இணைய தொழில்நுட்பச் செய்திகள் [09-06-2014]

கூகுள் க்ரோம் தன்னுடைய உலவியில் பாதுகாப்பு காரணங்களுக்காக நீட்சிகளை (Extension / Addon) நிறுவுவதில் தற்போது கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது. இனி நீங்கள் நீட்சிகளை உங்கள் க்ரோம் உலவியில் நிறுவ வேண்டும் என்றால் அது “Google Play Store” வழியாக மட்டுமே முடியும்.

முன்பு மற்ற தளங்களில் இருந்தும் கூட நிறுவ முடியும் ஆனால், இதன் மூலம்  Malicious நீட்சிகளைத் தெரியாமல் நிறுவ வாய்ப்பு உள்ளது. உலவியில் மற்ற தளங்களை பார்வையிடும் போது நம் அனுமதி இல்லாமலே நமக்குத் தெரியாமலே கூட சில தளங்கள் நீட்சியை நிறுவி விடும்.

குறிப்பாக தேடல் தளங்கள் இது போல நீட்சிகளை நிறுவி முகப்புத் தளமாக தங்கள் தளத்தை நமது க்ரோம் உலவியில் மாற்றி விடும். நாம் க்ரோம் உலவியை திறந்தாலே முதலில் இவர்கள் தளம் தான் திறக்கும்.

இது பல பிரச்சனைகளை பயனாளர்களுக்கு கொண்டு வருகிறது என்பதால், கூகுள் இந்த முடிவு எடுத்து இருக்கிறது. இதன் மூலம் கூகுள் மற்றும் நம் அனுமதி இல்லாமல் யாரும் நம் உலவியில் நீட்சிகளை நிறுவ முடியாது.

ஏற்கனவே இது போல நிறுவப்பட்டு இருந்தால், அவை தானியங்கியாக Deactivate ஆகி விடும் அதோடு உங்களால் திரும்ப Activate செய்ய முடியாது. இதன் மூலம் கூகுளால் அனுமதிக்கப்பட்ட நீட்சிகள் மட்டுமே நிறுவப்படும்.

கூகுளின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன். இந்த நடவடிக்கையின் மூலம் உலவியின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் தனது காபியின் அடுத்த தொடர்ச்சியாக தனது Outlook மின்னஞ்சலுக்கு பின் வரும் வசதிகளை கூட்டி இருக்கிறது. இனி in-line replies செய்ய முடியும் அதாவது, புதிய Window திறக்காமல் ஜிமெயில் போல அப்படியே பதில் அனுப்பலாம்.

அடுத்தது மின்னஞ்சலை தவறுதலாக Delete செய்து விட்டால், Undo / ctrl + z செய்து திரும்பப் பெற முடியும். இதோடு SPAM Filter தரத்தை உயர்த்தி இருக்கிறது. இதெல்லாம் ஜிமெயில் செய்து பல காலம் ஆகிறது.

மைக்ரோசாப்ட் தற்போது தான் “ரமணா” படத்தில் வரும் அதிகாரிகள் போல தாமதமாக கண்டுபிடித்து கூறிக் கொண்டு இருக்கிறது. எங்க ஜிமெயில் கட்சிக்கு வாங்க என்று சொன்னால் கேட்க மாட்டேங்குறீங்க 😉 .

Google Logo Changes

கூகுளில் பணி புரிபவர்கள் கூகுள் பற்றி தெரிந்து வைத்து இருப்பதை விட அதிகளவு விவரங்கள் அதைப் பயன்படுத்துபவர்கள் தெரிந்து வைத்து இருப்பார்கள்.

கூகுள் ஊழியர்களுக்கே கூகுள் பற்றி விவரங்கள் கொடுத்து அவர்களை திகிலாக்குவார்கள். இது போல ஒரு நிகழ்ச்சி.

கூகுள் தன்னுடைய Google என்ற எழுத்தில் (லோகோவில்) இரண்டு எழுத்தில் (gl) மிகச் சிறு மாற்றம் செய்தது, அதையும் சிலர் கண்டு பிடித்துக் கூறி விட்டார்கள் 🙂 . கில்லாடியா இருக்காங்கய்யா!

கூகுள், இதை உண்மை தான் என்று ஒப்புக்கொண்டு “சிறு Pixel மாற்றங்களைக் கூட கண்டுபிடித்தது ஆச்சர்யம் அளிக்கிறது” என்று கூறி இருக்கிறது. இவங்க டெர்ரர் கூகுள் ரசிகர்கள் போல 🙂 . மேலே இருக்கும் GIF படம் இந்த மாற்றத்தை விளக்குகிறது. Image Credit – Mashable

ந்த ஜப்பான் காரங்க ஏதாவது செய்துட்டே இருக்காங்க..! அவங்க ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லாம இருக்கு. தற்போது சுற்றுலா வரும் மக்களுக்காக ஒரு சூப்பர் டூப்பர் வசதியை செய்து இருக்கிறார்கள்.

அதாவது இனி ஜப்பான் செல்பவர்கள் முக்கிய இடங்களில் இலவச Wifi வசதியைப் பெறலாம். அதுவும் எப்படி…! உங்களோட கடவுச்சீட்டை (Passport) காட்டினால் போதுமானது. கலக்குறாங்கய்யா!!

இவங்க கனவில் கூட அடுத்த வசதியை எப்படி கொண்டு வரலாம் என்று யோசிப்பார்கள் என்று நினைக்கிறேன் 🙂 .

2020 ஒலிம்பிக் ஜப்பானில் நடக்கப் போகிறது அப்போது அனைவரும் மற்ற நாடுகளில் இருந்து வரும் போது என்னென்ன பண்ணப் போறாங்களோ! இவங்க மனுசனே இல்லைங்க… தெய்வம் 🙂 .

கூகுள் கண்ணாடி வெளியிட்டு இருப்பது பற்றி உங்களுக்குத் தெரிந்து இருக்கும். இதன் மூலம் பல வசதிகளைப் பெற முடியும். இதை தற்போது பயன்பாட்டிற்கு / விற்பனைக்கு விட்டு இருக்கிறது.

விலை 1500 USD. கண்ணாடி போடாமையே தலை கிர்ர் அடிக்குதா! எனக்கு இது பிடிக்கவில்லை.. இதனால் ப்ரைவசி மிகவும் பாதிக்கப்படுகிறது. யாரும் அறியாமலே எவரையும் இதன் மூலம் நிழல் படம் எடுக்க முடியும். நம்ம ஊருக்கு எல்லாம் வந்தால் பெரிய சிக்கல் ஆகி விடும்.

காஞ்சு போனவன் / இதே வேலையா இருக்கிறவன் எல்லாம் இதை வைத்து பெரிய தில்லாலங்கடி வேலைகள் செய்து விடுவார்கள். இதை குறிப்பிட்ட இடங்களில் பயன்படுத்தத் தடை வந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

உதாரணத்திற்கு “இங்கு Google Glass க்கு அனுமதி இல்லை” என்ற அறிவிப்புக் காணப்படலாம்.

ந்த Blog எழுதுவதில் இரு வகை இருக்கு. Google Blogger / WordPress மூலமாக இலவசமாக எழுதுவது. இன்னொன்று இதற்கு என்று இடம் பெற்று (இதன் பெயர் தான் Hosting) அதில் நம் தளத்தை நிறுவுவது.

இந்த முறையில் தான் உலகம் முழுக்க உள்ள Blog அல்லாத தளங்கள் இயங்கி வருகின்றன.

உதாரணத்திற்கு நீங்கள் படிக்கும் தினமலர், தட்ஸ்தமிழ், Sify, Behindwoods, CNN, NDTV, BBC இது மாதிரி. யார் வேண்டும் என்றாலும் இது போல துவங்கலாம். இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால், இதைப் படியுங்கள்.

Read: வோர்ட்பிரஸ் (WordPress) பற்றி ஒரு விரிவான பார்வை

HostGatorஇது போல Hosting செய்ய பல நிறுவனங்கள் உள்ளது. என்னுடைய தளத்திற்கு நான் பயன்படுத்துவது “Hostgator” என்ற நிறுவனம்.

கடந்த மாதம் இந்த நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு  காரணங்களால் இதில் Hosting செய்து இருந்த தளங்கள் அனைத்தும் செயல் இழந்தன.

சும்மா ஒரு சின்ன கற்பனை செஞ்சு பாருங்க. உங்கள் அலுவலக Data center / Server room செயல் இழந்து விடுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்க என்ன செய்வீங்க..

IT Dept ல இருக்கிறவங்களுக்கு அழைத்து அவர்களை ஒரு வழி ஆக்கி விட மாட்டீர்களா!!

சரி ஆகிடுச்சா.. எப்ப தயார் ஆகும்? எவ்வளோ நேரம் ஆகும்? என்று கேட்டுட்டே இருப்பீங்க. நானெல்லாம் தர்ம அடி வாங்கி இருக்கிறேன் 🙂 .

இது மாதிரி ஒரு நிலை லட்சக்கணக்கான தளங்களை தங்கள் வாடிக்கையாளராக வைத்து இருக்கும் ஒரு நிறுவனத்திற்கு ஏற்பட்டால்…! அந்த நிலை தான் Hostgator க்கு ஏற்பட்டது. வாடிக்கையாளர்கள் சும்மா பிரிச்சு மேஞ்சுட்டாங்க!

வேறு நிறுவனத்திற்கு மாறுகிறேன்! பணத்தை திருப்பிக் கொடுங்க!! என்று போட்டு கும்மி விட்டார்கள். இதில் சில நிமிடங்கள் என்றால் கூட பரவாயில்லை என்று கூறலாம் ஆனால், பல மணி நேரங்கள் தடை ஏற்பட்டு விட்டது [கிட்டத்தட்ட ஒரு பகலுக்கும் மேல் (இந்தியாக்கு இரவு)].

நானெல்லாம் சுண்டக்கா தளம் வைத்து இருக்கிறேன்.. எனக்கு பெரிய பாதிப்பில்லை ஆனால், பெரிய தளங்களை நினைத்துப் பாருங்கள்.

தட்ஸ்தமிழ் தளம் அரை நாள் வேலை செய்யவில்லை என்றால்…! இதில் கிடைக்கும் விளம்பர வருமானம் முதற்கொண்டு அவர்களுக்கு பல வழிகளில் நட்டம் ஆகும்.

ஹிட்ஸ் போச்சு! பலர் இதனால் “எனக்கு மில்லியன் கணக்கில் நட்டம்.. நான் வழக்கு தொடரப் போகிறேன்” என்றெல்லாம் மிரட்டல் விடுத்துக்கொண்டு இருந்தார்கள்.

வாடிக்கையாளர் நிலையில் இருந்து பார்த்தால், இதன் வலி புரிந்து கொள்ள முடியும். இரண்டு பக்கமுமே பாவம் தான் ஆனால், தவறு Hostgator பக்கம் தான்.

இவர்கள் இன்னமும் சிறப்பான முன்னேற்பாடுகளை BCP (Business Continuity Plan) செய்து இருந்து இருக்க வேண்டும் ஆனால், என்ன முன்னேற்பாடுகளை செய்தாலும் சில நேரங்களில் அனைத்தையும் மீறி இது போல நடக்கும்.

இத்தனை தொழில்நுட்பம் வந்தும் காணாமல் போன விமானத்தைக் கண்டுபிடிக்க திணறுகிறார்கள் அல்லவா! அது போல.

கடைசியில் மன்னிப்பு! கேட்டுக்கொண்டு தாமதமாக சரி செய்தார்கள். எத்தனை பேர் கடுப்பாகி வேற நிறுவனம் சென்றார்களோ! 🙂 நான் இந்த நிறுவனத்தை என்னுடைய Blog க்கு 5 வருடமாகப் பயன்படுத்துகிறேன். இது வரை எனக்கு பெரியளவில் எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை.

Passportசீனப் பயணி ஒருவர் தன் 4 வயது மகனுடன் தென் கொரியா சென்று இருந்தார்.

அங்கே இருந்து சீனா வரும் நேரம் தன்னுடைய கடவுச்சீட்டை தனது மகனிடம் கொடுக்க, பையன் தன்னுடைய ஓவியத் திறமையை மிகச் சிறப்பாகக் காட்டி விட்டான் 🙂 🙂 .

அப்பாக்கு மீசை, தாடி, அவன் படம் எல்லாம் “பக்காவாக” வரைந்து விட்டான்.

இதை எடுத்துட்டுப் போனால் விமான நிலைய அதிகாரிகள் பிம்பிளிக்கி பிளாக்கி என்று கூறி விட்டார்கள். அதனால் இருவரும் உதவிக்கு சீன தூதரகத்தை அணுக வேண்டியதாகி விட்டதாம். Image credit – Google

நல்லவேளை நான் என் பையன் கிட்ட கொடுக்கல.. ஏற்கனவே என் முகத்தையும் கடவுச்சீட்டு படத்தையும் மாற்றி மாற்றி பல முறை பார்த்து சந்தேகத்தோடு தான் உறுதி செய்கிறார்கள். இதில் இவன் ஓவிய வேலையும் காட்டி விட்டால்… சோலி சுத்தம் 🙂 .

கடைசியா, என்னுடைய தொழில் நுட்பப் பதிவிற்குக் கடந்த சில மாதங்களாக வரவேற்பு அதிகமாக உள்ளது. என்ன விசயம்னு தெரியல! நான் எப்போதும் போலத்தான் எழுதுகிறேன். எதோ நல்லது நடந்தா சரி 😉 .

கொசுறு

இந்தியாவில் யாராவது “RuPay” பயன்படுத்தி இருக்கிறீர்களா? வெளிநாட்டுக்கு (1. VISA – USA 2. MASTER CARD – USA ) நம் பணத்தை கொடுக்காமல் RuPay க்கு ஆதரவு கொடுக்கலாம். நான் இந்த முறை ஊருக்குச் சென்ற போது சில கடைகளில் இந்த வசதியைப் பார்த்தேன்.

இதில் ஏதாவது குறை இருக்கிறதா?

{ 14 comments… add one }
 • Mohamed Yasin June 9, 2014, 11:25 AM

  தொழில்நுட்ப செய்திகளை பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி…. சில தொழில் நுட்ப செய்திகளை இணையத்தில் ஆங்கிலத்தில் படித்தால் 50% புரியும், தமிழில் படித்தால் 30% தான் புரியும்.. உங்க தளத்துல வர செய்திகள் 80% எனக்கு புரிகிறது..

  நீங்க பெரும்பாலும் சாதாரண மொழி நடையில், எளிமையாக, எல்லோரும் புரிந்து கொள்ளும் படி எழுதுவது சிறப்பான ஒன்று.. கண்டிப்பாக என்னை போல் பலருக்கும் இது பயன்படும் என நம்புகிறேன்..

  தகவல் தொழில்நுட்ப துறையில் பணி புரிபவர்களுக்கு வேண்டுமானல் இது போன்ற செய்திகள் தெரிந்ததாக இருக்கலாம்.. அல்லது முக்கியமற்றது எனவும் கருதலாம்.. என்னை போல் மற்ற துறையில் பணிபுரிபவர்களுக்கு உங்கள் தளம் ஒரு வரப்பிரசாதம்…உங்கள் பணி தொடரட்டும்…

 • Rajan June 9, 2014, 3:21 PM

  இணைய தொழில் நுட்ப செய்திகள் வழக்கம் போல் அருமை

 • janaki June 9, 2014, 3:45 PM

  kya baath hai mottabhai !!!
  உங்க ப்ளாக் ல இருந்து தான் டெக்னிகல் தமிழ் கத்துக்கணும் அண்ணா…great narration …

  //நல்லவேளை நான் என் பையன் கிட்ட கொடுக்கல..
  கிட்ஸ் ஆர்ட் ah என்கரேஜ் பன்லேனாலும் பரவாயில்லை.. but discourage பண்ணாதிங்க…so do encourage them 🙂

 • akila June 9, 2014, 5:27 PM

  great போஸ்ட் கிரி..எனக்கு கூட நிறைய புரிய ஆரம்பிச்சுடுச்சு உங்க இணைய தொழில் நுட்ப செய்திகள்.. 🙂

  //நல்லவேளை நான் என் பையன் கிட்ட கொடுக்கல.. ஏற்கனவே என் முகத்தையும் கடவுச்சீட்டு படத்தையும் மாற்றி மாற்றி பல முறை பார்த்து சந்தேகத்தோடு தான் உறுதி செய்கிறார்கள். இதில் இவன் ஓவிய வேலையும் காட்டி விட்டால்… சோலி சுத்தம் //

  🙂 🙂

 • ராஜ்குமார் June 9, 2014, 9:56 PM

  நேத்துதான் ஒரு எக்ஸ்டென்ஷன் ஆட் செஞ்சேன் (Drag Drop) ஒன்னும் பிரச்சினை இல்லை.

  கூகுளின் சிறு சிறு மாற்றங்களை கண்டுபிடிக்கிறவங்களுக்கு வேற வேலை இல்லையோ என்னவோ.

  இலவச wifi – ஹி ஹி ஹி எனக்கு எங்க பாஸ் கத்து கொடுத்தது. எந்த ஊருக்கு போனாலும் அங்க உள்ள ஏர்போர்ட் wifi (இந்தியாவ சேக்காதீங்க நாம இன்னும் 3G யே சரியா கொடுக்கல) ப்ரீயா யூஸ் பண்றது. பத்தாததுக்கு Starbucks, McDonalds அங்கெல்லாம் ஒரே ஒரு கப் காபி வாங்கி மணிகணக்கா உட்காந்திருக்குறது… (கம்பெனி வேலை தாம்பா)

  நான் இப்போ அவுட்டர்நெட் பத்தி யோசிச்சிகிட்டு இருக்கேன். ஒரு ஸ்ட்ராங்கான wifi ரூட்டரை பூமிக்கு மேலே நிறுத்திட்டா என்ன ? அரேபியன் பாலைவனத்துலேர்ந்து அமேசான் காடுகள் வரை எங்கு வேணாலும் வாட்ஸ்அப் பண்ணலாமே. (சிக்னல் கிடைக்கலைன்னு இமயமலை மேல ஏறசொல்லாம இருந்தா சரி)

 • ராமலக்ஷ்மி June 9, 2014, 10:31 PM

  கூகுள் க்ளாஸ் உபயோகித்துப் பார்த்தேன். படம் நன்றாக எடுக்கிறது. மக்கள் அதை நல்ல விதத்தில் பயன்படுத்துவார்களா என்பது கேள்விக்குறிதான்.

  பையனிடம் மாட்டிக் கொண்ட கடவுச்சீட்டு நல்ல தமாஷ்:)!

  உங்கள் தொழில் நுட்பப் பதிவுகளுக்கு வரவேற்பென்பது புதிய விஷயமா என்ன:)? யூத்ஃபுல் விகடன் இயங்கிய போது முகப்பில் தவறாமல் பரிந்துரைக்கப்படுமே!

 • sarath June 12, 2014, 2:53 PM

  அருமையான தொழில் நுட்ப செய்திகளுக்கு நன்றி கிரி .. கோச்சடையான் பற்றி அடுத்த பதிவு எழுதுவதாக கூறி இருந்தீர்கள். எப்போது எழுதுவீர்கள்?

 • கிரி June 16, 2014, 10:08 AM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @யாசின் 100% அனைவருக்கும் புரியும்படி எழுத நான் முயற்சிப்பதே இல்லை.. ஏனென்றால் அப்படி முயற்சித்தால் 80% புரிந்த உங்களுக்கு 50% கூட புரியாது 🙂 குழம்பி விடும். அதிக விளக்கம் குழப்பத்தையே தரும்.

  @ஜானகி ஏதாவது என் கூட பிரச்சனை என்றால் பேசித் தீர்த்துக்கலாம் 🙂

  @ராஜ்குமார் 🙂 🙂 எப்படி இப்படியெல்லாம் யோசிக்கறீங்க! கூகுள் அதற்கும் ஏற்கனவே முயற்சி செய்துட்டு இருக்காங்க.. நிசமாத்தான்.

  @ராமலக்ஷ்மி பார்ரா.. எப்படிங்க உங்களுக்கு Google Glass கிடைத்தது!!! அருமை. எங்களுகெல்லாம் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைத்து இருக்கு.

  @சரத் தற்போது தானே ஒன்று எழுதி இருக்கிறேன்… அடுத்ததை இன்னும் சிறிது நாள் சென்ற பிறகு பொருத்தமான நேரத்தில் எழுதுவேன். அடிக்கடி எழுதினால் மதிப்பு இருக்காது 🙂 .

 • விமான நிலைய அதிகாரிகள் பிம்பிளிக்கி பிளாக்கி என்று கூறி விட்டார்கள்.

  படித்துக் கொண்டே வந்த போது சப்தம் போட்டு சிரித்து விட்டேன்.

 • Arjun Sridhar UR July 6, 2014, 12:40 PM

  நான் RuPay ஃபெடரல் வாங்கியில் வாங்கினேன். இப்போழுது எப்ப வாங்கினாலும் RuPay யில் தான் போருட்களை வாங்குகிறேன். என்ன வருத்தம் என்றால் முக்கியாமான அதுவும் அதிகம் வருமானம் வரும் கடைகளில் RuPay இல்லவே இல்லை. இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இது பற்றி ஒரு பிளாக் பொடலாம்.

  என்னை மறந்துட்டிங்களா ? ஆள் இல்லாத கடையில் இப்ப டீ ஆத்திக்கொண்டிருக்கிறேன் (என் பிளாக்கை சொன்னேன்)…

 • கிரி July 9, 2014, 2:01 PM

  @ஜோதிஜி 🙂

  @அர்ஜுன் RuPay தகவலுக்கு நன்றி.

  உங்கள் தள செய்திகள் எனக்குத் தொடர்பு இல்லாதது எனவே ஆர்வம் காட்டவில்லை. உங்களை மறக்கவில்லை 🙂 . தற்போது நீங்கள் தான் வேலையாகிட்டீங்க போல.. ரொம்ப நாளா ஆளைக் காணோம்.

 • விக்ரம் November 26, 2014, 10:00 AM

  அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்
  கூகுல் டிைரைவில் நமது பைலை எவ்வாறு ஆன்ராடில் மொபைலில் டவுண்லோடு செய்வது

 • கிரி November 26, 2014, 10:15 AM

  விக்ரம் நான் ஆண்ட்ராயிடு பயன்படுத்துவதில்லை அதனால் அதில் எப்படி இருக்கும் என்று தெரியாது ஆனால், நீ கூகுள் டிரைவ் App நிறுவிக்கொண்டால், அனைத்தையும் மொபைலிலேயே பார்க்க முடியும்.

  ஒருவேளை இந்த App ஏற்கனவே நிறுவி இருந்தால், அந்த குறிப்பிட்ட ஃபைலை தரவிறக்கம் (Download) செய்ய வசதி இருக்காது (ஆண்ட்ராயிடில் தெரியவில்லை). எனவே அந்த ஃபைலை Share /Export வசதியைப் பயன்படுத்தி மின்னஞ்சலுக்கு அனுப்பி மின்னஞ்சலை திறந்து நம் மொபைலுக்கு தரவிறக்கம் செய்யலாம். இது தலையை சுற்றி மூக்கை தொடும் வேலை ஆனால், நேரடி தரவிறக்கத்திற்கு வசதி இல்லையென்றால் இது தான் செய்ய முடியும்.

  என்னைப் பொருத்தவரை நீ இதை தரவிறக்கம் செய்யவேண்டிய அவசியமே இல்லை. கூகுள் டிரைவ் App பயன்படுத்தினாலே போதும்.

 • Arun Govindan November 26, 2014, 10:46 AM

  விக்ரம்
  நீங்க கூகிள் டிரைவ் app ப உங்க android phone “play store” மூலமா install பண்ணுங்க. google drive icloud மாதிரி தான்

  install செஞ்சு உங்க LOGIN பண்ணதும் files sync ஆயிடும்

  – அருண்

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz