Google Drive support பற்றித் தெரியுமா?

Google drive

ங்களுக்கு கூகுள் கணக்கு இருந்தால் அதில் 15 GB இடம் இருப்பதைப் பற்றி அறிந்து இருப்பீர்கள். இந்த இடம் Unified storage என்ற வசதியின் மூலமாக Gmail, Google Photos, Google Drive என்று அனைத்தையும் உள்ளடக்கியது.

எளிதாகக் கூற வேண்டும் என்றால் இந்த 15 GB யை நீங்கள் ஜிமெயிலுக்கு மட்டுமே பயன்படுத்தலாம் அல்லது கூகுள் டிரைவ்க்கு மட்டுமே பயன்படுத்தலாம் அல்லது இந்த மூன்று சேவைகளிலும் சேர்த்தும் பயன்படுத்தலாம், இது நம் விருப்பம்.

இவை அல்லாமல் நாம் பணம் கட்டி கூடுதல் இடமும் வாங்கலாம். Image Credit – linux.softpedia.com

நான் கூகுள் ஸ்டோரேஜ் மூலமாக பணம் கட்டி கொஞ்சம் இடம் வாங்கி துவக்கத்தில் இருந்து பயன்படுத்தி வருகிறேன். கூகுள் சேவையை எப்படி முழுமையாகப் பயன்படுத்துவது என்பதை துவக்கத்தில் இருந்து படித்து வருவதால், அதில் உள்ள இலவச வசதிகளை அறிவேன்.

இது குறித்து இன்னும் பலருக்குத் தெரியாது.

கூகுள் ஃபோட்டோஸில் நீங்கள் உங்கள் நிழல் படங்களை அதிகபட்சம் 2048×2048 என்ற Pixel ல் சேமித்தால் இவை உங்கள் கணக்கில் சேர்க்கப்படமாட்டாது.

சுருக்கமாக இது இலவசம் என்பதாகும். Professional Photographers மட்டுமே தரத்திற்காக Original Pixel ல் சேமிப்பார்கள், நமக்கு 2048×2048 என்பது சரியான அளவு. இதோடு இதில் காணொளியை 15 நிமிடத்திற்குள் வருவது போல சேமித்தால் அதுவும் இலவசம்.

எனவே இது போன்ற வசதிகளை சரியாகப் பயன்படுத்துவதால் என்னுடைய கூகுள் ஃபோட்டோஸில் அதிகளவு பயன்படுத்தியும் “0 GB” தான் காட்டுகிறது.

நாம் நிழற்படங்களை தரவேற்றம் செய்யும் போது Default ஆகவே 2048×2048 ல் வரும்படி செய்து கொள்ளலாம், தனியாக இதற்கு என்று மெனடக்கெட அவசியமில்லை.

கடந்த வாரம் சிறு ஆச்சர்யத்துக்கு உள்ளானேன். தற்போது Chromecast வசதியின் மூலம் நம்முடைய காணொளிகளை கூகுள் ஃபோட்டோஸில் வைத்து இருந்தால், இந்த Chromecast மூலமாக எளிதாகப் பார்க்க முடியும்.

ஒரு வார இறுதியில் இதில் பார்க்க இரு திரைப்படங்களை தரவேற்றம் செய்தேன் ஆனால், இரண்டு நாளாகியும் என்னுடைய கணக்கில் இதன் அளவு கூடவில்லை. 15 நிமிட காணொளி மட்டுமே இலவசம் ஆனால், இதோ இரண்டு மணி நேர காணொளி.

என்னடா இது! கூகுள் இதையும் இலவசமாக்கி விட்டதா என்று ஆச்சர்யமாகி என்னிடம் இருந்த இன்னும் சில திரைப்படங்களை தரவேற்றம் செய்து விட்டேன் 🙂 நாம தான் இலவசம் என்றால் எதையும் செய்ய தயங்க மாட்டோமே!

சிங்கப்பூரில் தரவிறக்கம் தரவேற்றம் (Downlaod / Upload) அனைத்துமே Unlimited என்பதால் வேகமும் இருப்பதால் (100 Mbps) இதை செய்து விட்டேன். மூன்று நாள் கழித்துப் பார்த்தால் 17 GB கூடுதல் ஆகி விட்டது.

ஆஹா! இது கொஞ்சம் நாள் எடுத்துத் தான் காட்டும் போல என்று திரும்ப அனைத்தையும் நீக்கி விட்டேன் ஆனால், அளவு குறையவில்லை.

Read: Chrome தெரியும் Chromecast தெரியுமா?

சரி! இதன் கூடுதலான அளவைக் காட்ட நேரம் எடுப்பது போல நீக்கினாலும் அதே போல ஆகும் போல என்று மூன்று நாட்கள் காத்து இருந்தேன் ஆனால், குறையவில்லை அப்படியே இருந்தது. என்னடா இது வம்பா போச்சு.. என்று கடுப்பாகி விட்டது.

வழக்கம் போல இது குறித்து கூகுள் தேடுதலில் தேடினால் கொஞ்ச நாள் ஆகும் என்று போட்டு இருந்தார்கள். ஒரு கூகுள் Forum ல் ஒருத்தர் “எனக்கு இது போல பிரச்சனை ஆனது கூகுள் சப்போர்ட் டீம் சரி செய்து கொடுத்தார்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

என்னையா இந்த ஆளு சொல்றான்… கூகுள் எங்கே இதற்கு எல்லாம் சப்போர்ட் தருகிறது!! என்று குழம்பி விட்டேன்.

பின்னர் கூகுள் ஸ்டோரேஜ் சப்போர்ட் பக்கத்தில் இது பற்றி தேடிக்கொண்டு இருந்த போது ஒரு சாட் வசதி தானாக வந்து உங்களுக்கு எதுவும் கூகுள் ஸ்டோரேஜ்ல பிரச்சனையா! நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம் என்று வந்தது.

பார்ரா! இது என்னடா புதுசா இருக்கே என்று சாட்டில் நுழைந்தால் நிஜமாகவே கூகுள் சப்போர்ட் சாட் தான் அது. அவர்களிடம் இது போல பிரச்சனை இருக்கிறது என்று கூறியதும் இது குறித்து சரி பார்ப்பதாகக் கூறி கொஞ்ச நேரத்தில் ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்கள்.

கூகுள் ரசிகன் என்பதால் கூறவில்லை நிஜமாகவே செம வேகமாக வேலை செய்தார்கள். என்னுடைய கூகுள் ஃபோட்டோஸ் Bin பகுதி screenshot கேட்டார்கள் அதாவது அங்கு எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய.

ஏனென்றால் இங்கே இருந்தாலும் அது கணக்கில் எடுத்துக்கொள்ளும். நான் அனுப்பிய பிறகும் சரி ஆகவில்லை.

பின்னர் நான் அவர்களிடம் “என்னிடம் போதுமான இடம் இருக்கிறது, அவசரமில்லை. எனவே, நான் நான்கு நாட்கள் கழித்து பிரச்சனை தொடர்ந்தால் வருகிறேன்” என்று கூறினேன். அவர்களும் சரி என்றார்கள்.

நான்கு நாட்கள் ஆகியும் குறையவில்லை என்பதால் திரும்ப அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். திரும்ப Fresh screenshot கேட்டார்கள், திரும்ப அனுப்பினேன்.

தங்கள் குழுவினர் இதில் பணி புரிந்து கொண்டு இருப்பதாகவும் விரைவில் சரி செய்வதாகவும் இடையில் எதுவும் மாற்றம் அறிந்தால் எங்களுக்கு தெரியப்படுத்தவும் என்று கூறினார்கள். அடுத்த நாள் பார்த்தால், பிரச்சனை சரியாகி விட்டது.

பின்னர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன்.

இவர்களின் சேவை ஜிமெயில் போல மிக மிக வேகமாக இருந்தது. எனக்கு இவர்களுடன் பணி புரியவே மிகவும் சந்தோசமாக இருந்தது. வழக்கமான டெம்ப்ளேட் பதில்களாக இல்லாமல் (சிறந்த உதாரணம் ஏர்டெல்) அவசியமான பதில்களை கேள்விகளை மட்டுமே கேட்டார்கள்.

எல்லாவற்றையும் விட உடனே உடனே பதில் வந்தது. செம செம 🙂 எனவே மக்களே! உங்களுக்கு கூகுள் ஸ்டோரேஜில் (Google Drive) பிரச்சனை இருந்தால் தாராளமாக இவர்களை அணுகி பிரச்சனையை சரி செய்து கொள்ளலாம்.

இவர்களை மூன்று வழியாக தொடர்பு கொள்ளலாம். உங்கள் தொலைபேசி எண்ணை கொடுத்தால் அவர்கள் அழைப்பார்கள் அடுத்த இரு வசதி மின்னனஞ்சல் <google-drive-help@google.com> மற்றும் சாட்.

ஜிமெயிலுக்கு இது போல சேவையில்லை, இருந்தாலும் இருக்கா என்று சும்மா கேட்டுப் பார்ப்போம் என்று கேட்டுப் பார்த்தேன் ஆனால், அப்படியில்லை என்று கூறி விட்டார்கள்.

Hi Giri,

Thanks for the confirmation. That is great news to know! By the way, I’m ****, I’m working with **** in addresing your case.

With regards your inquiry about Gmail, this Chat/Email Service is for Google Drive Support only. We do have online help centers available for other Google products at https://support.google.com/

I recommend asking this question in our Gmail Help Forum http://www.google.com/support/forum/p/gmail, since there’s a large community of knowledgeable users who might have had a similar question.You can also search within the Gmail Help Center where you’ll find hundreds of help articles about how to use Gmail.

If you have further questions regarding Google Drive or Google Storage, do reply to this email and I’d be happy to help you.

May you have a stress-free and a productive week.

Happy Holidays!

Thanks!

****

The Google Support Team

எனக்கு இது போல புரிந்து கொண்டு வேக வேகமாகப் பணி புரிவர்களை ரொம்பப் பிடிக்கும்.

இவர்களிடம் எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம் இது போல கேள்வி கேட்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் / ஒன்றும் தெரியாதவர்கள் என்கிற ரீதியிலேயே பல வாடிக்கையாளர் சேவை மையத்தில் கேள்வி கேட்பார்கள், நாம் தெளிவாகப் பேசினாலும் கூட.

அவசியமே இல்லாமல் ஒவ்வொரு முறையும் டெம்ப்ளேட் பதில்களை கொடுத்து வெறி ஏற்றுவார்கள்.

எனக்கு இது போல கொடுமையான அனுபவம் ஏர்டெல்க்கு ஆகி இருக்கிறது. நாம் ஒன்று கேட்டால் சம்பந்தமே இல்லாத கேள்வி / பதில் வரும். எரிச்சலாக இருக்கும்.

கூகுள் அதனுடைய சேவையில் மட்டுமல்ல அதனுடைய வாடிக்கையாளர் சேவையிலும் அசத்தலாக இருக்கிறது ஆனால், நம்முடைய ஜிமெயில் கணக்கு ஏதாவது பிரச்சனை என்றால் இவர்களிடம் எதையும் அவ்வளவு சீக்கிரம் பெற முடியாது ஏனென்றால் இது இலவச சேவை.

அவ்வளவு சீக்கிரம் பிரச்சனை வராது, வந்தால் சிக்கல் 🙂 . உண்மையைக் கூறினால் பணம் கொடுத்தால் கூட ஜிமெயில் போல ஒரு சேவையைப் பெறுவது கடினம்.

கொசுறு 1

கூகுள் ஃபோட்டோஸில் நீங்கள் காணொளிகளை தரவேற்றம் செய்தால் சுமாராக இருக்கும் தரத்தை கூகுள் Auto Enhance செய்யப்போகிறது.

முன்பு நிழல் படங்களுக்கு இந்த வசதி இருந்தது, தற்போது காணொளிகளுக்கும் இந்த வசதியைக் கொண்டு வந்து இருக்கிறது. இது நாம் விருப்பப்பட்டால் மட்டுமே!

கொசுறு 2

Kamal KB Rajiniஇயக்குநர் பாலச்சந்தர் அவர்கள் நேற்று [23-12-2014] காலமாகி விட்டார்.

கமல் “உத்தம வில்லன்” படத்தில் இறுதியாக நடித்து இருந்தார்.

இதைக் காண ஆவலாக இருந்தார், கமலும் எப்படியும் இந்தப் படத்தை அவருக்கு காண்பித்து அவரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று இருந்தார்.

என்ன தான் பல சாதனைகளை கமல் செய்து இருந்தாலும், தன் குருநாதர், படத்தைப் பார்க்காமலே சென்றது ஒரு சிஷ்யனாக பேரிழப்பு தான். கமலின் இறுதிக்காலம் வரை இது நெருடலாகவே இருக்கும்.

கமல் மீது எனக்கு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒரு கலைஞனாக அவரின் இந்த இழப்பைக் கண்டு மிகவும் வருத்தமடைகிறேன்.

அதிகப் படங்கள் இயக்குனர் சிகரம் அவர்கள் படத்தில் நடித்து, ரஜினியை விட அதிக உரிமை கொண்டு, பிள்ளையைப் போல வளர்ந்து, ஒவ்வொரு பேட்டியிலும் நினைவு கூர்ந்து, தன் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்த பாலச்சந்தர் அவர்களை தனது படத்தில் நடிக்க வைத்து அது இறுதிப் படமாகவும் ஆனதில் ஒரு உண்மையான சிஷ்யனுக்கு உரிய பெருமையைப் பெற்று விட்டார்.

கமல் எத்தனை விருதுகள் பெற்று இருந்தாலும், பெறப் போவதாக இருந்தாலும் அனைத்தையும் விட பெரிய விருது பாலச்சந்தர் அவர்களின் இறுதிப் படம் தான்.

இதை விட பெரிய விருது கமலின் வாழ்நாளில் இனி கிடைக்காது. இது நிச்சயம் கமலுக்கு  ஆத்ம திருப்தியை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தனக்கு ஒருவருமே வாய்ப்புக் கொடுக்காத நிலையில் தன் மீது நம்பிக்கை வைத்து சிறு கதாப்பாத்திரம் கொடுத்து அதில் சரியாக செய்ததால் அதில் திறமை அறிந்து மெருகூட்டி தற்போது சூப்பர் ஸ்டார் என்று அனைவரும் அழைக்கும் நிலைக்கு உயர்த்திய, தன் தந்தையைப் போல மரியாதை வைத்து இருக்கும், இன்னமும் பாலச்சந்தர் அவர்கள் அருகில் உட்காரக் கூட தயங்கும் அளவிற்கு மரியாதை வைத்துள்ள ரஜினிக்கு இது அளவிட முடியாத துன்பம்.

ரஜினிக்கு ரஜினிகாந்த் என்று ஒரு ஹோலி பண்டிகை நாளில் தான் பாலச்சந்தர் அவர்கள் பெயர் வைத்தார். D40 நிகழ்ச்சியில் “ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் எனக்கு ஃபோன் செய்வாய் ஆனால், தற்போது என்னை அழைப்பதில்லையே!” என்று கேட்டார்.

அதற்கு ரஜினி மிகவும் தர்மசங்கடமாகி “கொஞ்சம் வேலையால் மறந்துட்டேன், இனி இந்த தவறு நடக்காது” என்று நெளிந்து கொண்டே கூறினார்.

இனி ஒவ்வொரு ஹோலி பண்டிகையின் போதும் இந்தச் சம்பவம் ரஜினி நினைவிற்கு வந்து என்றுமே இந்த நாளை மறக்க முடியாத நாளாக்கி விடும்.

பல சிறந்த திரைக் கலைஞர்களை கொடுத்த, தமிழ்ப் திரைப்படங்களுக்கு பெருமை சேர்த்த பாலச்சந்தர் அவர்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்.

கொசுறு 3

நண்பர் ஜோதிஜி என்னுடைய தளத்தில் பின்னூட்டம் இடுவதில் பிரச்சனை இருப்பதாக தெரிவித்தார். இது போல பிரச்னையை நீங்கள் சந்தித்து இருந்தால் தெரிவிக்கவும், சரி செய்ய முயற்சிக்கிறேன்.

{ 5 comments… add one }
  • அருண் கோவிந்தன் December 24, 2014, 8:44 PM

    கிரி,
    கூகிள் டிரைவ் cloud ல தான் இயங்குது தல, ரொம்ப personal information எதுவும் அதுல ஷேர் செய்ய வேண்டாம்… நல்ல அனுபவ பகிர்வு

    கொசுறு 2 – ரொம்ப வருத்தமான விஷயம்

    கொசுறு 3 – ஒரே ஒரு பிரெச்சனை தான் எனக்கு தெரியும்..chrome browser ல கமெண்ட் பாக்ஸ் click பண்ணா disabled டா இருக்கும், அதனால name box click பண்ணி அதுல இருந்து tab அடிச்சு comment box வந்து type பண்ண வேண்டிய தேவை இருக்கு..நான் use பண்ணுறது chrome browser….மத்த browser ல try பண்ணது இல்லை

    – அருண் கோவிந்தன்

  • Mohamed Yasin December 25, 2014, 12:18 PM

    கிரி.. இது மாதிரி புதிய விஷியங்ளை கற்று கொள்வது போல் சுவாரசியம் வேறு எதிலும் இல்லை.. அருண் குறிப்பிட்டபடி க்ரோம் ப்ரௌஸர் (கொசுறு 3)பிரச்சனை எனக்கும் உண்டு.. முன்பே நான் சொன்ன படி கமெண்ட் பகுதியில் தங்கிலிஷ்ல டைப் பண்ணா தமிழில் மாறல… இது உண்மையில் எனக்கு கொஞ்சம் பிரச்சனை தான்… சரி செய்ய வாய்ப்பு இருந்தால் சரி பண்ணுங்க கிரி..பகிர்வுக்கு நன்றி..

  • நான் கார்த்திகேயன் December 25, 2014, 1:25 PM

    உண்மைதான் அண்ணா திரு ஜோதிஜி சொன்னது … கமன்ட் பாக்ஸில் டைப் செய்துவிட்டு சப்மிட் கொடுத்தால் இஞ்சி தின்ன குரங்காட்டும் அப்படியே இருக்கும். இந்த பிரச்சினை பற்றி நான் ஏற்கனவே தங்கள் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளேன்…

    chrome இல் தான் இந்த பிரச்சனை வருகிறது….அடிக்கடி ..

    பயர்பாக்ஸ் ல் எப்போதாவது தான் வருகிறது … submit கொடுத்தல் ஆகாது …..கொஞ்ச நேரம் கழித்து அந்த tab ஐ refresh செய்து பார்த்தால் நம் டைப் செய்த கமண்ட் upload ஆகி இருக்கும்….
    யாசின் அவர்கள் கூறியது போல அந்த பிரச்சினை எனக்கு இது வரைக்கும் வந்தது இல்லை..நான் கூகிள் தமிழ் இன்புட் பயன்படுத்தி தான் தமிழில் டைப் செய்கிறேன் .சரியாக வேலை செய்கிறது……..
    ————————————————————————–
    நம்மூர்ல நெட் வேகம் ஆமையளவுக்கு இருப்பதால் கூகிள் டிரைவ் பற்றி அவ்வப்போது நீங்கள் தரும் தகவல்களை தெரிந்து வைத்துக்கொள்வதோடு சரி.பயன்படுத்துவது இல்லை… இவ்வளவு பெரிய கம்பனி பயனாளிகளின் கேள்விக்கு ஒழுங்காக பதில் அளிப்பது செம!!!
    —-
    கூகிள் இன்பாக்ஸ் லிங்க் அனுப்பியதற்கு நன்றி அண்ணா…..
    ————————
    மொசில்லா பாயர்பாக்ஸ் லயும் இப்ப submit ஆகாம பிரச்சினை பண்ணுது ண்ணா

  • Logan December 28, 2014, 7:48 PM

    தகவல்களுக்கு நன்றி கிரி.

    குறிப்பு : Comment’ல் ஆங்கில எழுத்துகள் தமிழ் எழுத்துகளாக மாறவில்லை.

  • கிரி January 7, 2015, 1:15 PM

    அனைவரின் கருத்திற்கும் நன்றி

Leave a Comment