இரு வரி இணையத் தொழில்நுட்பச் செய்திகள் [Dec 2014]

Google-Apps-vs-Office

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது Windows 7 Home Basic, Premium & Ultimate விற்பனையை நிறுத்தி விட்டது. இன்னமும் இருப்பு வைத்துள்ளவர்கள் மட்டும் விற்பனை செய்யலாம். Professional Edition தொடரும். Image Credit – www.intega.ca

ஃபயர்ஃபாக்ஸ் உலவியில் Default தேடுதல் தளமாக இருந்த கூகுள் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்ததால், தற்போது யாஹூ தளத்துடன் ஃபயர்ஃபாக்ஸ் ஒப்பந்தம் செய்து இருக்கிறது.

கூகுள் தேடுதல் நிறுவனம் மொபைலில் தேடுதலில் அதில் வரும் தளங்களில் மொபைலில் படிக்க ஏற்றதாக இருந்தால், Mobile – Friendly என்று குறிப்பிட்டு இருக்கும். உங்கள் தளத்தை சோதிக்க https://www.google.com/webmasters/tools/mobile-friendly/

இத்தாலியில் நடைபெறும் விவாகரத்து வழக்குகளில் 40% வழக்குகளில் WhatsApp குறுந்தகவல்கள் சாட்சியாக இருக்கின்றன. மக்களே உஷார் 🙂 .

ஜிமெயில் தற்போது உங்களுக்கு வரும் மைக்ரோசாஃப்ட் Excel Word போன்ற கோப்புகளை ஜிமெயிலிலேயே எடிட் செய்யும் வசதியைக் கொண்டு வந்து இருக்கிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூகுள் நிறுவனத்தின் Google Apps போல Microsoft Office 365 என்ற வசதியை வைத்துள்ளது. இதில் தற்போது Unlimited cloud storage வசதியைக் கொடுத்துள்ளது. இதற்குக் கூடுதல் கட்டணம் இல்லை.

Read: Google Apps Vs Microsoft office 365

Motorola மொபைல் நிறுவனத்தை கூகுள் நிறுவனம் வாங்கி அதை Lenovo நிறுவனத்திற்கு விற்று இருந்தது. தற்போது அனைத்துப் பரிவர்த்தனைகளும் முழுமையாக முடிந்து விட்டன.. கூகுள் இதை வாங்கியதே அதில் உள்ள patent க்காகத் தான்.

தற்போது YouTube பார்வையாளர்களின் மொத்த எண்ணிக்கையில் பாதி மொபைல் மற்றும் டேப்லெட் பயன்படுத்துபவர்கள் தான்.

நிறுவனங்களின் தளங்கள் எப்பவாவது செயலிழப்பது சகஜம். இது போல ஃபேஸ்புக் நிறுவனத்தின் தளம் செயலிழந்தால், அதனுடைய வருமான இழப்பு $35,164,835 per day, $1,465,201 per hour , $24,420 per minute 😮

Chromebook என்ற கூகுள் நிறுவனத்தின் மடிக்கணினியை தற்போது நீங்கள் வாங்கினால் இலவசமாக 1 TB cloud storage இரண்டு வருடத்திற்குப் பெறலாம். இதன் மதிப்பு 240$. சலுகை ஜனவரி மாதம் வரையே! முன்பு 100 GB storage கொடுக்கப்பட்டது.

Read: Chromebook ஒரு விரிவான பார்வை

Skype நிறுவனம் உலவியின் மூலமே (எதையும் நிறுவாமல்) Chat செய்யும் வசதியைக் கொண்டு வந்து இருக்கிறது. தற்போது இது சோதனை அடிப்படையில் உள்ளது.  http://blogs.skype.com/2014/11/14/please-welcome-skype-for-web-beta/

இணையம் மூலம் இலவசமாகப் பேசும் வசதியைத் தரும் Viber நிறுவனத்தின் சேவைக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் மட்டும் வேலை செய்கிறது.

Google Inbox வசதி பலரிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது கூகுள் இந்த வசதியை Google Apps க்கும் கொண்டு வரப்போவதாகக் கூறி இருக்கிறது.

Read: “Google Inbox” எப்படி இருக்கிறது?

WhatsApp போல பிரபலமாக இருக்கும் இன்னொரு குறுஞ்செய்தி நிறுவனமான Line நிறுவனத்தின் வருமானம் இரட்டிப்பு ஆகி இருக்கிறது.

விரைவில் YouTube, விளம்பரங்கள் இல்லாத கணக்கு முறையைக் கட்டணம் மூலம் கொண்டு வரப்போகிறது. இந்த வசதியில் இருப்பவர்களுக்கு YouTube பார்க்கும் போது விளம்பரங்கள் வராது.

சாம்சங் நிறுவனத்தின் மொபைல் விற்பனை சரிந்து வருகிறது. தற்போது மற்ற நிறுவனங்களின் போட்டி / விலை குறைப்பு அதிகமானதும், புதிய நிறுவனமான ஜியோமி (xiaomi) வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதும் காரணமாகக் கூறப்படுகிறது.

Cloud சேவையை தரும் நிறுவனங்கள் தற்போது போட்டி போட்டுக்கொண்டு விலை குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. இது பயனாளர்களுக்கு சந்தோசத்தைக் கொடுக்கும் செய்தி.

Read: வருகிறது கூகுள் டிரைவ் – [Cloud Computing] – 2012

கூகுள் நிறுவனம் பாதுகாப்பை அதிகப்படுத்தும் எண்ணத்தில், புதிய வசதியான தற்போது நாம் என்னென்ன சாதனத்தில் இருந்து கூகுள் கணக்கைப் பயன்படுத்துகிறோம் என்பதை அறிய வசதி கொண்டு வந்துள்ளது. காண https://security.google.com/settings/security/activity/

தற்போது வேகமாக வளர்ந்து வரும் சமூகத் தளங்களாக Pinterest மற்றும் Tumblr மாறியுள்ளது. இதில் Pinterest புகைப்பட பகிர்தல் தளம், Tumblr தளம் Blogger தளம் போல.

Gangnam Style பாடல் YouTube ஐ திணறடித்து விட்டது. இது வரை அதிகபட்சமாக YouTube வைத்து இருந்த பார்வைக் கணக்கை (Viewer count) தாண்டிச் சென்று விட்டது. 32-bit integer முறையில் அதிகபட்ச எண் 2147483647. தற்போது இதை 64-bit integer ஆக மாற்றி இருக்கிறார்கள்.

கொசுறு

நான் கூட சும்மா ஒரு பேச்சுக்குத் தான் சொல்றாங்களோ! என்று நினைத்தேன் ஆனால், நிஜமாகவே சந்திரபாபு நாயுடு தனது மாநிலத்தின் புதிய தலைநகரை சிங்கப்பூருடன் இணைந்து கட்டமைக்கிறார்.

இதற்கான அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தை நேற்று நடந்து முடிந்து விட்டது. கடந்த வருடங்களில் ஆந்திரா மிகப் பரிதாபமான நிலையில் இருந்தது. யார் முதலமைச்சர்? என்ன நடக்கிறது? என்று எதுவுமே தெரியாமல் இருந்தது.

தற்போது படிப்படியாக முன்னேறி வருவதற்கான நம்பிக்கை தெரிகிறது.

ஆந்திரா முன்பு இருந்த நிலையை விட பரிதாபமான நிலையில் தற்போது தமிழகம் இருக்கிறது 🙁 . முதலைமைச்சர்!! பயந்து கொண்டு அமைச்சர் நாற்காலியில் அமர்ந்து உள்ளார்.

எந்த புதிய திட்டங்களும் இல்லை, ஏற்கனவே இருந்த திட்டங்களும் கிடப்பில் உள்ளன, அத்தியாவசியப் பொருளான பால் விலை கூட தாறுமாறாக உயர்ந்து விட்டது.

எதிலும் தரம் இல்லை. நிர்வாகம் படுமோசமான நிலையில் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஊழல், கொலை, திருட்டு என்று கெட்ட விசயமாகவே தெரிகிறது. இதைக் கூட சகித்துக் கொள்ளலாம் என்றாலும், எதிர்காலமும் சரியான தலைவர் இல்லை என்ற உண்மை உரைக்கும் போது தான் கடும் மன உளைச்சலாக இருக்கிறது.

உண்மையாகவே தமிழகம் மிக மோசமான கட்டத்தில் இருக்கிறது. தமிழகம் சமாளிக்கும் என்றால் அது நிச்சயம் அரசால், அரசியல்வாதிகளால் அல்ல, எதையும் சமாளிக்கும் தமிழக மக்களின் போராட்ட குணமே காரணமாக இருக்க முடியும்.

{ 7 comments… add one }
  • Arun Govindan December 9, 2014, 12:49 PM

    Short and sweet ta iruku intha pathivu…
    Neraya news yenaku puthusu

    Pagirvukku Nandri giri

  • Prakash December 9, 2014, 3:02 PM

    தமிழகத்தின் நிலை உண்மை உண்மை உண்மை

  • Valaipakkam December 9, 2014, 5:22 PM

    உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை வலைப்பக்கம்– இல் இணைக்கவும்.

  • Mohamed Yasin December 9, 2014, 5:31 PM

    நிறைய புதிய செய்திகளை பகிர்தமைக்கு நன்றி கிரி..

  • anbuthil December 10, 2014, 6:14 AM

    all tips for usefull thanks

  • Sankar December 10, 2014, 11:36 AM

    இந்த தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகள் தொகுப்பு.
    எங்களுக்கு பல பயனுள்ள செய்திகள் இருந்தது.
    நன்றி!

  • Gobinthiran January 20, 2015, 5:52 PM

    ரோம்ப நல்ல தகவல்கள் அண்ணா,
    எனது இணையத்தளத்தை பார்வையிடுங்கள்
    http://www.thumitham.com

Leave a Comment