ரஜினியும் சர்ச்சைகளும்

Rajini

ஜினி என்றாலே பரபரப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. ரஜினி பேசினாலும் பிரச்சனை பேசாமல் இருந்தாலும் பிரச்சனை. அதிலும் அரசியல் பற்றி என்றால் இரண்டு வாரங்களுக்கு ஊடகங்கள் / இணையம் என்று எங்கும் களேபரமாக இருக்கும்.

ரஜினிக்கு சரமாரியான திட்டுகளும் ஆதரவாக குரல்களும் எழும். பலரும் கூறும் குற்றச்சாட்டாக படம் வெளியாகும் சமயத்தில் தன் படம் ஓட வேண்டும் என்பதற்காக ரஜினியால் உருவாக்கப்படும் பரபரப்பு என்று விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள்.

இது குறித்து ஊடகங்கள் மாய்ந்து மாய்ந்து கட்டுரைகளையும் விமர்சனங்களையும் எழுதி வருகிறார்கள். இணையத்தில் ரஜினி எதிர்ப்பாளர்கள் வழக்கம் போல கிண்டலடித்தும் திட்டியும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்காகவும் இது குறித்து என் சில கருத்துகளையும் பகிர விரும்புகிறேன். முதலில் ரஜினி ஏன் அரசியல் பற்றி தெளிவான கருத்தைக் கூறவில்லை என்று பார்ப்போம். புதிதாகப் படிப்பவர்களுக்கு நான் ரஜினி ரசிகன் என்பதைக் கூறிக்கொள்கிறேன்.

அரசியல் பற்றி ரஜினி ஏன் ஒரு தெளிவான பதிலைக் கூற மறுக்கிறார் என்ற பலருக்கு இருக்கும் எண்ணம் எனக்கும் இருக்கிறது. ரஜினி அரசியல் பற்றி தெளிவான கருத்தைக் கூறாமல் இருக்க ரஜினிக்கு பல காரணங்கள் இருக்கலாம்.

அது மிகவும் நியாயமான காரணங்களாகக் கூட இருக்கலாம் / அது மற்றவர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களாக இருக்கலாம். அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்து. எனக்குத் தோன்றுவது இரு காரணங்கள் மட்டுமே!

ஆன்மீகம்

ரஜினி ஆன்மீகத்தில் மிகுந்த பற்று வைத்து இருப்பது அனைவருக்கும் தெரியும். தான் வாழ்க்கையில் சிரமப்பட்டு வந்ததால், துவக்கத்தில் இருந்தே தன்னுடைய முடிவுகள் கடவுளாலையே தீர்மானிக்கப்படுகிறது என்பதை முழுமையாக நம்புகிறார்.

இதை பல்வேறு தருணங்களில் கூறி இருக்கிறார், நீங்களும் படித்து / கேட்டு இருக்கலாம். தன்னுடைய வளர்ச்சிக்குக் காரணம் தன் திறமையோடு கடவுளின் ஆசிர்வாதமும் வழிகாட்டுதலும் இருப்பதாக நம்புகிறார்.

எனவே ஒரு விசயம் நடக்க வேண்டும் என்றால் நடக்கும், நடக்காது என்றால் என்ன முயன்றாலும் நடக்காது அனைத்திலும் “நேரம்” என்ற ஒன்று இருக்கிறது என்பதை முழுமையாக நம்புகிறார். எனவே, தான் அரசியலுக்கு வருவதும் கடவுள் கையில் தான் உள்ளது.

தான் அரசியலுக்கு வரணும் என்றால் அதுவாக நடக்கும் என்று நம்புகிறார். எனவே தான் முடிவான ஒரு பதிலை கூற முடியவில்லை.

ரசிகர்கள்

ரஜினி 1990 ஆண்டுகளில் ஒரு இளைஞன் வேகத்தில் இருந்தார். தற்போது இருக்கும் ஒரு பக்குவம் அப்போது இல்லை. எதிலும் ஒரு வேகம் அதிரடி என்று இருந்தார்.

அப்போது இருந்த சூழ்நிலைகளில் திரைப்படங்களில் அரசியல் வசனங்கள் பேசி ரசிகர்களிடம் ஒரு ஆர்வத்தை தெரிந்தோ தெரியாமலோ தூண்டி விட்டு விட்டார்.

அன்றைய காலகட்டத்தில் இருந்த சூழ்நிலையில் அவர் அரசியலுக்கு வரலாம் என்று நினைத்து இருக்கலாம் ஆனால், கால மாற்றத்தில் கிடைத்த அனுபவத்தில் அரசியல் அவ்வளவு எளிதில்லை என்பதை உணர்ந்து இருக்கலாம்.

திரைப்படங்களில் அரசியல் வசனங்களை நிறுத்தி விட்டாலும், இனி அரசியலுக்கு வரவில்லை என்று கூறினால் அதனால் ரசிகர்களிடம் இருந்து கிளம்பும் எதிர்ப்பு கடுமையானதாக இருக்கலாம்.

ஏனென்றால், குசேலன் படத்தில் வைத்த “இதெல்லாம் சினிமாக்காக எழுதிய வசனங்கள்” என்று கூறியதற்காக ரசிகர்களிடம் இருந்து கிளம்பிய எதிர்ப்பால் அதை நீக்க வேண்டிய அளவிற்கு நிலைமை சென்றது.

எனவே, மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் எந்த பதிலையும் சொல்ல முடியாத ஒரு தர்மசங்கடமான நிலையில் இருக்கலாம்.

இந்த இரு காரணங்கள் மட்டுமே எனக்குத் தோன்றுகிறது. இவையல்லாமல் ரஜினி என்ன நினைக்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

உண்மையில் ஒருத்தர் என்ன நினைக்கிறார் என்றே தெரியாமல் இது போல நாமாக காரணங்களை ஊகித்து எழுதுவது ஒரு தர்மசங்கடமான நிலையை எனக்குத் தருகிறது. இருப்பினும் நீண்ட வருடங்களாக கூற நினைத்ததை இந்த சந்தர்ப்பத்தில் கூறி விட்டேன்.

இந்த சர்ச்சை ரஜினி ஒரு தெளிவான பதிலைக் கூறாதவரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். கூறிவிட்டால்…! அடுத்த சர்ச்சை துவங்கும் 🙂 .

படம் வெளியாகும் சமயத்தில் படம் ஓடுவதற்காக அரசியல் பேசுகிறார்

இது ரஜினி மீது உள்ள வெறுப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு. ரஜினி பற்றி பலருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம் ஆனால், அவர் திரையுலகில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் என்பதை எவரும் மறுக்க முடியாது.

இன்று வரை பலர் முயன்றும் அவரது இடத்தை எவராலும் பிடிக்க முடியவில்லை ஆனால், ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும் எந்திரன் படத்தின் வசூலை முறியடித்ததாக கடந்த நான்கு வருடங்களாகக் கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

இன்னமும் தங்களின் அடுத்த படத்திற்கும் இதையே தான் கூறுகிறார்களே தவிர சென்ற முறை அதிகமானதாகக்!! கூறும் தங்கள் படத்தை அளவுகோலாக வைப்பதில்லை.

ரஜினி மிகக் குறைந்த விழாக்களிலேயே கலந்து கொள்கிறார். ஊடகங்களை சந்திப்பதை அறவே தவிர்க்கிறார்.

அதிகாரப்பூர்வமான / தனிப்பட்ட பேட்டி என்று கொடுத்து பல வருடங்கள் ஆகிறது. சன் ஜெயா தொலைக்காட்சிகளில் கொடுத்தது கூட தனது எந்திரன், கோச்சடையான் படங்களுக்கான பேட்டி தான். இது தவிர எப்பவாவது நடக்கும் ஏதாவது திரை விழா.

இவை தான் ரஜினி பேசுவதற்கான மொத்த சந்தர்ப்பங்களே!

எனவே, இந்த சமயங்களில் உடன் இருப்பவர்கள் ஏதாவது கூறும் / கேட்கும் போது அதற்கு பதில் அளிக்கும் விதமாக கூறுவதைத் தான் படம் ஓட ரஜினி அரசியல் பேசுகிறார் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவையல்லாமல் NDTV போல, சும்மா போய்க்கொண்டு இருப்பவரை நிறுத்தி அரசியல் பற்றி ஏதாவது கூறுங்க என்று கேட்டு ரஜினி என்ன சொன்னாலும் ஏதாவது கிளப்பி விடுவதை ஊடகங்கள் வேலையாக வைத்து இருக்கின்றன.

இதற்கு ரஜினி எப்படி பொறுப்பாக முடியும். முதல்வன் படத்தில் ரகுவரன் கூறுவது போல “இவங்களே குண்டு வைப்பாங்களாம் இவங்களே எடுப்பாங்களாம்”.

ரஜினி அரசியல் பற்றிப் பேசினால் தான் ரசிகர்கள் பார்ப்பார்கள் கொண்டாடுவார்கள் என்று நினைத்தால் அது நினைப்பவர்கள் தவறு.

ரஜினி என்ன பேசினாலும், பேசாமலே இருந்தாலும் படம் நன்றாக இருந்தால் அவரது படத்தைப் பார்க்கத் தான் போகிறார்கள், இல்லையென்றால் பாபா குசேலன் நிலை தான். தன் இத்தனை வருட அனுபவத்தில் இதைக் கூட அறியாதவர் அல்ல ரஜினி.

என்னுடைய அம்மா கூட இந்த தீபாவளி விடுமுறையில் லிங்கா படம் பார்ப்பதைப் பற்றி என்னிடம் கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.

காமாலைக் கண்ணுக்கு எல்லாம் மஞ்சளாகத் தெரியும் என்று கூறுவது போல ரஜினி எதிர்ப்பு என்று முகமூடி போட்டு இருப்பவர்களுக்கு ரஜினி என்ன செய்தாலும் இது போல குதர்க்கமாகத் தான் நினைக்கத் தோன்றும்.

ரஜினி அரசியல் பேசினார் பேசினார் என்று கதறுபவர்கள், ரஜினி என்ன அரசியல் மேடை போட்டுப் பேசினாரா? ஊடகங்களை வரவழைத்துப் பேசினாரா? பேசியதைக் காணொளி எடுத்து ஊடகங்களுக்கு அனுப்பினாரா?

ரஜினி பேசியதை அனைவரும் புறக்கணிக்க வேண்டியது தானே! அவரா வந்து இதை எழுதுங்கள் என்று கூறினார்! 20 வருடமாக இதையே கூறுகிறார் என்று சலித்துக்கொள்பவர்கள் ஏன் சலிக்காமல் இதையே பேசிக்கொண்டு இருக்க வேண்டும்?

எதற்கு இதையே வம்படியாகக் கேட்டுக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்க வேண்டும்! ரஜினி பற்றி எழுதவில்லை என்றால் பேட்டி எடுப்பவர்களிடம் ரஜினியை விமர்சிக்கும் கேள்வியைக் கேட்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் எப்படியாவது ஏதாவது ஒரு வழியில் ரஜினியை மறைமுகமாகவாவது செய்தியில் கொண்டு வந்து விடுகிறார்கள். இவர்களுக்கு பரபரப்பாக எதையாவது எழுத வேண்டும்.

எனவே, ரஜினி சொன்னதையே கூறுகிறார் என்று என்னமோ அவரே இவர்களை அழைத்துக் கூறியது போல எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். என்னங்கய்யா உங்க நியாயம்?

ரஜினி கூறிய “பயமில்லை தயக்கமுண்டு” என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடில்லை. இவற்றிக்கு என்ன பெரிய வித்யாசம் என்று புரியவில்லை. இது என்னுடைய கருத்து.

எனக்கு பிடித்த மாதிரி தான் ரஜினி பேச வேண்டும் என்று நினைத்தால் அது என் தவறா? ரஜினி தவறா? எனக்கு ரஜினி பேசுவது முக்கியமில்லை என்று பட்டால், நான் தான் அதை கண்டு கொள்ளாமல் செல்ல வேண்டும்.

ஆனால், ரஜினி ஏன் அப்படி பேசினார் என்று புலம்பிக்கொண்டு இருப்பதில் எதுவும் அர்த்தம் இருக்கிறதா?!

ரஜினி என்ன கூறினாலும் அதை தங்களுக்குத் தகுந்த மாதிரி திரித்து எழுதிக் கொள்கிறார்கள். இதுவா ஊடக தர்மம்! அவர் தான் எதுவும் கூறவில்லை… மேலேயே கையை காட்டிக்கொண்டு இருக்கிறார் என்று தெரிகிறது.

தெரிந்தும் ஏன் அவரிடம் சென்று அரசியல் பற்றி கேள்வி கேட்க வேண்டும்? ஒரு பரபரப்பு செய்தியும் கிடைக்கவில்லையா, பத்திரிகை விற்பனை சரிகிறதா ரஜினியைப் பற்றி எழுது.

சமூக வலை தளங்களில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா? என்ற கேள்வியைப் போட்டு மற்றவர்களை திட்ட வைக்கலாம். இது தான் நடக்கிறது.

கடந்த ஒரு மாதத்தில் இதுவரை எத்தனை கவர் ஸ்டோரி ரஜினியை வைத்து முன்னணி பத்திரிகைகளில் வந்து இருக்கும்! பழிக்கவும் ரஜினி பிழைக்கவும் ரஜினி.

ரஜினி திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் சமயத்தில் NDTV செய்தியாளர் ரஜினியிடம் அரசியல் பற்றி கேட்டதற்கு..

“No politics please. I don’t want to talk about politics now” என்று கூறியதை ரஜினி “No Never அரசியலுக்கே வர மாட்டேன்”

என்று கூறியதாக தலைப்புச் செய்தி போட்டவுடன் அது சரியா என்று கூட பார்க்காமல் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான ஊடகங்கள் அதை அப்படியே தலைப்புச் செய்தியாக்கின.

வழக்கம் போல அனைவரும் திரும்ப ரஜினியைத் திட்டினார்கள். காணொளியில் இருந்தது வேறு NDTV கூறியது வேறு என்று ரஜினி ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை சமூக வலைதளங்களில் பதிவு செய்தவுடன் தலைப்பை மாற்றிச் செய்தியையும் NDTV மாற்றிக்கொண்டது.

ஆனால், தமிழக ஊடகங்கள்?! எதையும் செய்யவில்லை. எப்படி கண்மூடித்தனமாக ரஜினிக்கு எதிரான செய்திகளைக் கொடுக்கிறார்கள் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.

காணொளியில் ரஜினி கூறுவது தெளிவாக இருந்தும் அதில் உள்ளதை கொடுக்காமல் NDTV போட்ட செய்தியையே அப்படியே போடுகிறார்கள் என்றால்..!

இது கூட பரவாயில்லை.. இதன் பிறகும் சமூக வலைதளங்களில் இது குறித்து கருத்துக் கணிப்பு நடத்தியதைப் பார்த்த போது… இவர்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

படிப்பவர்கள் வழக்கம் போல இவர்கள் கூறுவது தான் உண்மை என்று ரஜினியைத் திட்டிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விட்டார்கள். தற்போது ரஜினி அவ்வாறு கூறவில்லை என்று ஆதாரப்பூர்வமாக உறுதியாகி விட்டது.

இதனால் ரஜினியைத் திட்டியதும் பெரிய புத்திசாலி போல கலாயித்ததும் திரும்ப மறைந்து விடுமா? இப்ப யாரும் வாயைத் திறக்க மாட்டார்கள். இது போல நடப்பது இது முதல் முறையல்ல, இது ஒரு தொடர்கதை.

ரஜினி தவறே செய்யாதவர் அப்பழுக்கற்றவர் என்று எதையும் நிரூபிக்க முயற்சிப்பது என்னுடைய எண்ணமல்ல, அது சாத்தியமுமல்ல. அவரும் சராசரி மனிதர் தான். தவறே செய்யாமல் / அனைத்துமே சரியாகப் பேசும் அதிசய மனிதர் அல்ல.

எவருக்கும் தவறுகள் நடப்பது இயல்பு, தவறே செய்யாதவர் என்று இந்த உலகில் எவரும் இல்லை. என்னைப் பொருத்தவரை அவர் யார் குடியையும் கெடுக்கவில்லை, மற்றவர்கள் குறித்து அநாகரிகமாக எதையும் கூறவில்லை / விமர்சிக்கவில்லை.

இவரது திரைப்படங்களை ரசிக்கிறேன், ஒரு நடிகனாக தன் படங்கள் மூலம் என்னைப் போல பல ரசிகர்களை / பொதுமக்களை மகிழ்விக்கிறார். இதுவே எனக்குப் போதுமானது.

கடுமையாக ரஜினியை விமர்சிப்பவர்கள், என்ன கூறினாலும் அனைத்துப் பக்கமும் தொடர்ச்சியாக வசைகளை வாங்கும் ரஜினி(யாக)யின் நிலையில் ஒரு நாள் இருந்து பார்த்தால் தெரியும், அதில் உள்ள வலிகள்.

பிரபலமாக இருப்பதால் இவர் கொடுக்கும் மிகப்பெரிய விலை இந்த விமர்சனங்கள்.

சிறிய விமர்சனத்தைக் கூட தாங்க முடியாதவர்கள் தான் ரஜினியை மனம் போனபோக்கில் விமர்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். உனக்கு வந்தா தக்காளிச் சட்னி எனக்கு வந்தா ரத்தம் என்பது தான் இவர்கள் எண்ணம்.

இவர்களைப் பொருத்தவரை இவர்கள் எவரையும் விமர்சிக்க உரிமையுண்டு ஆனால், இவர்களை விமர்சிக்க மற்றவர்களுக்கு உரிமை இல்லை, உடனே பொங்கி சாமியாடி விடுவார்கள். இது தான் விமர்சகர்களின் லட்சணம்.

ரஜினியை விமர்சிப்பவர்கள் அவரை விமர்சிப்பதைத் தவிர ஒன்றும் செய்யும் முடியாது / அவர்கள் எதிர்பார்க்கும் எதுவும் நடக்காது.

ரஜினியை என்ன திட்டினாலும், கலாயித்தாலும் ஒன்றுமே செய்ய முடியவில்லையே..! என்று இயலாமையில் ஏதாவது எழுதி புலம்பிக்கொண்டே இருக்கிறார்கள்.

ரஜினி மீது கடந்த ஒரு மாதமாக ஊடகங்களும் மற்றவர்களும் செய்து கொண்டு இருப்பது விமர்சனமல்ல, வன்மம்!

இதுவும் கடந்து போகும்.

Rajini and Raguvaran

எங்கள் மனதில் என்றும் நீங்காமல் இருக்கும் மறைந்த ரகுவரன் அவர்களுக்கும் [Dec 11], தலைவருக்கும் பிந் நாள் வாழ்த்துகள்.

{ 27 comments… add one }
 • ravi thangappan December 3, 2014, 3:05 PM

  miga sariana article
  yennai madri rajini rasigarkalin velipadu indha article
  thanks sir

 • Suresh Palani December 3, 2014, 3:47 PM

  Super!!!!

 • kamesh December 3, 2014, 3:52 PM

  Giri
  nice write up… infact I expected this from you. These Vikatan guys absolutely non-sense. Izhuthu vecchu rendu ara vidanum pola irukku.. vikatan group..

 • madhavan December 3, 2014, 4:44 PM

  super write up !!

 • அருண் கோவிந்தன் December 3, 2014, 9:30 PM

  கிரி,
  back to form போல…பதிவு சூப்பரா இருக்கு
  ஒரு ரஜினி ரசிகனின் அழகான பதிவு இப்படி தான் இருக்கும்

  – அருண்

 • Ams December 4, 2014, 6:45 AM

  Nice article about rajini

 • ananda December 4, 2014, 10:47 AM

  Rajini is cheating their fans. because every time they are expecting earn something from politics like another politician did in tamilnadu. First up all Rajini is earned too much money from tamilnadu. But he didn’t do anything to Tamilnadu and he did lot investment in karnataka. Even Raghavendra marriage hall have some land issue then only he said this property handled by fans association head. Even though his previous fans association leader also karnataka.Now our tamil people everywhere cheated and slave like another state/country people. We need tamil people unity. That is i/we want.

  • Thalaivar fan December 6, 2014, 11:43 AM

   A clear example of a fool.
   Learn English first b4 commenting. U think u r a bigshot if u comment in english?
   He earned too much money didnt he? Then others r acting for free? His early salary was in crores?
   Avar sambarichathai vida avarai vachu sambarichavangga tan athigam, brainless. U give all the money to ur useless politicians but dared to question abt thalaivar? Shame.
   Can u donkeys give one proof of the property in karnataka? For 3 decades spreading this lie but till now no one can give a proper proof. Wat did other actors give to tamil nadu ppl? Neeyellam appadiye tamilku uyir kodutha mathiritan.
   R u aware tat free marriages still going on in the hall? Or the fact tat giving lights to the road to arunachaleswarar temple was his idea. Get lost

   • ananda December 8, 2014, 3:28 PM

    unna marthiri mutta pu*da irukkiravarikkum tamilinam munerathu.You are fool and get lost fool.

 • ராஜ்குமார் December 4, 2014, 12:41 PM

  சீனாவுல குளிர் ஜாஸ்திங்க – சவுதியில இப்போதான் குளிர் ஆரம்பிக்குது..
  சரி பதிவுகளை படிக்கலாமின்னு வந்தா.. இங்க மைனஸ் டிகிரியில போய்கிட்டு இருக்கு.. 🙂 (பின்ன என்ன..புல்லரிப்புகள் தாங்க முடியல)

 • sb December 4, 2014, 2:51 PM

  Hope ,
  Soon u will share about lingaa songs and its reception in singapore.

 • Uthaya December 5, 2014, 1:22 AM

  This post suits for my Thala #Dhoni also…Dedicate this post to all dhoni haters.. 🙂

 • Vijay December 5, 2014, 10:19 AM

  மிகச்சரியான பதிவு கில்லாடி.. இதுவும் கடந்து போகும் 🙂

 • anonymous December 6, 2014, 6:42 PM

  அஜித்தின் என்னை அறிந்தால் டீசெர் ரஜினி சாதனையை முறியடிதிருக்கிறது. தினமலர் செய்தி படிக்கவில்லையா நீங்கள் இன்னும். மற்றபடி ரஜினியை மட்டுமா ஊடகங்கள் விமர்சிகின்றன. எல்லா பிரபலங்களையும் தான். நீங்கள் ரஜினி ரசிகர் என்பதால் உங்களுக்கு கோபம் வருகிறது. ரஜினிக்கும் வயதாகி விட்டதால் நீங்கள் சொல்லியிருப்பது போல் விமர்சனங்கள் அவர் தொழிலை பாதிக்க முடியாது. அவர் தான் சாதித்து முடித்து விட்டாரே. retirement வயதில் உள்ள ஒருவரை விமர்சித்து என்ன செய்து விட முடியும்.
  Tamil medias are third rated. யாரும் எதுவும் செய்ய முடியாது. விமர்சிக்க படும் பிரபலங்கள் தான் சமாளித்து கொள்ள வேண்டும். நடுநிலையான விமர்சகர்கள் தமிழர்களில் அபூர்வம். Thalaivar fan என்றொரு வாசகர் கமெண்ட் போட்டிருக்கிறார் பாருங்கள். எல்லோருமே இவர் மாதிரி தான். ஆரோக்கியமான discussion எங்கும் பார்க்க முடியாது.
  “உடனே பொங்கி சாமியாடிவிடுவார்கள் ” —- இதோ இப்போது நீங்கள் பொங்கி சாமியாடி இருப்பதை போல.
  நடு நிலைமையாக இருக்க , ரசிக்க , விமர்சிக்க பழகுங்கள் பிரதர். Do not show partiality.

  • ananda December 8, 2014, 3:59 PM

   Thanks thala and nice comment.

  • காயத்ரிநாகா December 8, 2014, 7:27 PM

   Reply to Anonymous….காயத்ரிநாகா May 10, 2013, 10:28 PM
   See the post http://www.giriblog.com/2013/05/opinion-about-giri-blog.html

   1.நான் படித்த வரையில் பயணக்கட்டுரைகள் மிகவும் சுவராஸ்யமாக படிப்பவர்களுக்கு உடனே அந்த இடத்தை பார்க்க வேண்டும் என்ற உணர்வைத் தருவீர்கள்.குறிப்பாக ஆழப்புழை கட்டுரை.மற்றபடி அம்மா செண்டி மென்ட்(ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்தது),வினயின் குறும்புகள்,,கோபிசெட்டிபாளயத்தின் அழகு,மரம் வளர்ப்பு ஆகியவை பற்றி அதிகமாக எழுதுவீர்கள். ரசிக்கும்படி இருக்கும்…குறிப்பாக எனக்கு ‘நண்பர்களுக்கு”என்ற கட்டுரை மிகவும் காயப்படுத்திய ஒன்று..’இதுவும் கடந்து போகும்’ என்ற கட்டுரையும் எனக்குப் பிடித்த ஒன்று..

   2.விமர்சனக் கட்டுரைகள் என்னைப் பொறுத்தவரை நடுநிலையாக எழுதுகிறீர்கள் என்பதை விட சராசரி பாமர ரசிகன் திரைப்படத்தில் என்ன எதிர்பார்ப்பானோ அந்த அம்சம் படத்தில் உண்டா இல்லையா என்பதை உங்கள் விமர்சனத்தில் அறிந்து கொள்ளளாம்..அதாவது படத்திற்கு போலாமா வேண்டாமா என்பதை..மற்றபடி தைரியமாக எழுதுவது குறிப்பாக விஸ்வரூபம் புரியவில்லை என்றது..பாலாவை அதிகமாக நேசித்தாலும் சரியில்லை என்றால் சுட்டுவது(அவன் இவன் விமர்சனம்)..ராஜேஷ்குமார் நாவலை எடுத்தால் படித்து முடிக்காமல் யாரும் வைக்க மாட்டார்கள் அது போல தான் உங்கள் விமர்சனமும்..

   3.நகைச்சுவை இருந்தாலும் பெரிய அளவில் ஒன்றும் தெரியவில்லை எனக்கு..எழுதும்போது நான் சொல்லக்கூடாது அப்ப சொல்லாதீங்கன்னு சொல்லிடாதீங்க என்ற வகை காமெடிகள் பிடிக்கவில்லை கிரி..

   4.தொழில்நுட்பம் பற்றிய கட்டுரைகள் அதிகம் படிப்பதில்லை.படித்தாலும் நம் அறிவுக்கு எட்டுவதில்லை.. கிரி நீங்கள் அந்த மாதிரியான பதிவுகள் எழுதுவதற்காகவே தனி blog ஒன்று ஆரம்பித்தீர்கள் அது என்ன ஆனது கிரி..?

   5.அரசியல் பற்றிய பதிவுகள் உங்கள் ஆதங்கத்தை கொட்டுகிறீர்கள் அது என்னுடைய ஆதங்கம் எல்லோருடைய ஆதங்கம் உங்கள் எழுத்தில் பார்க்கிறோம்..

   6.சிங்கப்பூர் பற்றிய பதிவுகள் எனக்கு பிடிக்கும் கிரி..சிங்கப்பூரில் எனக்கு ஒரு நண்பர் உள்ளார் என்று நண்பர்களிடம் அடிக்கடி பெருமைப்பட்டுக் கொள்வேன் கிரி..

   7.தலைவர் பற்றி தேடிக் கொண்டு இருக்கும்போது தான் உங்கள் தளத்திற்கு முதன் முறையாக வந்தேன் கிரி..’ரஜினிக்கு ரசிகனாக இருப்பதில் என்ன தவறு’ தான் கிரி.. நான் படித்த முதல் பதிவு.மற்றபடி இதிலிருந்து நாங்கள் உங்களுக்கு வழங்கும் பட்டம் ‘திரையுலகின் சூப்பர்ஸ்டார் தலைவர்.வலையுலகின் சூப்பர்ஸ்டார் எங்கள் கிரி…’
   தொடரட்டும் உங்கள் வெற்றிகரமான எழுத்துப்பயணம்..நன்றி கிரி…

   I love Giri Blog!

 • கிரி December 7, 2014, 4:24 PM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @ஆனந்தா உங்களுக்கு ஏற்கனவே ஒருவர் பதில் கூறி விட்டார்.

  “Now our tamil people everywhere cheated and slave like another state/country people”

  இதற்கும் ரஜினிக்கும் என்னங்க சம்பந்தம்?

  @ராஜ்குமார் அடுத்த முறை சீனா செல்லும் போது ரஜினி பற்றி பேசும் போது மட்டும் உங்களுக்கு ஏற்படும் புல்லரிப்புக்கு சீன மருத்துவத்தில் ஏதாவது மருந்து இருக்கிறதா? என்று மறக்காம ஏதாவது சங்கி மங்கி மருத்துவரைக் கேட்டுப் பாருங்க 🙂

  @Anonymas

  “அஜித்தின் என்னை அறிந்தால் டீசெர் ரஜினி சாதனையை முறியடிதிருக்கிறது. தினமலர் செய்தி படிக்கவில்லையா நீங்கள் இன்னும்.”

  நீங்கள் Virtual சாதனையை பெரிதாகப் பேசுகிறீர்கள் எனக்கு வசூல் சாதனை தான் முக்கியம். தினமலர் மட்டுமல்ல அனைத்து செய்தியையும் படிக்கிறேன். இதோட நீங்க அஞ்சான் டீசர் சக்சஸ் செய்தியையும் படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

  “மற்றபடி ரஜினியை மட்டுமா ஊடகங்கள் விமர்சிகின்றன. எல்லா பிரபலங்களையும் தான்.”

  நீங்கள் கூறுவது சரி தான். ரஜினியை மட்டும் விமர்சிப்பதில்லை.. ஆனால் மாசத்துக்கு ஒரு முறை விமர்சனத்திற்கும் கடந்த ஒரு மாதமா போட்டி போட்டு அனைத்து ஊடகங்களும் விமர்சிப்பதற்கும் வித்யாசம் இருக்கிறது. கடந்த மாத கவர் ஸ்டோரியில் மற்றவர்கள் எத்தனை முறை வந்தார்கள் ரஜினி எத்தனை முறை வந்தார் என்று பாருங்கள். நான் கூற வருவது புரியும்.

  “விமர்சிக்க படும் பிரபலங்கள் தான் சமாளித்து கொள்ள வேண்டும். ”

  நிச்சயமாக! அதைத் தான் நானும் கூறி இருக்கிறேன். தற்போது கூட ரஜினி யாரையும் எதுவும் கூறவில்லையே.. வழக்கம் போல அமைதியாகத்தானே இருக்கிறார்.

  “ஆரோக்கியமான discussion எங்கும் பார்க்க முடியாது. “உடனே பொங்கி சாமியாடிவிடுவார்கள் ” —- இதோ இப்போது நீங்கள் பொங்கி சாமியாடி இருப்பதை போல. நடு நிலைமையாக இருக்க , ரசிக்க , விமர்சிக்க பழகுங்கள் பிரதர். Do not show partiality.”

  நீங்கள் எதிர்பார்க்கும் ஆரோக்கியமான விவாதம் நடத்த நான் தயார். நீங்கள் தயாரா? நான் என்ன சாமியாடி இருக்கிறேன்? எங்கும் அநாகரிகமாக விமரிசித்து இருக்கிறேனா! ஏதாவது பொய்யாக / கற்பனையாகக் கூறி இருக்கிறேனா! நான் கேட்ட கேள்விகளில் தவறு என்ன உள்ளது? அப்படி தவறு இருக்கிறது என்றால் தாராளமாகக் கேளுங்கள் என்னால் நிச்சயம் பதில் அளிக்க முடியும். நான் ரஜினி ரசிகன் தான் ஆனால் கண்மூடித்தனமான ரசிகன் அல்ல.

  நடுநிலைமை?… நீங்கள் என்னுடைய தளத்தில் படிக்கும் முதல் பதிவு இது தான் என்று நினைக்கிறேன். உங்களுக்கு நேரமிருந்தால் என்னுடைய பழைய பதிவுகளையும் அதில் என்னுடைய பதில்களையும் படித்துப் பாருங்கள்.. பின்னர் கூறுங்கள். என்னுடைய நண்பர் அப்துல்லா ஒரு முறை கூறியது நினைவிற்கு வருகிறது. “ஒருவரை விமர்சிக்கும் முன் அவரைப் பற்றி தெரிந்து கொள்ளும் கடமையும் இருக்கிறது” என்று. விமர்சனத்திற்கு நான் தரும் முக்கியத்துவத்திற்கு ஒரு உதாரணம் என்னுடைய தளத்தில் கமெண்ட் மாடரேசன் கிடையாது. நான் என் மனசாட்சிபடி எழுதுவதால் எந்தக் கேள்விகளுக்கும் நான் பயப்படுவதில்லை. ஏனென்றால் என்னால் எதற்கும் பதில் அளிக்க முடியும்.

  “நடுநிலைமை” என்ற ஒன்று எங்குமே இல்லை.. பெரும்பான்மையோர் ஏற்றுக்கொண்ட கருத்து என்று வேண்டும் என்றால் கூறலாம்.

  அடுத்த முறை பதில் அளிக்கும் போது உங்கள் சொந்தப் பெயர் அல்லது புனைப் பெயரிலாவது எழுதுங்கள்.

  • ananda December 8, 2014, 4:07 PM

   Neengal Rajinikku (Shivaji Rao Gaekwad) “Centenary Award for Indian Film Personality of the Year” award central govt koduthathu. Please think none other actor better than rajini. All politics and partiality. Rajni polictics varanum appa katturom tamilana yarunnu.

 • கிரி December 8, 2014, 7:47 PM

  “Neengal Rajinikku (Shivaji Rao Gaekwad) “Centenary Award for Indian Film Personality of the Year” award central govt koduthathu. Please think none other actor better than rajini. ”

  ஆனந்தா நீங்க ரஜினியை சம்பந்தமில்லாத விசயத்தில கூட திட்டணும்னு ஒரு முடிவோட இருக்கீங்களா? 🙂 ஏங்க பாஸ் அவங்க விருது கொடுத்ததுக்கு ரஜினி என்னங்க பண்ணுவாரு!! ரஜினியை விட சிறந்த நடிகர்கள் நிச்சயம் இருப்பாங்க.. அதுக்கு ரஜினி என்னங்க பண்ணுறது? மத்திய அரசு கொடுத்தால் ரஜினி கொடுக்க வேண்டாம்னா சொல்றாரு.. நீங்களே ஒரு வழி சொல்லுங்க.

  “All politics and partiality. Rajni polictics varanum appa katturom tamilana ”

  அப்படியா.. நானெல்லாம் என்ன அப்ப ஆந்திராகாரனா! நீங்க திட்டுறேன்னு சொல்லுங்க இல்ல ரஜினிக்கு எதிரா பிரச்சாரம் பண்ணுறேன்னு சொல்லுங்க (அவர் வந்தா தான் ) ஒரு லாஜிக் இருக்கு.. நீங்களா ஏன் உங்கள் பின்னாடி தமிழ் நாட்டு மக்கள் இருக்கிறதா அவங்களையும் கூட சேர்த்துக்கறீங்க. பாவம் அவங்கள விடுங்க.. ஏற்கனவே பல பிரச்சனைகள்ல திக்கித் திணறிட்டு இருக்காங்க.

  @காயத்ரிநாகா வாங்க ரொம்ப நாளைக்குப் பிறகு வந்து இருக்கீங்க.. தலைவர் பதிவுன்னாத் தான் வருவேன்னு அடம் பிடிக்கறீங்களே 🙂 உங்கள் பதிலுக்கு நன்றி. நீங்க சொன்ன 3 பாயிண்ட் இப்ப மாற்றிக்கொண்டேன். இதன் பிறகு இதைப் பயன்படுத்தவில்லை அல்லது எப்பவாவது தான் பயன்படுத்தி இருப்பேன். நன்றி

  • ananda December 9, 2014, 10:05 AM

   Neenga andhra karana theriyathu? But non-tamilana thalaiyil vaithu kondadukira kootam. En pinnadi tamil nadu makkal irukkiratha sollavae illaiyae. athai en tamilaga thalaivargal parthu kolvargal unga thalaivar arasiyalukku vanthal.

 • காயத்ரிநாகா December 8, 2014, 8:51 PM

  My comment is deleted.. I dont know the reason why it was removed.. I did
  any mistake?

 • கிரி December 8, 2014, 8:59 PM

  நீங்க ஒரு கமெண்ட் போட்டீங்க.. அது தான் மேலே இருக்கே.. இதை சொல்லும் போது வாழப் பழ காமெடி நினைவிற்கு வருது 🙂 நான் எதையும் நீக்கவில்லை.

 • காயத்ரிநாகா December 8, 2014, 9:03 PM

  Thank you brother!

 • Sgokul December 8, 2014, 9:42 PM

  Very good writing Giri.i love your writing very much.

 • Dinesh December 9, 2014, 3:54 AM

  Less u respond to negative comments,more ur mind will be peaceful – Thalaivar’s way

 • tamil December 9, 2014, 12:33 PM

  ” தமிழக மக்களுக்கு நான் ஏதாவது பண்ணுவேன்” இந்த வசனத்தை ரஜினி விடவே மாட்டார்

  அய்யா தர்ம பிரபுவே ஏதாவது பண்ணுங்க என்று எவன் கேட்டான்?

  உங்களுக்கு வேண்டும் என்றால் ரஜினியோட பொறுமை கருமை எருமை பிடிச்சு இருக்கலாம்.

  ஆனா பொது சனத்துக்கு இவரோட அரசியல் அறிவு நல்லாவே பிடிச்சு இருக்கு. வரும் ஆனா வராது வகையறா.

  இவரை மெண்டல் என்று முன்னாடி சொல்லுவர், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் மத்தவங்களை மெண்டல் ஆக்குறது தான் இவரோட ஸ்பெஷல். உதாரணம் ரஜினிக்கு சொம்பு அடிக்குற கூட்டம் 🙂

  எப்படியோ லிங்கா படத்துக்கு எனக்கும் ஒரு டிக்கெட் போடுங்க. பார்ப்போம் தாத்தா போடுற ஆட்டத்தை 🙂

  கதா நாயகிகள் ஆயுசு மட்டும் அல்ப ஆயுசா இருக்கு நடிப்பு-ல 🙂

  • ananda December 9, 2014, 1:46 PM

   Sariya sonenga.

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz