இணையத் தொழில்நுட்பச் செய்திகள் [05-08-2014]

facebook-messenger-logo

கூகுள் + எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடையே செல்லவில்லை என்பதால், கூகுள் இதை எங்கெல்லாம் நுழைக்க முடியுமோ அங்கெல்லாம் கட்டாயப்படுத்தி அனைவரையும் பயன்படுத்த வைத்து வெறியாக்கி வருகிறது.

இதே போல ஃபேஸ்புக், கைத்தொலைப்பேசி க்கு என்று Messenger செயலியை (Apps) வெளியிட்டது ஆனால், யாரும் அவ்வளவாக அதைப் பயன்படுத்த விரும்பவில்லை அதனால், கொஞ்ச நாட்களாக ஃபேஸ்புக் செயலியில் நமக்கு Message வந்து அதை க்ளிக் செய்தால் அது Messenger செயலி வேண்டும் என்று கூறுகிறது.

இந்த Messenger செயலி வேலை என்னவென்றால், சாட் செய்வதற்கும் உங்கள் Inbox க்கு வரும் தகவல்களை படிப்பதற்கும் உதவுகிறது. ஃபேஸ்புக் இதோடு மேலும் வசதிகளை புகுத்தப் போகிறது Whatsapp போல, எனவே நம்மை இம்சித்து வருகிறது.

விரைவில் கைத்தொலைபேசி ஃபேஸ்புக் (Main FB) செயலியில் இருந்து இந்த Messenger வசதியையே முழுக்க நீக்கப்போவதாகக் கூறி இருக்கிறார்கள். இதற்குப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எனக்கும் இதில் உடன்பாடில்லை.

ஃபேஸ்புக் இது போல நீக்கினால் நான் கைத்தொலைபேசியில் Message பார்ப்பதையே தவிர்த்து விடுவேன். நான் சாட் செய்வதும் இல்லை. ஏற்கனவே ஏகப்பட்ட செயலி அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாம எத்தனையைத் தான் பார்ப்பது! Image Credit – www.mobilegeeks.com

கூகுள் தளத்தின் பிகாசா (Picasa) மிகவும் பிரபலமான ஒரு நிழல்படத் தளம். இதை வம்படியாக கூகுள் + தளத்துடன் இணைத்து விட்டது ஆனால், இன்னும் பிகாசா தளம் பயன்பாட்டில் இருக்கிறது.

இது போல இணைந்து இருப்பதால், கூகுள் + பயன்படுத்த விரும்பாதவர்கள் இதைப் புறக்கணிக்கும் நிலை ஏற்படுகிறது. மிகச் சிறப்பான வசதிகளைக் கொண்டு இருந்தாலும், இது போல கட்டுப்பாடுகளால் பலரை சென்றடையாமல் இருக்கிறது.

தற்போது இதை மனதில் கொண்டு விரைவில் நிழல்ப் படங்களை தனித்தளமாக கொண்டு வரப்போகிறார்களாம். திரும்ப பிகாசா வர வாய்ப்புள்ளது. கூகுள் + ல் இது போல வம்படியாக புகுத்திய வசதிகளை விரைவில் விடுவிக்கும் திட்டம் கூகுள் வைத்துள்ளது.

எதுக்கு இதைப் பண்ணனும் இப்ப மறுபடியும் எல்லாவற்றையும் மாற்றனும்! இது தொழில்நுட்பத்தில் அனுபவம் இல்லாதவர்களுக்கு குழப்பத்தையே ஏற்படுத்தும்.

இனியாவது கூகுள் அவசரப்பட்டு, “நான் தான்! நான் தான்!!” என்று “புதுப்பேட்டை” தனுஷ் மாதிரி பேசாமல் நடைமுறை சிக்கல்களை புரிந்து வசதிகளை கொடுக்கட்டும் / இணைக்கட்டும்.

ஸ்ரேல் காஸா சண்டை பற்றி அறிவீர்கள். இதில் இஸ்ரேலுக்கு எதிராக பிரபல ஹேக்கர்கள் குழு இஸ்ரேல் அரசுத் தளங்களை முடக்கி விட்டார்கள்.

இஸ்ரேல் செய்வது மிகத் தவறானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால், இங்கே விட சிரியா போன்ற நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு இது போல எதிர்ப்பு வரவில்லை. ஏன்? இங்கே பழகி விட்டது என்பது தான் காரணமாக இருக்க முடியும். உதாரணத்திற்கு பாக்கில் தினமும் குண்டு வெடிக்கிறது ஆனால், உலகம் இது பற்றி கவலைப் படுவதில்லை ஆனால், இந்தியாவில் நடந்தால் உலகக் கவனம் பெறுகிறது.

மைக்ரோசாப்ட் இந்த வருடத்தில் 18000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் தற்போது நெருக்கடியில் எதுவும் இல்லையென்றாலும், நோக்யா கைப்பேசி நிறுவன மைக்ரோசாப்ட் இணைப்பிற்கு பின் இது போல பணி நீக்க உத்தரவு வந்து இருக்கிறது.

பலரும் இதனால் கலக்கத்தில் இருக்கிறார்கள். என்ன வாழ்க்கைடா!

ணையத்தளம் வைத்து இருப்பவர்கள் அனைவரும் Google Analytics என்ற வசதியை செய்து இருப்பார்கள்.

இது என்னவென்றால் ஒரு நாளைக்கு எத்தனை பேர் தளத்திற்கு வருகிறார்கள், எந்த இடுகையை (Post) அதிகம் படிக்கிறார்கள், எந்த நாடுகளில் இருந்து வருகிறார்கள், என்ன உலவி பயன்படுத்துகிறார்கள் என்று இது போல ஏகப்பட்ட தகவல்களைத் தரும்.

தற்போது கூகுள் இதற்கு iPhone செயலியை வெளியிட்டு இருக்கிறது.

கூகுள் தன்னுடைய சமூகத் தளமான கூகுள் + ல் பயனர் கணக்குத் துவங்குபவர்கள் உண்மையான பெயர் தான் வைக்க வேண்டும் இல்லையென்றால் கணக்கை முடக்கி விடுவோம் என்று துவக்கத்தில் கூறி இருந்தது.

கூகுள் பெட்ரோமாக்ஸ் லைட்டே வேண்டும் என்று கூறி இருந்தாலும், பலரும் பந்தம் தான் கொளுத்துவோம் என்று புனைப் பெயர்களுடன் கணக்கை வைத்து இருக்கிறார்கள். தற்போது இந்தத் தடையை நீக்கி உள்ளது.

இனி யாரும் என்ன பெயர் வேண்டும் என்றாலும் வைத்துக்கொள்ளலாம் என்று அறிவித்து இருக்கிறது.

எதுக்கு இப்படி ஒரு தடையைப் போடணும் பின் இப்படி அசிங்கப்பட்டு நிற்க வேண்டும். இணையத்தில் உண்மையான பெயர் தான் வைத்து ஆக வேண்டும் என்றால், இதெல்லாம் நடக்கிற காரியமா!

கூகுள் போன்ற அனுபவம் வாய்ந்த நிறுவனம் இது போல ஒரு முட்டாள்த்தனமான முடிவை எப்படி எடுத்தது என்பது தான் குழப்பமாக இருக்கிறது. இப்ப யாரும் கண்டு கொள்வதில்லை என்பதால், சரி இப்படி அனுமதித்தாலாவது சீண்டுவார்களா என்று இறங்கி வந்து இருக்கிறது போல. தேவையா இந்த அசிங்கம்!

gmail calendar

ஜிமெயிலில் தற்போது காலண்டரை இணைக்கும் ஒரு வசதியை கூகுள் கொண்டு வந்துள்ளது. ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது. என்னுடைய ஜிமெயில் தீபிகா படுகோன் மாதிரி சிக்குன்னு இருக்கு 🙂 . பார்க்கவே கலக்கலாக இருக்கிறது.

பணம் கொடுத்தால் கூட இது போல ஒரு அழகான வடிவமைப்பு, வசதி கிடைக்காது போல…! நான் ஜிமெயிலுக்கு தாறுமாறாக ரசிகன் ஆகிக் கொண்டு இருக்கிறேன். ஜிமெயில் மீது நாளுக்கு நாள் காதலாகி வருகிறேன். இப்படி திணறத் திணற வசதி கொடுத்துட்டே இருந்தால் எப்படி?

கொஞ்சம் ஓய்வு கொடுங்கப்பா.. முடியல்ல்ல்ல!

கூகுள் கண்ணாடி பற்றி தெரிந்து இருப்பீர்கள். கடந்த தொழில்நுட்ப இடுகையில் கூறியது போலவே சில இடங்களுக்கு தடை வந்து விட்டது. இதை UK வில் உள்ள திரையரங்குகளில் கொண்டு வர தடை விதித்து விட்டார்கள்.

இதை வைத்து திரைப்படத்தை படம் பிடித்து விடுவார்கள் என்பதே காரணம்.

நம்ம ஆளுங்க திரையரங்கத்தை விட்டு வெளியே வரும் முன்பே முழுப் படத்தையும் ட்விட்டர்லையே கூறி விடுகிறார்கள். இதை அனுமதித்தால் முதல் காட்சி முடிந்ததுமே இணையத்தில் படம் தயாராக இருக்கும் 🙂 .

நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டு இருந்த கூகுள் டொமைன் சேவை வந்து விட்டது. கூகுள் Domain Name வழங்கும் சேவையை தொடங்கப்போகிறது. ஏற்கனவே பலருக்கு அழைப்பிதழ் மூலம் கொடுத்து வருகிறது.

இதன் மூலம் Godaddy மற்றும் மற்ற தளத்தில் கணக்கு வைத்து இருப்பவர்கள் இதற்கு விரும்பினால் மாறிக்கொள்ளலாம். எனவே புதிதாக தள முகவரி வாங்க நினைத்து இருப்பவர்கள், கூகுள் மூலமாக வாங்க விரும்பினால் இன்னும் சில நாட்கள் பொறுத்து இருங்கள்.

ரு காலத்தில் சக்கைப் போடு போட்ட Orkut வரும் செப்டம்பர் 30 ம் தேதியுடன் தனது சேவையை நிறுத்தப்போகிறது. தற்போது கூகுள் + சேவை இருப்பதாலும், Orkut யாரும் பயன்படுத்துவதில்லை என்பதாலும், இந்த முடிவை எடுத்து இருக்கிறது.

Orkut பயன்படுத்துபவர்கள் இது குறித்து கூகுளிடம் இருந்து மின்னஞ்சல் பெற்று இருந்து இருப்பீர்கள். அனைவரையும் கட்டாயமாகப் பயன்படுத்த வைத்தால் கூகுள்+ க்கும் இந்த நிலை தான் வரும்.

ஆஹா! இந்த இடுகையில் கூகுள் + ரொம்ப அடி வாங்கி விட்டது போல இருக்கே! 🙂 . இந்த கூகுள் + துவங்கியதில் இருந்து கூகுளுக்கு ஏகப்பட்ட கெட்ட பெயர். இதை பிரபலமாக்க நினைத்து இருக்கிற சேவைகளை சொதப்பி வருகிறது.

டந்த வாரம் அரைமணி நேரம் ஃபேஸ்புக் செயல் இழந்தது. பலரும் இதனால் பரிதவித்து விட்டார்கள். சிலர் ட்விட்டர் கூகுள் + சென்று இது பற்றி புலம்பிக்கொண்டு இருந்தார்கள். அமெரிக்காவில் உச்சகட்டமாக காவல்நிலையத்தில் புகாரே கொடுத்து விட்டார்களாம்.

இவங்க அட்டகாசத்திற்கு ஒரு அளவே இல்லையா!

காவல் துறையினர் “நாங்க எதுவும் செய்யவில்லை. எங்களுக்கு இதற்கும் சம்பந்தமில்லை” என்று கூறும் அளவிற்கு ஆகி விட்டதாம். அடப்பாவிகளா! விட்டா.. பிரதர் மார்க்கையே அடி பின்னி எடுத்துடுவாங்க போல இருக்கே! ஒரு “மார்க்”கமாத் தான் திரியறாங்க.

கொஞ்ச மாதங்கள் முன்னாடி கூகுள் தளம் சில நிமிடங்கள் செயலிழந்ததால் தொழில்நுட்ப உலகமே நின்று விட்டது போல ஆனது. அது போல இப்ப ஃபேஸ்புக். எனக்கு ஃபேஸ்புக் இல்லைனா ஒரு பிரச்சனையும் இல்லை ஆனால், கூகுள் இல்லையென்றால் என் கதி அதோ கதி தான்.

{ 7 comments… add one }
 • janaki August 5, 2014, 11:30 AM

  என்னோட ஜிமெயில் கூட ரன்பீர் கபூர் மாதிரி அழகா இருக்கு அண்ணா…நமக்கு எல்லாம் FB account இல்ல..so one and only Gtalk , ஜிமெயில்:)

 • janaki August 5, 2014, 12:15 PM

  என்னோட ஜிமெயில் கூட ரன்பீர் கபூர் மாதிரி அழகா இருக்கு அண்ணா (integrated google calendar ) ..நமக்கு எல்லாம் FB accountae இல்ல.. so one and only GOOGLE தான் 🙂

 • சேக்காளி August 5, 2014, 1:20 PM

  //கூகுள் + துவங்கியதில் இருந்து கூகுளுக்கு ஏகப்பட்ட கெட்ட பெயர்.//
  18+ மாதிரியா?

 • விஜய் August 5, 2014, 4:39 PM

  கிரி,

  உங்களுக்கும் கூகிள்+ க்கும் ஒரு வாய்க்கால் தகராறு இருக்கு போல! சும்மா கழுவி கழுவி ஊத்துறீங்க 🙂

  நான் என்னோட கூகிள்+ கணக்கை மூடி ஒரு மாசம் ஆகப் போகுது. சும்மா டெஸ்ட் பண்ணி பார்த்தேன்.

  இப்போ வரைக்கும் எந்த ஒரு பிரச்சனையும் வரலை. ஜிமெயில், காலெண்டர் இப்படி எல்லா வசதிகளையும் கூகுள்+ இல்லமா, ஒழுங்க பயன்படுத்த முடியுது .

  எல்லா படங்களும் பிக்கசாவுல பத்திரமா இருக்கு.

  கூகிள்+ இல்லாம இருக்கிறது கொஞ்சம் நல்லாத்தான் இருக்கு.

  அவனவன் ஃப்ளிக்கர், 500px அப்படின்னு போனதுக்கு அப்புறம் இனிமேல் பிகாசவுல என்னா கொடுத்து என்னா ஆகப்போகுது?

  ஃபேஸ்புக் மெஸெஞ்சர தனியா பிரிக்க காரணம் வாட்ஸ் ஆப் 🙂

 • Mohamed Yasin August 5, 2014, 4:51 PM

  தொழில்நுட்ப செய்திகளை பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி…

 • seelan August 6, 2014, 12:38 AM

  கூகுள் இல்லையென்றால் எல்லோர் கதியும் அதோ கதி தான்.

 • கிரி August 13, 2014, 8:31 AM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @ரன்பீர் & தீபிகா திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களாம்.

  என்னது FB கணக்கு இல்லையா!!!! 😮

  @சேக்காளி U / A 🙂

  @விஜய் 🙂 இவங்க அனைத்தையும் நுழைப்பது தான் கடுப்பாக இருக்கிறது. நான் என்னுடைய Blog Page க்கு இதைப் பயன்படுத்துவதால் இதை Deactivate செய்ய முடியாது.

  பிகாசால ஏகப்பட்ட வசதிகள் இருக்கு.. இந்தக் கட்டுப்பாடுகள் இல்லையென்றால் இன்னைக்கு இருக்கும் ரேஞ்சே வேற.. இவர்களும் வரவேற்பின் காரணமாக பல புது வசதிகளை கொண்டு வந்து இருப்பார்கள்.

Leave a Comment