லஞ்சம் – ஆம் ஆத்மி – கேபிள் – ஏர்டெல் – எலி

beautiful-river-landscape

ண்பர் ஒருவர் உடுமலை அருகே வீடு கட்டி இருக்கிறார். அதற்கு ஆற்றுத் தண்ணீர் இணைப்புக் கொடுக்க ₹21,000 கொடுக்க வேண்டியது இருந்ததாம். இவர்கள் பகுதியில் உள்ளவர்கள் அனைவரும் இணைந்து பேசி ஒரு தொகையை முடிவு செய்து இருக்கிறார்கள்.

நினைத்தாலே எரிச்சலாக இருக்கிறது. தற்போது லஞ்சம் இல்லாமல் எந்த அரசுக் காரியமும் செய்ய முடியாது என்ற நிலை முழுவதுமாக ஆக்கிரமித்து விட்டது.

எது செய்வது என்றாலும், அதற்கு லஞ்சப் பணத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு விட்டது. Image Credit – Pageresource.com

இதில் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்றால், வேண்டும் என்றே இணைப்பைக் கொடுக்காமல் கிடப்பில் போட்டு விடுவார்கள். அதோடு அருகில் இருப்பவர்கள் “சார்! நீங்க என்னமோ பண்ணிக்குங்க.. இதற்காக நாங்கள் கஷ்டப்பட முடியாது!” என்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.

எனவே, ஊழியர்களை எதிர்த்து நின்றாலும் அருகே இருப்பவர்கள் மன உறுதியைக் குலைத்து விடுகிறார்கள். இதெல்லாம் நினைத்தாலே…!

popcornவருமே எதிர்பார்த்து இராத அளவிற்கு வெற்றியை ஆம் ஆத்மி கட்சி பெற்று இருக்கிறது. பாஜக இவ்வளவு குறைவான இடங்களைப் பெறும் என்று கெஜரிவால், மோடி உட்பட எவருமே நினைத்து இருக்க மாட்டார்கள்.

கெஜரிவால் முன்பு முதலமைச்சர் ஆன போது ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து தப்பிக்க ஜன்லோக்பால் மசோதாவைக் காரணம் காட்டி ராஜினாமா செய்தார். இதற்குப் பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்புக்குரல் கிளம்பியது.

பின்னர்த் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். இருப்பினும் மக்கள் பாராளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மியை புறக்கணித்தனர்.

தற்போது தாறுமாறான வெற்றியைக் கொடுத்து இருக்கிறார்கள். பாராளுமன்றத் தேர்தலில் பாஜக பெரிய வெற்றியைப் பெற்றதிற்குக் காரணம் மோடி மீதான எதிர்பார்ப்பு ஒரு காரணம் என்றாலும் காங் மீதான வெறுப்பும் இருந்ததால் மட்டுமே இவ்வளவு பெரிய வெற்றி சாத்தியமானது.

ஆம் ஆத்மி அனுபவம் இல்லா புதுக்கட்சி. எனவே, இதற்குப் பாராளுமன்றத் தேர்தலில் ஆதரவு இல்லாமல் போனதில் ஆச்சர்யம் இல்லை.

இதன் பிறகு கடந்த பத்து மாதத்தில் மோடி பெரியளவில் பொதுமக்களுக்கு நன்மை தரக்கூடிய செயலை செய்து சாதித்து இருக்கவில்லை என்றாலும் மோசமில்லை என்று கூறும் அளவிற்குத் தான் இவரது ஆட்சி இருந்தது.

இருப்பினும் இவர்களுடைய பன்னாட்டு நிறுவனங்களுக்கான ஆதரவு பலரின் எதிர்ப்பை சம்பாதித்தது.

இந்த விசயத்தில் காங் ஆட்சியில் இருந்த போது எதிர்த்ததையெல்லாம் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு செய்தது இவர்கள் மீதான நம்பிக்கையைக் குறைத்தது.

இது தவிரப் பாஜக MP க்கள் மற்றும் இந்துத்வா தலைவர்கள் தொடர்ந்து வரம்புமீறிப் பேசிக்கொண்டு இருந்ததை இந்துக்களே பெரும்பான்மையானவர்கள் ஏற்கவில்லை.

உண்மையில் முஸ்லிம் கிறித்துவர்கள் தற்போது செய்து வரும் பிரச்சாரங்கள் எந்த அளவிற்கு என்னை எரிச்சல் படுத்தியுள்ளதோ அதே அளவிற்கு இந்துத்வா தலைவர்கள், அமைப்புகளின் அலப்பறையும் கடுப்பைக் கிளப்பியுள்ளது.

இது போன்ற காரணங்கள் டெல்லி மக்களுக்கும் இருந்து தேர்தலில் பிரதிபலித்து இருக்கலாம். ஆம் ஆத்மி வெற்றிக்கு அவர்களின் மிகச் சரியாக திட்டமிட்ட பிரச்சாரங்களும் முக்கியக் காரணங்களாக இருந்து இருக்கின்றன.

பாஜக வெற்றிக்குக் காங் எப்படி உதவியதோ அதே போல ஆம் ஆத்மி வெற்றிக்கு பாஜக உதவியுள்ளது. இதே நிலை மற்ற மாநிலங்களிலும் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. தங்களிடம் உள்ள பிரச்சனைகளை சரி செய்து கொள்ள வேண்டிய நிலையில் பாஜக உள்ளது.

தனிப் பெரும்பான்மையுடன் தன்னைத் தேர்ந்தெடுத்த டெல்லி மக்களுக்கு கெஜரிவால் மிகவும் நன்றி கடன் பட்டு இருக்கிறார்.

இந்தமுறை முழுமையான பலத்தில் இருப்பதால், மற்ற அரசியல்வாதிகளுக்கு மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

அனைவரின் எதிர்பார்ப்பும் இதுவாகத் தான் இருக்கும். வாழ்த்துகள்.

இந்த வெற்றி அவசியமானது தான். ஏனென்றால், இதுவும் இல்லையென்றால் பாஜக வை எதிர்க்கவே எவரும் இல்லை என்பது போல ஆகி மோசமான அரசியல் சூழ்நிலை ஆகி விடும். தவறு செய்தால் மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்ற பயம் எப்போதும் அரசியல் கட்சிகளுக்கு இருக்க வேண்டும்.

இந்த வெற்றி பாஜக வில் “தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன்” என்பது போல உளறிக்கொண்டு இருப்பவர்களின் வாயை அடக்கும்.

அடுத்தச் சட்டசபை தேர்தல் பஞ்சாப்பில் வருகிறது. எனவே, ரொம்ப ஆட்டம் போட்டால் அடி பலமாக இருக்கும் என்று இந்நேரம் பாஜக மேலிடத்திற்குப் புரிந்து இருக்கும். எனவே தான் கூறுகிறேன் இந்த வெற்றி அவசியமானது.

popcornனக்கும் ஏர்டெல்லுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. எப்போது இவர்களின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டாலும் ஒரு சண்டையோடு / திட்டோடு தான் முடிகிறது.

இந்த முறை என்னுடைய முகவரியில் நகரத்தின் பெயர் இரு முறை வந்து இருந்ததைச் சுட்டிக்காட்டி அதில் ஒன்றை நீக்கக் கூறி இருந்தேன். வழக்கம் போல ஒழுங்காகப் படிக்காமலே வழக்கமாக அனுப்பும் டெம்ப்ளேட் பதில் அனுப்பி இருந்தார்கள்.

அதாவது “நீங்கள் ஆதார் அட்டை, கடவுச்சீட்டு இது போன்ற அடையாள அட்டை கொடுத்தால் மட்டுமே மாற்ற முடியும்” என்று. செம்ம கடுப்பாகி விட்டது.

நான் சமீபத்தில் தான் இதெல்லாம் கொடுத்து மாற்றி இருந்தேன் ஆனால், நகரத்தின் பெயரை இரு முறை குறிப்பிட்டு இருந்தார்கள், அதை மட்டுமே நீக்க கூறி இருந்தேன், புது முகவரியில்ல.

இதைக் கூறி திட்டி மறுபடியும் அனுப்பினேன். பிறகு தாங்கள் கேட்டுக் கொண்டபடி மாற்றி விட்டோம் என்று பதில் வந்தது.

popcornபிரபல பதிவர் கேபிள் சங்கர் இயக்கி வெளியான “தொட்டால் தொடரும்” திரைப்படம் தோல்வியை அடைந்து விட்டது. படத்தின் தயாரிப்பாளர் சிங்கப்பூர் ஆனால், சிங்கப்பூரிலேயே படம் வெளியாகவில்லை.

பின்னர் அடுத்த வாரம் வெளியானதாகக் கூறினார்கள் ஆனால், பார்க்கவில்லை.

என்னதான் பல விசயங்கள் தெரிந்தாலும், கவனித்து இருந்தாலும் விமர்சிப்பதை விட இயக்கம் சிரமம் என்பது தற்போது புரிகிறது. எனக்குக் கேபிள் சங்கர் அவ்வளவாகப் பழக்கமில்லை.

முன்பு இந்தத் தயாரிப்பாளரை பார்க்க சிங்கப்பூர் வந்த போது பதிவர்கள் சந்திப்பில் ஒருமுறை சந்தித்துப் பேசி இருக்கிறேன்.

என்னுடைய முகம் கூட அவருக்கு நினைவில் இருக்காது. இவர் கமல் ரசிகர், நான் ரஜினி ரசிகன். இதனால் இவருடைய ஒரு ரஜினி பற்றிய கட்டுரையில் விவாதம் செய்து இருக்கிறேன் அதன் பிறகு தொடர்பில் இல்லை.

இவருக்கு நண்பர்கள் நிறைய இருக்கிறார்கள் ஆனால், யாருமே இந்தப் படம் பற்றி நியாயமாக விமர்சிக்கவில்லை. எல்லோருமே புகழ்ந்து தான் பேசிக்கொண்டு இருந்தார்கள், இதில் சரவணன் (உண்மைத் தமிழன்) மட்டுமே சரியான விமர்சனம் செய்து இருந்தார்.

விமர்சித்து இருந்தவர்களில் பெரும்பாலனவர்கள் பாராட்டி மட்டுமே கூறி இருந்தார்கள், வெகு சிலரே குறைகளைப் பட்டும் படாமல் கூறி இருந்தார்கள். இன்னும் நிறையப் பேர் எப்படி விமர்சனம் செய்வது? குறைகளைக் கூறுவது? என்று விமர்சனமே எழுதவில்லை.

உண்மையான நண்பர்கள் என்றால், அவருக்கு நன்மை செய்யவேண்டும் என்று நினைத்தால், அனைத்தையும் சுட்டிக் காட்டி இருக்க வேண்டும். இது போல வழ வழன்னு விமர்சனம் எழுதக் கூடாது.

இதே வேறு ஒருவர் படமாக இருந்தால், இன்று பாராட்டுபவர்கள் கிழித்துத் தொங்க விட்டு இருப்பார்கள்.

நட்பு காரணமாக நேரடியாக விமர்சனம் எழுதி விமர்சிக்கச் சங்கடமாக இருந்தால், அவரிடம் நேரிலாவது பேசி என்ன குறை? என்ன பிரச்சனை? என்பதைத் தனிப்பட்ட முறையில் கூறி இருக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது தலைவர் கூறிய “இறைவா! எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். நண்பர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்று!” என்ற வசனம் தான் நினைவிற்கு வந்தது.

உண்மையான நண்பன் என்றால் நண்பன் செய்த தவறை நியாயப்படுத்திப் பேசுவதல்ல, அந்தத் தவறை சுட்டிக்காட்டி மீண்டும் அந்தத் தவறை செய்யாமல் தடுப்பது தான்.

கேபிள் அடுத்தப் படம் இன்னும் கவனமெடுத்துக் குறைகள் என்னவென்று சரியான நபர்களிடம் விவாதித்துச் சிறப்பான படம் தர வாழ்த்துகள்.

Eli

டிவேல் அடுத்ததாக “எலி” என்ற படத்தில் நடிக்கப் போகிறாராம். தெனாலிராமன் படத்தை இயக்கிய அதே யுவராஜ் தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார்.

மிகத் திறமையான நகைச்சுவை நடிகர் கதாநாயக ஆசையால் காணாமல் போனதை நினைத்தால் ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. இந்தப் படம் எப்படி இருக்குமோ! இதிலும் கருத்துக் கூறினார் என்றால், பெரிய அடியாகத் தான் இருக்கும்.

வயது கரைந்து கொண்டு இருக்கிறது என்பதை உணராமல் இருக்கிறார். பின்னர் வழக்கம் போல நடிக்க நினைத்தாலும் மக்கள் விரும்ப மாட்டார்கள்.

ஏன் இப்படிக் கதாநாயகனாகத் தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருக்கிறாரோ! இவரின் இந்த முடிவால் ரசிகர்களுக்குத் தான் பெரிய இழப்பு. Image Credit – Oneindia.in

ந்த உலகக்கோப்பையில் நமக்குத் தர்ம அடி நிச்சயம் போல அவ்வ்வ்வ் ஆப்கானிஸ்தான் கூடப் பயிற்சிப் போட்டியில் வெற்றிபெற்றதை எல்லாம் நினைத்து பெருமூச்சு விட வேண்டியதாக இருக்கிறதே! இந்த முறை பாகிஸ்தான் நம்மை அடிக்கச் சரியான வாய்ப்பு 🙂 .

நம்ப ஆளுங்க வேற ஏற்கனவே ஆஸ்திரேலியா மைதானங்களில் பரதநாட்டியம் ஆடுவார்கள்… விளங்குன மாதிரி தான். இந்தியா மானத்தைக் காப்பாற்றிப் பட்டையக் கிளப்புங்கப்பா.

{ 11 comments… add one }
  • Mohamed Yasin February 12, 2015, 3:05 PM

    ஆம் ஆத்மி வெற்றி மக்கள் அவர்களின் மேல் வைத்த நம்பிக்கை, அதை பொய்யாக்காமல் நல்லாட்சி புரிந்தால் நன்று. அடுத்தச் சட்டசபை தேர்தல் பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மியின் பலம் கூடுதலாக இருக்கும் என எண்ணுகிறேன்… ஏர்‌டெல்னாவே உங்கள பொறுத்தவரை ஏழரையா இருக்குது!!!!

    உலகக்கோப்பையில் இதுவரை கோப்பை வாங்காத அணி வாங்கினால் எனக்கு மகிழ்வாக இருக்கும்.. இந்த முறை நான் விரும்பும் அணி நியூசிலாந்து..

    தல தோனிக்கு வழி அனுப்ப நம்ம வீரர்கள் தயாரா ஆகிட்டாங்க போல தெரியுது… பொறுத்து இருந்து பார்ப்போம்… பகிர்வுக்கு நன்றி கிரி..

  • பாமரன் February 12, 2015, 4:12 PM

    கிரி கேஜரிவால் வென்றது சந்தோசமே. ஆனால் நீங்க சொல்றது போல ஆம் ஆத்மி பெரிய அதிகாரம் வாய்ந்த அரசாக இருக்காது. இருக்கவும் முடியாது.

    .நடைமுறையை சொல்றேன், உங்களுக்கே இது எல்லாம் தெரிஞ்சு இருக்கும் இருந்தாலும் 🙂

    தில்லி அரசு இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் இருப்பது போன்ற அதிகாரங்கள் இல்லாத ஒன்று.

    தில்லி முதல்வருக்குக் கட்டுப்பட்டதல்ல காவல்துறையும், இந்திய அரசுப் பணியினரும்.

    நிதி நிர்வாகம் என்று எடுத்துக் கொண்டாலும் தில்லி அரசு மத்திய நிதியமைச்சகத்தைச் சார்ந்துதான் இருந்தாக வேண்டும்.

    தில்லி அரசோ, முதல்வரோ நினைத்தால், ஓர் அங்குலம் நிலத்தைக்கூடத் தன்னிச்சையான அதிகாரத்துடன் பயன்படுத்த முடியாது.

    இவை மட்டுமல்ல. தண்ணீருக்கும், மின்சாரத்திற்கும் தில்லி அரசு அண்டை மாநிலங்களான ஹரியாணாவையும், ராஜஸ்தானையும், உத்தரப் பிரதேசத்தையும்தான் சார்ந்திருக்க வேண்டும்.

    முன்பு காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, ஹரியாணாவிலும், ராஜஸ்தானிலும் அந்தக் கட்சியே ஆட்சியில் இருந்ததால்தான், அன்றைய முதல்வர் ஷீலா தீட்சித்தால் பிரச்னையில்லாமல் ஆட்சி நடத்த முடிந்தது.

    இப்போது, பாஜகவின் தயவில்லாமல் அரவிந்த் கேஜரிவால் மக்களின் அன்றாடப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாது என்பதுதான் அவர் எதிர்கொள்ள இருக்கும் மிகப்பெரிய சிக்கல். மீண்டும் சொல்றேன், பாஜகவின் தயவில்லாமல் அரவிந்த் கேஜரிவால் மக்களின் அன்றாடப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாது. அது தான் நிதர்சனமும் நடைமுறையும் கூட.

    இதை அரசியல் நோக்கர்கள் ஒப்பு கொண்டுள்ளனர். பகிரங்கமாக தெரிவித்தும் உள்ளனர்.

    நமது நாடு கூட்டாட்சி நாடு. பாஜாகாவும் ஆம் ஆத்மியும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே டில்லி மக்களுக்கு விமோசனம் 🙂

    – பாமரன்

  • பாமரன் February 12, 2015, 4:16 PM

    மேல சொன்ன படி, அரவிந்த் கஜரிவால் இப்போதைக்கு எவ்வித அதிகாரம் இல்லா டம்மி முதல்வர் மட்டுமே 🙂

    ஆனா நீங்க சொன்ன படி பாஜக முழிச்சுக்க வேண்டிய தருணம் இது

    ஆமா வடிவேலு நிலைமை மோசம் தான். அவர் பழைய வடிவேலுவா திரும்பி வரணும். 🙂

  • Prakash February 12, 2015, 7:46 PM

    லஞ்சம் அரசு ஊழியர்களின் உரிமை!!! இன்னும் சட்டத்தில் தான் வர வில்லை அதுவும் விரைவில்…..

    ஆம் ஆத்மி ஜெயித்து இருந்தாலும் அரை வேக்காட்டு காரர்கள் ஆகையால் மாற்றம் ஒன்றும் இருக்காது publicity க்கு அலைபவர்கள். பாஜக விற்கும் இந்த அடி தேவைதான். ஆனால் corporate ஐ மட்டும் ஏன் அனைவரும் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை. வேலைவாய்ப்புகள் மட்டும் வேண்டும் ஆனால் corporate கூடாது என்றால் எப்படி. இன்று நம் நாட்டில் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கிறது என்றால் அவர்களால்தான் வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்றால் அவர்களால்தான் ஆனால் அவர்கள் மட்டும் வேண்டாம். முதலில் corporate என்றால் கொடியவர்கள் என்ற எண்ணம் மாற வேண்டும்…….

    உங்களுக்கு என்று இல்லை airtel அனைவருக்கும் அப்படி தான்………

    படம் பார்த்து விமர்சனம் செய்வது சுலபம் ஆனால் படம் நன்றாக எடுப்பது என்பது கடினமான காரியம் என்று இப்பொழுது புரிந்து இருக்கும் கேபிள் அவர்களுக்கு……

    வடிவேலு சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டவர்…….

  • Arun Govindan February 13, 2015, 12:18 AM

    தல,

    பதிவு ரொம்ப நல்லா இருக்கு..ஒரு weekly news படிச்ச effect எனக்கு 🙂

    எனக்கு அந்த river image ரொம்ப புடிச்சு இருக்கு நல்ல selection இந்த subject கு.. எனக்கு தெரிஞ்சு ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து தான் finals

    யாசின் சொன்னது மாதிரி AAP பஞ்சாப் ல நல்லா ஓட்டு வாங்கும்னு தான் தோணுது.

    எலி movie waiting 4 my old days காமெடி கிங்…

    கேபிள் சங்கர் படம் இன்டர்நெட் ல எங்கயும் download பண்ண முடியல, இங்க ரிலீஸ்சும் ஆகல.. படத்தோட review சம்மந்தமா நண்பர்கள் கமெண்ட்ஸ் சும்மா கலக்கல் ரகம்..

    – அருண் கோவிந்தன்

  • நான் கார்த்திகேயன் February 14, 2015, 8:43 PM

    ஒரு முறை பழைய தசாவதாரம் படம் பார்க்க நேர்ந்தது. அதில் ஒன்பது அவதாரங்களை காட்டிவிட்டு பத்தாவது அவதாரம் மட்டும் வரவில்லை. அதற்கு அப்படத்தில் கூறிய கருத்து விளக்கம் என்னன்னா இந்த உலகம் கலியுகம் என்று கூறப்படுகிறது. இதில் ஆரம்பத்தில் உண்மையும் நன்மையையும் வாய்மையும் வலுபெற்று இருக்கும் போக போக தீய சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்து எங்கு பார்த்தாலும் தீய சக்தியின் ஆதிக்கம் தான் இருக்கும் நற்குணம் முற்றிலும் மாண்டுபோவர் அரக்க குணம் கொண்டவர்களே அப்போது எங்கும் இருப்பர் அபோது இந்த கலியுகத்துக்கு முற்றுபுள்ளி வைக்க கடவுள் தன் பத்தாவது அவதாரத்தை “கல்கி” அவதாரத்தை எடுத்து எல்லாரயும் அழித்து அடுத்த யுகத்தை ஆரம்பித்து வைப்பார். அப்போது இந்த யுகத்தில் செய்த பாவத்தினால் வந்த கர்ம வினையை பாக்கி வைத்து இருப்பவர்கள் அதில் உருபெற்று தண்டனை அனுபவிப்பார்கள் என்று கூறி படம் முடியும். இதில் என் நம்பிக்கை இன்று வரை உள்ளது.

    தமிழக அரசியல்வாதிகளை பார்க்கும் போது எல்லோரும் எனக்கு அரக்கர்களாகவே தெரிகிறார்கள். எல்லாம் விதி னு ஆத்திரத்தை அடக்கி கொண்டு இருக்கேன். லஞ்சம் வாங்கிய இரவு திடிரென அவர்கள் செத்தால் அந்த பணம் கூட வருமான்னு லஞ்சம் வாங்குபவர்கள் சிந்தித்தால் லஞ்சம் லாவண்யதுக்கு இடமேது?

    எது எப்படி இருந்தாலும் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது எனக்கு சந்தோசம். பண நாயகத்துக்கு மக்களின் தீர்ப்பு இது. டெல்லிவாலாக்கள் தங்கள் நேர்மையை நிருபித்துவிட்டனர். திருவரங்கம் மக்கள் என்ன செய்ய போகிறார்கள் என்று பார்ப்போம்.

    உங்களுக்கு ஏர்டெல் னா எனக்கு ரிலையன்ஸ்.செம காண்டேத்துறாங்க. இந்த லட்சணத்துல நான் postpaid கஸ்டமர் வேற.

    கேபிள் சங்கர் படம் நான் இன்னும் பார்க்கவில்லை. நவம்பரிலிருந்து எந்த புதுப்படத்தையும் பார்க்கவில்லை. சங்கர் அவர்களின் “கேபிளின் கதை” சினிமா வியாபாரம் 1 ,2 , படித்து இருக்கேன் எல்லாம் வலைத்தளம் பதிவில் வந்தவை தான் புத்தகமாக தொகுத்து இருந்தது. இந்த 2 துறை பற்றியும் ஓரளவுக்கு தெரிந்துகொள்ள முடிந்தது. இவ்விரண்டிலும் சன் குழுமத்தின் ஆதிக்கம் வியப்பையும் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் கதியை நினைக்கும் போது வெறுப்பும் வருகிறது.

    வடிவேலு இப்போது நடிப்பதே பெரிய விஷயம், அதனால் அவரின் புது நகைசுவைக்காக waiting . தாங்கள் கூறிய கருத்தை அவருடன் இருப்பவர்கள் அவருக்கு எடுத்து சொல்லி ஹீரோ தவிர்த்த மற்ற படங்களில் நடிக்க சொல்லலாம்.

  • கிரி February 17, 2015, 8:59 AM

    அனைவரின் வருகைக்கும் நன்றி

    @யாசின் கடந்த உலகக்கோப்பை முடிந்த பிறகு 2015 ல் ஆஸி தான் வெற்றி பெறும் என்று கூறி இருந்தீர்கள். நீங்கள் கூறியது தான் நடக்கும் போல 🙂 அதோட நீங்க கூறி நான்கு வருடங்கள் ஆகி விட்டது என்பதும் நீங்கள் இன்னும் என்னுடைய தளத்தில் தொடர்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதும் மகிழ்வாக இருக்கிறது.

    இந்த சமயத்தில் தான் நீங்களும் என்னுடைய தளத்தை படிக்க துவங்கி இருக்கிறீர்கள் என்று தெரிகிறது 🙂 நீங்கள் கூறியது நினைவு இருந்ததா என்று தெரியவில்லை ஆனால், உலகக் கோப்பை வந்ததும் நீங்கள் கூறியது எனக்கு நினைவு வந்தது. பழைய கருத்துக்களை படித்தால் சுவாரசியமாகத் தான் இருக்கிறது 🙂 .

    http://www.giriblog.com/2011/04/india-won-the-worldcup.html

    “don’t mistake me for my challenge because without your acceptance I made it” 😀 யாசின் செம.

    @பாமரன் வாங்க.. ரொம்ப மாசமாக ஆளையே காணோமே! அடிக்கடி இல்லையென்றாலும் அவ்வப்போது வந்து எட்டிப் பார்த்துட்டுப் போங்க.

    நீங்கள் கூறுவதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. கெஜரிவால் என்ன செய்யப் போகிறார் என்று இனி பார்க்க வேண்டும். எதாக இருந்தாலும் எனக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது 🙂

    வடிவேலு ஏன் தான் இப்படி பண்ணுறாரோ!

    @பிரகாஷ் சொன்ன மாதிரி விரைவில் சட்டம் வந்தாலும் வந்துடும் போல இருக்கு.. ஏற்கனவே அறிவிக்கப்படாத சட்டம் அமுலில் இருக்கு 🙂

    கார்பரேட் துவக்கத்தில் பசுமையாகத் தெரியும் இறுதியில் வறட்சியை ஏற்படுத்தி விடும்.

    ஏர்டெல் சேவை எனக்கு பெரியளவில் பாதிப்பை கொடுத்தது இல்லை.. நான் பயன்படுத்திய வரை ஆனால், எனக்குப் பிரச்சனை இவர்களின் வாடிக்கையாளர் சேவை மையம் தான்.

    @அருண் நீங்க சொன்னா சரி 🙂

    என்னுடைய முதல் செய்தியில் ஆற்று நீர் குறித்து வரும் அதற்காக அதைப் போட்டேன்.. லஞ்சம் குறித்து படம் போட விருப்பம் இல்லாததால்.

    ஆம் ஆத்மி ஏற்கனவே பஞ்சாப் ல வெற்றி பெற்று இருக்காங்க என்று நினைக்கிறேன்.

    @கார்த்தி கலக்கிட்டேபோ 🙂 கர்மவினை அது இதுன்னு கூறி இந்தப் படத்தை பார்க்க ஆர்வத்தை தூண்டிட்டே. இந்த வாரம் பார்த்து விடுகிறேன்.

    நீ அரக்கர்கள் என்று சொன்னதும் அடுத்த பதிவும் அரக்கர்கள் பற்றியே வரப்போகுது ஆனால், “வேற மாதிரி” இருக்கும் 🙂 அதனால அதைப் படித்துட்டு நீ இதைச் சொன்னதுக்கு வாபஸ் வாங்க வேண்டியது இருக்கும் 🙂 🙂

    ரிலையன்சும் இதே தானா..! என்னை கொடுமை சார். எல்லோரும் ஏதாவது குடைச்சல் கொடுக்கணும்னு வேண்டுதல் போல..

    • நான் கார்த்திகேயன் February 18, 2015, 5:05 PM

      மாகாபாரதத்தில் கொடிய அரக்கனாக பாண்டவர்களுக்கு (நம் பார்வையில் )(பாண்டவர்களுக்கு அவரு சகோதரனாகவே தெரிந்தார் )இருந்த திரியோதனன் செத்தும் சொர்க்கம் தான் போனான்னு படிச்சுட்டு கலியுக அரக்கர்கள் இம்புட்டு ஆட்டம் போடுகிறார்களோ என்று நினைக்கிறேன் .
      புராண அரக்கர்களுக்கு வேண்டுமானால் பின்புலத்தில் அவர்கள் தர்மத்தின் மகனாக இருக்கலாம். ஆனால் இந்த கலியுக அரக்கர்கள் தர்மத்தின் பக்கம் கூட தலை வைத்து படுக்காதவர்கள் . தங்களின் அசுரன் இன்னும் படிக்கவில்லை …ஆதால் இப்போதைக்கு ஸ்டாப்பிங்

  • Mohamed Yasin February 17, 2015, 11:19 AM

    கிரி.. இந்த பதிவுக்கு கமெண்ட் போடும் முன்பே, நான் உங்களுக்கு 2011இல் நான் போட்ட கமெண்ட் படித்து சத்தியமா சிரிச்சேன்.. ஆனால் நீங்க கண்டிப்பாக நியாபகம் வச்சி இருப்பீங்கனு நினைக்கவே இல்லை…

    1996 உலககோப்பை அரை இறுதி போட்டிக்கு (மேற்குஇந்தியதீவு) பின் ஆஸி அணியோட ரசிகனா மாறி விட்டேன்… இன்னைக்கும் ஆஸி அணியோட ரசிகனாதான் இருக்கேன்.. ஆனால் நியூசிலாந்து வெற்றி பெற்றால் மகிழ்ச்சியே.. ஒரு முறை இதன் ருசியை அவர்களும் சுவைக்கட்டுமே!!!!

  • ஏற்கனவே சொன்னது தான். உங்கள் எளிய வார்த்தைகளும், ஏராளமான நம்பிக்கைகளும், எவருக்கும் தீங்கு இழைக்காத வாழ்க்கை முறையும் என்று பல விசயங்களை சொல்வதைப் போல உங்கள் வெடுக்கென்ற விமர்சனமும் எனக்கு எப்போதும் பிடிக்கும். வெற்றிகரமாக இந்த முறை உங்கள் முகதரிசனத்தை புகைப்படம் வழியாக பார்க்க கிடைத்ததற்கு கோடான கோடி நன்றி ஏசப்பா. (?) ஆமென்.

  • கிரி March 2, 2015, 1:22 PM

    @யாசின் எனக்கு தற்போது பலரின் பெயர் எண்கள் சம்பவம் என்று நிறைய மறந்து விடுகிறது ஆனால், ஒரு சில சம்பவங்கள் எப்போதும் மறப்பதில்லை. அதன் காரணம் என்ன என்று புரிவதில்லை. அதில் ஒன்று இது 🙂

    எனக்கு யார் வெற்றிபெற்றாலும் சரி.. முன்பு இருந்த ஆர்வமில்லை. இந்தியா வெற்றி பெற்றால் கூடுதல் சந்தோசம் அவ்வளோ தான்.

    @ஜோதிஜி நன்றி 🙂

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz