ஒன்பதாவது ஆண்டில் கிரி Blog

9 expressionsழுத வந்து இன்றுடன் ஒன்பது ஆண்டுகள் ஆகி விட்டது. இவ்வளவு நாட்களாக எழுதிக் கொண்டு இருக்கிறேன் என்பதே என்னளவில் சாதனையாக இருக்கிறது.

ஏன் என்றால் நான் தொழில்முறை எழுத்தாளன் அல்ல, பொழுது போக்குக்கு எழுதுபவன். எழுதுவது எனக்கு Passion என்பதால், சலிப்படையாமல் எழுத முடிகிறது. Image Credit – natyakala.blogspot.com

தற்போது பலரும் இது போல Blog எழுதுவதைக் குறைத்து ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் கூகுள் + ல் தங்கள் கவனத்தை செலுத்த ஆரம்பித்து விட்டார்கள். என்ன தான் Twenty-20 க்கு ஆதரவு குவிந்தாலும் இன்னும் ஒரு நாள் போட்டிக்கு ஆதரவு இருந்து கொண்டு தான் இருக்கிறது 🙂 .

எனக்கு இது போல எழுதுவது தான் பிடித்து இருக்கிறது எனவே, சீராக போய்க் கொண்டு இருக்கிறேன். என்னுடைய Archives ல் பார்த்தீர்கள் என்றால் தோராயமாக அதிக பட்சம் மாதம் 10 கட்டுரைகள் கடந்த 7 வருடமாக எழுதி இருக்கிறேன்.

GiriBlog first post

நான் எழுத வந்த பிறகு நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறேன். எதை எழுதணும்? எதை எழுதக் கூடாது? இதை எழுதினால் என்ன கேள்வி வரும்? அவசரப்பட்டு எழுதினால் என்ன பிரச்சனை வரும்? படிப்பவர்கள் இது பற்றி என்ன நினைப்பார்கள்?

என்று ஏகப்பட்ட அனுபவங்கள் கடந்த 7 வருடங்களில் கிடைத்து இருக்கிறது.

எழுதிய கட்டுரைகளை சில மாதங்கள் கழித்துப் பார்க்கும் போது அதற்கு இன்னும் மெனக்கெடனும், சில வரிகளைத் தவிர்த்து  இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இதை தவறாக நினைக்கவில்லை, அனுபவமாக எடுத்துக் கொள்கிறேன்.

இதெல்லாம் தொடர்ந்து எழுதும் போது தான் கிடைக்கிறது. இதில் என்ன ஆச்சர்யம் என்றால், எவ்வளவு அனுபவம் பெற்றாலும், புதிது புதிதாக அனுபவம் கிடைத்துக்கொண்டே இருப்பது தான். அனுபவத்திற்கு எல்லையே இல்லை!

எழுதுவதில் பெரிய மாற்றம் எதுவும் செய்யும் திட்டமில்லை ஆனால், இனி கட்டுரையில் அவசியமானது தவிர அறிமுகத்திற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் நேரடியாக விசயத்திற்கு வந்து விட வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன்.

ஏற்கனவே ஓரளவு அதைப் பின் பற்றி வருகிறேன். இதைக் குறிப்பிடக் காரணம் தம்பி கார்த்தி ஒரு கட்டுரையில் கூறி இருந்த விமர்சனம். அவ்வப்போது பலர் தவறை சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். எனக்கு அது ஏற்புடையதாக இருந்தால், அதில் கவனம் எடுத்து என்னை மாற்றி இருக்கிறேன்.

இது போல விமர்சனங்களே என்னை திருத்திக் கொள்ள உதவும். எழுத்து / சந்திப் பிழைகளை குறைத்து வருகிறேன். முடிந்தவரை ஆங்கிலக் கலப்பைத் தவிர்க்கிறேன்.

இவ்வளவு வருடங்களாக என்னுடைய தளத்தில் விளம்பரம் வைக்க முயற்சித்தது இல்லை. ஒரே ஒரு முறை கூகுள் விளம்பரம் முயற்சித்த போது பெட்ரோமாக்ஸ் லைட்டே (English) வேண்டும் என்றதால், அப்படியே விட்டுட்டேன். நண்பர்கள் பலர் கேட்டுக்கொண்டும் ஏனோ ஆர்வம் இல்லாமல் இருந்தேன்.

கடந்த வாரம் நண்பர் ஒருவர் கூறிய யோசனை பிடித்து இருந்தது. பார்ப்போம்..!

நீங்கள் மனதில் நினைக்கும் விமர்சனங்கள் / பாராட்டுகள் எனக்குத் தெரியாது ஆனால், நான் சோர்ந்து போகும் போதெல்லாம் எனக்குத் தவறாமல் பல வருடங்களாக கருத்துக் கூறி ஊக்குவிப்பவர்கள் யாசின், ராஜ்குமார் போன்றோர்.

அருண் தனிப்பட்ட காரணங்களுக்காக சில மாதங்களாக இணையம் வர முடியவில்லை ஆனால், நான் அவருடன் தொடர்பில் தான் இருக்கிறேன். உண்மையில் 90% கட்டுரைகளுக்கு ஒரே மாதிரியான (டெம்ப்ளேட்) கருத்தாக இல்லாமல் உண்மையாகக் கூறுவது என்பது அவ்வளவு எளிதான விசயமே அல்ல. என்னாலும் இதை செய்யவே முடியாது.

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இவர்கள் தொடர்ந்து பல வருடங்களாக என்னை ஆதரித்து வருபவர்கள்.

giri- giriblogநான் உங்கள் அனைவரிடமும் எதிர்பார்ப்பது பாராட்டுக்களை விட விமர்சனங்களைத் தான். இதற்கு மதிப்புக் கொடுக்கும் விதமாகத் தான், நான் இன்று வரை பின்னூட்ட மட்டுறத்தல் (Comment Moderation) என்னுடைய தளத்தில் செய்யவில்லை.

கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம் தான். கருத்து வேறுபாடுகள் இருந்தால் தான் கொஞ்சம் சுவாரசியமாகவும் இருக்கும். எல்லாமே நமக்கு பிடித்த மாதிரி இருந்தால் சலிப்பாகி விடும் 🙂 .

வாழ்க்கை நமக்கு அனைத்தையுமே தருவதால் தான் அடுத்தது என்ன என்ற ஆர்வம் / பயம் / எதிர்பார்ப்பு இருக்கிறது. இது தான் என்று தெரிந்து விட்டால் அதில் என்ன பெரிய சுவாரசியம் இருந்து விடப் போகிறது!

அதே போலத் தான் என்னுடைய தளமும்.

பல சர்ச்சையான கட்டுரைகளை கடந்த வருடங்களில் எழுதி இருக்கிறேன். இருப்பினும் நான் பின்னூட்ட மட்டுறுத்தலை செயல்படுத்தியதில்லை. என் மனசாட்சிக்கு சரி என்று தோன்றுவதைத் தான் எழுதுகிறேன்.

எனவே, என்ன கேள்வி வந்தாலும் பதில் அளிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், தவறு என்று கருதினால் ஒப்புக் கொள்ளும் தைரியமும் எனக்கு இருக்கிறது. பின் நான் எதற்கு விமர்சனங்களை நினைத்துப் பயப்படனும்!?

நிச்சயம் சில கட்டுரைகள் உங்களைக் காயப்படுத்தி இருக்கலாம். காயப்படுத்தனும் என்று நினைத்து எழுதுவதில்லை, மனதில் தோன்றுவதை எழுதுகிறேன். அதில் சில ஏற்றுக்கொள்ள முடியாது போகலாம் என்பது இயல்பு தானே!

நான் மட்டும் விதி விலக்கா என்ன?! ஒட்டுமொத்தமாக நான் எப்படி எழுதுகிறேன் என்பதை மட்டும் கணித்துப் படியுங்கள், அனைத்துமே நீங்கள் நினைக்கும் படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

அது என்னால் மட்டுமல்ல எவராலும் முடியாது. ஆலோசனை கூறியவர்கள், தவறைச் சுட்டிக் காட்டியவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவரின் ஆதரவிற்கும் நன்றி. தொடர்ந்து இணைந்து இருங்கள்.

{ 44 comments… add one }
 • வைகை August 16, 2014, 9:28 AM

  வாழ்த்துக்கள் கிரி! எழுதுவதுதான் குறைந்துவிட்டதே தவிர படிப்பது குறையவில்லை! நானும் உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்! ஒன்பதாவது ஆண்டு விழாவுக்கு இங்க எங்க விருந்து கொடுக்குறீங்க? அத முதல்ல சொல்லுங்க கிரி! 🙂

 • Suresh Palani August 16, 2014, 9:29 AM

  நீங்கள் இன்னும் பல்லாண்டு காலம் எழுத வேண்டும் என்பது எங்கள் ஆசை….

  ஒட்டுமொத்தமாக நான் எப்படி எழுதுகிறேன் என்பதை மட்டும் கணித்துப் படியுங்கள், அனைத்துமே நீங்கள் நினைக்கும் படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அது என்னால் மட்டுமல்ல எவராலும் முடியாது.

  வாழ்த்துகள்!!!

 • Arun Govindan August 16, 2014, 9:50 AM

  மனமார்ந்த வாழ்த்துக்கள் கிரி.. அட்டகாசமா 9வது வருசத்துல அடி எடுத்து வைக்குறீங்க.. உங்க நல்ல மனசுக்கு எப்பவும் நல்லதே நடக்க வாழ்த்துக்கள்

  உங்க குடும்பத்துக்கு நன்றிகள் பல
  இந்த மாதிரி ஒரு passion குடும்பம், குழந்தை நு வந்த பிறகு தொடர முடியும் நா அதுக்கு அவங்க பங்களிப்பு ரொம்ப அவசியம்

  மிகவும் பிடித்த வரி, வாழ்க்கை கும் இந்த வரிகள் பொருந்தும்
  “எழுதிய கட்டுரைகளை சில மாதங்கள் கழித்துப் பார்க்கும் போது அதற்கு இன்னும் மெனக்கெடனும், சில வரிகளைத் தவிர்த்து இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.”

  – அருண்

 • Vijay August 16, 2014, 10:22 AM

  வாழ்த்துக்கள் கில்லாடி… உங்கள் எழுத்துச் சேவை எங்களுக்கு தேவை ஆதலால் நிறைய எழுதுங்கள்…

 • Veyilaan August 16, 2014, 10:45 AM

  வாழ்த்துக்கள் கிரி!

 • தமிழ்நெஞ்சம் August 16, 2014, 11:23 AM

  பதிவுலகில் ஒன்பதாவது ஆண்டு! கலக்கல் தலைவரே!!. வாழ்த்துகள்!!!. உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.

  தொடர்ந்து பதிவுகளைப் பகிரவும்.

  நான் அடிக்கடி பார்வையிடும் இரண்டு வலைப்பூக்கள் – i) குணாதமிழ் (வேர்களைத்தேடி), கிரிblog.

  மிகுந்த வேலைப்பளு என்றாலும் உங்கள் இருவரின் பதிவுகள் படித்தே தீருவது என் வழக்கம்.

  துறை சார் பதிவுகள் என்றும் எவர் க்ரீன் பதிவுகளாக எழுதுவதில் கிரி ப்ளாக் தனித்தன்மை வகிக்கின்றது.

  உங்கள் பழைய பதிவுகள் க்ளாசிக் ஆக ஒரு டச் உடன் இருக்கும். மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்.

  புத்துணர்வு ஊட்டும் தன்னம்பிக்கை ஊட்டும் பதிவுகளுக்குச் சொந்தக் காரர் நீங்கள்.

  கூடுமானவரை 99.99% ஆங்கிலம் கலக்காமல் எளிய தமிழில் தவறின்றி பிழையின்றி எழுதும் பதிவர்களில் நீங்கள் தனித்தன்மை வகிக்கின்றீர்கள்.

  தொடர்க.

 • mangalore siva August 16, 2014, 11:29 AM

  Vaazthukkal giri

 • வாசுகி August 16, 2014, 11:53 AM

  வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதவும். உங்களுடைய அனைத்து பதிவுகளும் வாசிப்பேன்.

 • Mohamed Yasin August 16, 2014, 12:03 PM

  வைரமுத்துவின் வைர வரிகள் :- வாழ்வின் மர்மம் தான் வாழ்வின் ருசி; மரணத்தின் தேதி மனிதனுக்கு முன்பே தெரிந்து விட்டால், அதற்கு ஒரு நாள் முன்பு மறித்து விடுவான்…

  கிரி,என்னை பொறுத்தவரை, நீங்க ஒரு தலைசிறந்த எழுத்தாளரும் கிடையாது (நீங்க சொன்னதும் கிடையாது & எழுதுவது உங்கள் தொழிலும் அல்ல) நான் ஒரு நல்ல வாசகரும் இல்லை..இருப்பினும் எழுத்தின் மூலம் உங்களின் உறவு பல நண்பர்களுடன் இத்தனை வருடங்களாக இணைந்து இருப்பது ஆரோக்கியமான ஒன்று…. வாழ்த்துக்கள்..

  உங்களின் எண்ணங்களையும், கருத்துகளையும் எங்களுடன் பகிர்ந்து கொள்கிறிர்கள். எங்களை திருப்திபடுத்தவேண்டும் என்ற நோக்கில் எழுதாமல், உங்கள் மனதில் தோன்றுவதை சுதந்திரமாக, நீங்கள் எழுதுவது தான் இந்த 9 வருடத்தின் தொடர் வெற்றி..

  கடந்த வருடங்களில் வாசகர்கள் வேண்டுமானால் மாறி,மாறி கொண்டிருகிறார்கள், கிரியின் எழுத்தில் மாற்றம் இல்லை…ஆனால் முதிர்ச்சி உண்டு (சில சிக்கலான பதிவுகளில், எதிர்மறையான கருத்துகளில் உங்களின் நிலைப்பாடு,நீங்கள் கையாண்ட விதம் எனக்கு பிடித்து இருந்தது,குறிப்பாக வெகு சமீபமாக ஹிந்தி மொழி குறித்த பதிவில்…) பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி…

 • ஆத்மா August 16, 2014, 12:55 PM

  வாழ்த்துக்கள் பாஸ்

 • ராஜசேகரன் August 16, 2014, 4:54 PM

  வாழ்த்துக்கள் கிரி

 • anbuthil August 16, 2014, 5:03 PM

  வாழ்த்துக்கள் உங்களின் பதிவுகள் சிறப்பாக இருக்கிறது

 • சேலம் தேவா August 16, 2014, 6:52 PM

  வலைப்பூவில் எழுதுவது நிறையவே குறைந்துவிட்டது. 🙁

  உங்களுடைய தொழில்நுட்ப தகவல்களை தொடர்ந்து விரும்பி படிக்கிறேன்.வாழ்த்துகள் கிரி…

 • Rajan August 16, 2014, 7:47 PM

  உங்கள் எழுத்து சேவை எங்களுக்கு தேவை அதிலும் உங்கள் இனைய தொழில் நுட்ப செய்திகள் என்னை போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ள சேவை தொடரட்டும் உங்கள் பணி மிக்க நன்றி

 • வேகநரி August 16, 2014, 8:40 PM

  ஒன்பதாவது ஆண்டுகள் ஆச்சா!
  வாழ்த்துக்கள்!

 • ariharan August 16, 2014, 9:10 PM

  நானெல்லாம் உங்க வாசகர் வட்டத்ல ரொம்ப ஜூனியர் போல..:) வாழ்த்துக்கள் கிரி !!!

 • 9-ஆவதாண்டில் கிரி பிளாக்! அதற்கு என் வாழ்த்துக்கள்!

  தங்களின் தொழில் நுட்பப் பதிவுகள் எனக்கும் பயன் தரக்கூடியதாக இருக்கின்றது! நன்றி!

  இறையருளால் தொடர்ந்து இணைந்திருப்போம்!

 • கோவி.கண்ணன் August 16, 2014, 9:54 PM

  நல்வாழ்த்துகள்,
  உங்கள் நட்பு இனிய நட்பு, நீங்கள் எழுத வந்ததால் தான் அறிமுகமானீர்கள், எழுத்து மென்மேலும் சிறக்க மேலும் வாழ்த்துகிறேன்

 • மதுரைத்தமிழன் August 16, 2014, 10:08 PM

  வாழ்த்துக்கள் கிரி!

 • செங்கோவி August 17, 2014, 12:29 AM

  வாழ்த்துகள் கிரி..உண்மையில் தொடர்ந்து எழுதுவது பெரும் சாதனை தான்.

 • seelan August 17, 2014, 2:18 AM

  வாழ்த்துக்கள் கிரி.
  உங்கள் எழுத்து மென்மேலும் சிறக்க மேலும் வாழ்த்துகிறேன்.

  என்றும் அன்புடன்
  சீலன்.

 • கிருஷ்ணாரவி August 17, 2014, 7:18 AM

  தங்களைப் போன்றோரின் ப்ளாக்கினைப் பார்த்த பிறகே எழுத்துலகில் பிரவேசித்தேன்!
  என்னுடைய பிளாக்கில், என்னுடைய பதிவுகளுக்கு பின்னூட்டம் அதிகம் இருக்காது. இருந்தபோதிலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதிக் கொண்டிருக்கின்றேன்/ சாதனை செய்ய என்று யாரும் கிளம்பியது கிடையாது! மனச்சோர்வின்றி தொடர்ந்து செயல்பட்டதே ஒரு சிறப்பான சாதனை! ஒன்பது வருடங்கள் பதிவுலகில் நிலைத்திருப்பதே ஒரு சாதனை தான்! வாழ்த்துக்கள் தொடருங்கள்…. எல்லாம் வல்ல கிருஷ்ணனின் அருளால் நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்!
  கிருஷ்ணார்ப்பனம்!

 • இமா க்றிஸ் August 17, 2014, 10:13 AM

  உங்கள் வலைப்பயணம் மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் கிரி.

 • புகழ் பெற்ற எழுத்தாளர்கள், நானும் புகழ் பெற்ற எழுத்தாளர் தான் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களையும் கவனித்துப் பாருங்கள். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், அவர்களின் கொள்கைகளுக்கும் சம்மந்தம் இருக்காது. அதே போல அவர்களை நேரிடையாக சந்திக்கும் போது மனப்பிரேமையில் இருக்கும் வாசகனுக்கு உருவாகும் அதிர்ச்சிக்கும் அளவிருக்காது. ஆனால் வலைபதிவில் கடந்த ஐந்து வருடங்களாக எழுதிக் கொண்டிருப்பவர்களில் பலரையும் நேரிடையாக சந்தித்தவன் என்ற முறையில் பல ஆச்சரியங்களையும் பலப்பல அதிர்ச்சிகளையும் நான் சந்தித்து உள்ளேன்.

  உங்கள் முகம் பார்க்காவிட்டாலும் உரையாடல் மூலம் பரஸ்பரம் பல கருத்துக்களை பகிர்ந்து கொண்ட போதெல்லாம் நான் ஆச்சரியப்பட்ட ஒன்று என்னடா? இவர் இந்த உயரத்திற்குப் பிறகும் வெள்ளந்தியாகத்தானே இருக்கின்றார் என்று நினைத்ததுண்டு.

  அந்த எளிமையும் உண்மையும் சத்தியமும் உங்கள் எழுத்தில் உள்ளதை இந்த சமயத்தில் மனதார பாராட்டுகின்றேன்.

  இன்று ஒன்பதாவது ஆண்டு என்பதே எனக்கு சற்று ஆச்சரியமாக அதிர்ச்சியாக உள்ளது. ஆனால் தெளிந்த நீரோடை போல மென்மையான காற்று போல உலகமெங்கும் பலரின் மனதில் ஊடுருவீக் கொண்டு இருக்கீங்க.

  எண்ணம் போல வாழ்வு. உங்கள் தனிப்பட்ட வாழ்வும் இந்த எழுத்துப் பயணமும் மேற்கொண்டு சிறக்க தேவியர் இல்லத்தின் வாழ்த்துகள் கிரி

 • krishnamoorthy August 17, 2014, 1:41 PM

  தங்கள் பணி மென்மேலும் சிறக்க அன்பான வாழ்த்துக்கள்.

 • r.v.saravanan August 17, 2014, 6:58 PM

  மனம் கனிந்த வாழ்த்துக்கள் கிரி.

  இணையத்தில் எழுத வேண்டும் என்று என்னை ஆர்வம் கொள்ள வைத்ததில் தங்கள் எழுத்துக்கும் பங்கிருக்கிறது நன்றி

 • K Siva August 17, 2014, 8:16 PM

  வாழ்த்துக்கள் கிரி !!

 • ராமலக்ஷ்மி August 17, 2014, 10:05 PM

  மகிழ்ச்சி. ஒன்பது வருடங்கள். ஆர்வம் குறையாமல் சுவாரஸ்யத்துடன் எழுதி வருகிறீர்கள். தொடர்ந்திட என் நல்வாழ்த்துகள்:)!

 • காயத்ரிநாகா August 18, 2014, 2:35 AM

  மென்மேலும் தங்கள் எழுத்துப் பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள் கிரி…!

  காயத்ரிநாகா..

 • Lenin M August 18, 2014, 6:00 AM

  வாழ்த்துக்கள் கிரி. Keep Going

 • ஆர்.கோபி August 18, 2014, 8:34 AM

  9 ஆண்டுகளாக வலையுலகை தன் வசீகர எழுத்தால் ஆண்டு வரும் நவரச நாயகன் கிரி அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்…..

  மென்மேலும் பல நல்ல விஷயங்களை எழுத வேண்டும் என்பதே என் விருப்பம்…..

 • SURESH August 18, 2014, 11:11 AM

  well done கிரி , I AM reading your blog for 5 years .

 • akila August 18, 2014, 11:47 AM

  முதல் எட்டை முடித்து (வலைப் பதிவில்) அடுத்த எட்டில் அடி எடுத்து வைக்கறீங்க. மிகப் பெரிய சாதனை தான் இது. சோர்வில்லாது தொடர்ந்து எப்போதும் போல் சுவாரசியமாக எழுத வாழ்த்துகள் கிரி . 🙂

 • kamesh August 18, 2014, 11:57 AM

  Giri,

  Continue your good work… congrats for the 9th Year.. hope we celebrate the 10th year some time when we meet personally… I think we missed the bus this year… Once again Keep up your good work..

  Kamesh

 • janaki August 18, 2014, 3:05 PM

  வாழ்த்துக்கள் கிரி அண்ணா 🙂

 • Ashok August 18, 2014, 4:46 PM

  வாழ்த்துக்கள் கிரி ! தங்களி ன் எழுத்துலக பயணம் இனிதே தொடரவும் மென்மேலும் பல நல்ல பதிவுகள் எழுதவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

 • மாணவன் August 20, 2014, 9:29 AM

  9-ஆவது ஆண்டிற்கு வாழ்த்துகள் அண்ணே, தொடர்ந்து வாசித்து வரும் தளங்களில் கிரி ப்ளாக்கும் ஒன்று, தொழில் நுட்ப பதிவுகள் மற்றும் சிங்கை சார்ந்த செய்திகள் உங்கள் தளம் மூலம்தான் அதிகம் தெரிந்துகொள்வேன்… சோர்வில்லாமல் அயற்சி அடையாமல் தொடர்ந்து எழுதுவதென்பதே பெரிய விசயம்தான்… இங்க (சிங்கையில்) ஒருமுறையாவது உங்களை நேரில் சந்தித்து உரையாட வேண்டும் என்று நினைத்த நண்பர்களில் நீங்களும் ஒருவர். வேளைப்பளு, நேரமின்மையால் சந்திக்க முடியாமல் சென்றுகொண்டிருக்கிறது. பார்க்கலாம்… 🙂

  மென்மேலும் சிறப்பான பயனுள்ள பதிவுகளுடன் தொடர்ந்து கலக்குங்க…

  நல்வாழ்த்துகளுடன்
  சிலம்பு

 • Renga August 21, 2014, 3:22 AM

  ஹாய், உங்களது பயணம் வளர வாழ்த்துக்கள்

 • k.gobi August 22, 2014, 11:53 AM

  சார்,
  எவ்வளவு முயற்சி செய்தாலும் சேமிக்க முடியவில்லை.அதற்கு ஏதேனும்

  டிப்ஸ் தரமுடியுமா?

 • Sarath August 22, 2014, 6:25 PM

  வாழ்த்துக்கள் தலைவா! சில மாதங்களுக்கு முன்பு தான் உங்கள் தளத்திற்கு வந்தேன். மீண்டும் வரத் தூண்டியது உங்கள் எளிமையான அருமையான கருத்துக்கள் தான். மேலும் சிறப்பான முயற்சிகளோடு செயல்பட வாழ்த்துக்கள் !

 • ராஜ்குமார் August 22, 2014, 7:33 PM

  வாழ்த்துக்கள் கிரி…
  ஏதேச்சையாக ஒரு முறை ஹாரர் பட விமர்சனம் பார்க்கத்தான் உங்கள் வலைதளத்துக்கே வந்தேன் (கொலை நடுங்கவைத்த ஹாஸ்டல் திரைப்பட விமர்சனம்) அப்புறம் சற்று பின்நோக்கி பயணித்து அனைத்தையும் படித்து அறிமுகமானதுதான்.

 • gobi.k August 22, 2014, 8:01 PM

  இணையத்தில் நுழைந்தவுடன் உங்கள் பக்கதிற்குதான் முதலில் வருவேன்

 • நான் கார்த்திகேயன் August 24, 2014, 7:03 AM

  அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா …………

  மன்னித்துவிடுங்கள் அண்ணா கோவைக்கு வந்ததில் இருந்து நேரம் கிடைக்கவில்லை வேலைக்கு போய்ட்டு வந்ததும் தூங்கிடுவேன் அப்பதான் காலையில் சரியான நேரத்திற்கு செல்லமுடியும். இதனால் இரவில் எனக்கு போதிய நேரம் இணையத்துக்கு வர கிடைப்பது இல்லை.

  எனக்கு இணையம் பரிச்சயம் ஆனது 2009 இல் அண்ணா . இதில் வலைப்பதிவுகள் பற்றி நான் தெரிந்து கொண்டது 2010 கடைசி கட்டங்களில் தான் அண்ணா .. அப்போது எண்ணற்ற வலைப்பதிவுகளை படித்து இருக்கேன் .. அதில் ஆரம்பித்தில் இருந்து இப்போது வரை நான் உங்களுடைய தளத்தையும் ஈரோடு சி பி செந்தில் அண்ணா தளத்தையும் மட்டும் தான் தொடர்ந்து படித்து வருகிறேன்…

  ஆரம்பத்தில் நான் உங்க்கள் தளத்திரிக்கு வந்து படித்து விட்டு சென்று விடுவேன் ..கமண்ட் எதுவும் சொல்ல எனக்கு கொஞ்சம் சோம்பேறித்தனம் நு தான் அத சொல்வேன் . எந்த தளம் சென்றாலும் நான் கமெண்ட் போடுவது இல்லை. ஆனால் தொடர்ந்து உங்க பதிவுகள் படிக்க படிக்க கமெண்ட் போடணும் என்ற எண்ணம் வந்து இப்போது எந்த தலமாவது இருந்தாலும் அதில்நல்ல விஷயம் சொல்லப்பட்டு இருந்தால் கமெண்ட் போட்டு விடுவேன் …..

  இந்த ஒன்பதாவது ஆண்டில் ஆரம்பத்தில் இருந்து இதுவரைக்கும் எந்த ஒரு மொக்கையான பதிவையும் போடாமல் ஒரு சில பதிவுகளை தவிர்த்து எல்லாமே நல்ல பதிவுகளாக பதிவு செய்து வந்து இருக்கிறீர்கள் .

  நிறைய பதிவுகள் என்னை நான் மேம்படுத்த உதவுயிருக்கின்றன . என்னை மாற்றி இருக்கின்றன .. தொடரட்டும் உங்கள் இந்த பணி அண்ணா

  உங்க போட்டோ செம யா இருக்கு நீங்களும் தான்

 • ஒன்பது ஆண்டுகளாக எழுதிவருவது உண்மையில் சாதனைதான்.முதல் முறையாக உங்கள் வலைப் பக்கம் வருகிறேன் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள் தொடரட்டும்.

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz