை அதில் Circuit Board / Chip மட்டுமே இருப்பதை அறிந்து இருப்பீர்கள், அதே தொழில்நுட்பம் தான் SSD.

ஆனால், USB Stick யை விட SSD மிகப் பாதுகாப்பானது மற்றும் வேகமானது. வசதிகள் இருந்தாலே விலையும் அதிகம் என்பது அனைவரும் அறிந்தது. ஒரு SSD 128 GB யின் விலை ஒரு SATA 1 TB வன்தட்டின் விலையை விட அதிகமாக இருக்கும்.

Solid State Hybrid Drive

SSD விலை அதிகம் என்பதால் தற்போது பாதி HDD பாதி SSD என்ற Hybrid வன்தட்டு வெளியாகி உள்ளது. எனவே, SSD கட்டுபடியாகாதவர்கள் இதைப் பயன்படுத்த முயற்சிக்கலாம்.

இது என்ன செய்யும் என்றால், இயங்கு தளத்தின் தகவல்களை SSD பகுதியில் வைத்துக்கொள்ளும். மற்ற நம் கோப்புகளை [Files] SATA (HDD) பகுதிக்கு ஒதுக்கி விடும்.

இதன் மூலம் உங்கள் கணினி வேகமாக இயங்கும் Boot ஆவதன் வேகமும் அதிகரிக்கும்.

நான் SSD பயன்படுத்த விரும்புகிறேன் ஆனால், விலை அதிகமுள்ளது. என்ன செய்யலாம்?

நீங்கள் புதிய மடிக்கணினி வாங்கும் போது 128 GB / 256 GB என்ற குறைந்த பட்ச அளவுள்ள SSD வாங்கிக்கொண்டு, உங்கள் மற்ற தகவல்களைச் சேமிக்க External HDD  வாங்கிக்கொள்ளலாம். ஏனென்றால், உங்களுடைய அனைத்துத் தகவல்களையும் தினமும் பயன்படுத்தப்போவதில்லை.

உங்கள் முக்கியக் கோப்புகளை மட்டும் பயன்படுத்த 256 GB என்பதே அதிகம். இதற்கு மேலும் தேவையென்றால் அவை திரைப்படங்களை சேமிப்பதற்கு மட்டுமே பயன்படும். இதிலேயே குறிப்பிடத்தக்க படங்களை சேமிக்க முடியும்.

SSD மூலம் நொடிகளில் உங்கள் கணினி Boot ஆகும். இயங்கு தளத்தினுள் நுழைந்த பிறகும் உங்களின் மற்ற நடவடிக்கைகளும் மிக வேகமாக இருக்கும். செயலிழப்பதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவு. உங்க கணினி சூடாகாது மற்றும் கர்ர் புர்ன்ன்னு வயிறு சரியில்லாத மாதிரி சத்தம் ஏற்படுத்தாது 🙂 .

வழக்கமான வன் தட்டிற்கும் SSD க்கும் இடையே உள்ள வேகத்தை நீங்கள் பின்வரும் காணொளியின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ச்சும்மா பட்டையக் கிளப்பிட்டு Boot ஆகுது பாருங்க…!

HDD நாளாக வேகம் குறைந்து,  சில சமயங்களில் அனைத்தும் முடிந்து HDD LED Blink ஆவது நிற்க 10 – 15 நிமிடங்கள் ஆகும். நாம் கணினியை On செய்து பிறகு காஃபியே குடித்து வந்து விடலாம். இதே SSD என்றால் அதிகபட்சம் 2 நிமிடங்கள் ஆகும் பழைய கணினி என்றாலும்.

சமீபமாக SSD விலை குறைந்து வருகிறது. எனவே, வாங்குபவர்கள் அனைவரும் SSD வாங்கத்தான் விருப்பப்படுகிறார்கள். நானும் என்னுடைய அடுத்தக் கணினிக்கு SSD தான் வாங்கப்போகிறேன். 128 GB / 256 GB எனக்குப் போதுமானது.

எதிர்காலம் SSD (Solid State Drive) தான். இனி மடிக்கணினி வாங்கபோகிறவர்கள் SSD வாங்க முயற்சித்து, பாதுகாப்பான உண்மையான வேகத்தை அனுபவியுங்கள்.

குறிப்பு : இந்தக் கட்டுரை “கணினியைப் பராமரிப்பது எப்படி?” என்பதின் தொடர்ச்சி.

பிற்சேர்க்கை HDD / SSD தெரியும் ஆனால் “mSata” தெரியுமா?

{ 11 comments… add one }
 • அரிகரன் March 11, 2015, 5:38 PM

  நல்ல தகவல். எனக்கு புதியது. பகிர்ந்தமைக்கு நன்றி

 • giri March 12, 2015, 7:58 AM

  அன்புள்ள கிரி ….
  கிரியின் அன்பு வணக்கங்கள்……
  பாலகுமாரன் எழுதிய “உடையார்” படிக்கவும்.
  இராஜராஜன் தஞ்சை ஆலயத்தை கட்டுவதை பற்றியது.
  பொன்னியின் செல்வன் தொடர்ச்சியாக உள்ளது.
  மொத்தம் ஆறு பாகம் வந்துள்ளது (அதில் இரண்டு படித்துள்ளேன்-முதல் பாகம் இரண்டு முறை படித்துள்ளேன்).

 • mohan March 12, 2015, 7:38 PM

  ஹாய்

  இ வான்ட் ANDROID ரூட் MTK்6592 MOBILE HELP ME

 • Mohamed Yasin March 14, 2015, 6:03 PM

  எந்த கோவிலிலும் சூடம் காட்டி, சத்தியம் செய்து சொல்வேன், இது மிக சிறந்த பதிவு என்று.. , இந்த கத்து குட்டிக்கு இதை விட எளிமையாகவும், தெளிவாகவும் புரிய வைக்கவே முடியாது..

  புகைப்படங்களும் பதிவுடன் 100% ஒத்து போவது இன்னும் சிறப்பே!!! IDE, SCSI, SATA, AHCI, SSD, பற்றி எதாவது கேள்விகள் இருந்த சொல்லுங்க நான் உங்களுக்கு பதில் சொல்றேன்…. (பின்குறிப்பு: கேள்வி இந்த பக்கத்திலிருந்து மட்டும் தான் கேட்கவேண்டும்).. பகிர்வுக்கு மிக்க நன்றி கிரி…

 • Mahesh S. March 17, 2015, 11:26 AM

  பயனுள்ள பகிர்வு இது. மிகவும் நன்றி.

 • கிரி March 18, 2015, 10:02 AM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @கிரி ஏற்கனவே என்னுடைய நண்பர்கள் “உடையார்” பற்றிக் கூறி இருந்தார்கள். கையில் புத்தகம் இல்லையாததால் படிக்க முடியவில்லை. விரைவில் படிக்க முயற்சிக்கிறேன். பரிந்துரைக்கு நன்றி

  @மோகன் நான் Android பயன்படுத்துவதில்லை.

  @யாசின் நன்றி 🙂

 • அருண் கோவிந்தன் March 27, 2015, 11:26 PM

  கிரி,
  முதல்ல உங்க thumbnail போட்டோ இப்ப தான் பாக்குறேன்
  அட்டகாசமா இருக்கு இந்த டைம் சென்னை போனா கோடம்பாக்கம் பக்கம் போன ஹீரோ வா உங்கள வெச்சு படம் எடுக்க சான்ஸ் இருக்கு…

  பதிவு “டும்மீஸ்” book மாதிரி எளிய நடையில் உபயோகமா இருக்கு, எனக்கு தெரியாத பல IT விஷயங்கள் இந்த பதிவு மூலமா கத்துகிட்டேன்

  நன்றி

  – அருண் கோவிந்தன்

 • அருண் கோவிந்தன் March 27, 2015, 11:28 PM

  கிரி,
  ஒரு கேள்வி
  android avoid பண்ண எதுவும் reason இருக்கா? இல்லை ஜஸ்ட் use பண்ண சான்ஸ் கிடைக்கலையா??

  – அருண் கோவிந்தன்

 • கிரி March 31, 2015, 10:42 AM

  அருண் Android பயன்படுத்தக் கூடாதுன்னு எதுவுமில்லை. பயன்படுத்தணும் என்று தோன்றவில்லை.

  என் பையனுக்கு Dell Tablet Android தான் வாங்கிக்கொடுத்தேன். அது சரியாக வேலை செய்யல. யோசனையில் இருக்கிறேன்.

 • குறும்பன் May 14, 2015, 3:42 PM

  SSD பற்றிய மோசமான செய்தி -Death and the unplugged SSD: How much you really need to worry about data retention – Digital doesn’t mean forever

  SSDs are not archival quality storage systems and they degrade faster where ambient temperature is high like in India. So, backup. ” always follow the rule of three and keep a working copy of your data, a backup copy, and a copy of the backup.”

  http://www.pcworld.com/article/2921590/death-and-the-unplugged-ssd-how-much-you-really-need-to-worry-about-ssd-reliability.html

 • புவனேஷ் குமார் October 2, 2015, 3:23 AM

  அருமையான பதிவு

Leave a Comment