100 வது தொழில்நுட்ப இடுகை

100th post

நேரடி தொழில்நுட்பப் பதிவராக இல்லாத எனக்கு 100 தொழில்நுட்ப இடுகைகள் என்பது பெரிய விசயம் தான். ஒரு முறை நண்பர் அருண், “கிரி! நீங்க 80 இடுகைகள் எழுதி இருக்கீங்க” என்று சுட்டிக்காட்டிய போது தான் ஓ! இவ்வளவு வந்து விட்டதா! என்று கவனித்தேன்.

அதன் பிறகு 100 யைத் தொட வருடமே ஆகி விட்டது. Image Credit – twoanimators.blogspot.com

நான் தொழில்நுட்பத்துறையில் இருப்பதால் மட்டுமல்ல, தொழில்நுட்பத்தில் புதிதாக முயற்சித்துப் பார்ப்பதில் ஆர்வம் இருந்தது. எனவே Blog எழுத வந்தது இது பற்றிப் பகிர ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது.

முதன் முதலில் Internet Explorer பிரச்னைக்கு Fix கொடுக்கத் தான் எழுதினேன். எனக்கு IE உலவியே பிடிக்காது ஆனால், இது தான் என்னுடைய தொழில்நுட்ப இடுகையின் துவக்கம். IE ரொம்ப ராசி போல 😉 .

இதன் பிறகு நான் எழுதிய விண்டோஸ் 7 கட்டுரை எனக்குத் தொழில்நுட்பம் பற்றி எழுத நம்பிக்கையைக் கொடுத்தது. இதன் பிறகு அடிக்கடி எழுத ஆரம்பித்தேன்.

அப்போது தொழில்நுட்ப இடுகைகள் எழுதுவதில் பிரபலமாக இருந்த ஷிர்டி சாய்தாசன் (தற்போது மென்பொருள் பிரபு) டாப் 10 தொழில்நுட்பப் பதிவர்கள் பெயர்களை அறிவிப்பார். இதில் கொசுறாக என் தளமும் வந்ததே தொழில்நுட்ப இடுகைகள் எழுத எனக்குப் பெரிய ஊக்கத்தைத் தந்தது.

முடிந்தவரை தொழில்நுட்ப வார்த்தைகளைத் தமிழில் பயன்படுத்துகிறேன், சிரமமான / பரிச்சயம் இல்லாத வார்த்தைகளுக்கு ஆங்கில வார்த்தையையும் கொடுத்து விடுகிறேன். மேலும் தமிழ் தொழில்நுட்ப வார்த்தைகளை இங்கே காணலாம்.

நான் கூகுளின் தீவிர ரசிகன். எனவே, கூகுள் பற்றிய செய்திகள் என்றால் ரொம்ப விருப்பமாகப் பகிர்வேன். நான் எழுதிய தொழில்நுட்ப இடுகைகளில் 70% நிச்சயம் கூகுள் பற்றியதாகத் தான் இருக்கும். கூகுளுக்கு இன்னும் ரசிகர் மன்றம் மட்டும் தான் ஆரம்பிக்கவில்லை 🙂 .

என்னைத் தொழில்நுட்ப இடுகைகள் எழுத வைத்ததில் கூகுளின் பங்கு நிறைய இருக்கிறது. எனவே, கூகுளுக்கு இந்தச் சமயத்தில் என் மனமார்ந்த நன்றிகள்.

துவக்கத்தில் தொழில்நுட்ப இடுகைகளுக்குப் படிப்பவர்களிடையே அவ்வளவாக ஆதரவு இல்லாமல் இருந்தது. தற்போது மற்ற கட்டுரைகளை விட ஆதரவு அதிகம். இன்று வரை என்னை உற்சாகமாக எழுத வைத்துக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் என் நன்றி.

வெளிநாடு / மாநிலம் அடிக்கடி செல்பவர்கள் அவசியம் வைத்து இருக்க வேண்டிய செயலி (App) கூகுள் மொழி மாற்றி (Google Translator). மொழி தெரியாத ஊரில், என்ன எழுதி இருக்கிறார்கள் என்று தெரியாமல் திருட்டு முழி முழித்துட்டு இருக்காமல் அண்ணன் கூகுளை தட்டினால் அது என்னவென்று கூறி விடுவார்.

குச் குச் ஹோத்தா ஹை என்றால் என்னன்னு பார்த்து ஸ்மிர்தி இராணியிடம் “இங்க பாருங்க.. எங்களுக்கு கூகுள் போதும்”னு சொல்லலாம் 🙂 . நாங்கள் கடந்த முறை சென்ற பயணத்தில் பயன்படுத்திப் பார்த்தோம், ரொம்பப் பயனுள்ளதாக இருக்கிறது. Image Credit – Google+

3 மே 2015 முதல் நீங்கள் இந்தியாவில் எந்த மாநிலம் சென்றாலும் உங்கள் கைப்பேசி எண்ணை அங்குள்ள நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். தற்போது அவரவர் மாநிலத்திற்குள் மட்டுமே மாற்றும் படி வசதியுள்ளது.

உதாரணத்திற்குத் தமிழகத்தில் பணி புரியும் ஒருவர் பெங்களூரு மாற்றல் ஆகிச் சென்றால் இதே எண்ணை அங்கே மாற்றிப் பயன்படுத்த முடியும்.

கூகுள் பாதுகாப்பிற்குத் தாறுமாறாக முக்கியத்துவம் கொடுக்கும் என்பதை அறிந்து இருப்பீர்கள். இணையம் சென்றாலே கண்ட கருமாந்திரமும் நம் கணினியில் நுழைந்து விடுகிறது.

ஆபத்து புரியாமலே “தயவு செய்து எனக்கு ஆப்பு வைங்க!” என்று வரவேற்கிறோம். இதனால் பாதுகாப்பிற்காகக் கூகுள் தனது க்ரோம் உலவியை இன்னும் மேம்படுத்தியிருக்கிறது.

Google Chrome Malware protection

தவறான தளம் சென்றால் / தரவிறக்கம் செய்தால் எச்சரிக்கை கொடுக்கும். சிகப்பைப் பார்த்தாலே நாம் திகிலாகி தெறிச்சு ஓடிடுவோம் என்று இது போல் காட்டுது போல. சிகப்பு என்றாலே அபாயம் என்று நாம் போக மாட்டோம். தேவையான வசதி. Image Credit – Google.com

பிற்சேர்க்கை – Google safe browsing பயன்படுத்தினால் இந்த எச்சரிக்கை இனி Chrome, Firefox, Safari ஆகிய உலவிகளில் தெரிய வரும்.

பிரபலமான Cloud நிறுவனமான Dropbox  தனது செயலியை விண்டோஸ் கைப்பேசிக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. நான் Dropbox பயன்படுத்திச் சிறப்பை அறிந்தவன் என்ற முறையில் அவசியம் அனைவரும் இதைப் பயன்படுத்துங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

ந்த நாட்டையும் விட இந்தியாவில் ட்விட்டர் படு வேகத்தில் வெற்றி நடை போட்டுக் கொண்டு செல்கிறது. எனவே, ட்விட்டர் நிறுவனம் இதை மேலும் ஊக்குவிக்கும் பொருட்டுச் சமீபத்தில் பிராந்திய மொழிகளுக்கு Hashtag வசதியைக் கொடுத்தார்கள்.

நம்ம ஆளுங்க #தமிழ்வாழ்க என்று Trend செய்து முதல் இடத்திற்கு கொண்டு வந்து இந்தி வடா தோசாக்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்கள்.

மிகவும் பிரபலமான காணொளித் தளமான YouTube  குழந்தைகளுக்கான செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு இனி நீங்கள் இதைப் பயன்படுத்தலாம்.

Blackberry நிறுவனத்தில் உள்ள நபர் ஒரு தகவலை அதிகாரப்பூர்வமாகப் பகிரும் போது ஐஃபோன் வழியாக ட்விட்டரில் போட்டு விட்டார். நம்ம ஆளுங்க தான் எல்லாவற்றையும் கண்ணுல விளக்கெண்ணையை விட்டுட்டுப் பார்ப்பாங்களே!

“இங்கே பாருங்க! Blackberry ல வேலை செய்துட்டு ஐஃபோன் வழியாகத் தகவலைப் பகிர்கிறார்” என்று மானத்தை வாங்கி விட்டார்கள்.

அவர்களும் ட்விட்டை படக்குன்னு நீக்கி விட்டார்கள். இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன! மாதிரி ஆகி விட்டது. யாஹூ நிறுவனத்தில் பணி புரிபவர் ஜிமெயிலை பயன்படுத்தினால் எப்படிக் கேள்வி வருமோ அதே போலத் தான் இதுவும்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அடுத்த உலவி, விண்டோஸ் 10 ல் Internet Explorer ஆக இல்லாமல் புதிய பெயரில், வடிவில் வரப்போகிறதாம்.

வாஸ்து சரியில்ல போல. என்ன செய்தாலும் மண்டையில இருக்குற கொண்டையை மறைக்கலையேப்பா! என்ற ரீதியில் வரும் என்பது என் எதிர்பார்ப்பு.

மைக்ரோசாஃப்ட் பில்டிங் ஸ்ட்ராங் ஆனால், பேஸ்மென்ட் ரொம்ப வீக்.

திறமையான கூகுள் நிறுவனம் அவ்வப்போது சில கடுப்பேத்தும் முடிவுகளையும் எடுக்கும். பெரும்பாலனவர்கள் பயன்படுத்தும் Google Talk சேவையை நிறுத்தி மாற்றாக “Google Hangout” சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆனால், சூர மொக்கையாக இருக்கிறது.

நாளாக அரசியல்வாதிகள் உளறுவதே நமக்குப் பழகி விடுகிறது! இந்த Google Hangout பழகி விடாதா!

ஏம்ப்பா கூகுள்! பெட்ரோமாக்ஸ் லைட் Hangout ட்டே தான் வேண்டுமா..! இந்தப் பந்தம் Google Talk எல்லாம் கொளுத்தக் கூடாதா..!

ப்பிள் நிறுவனம் கடந்த காலாண்டில் $18.02 பில்லியன் லாபம் அடைந்து இருக்கிறது. உலகிலேயே ஒரு காலாண்டிற்கு இது தான் ஒரு நிறுவனத்தின் அதிகபட்ச லாபமாம். அடேங்கப்பா..!

ங்கள் கடவுச்சொல்லை எப்படி வெளிப்படையாகக் கூறிட்டு இருக்காங்க பாருங்க…! விளங்கிடும். இவங்க அதுக்குச் சரிப்பட்டு வர மாட்டாங்க. எதுக்குயா சரிப்பட்டு வர மாட்டேன்.. ம்ஹீம் நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே 🙂 .

{ 17 comments… add one }
 • இதில் இணைப்பு கொடுத்துள்ள ஒவ்வொன்றுக்குள்ளும் சென்று வர வேண்டிய அளவுக்கு விசயம் உள்ளது. உங்கள் தொழில்நுட்ப இடுகைகளின் ரசிகன் நான்.

 • janaki March 2, 2015, 4:20 PM

  ஜெய் கிரிநாத் 🙂
  Congrats அண்ணா 🙂

 • puduvaisiva March 2, 2015, 7:19 PM

  வாழ்த்துக்கள் கிரி + பூ கொத்து

  புதுவை சிவா.

 • ராமலக்ஷ்மி March 2, 2015, 7:30 PM

  வாழ்த்துகள்! பலருக்கும் பயன் அளித்த இடுகைகள்!

  நல்ல தகவல்கள்.

 • DD March 2, 2015, 8:16 PM

  வாழ்த்துக்கள்…

 • Srinivasan March 3, 2015, 1:31 AM

  மிக்க மகிழ்ச்சி கிரி. இன்னும் பல நூறு காண வாழ்த்துகிறேன்!!

  கூகுளுக்கு நீங்கள் ரசிகர் மன்றம் ஆரம்பிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். விட்டால் அருண் உங்களுக்கு ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பித்து விடுவார் போலிருக்கிறது 🙂

  உங்கள் பதிவுகளை வடா தோசா கும்பலுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் 🙂

 • Sarath March 3, 2015, 10:54 AM

  வாழ்த்துக்கள் கிரி.. இப்போதெல்லாம் திரைப்பட விமர்சனம் எழுதுவதை நீங்கள் குறைத்து இருப்பது சிறிது வருத்தமாக இருக்கிறது .

 • Mohamed Yasin March 3, 2015, 1:40 PM

  கிரி.. நகைச்சுவை உணர்வுடன் கலந்த தொழில்நுட்ப பதிவு.. படிப்பதற்கு சுவாரசியமாக இருந்தது.. பகிர்வுக்கு நன்றி..

 • Leonardo March 3, 2015, 2:28 PM

  //அடுத்த உலவி விண்டோஸ் 10 ல் Internet Explorer//
  windows இயங்கு தளம் தானே

  • நவோதயா செந்தில் March 3, 2015, 2:43 PM

   பதிவில் முதல் சதம் கண்ட கிரி அவா்களுக்கு வாழ்த்துகள். இத்துறையில் நீங்கள் மேலும் பல சதங்கள் அடிக்க பயனாளிகள் சாா்பாக வாழ்த்துக்கள்.

 • விஜய் March 3, 2015, 6:48 PM

  கில்லாடி, தொழில்நுட்ப இடுகை பயனுள்ளதாக உள்ளது.
  சதத்தில் சதம் போட வாழ்த்துக்கள்

 • விஜய் March 3, 2015, 6:49 PM

  கில்லாடி, தொழில்நுட்ப இடுகை பயனுள்ளதாக உள்ளது.
  சதத்தில் சதம் போட வாழ்த்துக்கள்

 • Malar March 3, 2015, 7:27 PM

  உங்களுக்கு எண்ணுடைய வாழ்த்துக்கள்…

  மலர்

 • Ram March 5, 2015, 10:15 AM

  வாழ்த்துக்கள் கிரி… 🙂

  அன்பன்,
  ராம்,
  சிங்கப்பூர்

 • கிரி March 5, 2015, 1:43 PM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @ஸ்ரீநிவாசன் 🙂 அருண் தான் எனக்கு முதல் ரசிகர்

  @சரத் அதற்க்கான காரணத்தை http://www.giriblog.com/2015/03/singapore-news-thaipoosam-rajini-maid.html இங்கே கூறி இருக்கிறேன்

  @Leonardo OS என்றால் இயங்கு தளம் தான். “அடுத்த உலவி விண்டோஸ் 10 ல் Internet Explorer” இதில் அடுத்த உலவி, கமா கொடுத்து இருக்க வேண்டும் இதுவே உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. அடுத்த முறை கவனமாக இருக்கிறேன். நான் எழுதியது சரி தான் கமா கொடுக்க மறந்து விட்டேன்.

 • Bala March 14, 2015, 1:18 PM

  இவனுங்க அதுக்கு சரி பட்டு வரமாட்ணுங்க… 😀

 • அருண் கோவிந்தன் March 28, 2015, 12:11 AM

  கிரி,
  பதிவு நல்லா வந்து இருக்கு முக்கியமா “google talk ” சேவை இல்லாம ரொம்ப கடுப்பு ஆயிடுச்சு எனக்கு…தல உங்களுக்கு wax சிலை வைக்க போறோம் ரசிகர் மன்றம் சார்பா…ஸ்ரீனிவாசன் சார் கும் அழைப்பு உண்டு:)

  – அருண் கோவிந்தன்

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz