சஷ்டி விரதம்

Murugan 2குறிப்பு : இந்தப் பதிவு பகுத்தறிவாளர்களுக்கு / கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு உண்டானது அல்ல. தொடர்வது சொந்த விருப்பம்.

திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது.

வாழ்க்கையில் நாம் எதற்கு ஓடிக்கொண்டு இருக்கிறோம் / எதற்கு சம்பாதிக்கிறோம் என்பதற்கு அர்த்தம் கொடுப்பது குழந்தை தான்.

அந்தக் குழந்தை பெரியவனா/ளாகி பெற்றோரை மதிக்கிறார்களா என்பது போன்ற உள் விசயங்களுக்கு நான் வரவில்லை. அது மிகப்பெரிய விவாதக் களம் மற்றும் அதில் பேச நிறைய இருக்கிறது.

சுருக்கமாக ஒரு குழந்தை பெரியவளா/னாகி நடந்து கொள்ளும் முறைக்கு, பெற்றோர் மட்டுமே காரணம் என்பதில் எனக்கு 100 % நம்பிக்கையுண்டு. “ஜீன்” போன்ற சில விதி விலக்குகளுடன்.

எனக்கு இரண்டு குழந்தைக இருக்கிறார்கள் என்றாலும் குழந்தை இல்லாமல் இருப்பவர்களை பார்க்கும் போது அடையும் மனவருத்தம் கொஞ்ச நஞ்சமில்லை. ஏனோ என்னுடைய எதிரிக்கு கூட இந்த நிலை வரக் கூடாது என்று நினைப்பேன்.

உலகில் எத்தனையோ செல்வங்கள் உங்களிடம் இருந்தாலும் குழந்தைச் செல்வம் என்ற ஒன்று இல்லை என்றால், அதில் உள்ள வருத்தம் அதை அனுபவிப்பவர்களால் மட்டுமே உணரே முடியும்.

தற்போது மருத்துவ துறையில் பல முன்னேற்றங்கள். பலரின் உடல் / மன ரீதியான பிரச்சனைகளை சரி செய்து குழந்தை பிறப்பதற்கான வழிகளை ஏற்படுத்தி தருகிறார்கள்.

எனவே, சரியான நபரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மருத்துவம் எப்படி மிக முக்கியமோ அது போல கடவுள் நம்பிக்கையும். முன்னரே கூறியபடி பின்வருபவை கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமானது என்று கூறிக் கொள்கிறேன்.

எவரும் கை விட்டால் நமக்கு நினைவிற்கு வருவது கடவுள் மட்டுமே! கடவுளை மறந்து இருப்பவர்கள் கூட கஷ்டம் வரும் போது நினைத்துப் பார்ப்பார்கள். யாருமே உதவாத போது கடவுள் உதவுவார் என்ற நம்பிக்கை பெரும்பாலானவர்களுக்கு உண்டு.

தீபாவளி விடுமுறைக்கு சென்று இருந்த போது, என்னுடைய அம்மா, அக்கா, அண்ணன் அனைவரும் சஷ்டி விரதம் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். சஷ்டி விரதம் பற்றி முன்னரே கேள்விப்பட்டு இருந்தாலும் அதனுடைய தாக்கம் எப்படி இருக்கும் என்று தெரியாது.

என்னுடைய பெண் நண்பர் ஒருவரும் இது பற்றி கூறி இருந்தார். அப்போது சரி என்று கேட்டுக்கொண்டேனே தவிர பெரிய சுவாரசியம் காட்டவில்லை. ஒருவேளை அவரிடம் மின்னஞ்சலில் உரையாடியதால் கூட இருக்கலாம்.

இந்த முறை சஷ்டி விரதம் இருப்பதால், வேண்டுதல்கள் நிறைவேறுவதைப் பற்றி அக்கா கூறியதைக் கேட்ட உடன், அட! இவ்வளவு விஷயம் இருக்கிறதா! என்று தோன்றியது. சஷ்டி விரதம் தீபாவளி சமயத்தில் ஆறு நாட்கள் இருக்க வேண்டும்.

ஒரு சிலர் மிகக் கடுமையாக இருக்கிறார்கள் [அப்பவும் ரமலான் நோன்பு அளவிற்கு இல்லை] சிலர் அந்த அளவிற்கு இருப்பதில்லை.

என் அண்ணன், “காலையில் உப்புமா சாப்பிடலாம், அதிக பசியோடு இருந்தால் கடவுளிடம் சாப்பாடு நினைவு தான் இருக்கும் மற்றது நினைவிற்கு வராது” என்று கூறினார்.

இதில் எது சரி என்று எனக்குத் தெரியவில்லை. எனவே உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் கேட்டு அந்த வழிமுறைகளை / விரத நாட்களை பின்பற்றலாம்.

இந்த விரதம் இருப்பதால் நீதி மன்ற வழக்குப் பிரச்சனை, குடும்பப் பிரச்சனை, உடல் ரீதியான பிரச்சனை மற்றும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை போன்ற வேண்டுதல்கள் நிறைவேறுவதாகக் கூறினார்கள்.

குழந்தை இல்லாதவர்கள் எத்தனையோ மருத்துவ முயற்சிகளை செய்து இருக்கலாம், அதோடு இதையும் நிச்சயம் முயற்சித்துப் பார்க்கவும், இதுவரை முயற்சிக்காமல் இருந்தால். ஆறு நாட்கள் தானே! லாபம் இல்லை என்றாலும் நஷ்டம் இல்லையே.

என்னுடைய அக்கா, மனைவி உட்பட மூவர் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு நீண்ட வருடங்கள் குழந்தை இல்லாமல் சஷ்டி விரதம் இருந்த பிறகு அடுத்த வருடம் குழந்தை பெற்றதாகக் கூறினார்கள்.

Muruganநான் பில்டப்பிற்க்காக இதை கூறவில்லை. 100 % உண்மை. நான் இதில் பொய் கூறி எனக்கென்ன வரப்போகிறது. எனவே குழந்தை இல்லாதவர்கள் தயவு செய்து ஒரு முறையாவது முயற்சித்துப் பார்க்கவும்.

அதோடு உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்காவது குழந்தை இல்லாமல் இருந்தால் சஷ்டி விரதம் பற்றி கூறவும். ஒருவேளை அவர்களுக்கு இது பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்புண்டு.

நான் இது பற்றி கேள்விப்பட்ட போது சஷ்டி விரதம் முடிந்து விட்டது. வட போச்சே! மாதிரி ஆகி விட்டது. இனி அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டும். நான் முருகனின் பக்தன் என்பதால் இயல்பாகவே எனக்கு இதில் ஆர்வம் வந்தது.

நானும் இனி வருடாவருடம் சஷ்டி விரதம் இருக்கப் போகிறேன் என்று முடிவு செய்து இருக்கிறேன். பிரச்சனைகள் இல்லாத மனிதர் யார்? தீபாவளி நேரத்தில் வருவதால் பல விருந்து கட் ஆகும் :-). ஆறு நாள் வைத்தாலும் “சரியான” நேரத்தில் தாம்பா வைத்து இருக்காங்க!

விரதம் இருக்கிறோம் என்று சாப்பிடாம இருப்பது எனக்கு பெரிய விசயமில்லை ஆனால், சைட் அடிக்காம இருக்கிறது தான் எனக்கு மிகப் பெரிய சிரமம், அதுவும் தற்போது நான் இருக்கும் சிங்கப்பூரில் ரொம்ப ரொம்ப சிரமம் 😉 .

சபரிமலைக்கு மாலை போட்டு அடக்க ஒடுக்கமா இருக்கணும் என்று இருந்த போது தான் தெரிந்தது, ஒரு நாளைக்கு நாம எத்தனை ஃபிகரை சைட் அடிச்சுட்டு இருந்து இருக்கோம்னு :-D.  சஷ்டி விரதம் 6 நாள் தான் அதனால் பரவாயில்லை 🙂 .

கடைசியா, எனக்கு ஒரு சந்தேகம்.

பகுத்தறிவாளராக / கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பவர் ஒருவருக்கு குழந்தை இல்லை என்றால், அனைத்து மருத்துவ முயற்சிகளையும் செய்தும் குழந்தை கிடைக்கவில்லை என்றால், இது போல விரதம் இருந்து பார்ப்பார்களா? அல்லது தங்களது கொள்கையில் தீவிரமாக இருந்து முயற்சிக்க மாட்டார்களா!

இதற்கு விரதம் இருக்க மாட்டேன் / கொள்கையை அப்படியே பின்பற்றுவேன் என்று குழந்தை உள்ள பகுத்தறிவாளர் / கடவுள் நம்பிக்கை இல்லாதவர் பதில் தரக் கூடாது.

குழந்தை இல்லாத அனைவருக்கும் விரைவில் குழந்தை கிடைக்க முருகனை வேண்டுகிறேன். கடவுளை நம்புங்கள் அதோடு உங்கள் கடமைகளையும் சரியாகச் செய்யுங்கள். நம்பிக்கை தான் வாழ்க்கை.

தொடர்புடைய பதிவுகள்

ஓதி மலை முருகனின் அற்புதம் [July 2008]

இந்தப் பதிவு நான் வலைப்பதிவு எழுதத் துவங்கிய சமயத்தில் எழுதியது. இந்தப் பதிவை இன்று வரை பலர் வந்து படித்துக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் பின்னூட்டம் [கமெண்ட்] வந்து கொண்டு இருக்கிறது.

பழைய பதிவிற்கு தொடர்ந்து பின்னூட்டம் வரும் ஒரே பதிவு இது தான். இதில் விசாரித்தவர்கள் கோவிலுக்கு போனார்களா என்பது எனக்குத் தெரியாது ஆனால், விசாரிப்புகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அழகன் முருகன் [Feb 2012]

இந்தப் பதிவு முருகன் பற்றி ஜாலியா எழுதியது :-). இந்துக்கடவுள் பற்றிய பதிவிற்கு பின்னூட்டம் போட்ட ஜமால் மற்றும் அப்துல்லா பற்றி இன்றும் நினைவு இருக்கிறது.

கொசுறு

நான் கடந்த இரண்டு வாரம் தீபாவளி விடுமுறையில் ஊருக்கு சென்று விட்டேன். இணையம் பக்கம் வரவில்லை. பயணக் குறிப்புகள் தான் வந்தவுடன் வழக்கமாக எழுதுவேன் ஆனால், இந்தப்பதிவு வந்த உடன் கூற வேண்டும் என்று நினைத்து இருந்ததால் இதை முதலில் எழுதி விட்டேன்.

விரைவில் மற்ற தகவல்களை எழுதுகிறேன். நினைவு வைத்து விசாரித்த அருண், காயத்ரி நாகா, கௌரிஷங்கர், சூர்யா மற்றும் மகேஷ் அனைவருக்கும் நன்றி.

{ 14 comments… add one }
  • Ranga November 14, 2013, 10:47 AM

    superbah sonnenga

    சபரிமலைக்கு மாலை போட்டு அடக்க ஒடுக்கமா இருக்கணும் என்று இருந்த போது தான் தெரிந்தது, ஒரு நாளைக்கு நாம எத்தனை ஃபிகரை சைட் அடிச்சுட்டு இருந்து இருக்கோம்னு

  • Gowrishankar.P November 14, 2013, 11:59 AM

    NOV 14th அன்னக்கி பதிவு எழுதீட்டு Children’s Day பத்தி எதுவும் சொல்லலையே…..

  • Mohamed Yasin November 14, 2013, 12:22 PM

    கிரி.. எனக்கு இயல்பாகவே கடவுள் பக்தி உண்டு. நான் பல கோவில்களுக்கு என் நண்பன் சக்தியுடன் சென்று உள்ளேன். ஆனால் இன்று வரை மதம் சம்மந்தமான எந்த ஒரு உரையாடலையும் இருவரும் பேசியது கிடையாது. என்னை பொறுத்தவரை அடுத்தவர்களின் நம்பிக்கையை என்றும் நான் தடுத்ததில்லை. நம்பிக்கை என்ற பொதுவான ஒரு விஷியம் இன்று நம்மில் பல பேரை வாழ வைக்கிறது அதை தடுப்பது சரியல்ல….என்பது எனது விருப்பம்..

  • Anu November 14, 2013, 2:02 PM

    உண்மை கிரி! மிகவும் அற்புதமான 6 நாட்கள். வயிற்றுக்கு ஓய்வு,மனதிற்கு நிறைவு. நான் gulf ல் இருக்கிறேன். இந்த நாட்கள் மிகவும் புனித மானவை (like their Ramadan month) தீபாவளியை விட இதற்காக காத்திருப்போம்.

  • akila November 14, 2013, 2:37 PM

    நன்றி கிரி..அருமையான பதிவு.சஷ்டி விரதம் பற்றி தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள உதவும்.

  • Logan November 14, 2013, 6:40 PM

    பகிர்விற்கு நன்றி கிரி,

  • scssundar November 14, 2013, 7:49 PM

    நல்ல பதிவு அனைவருக்கும் சஷ்டி பற்றி அறிய வைத்தீர்கள்…

  • r.v.saravanan November 14, 2013, 8:06 PM

    முருகா என் அப்பனே சரணம்

  • gunamanohar November 15, 2013, 5:12 AM

    நன்றி

  • Naaradhar November 15, 2013, 9:05 AM

    இதைத்தான் சட்டியில் (சஷ்டியில்) இருந்தால் அகப்பையில் (உள்ளே இருக்கும் பையில்) வரும். என்றார்கள். ஆதாரம் : வாரியார் ஸ்வாமிகளின் உபந்யாசத்திலிருந்து.

  • Arun November 17, 2013, 9:00 AM

    ரொம்ப வித்தியாசமா இருக்கு தல இந்த பதிவு
    முருகன் பிள்ளையார் இப்படி எல்லா கடவுளுமே எனக்கு புடிக்கும்
    அதனால உங்க கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது

    – அருண்

  • rajesh v November 19, 2013, 5:43 PM

    விரதம் இருக்கிறோம் என்று சாப்பிடாம இருப்பது எனக்கு பெரிய விசயமில்லை ஆனால், சைட் அடிக்காம இருக்கிறது தான் எனக்கு மிகப் பெரிய சிரமம்,

    —————————————————————————–
    adhunaladhan என் அண்ணன் கிரி எனக்கு பதிலாக இனி வருடா வருடம் எனக்கும் சேர்த்து விரதம் இருப்பார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

  • கிரி November 19, 2013, 7:18 PM

    அனைவரின் வருகைக்கும் நன்றி

    @கௌரிஷங்கர்

    இரண்டு வாரம் கழித்து ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்.. அதைப் பற்றி ஒன்றும் கூறவில்லையே 🙂

    @யாசின் இது தான் பிரச்சனை இல்லாதது.

    @அனு நீங்கெல்லாம் கூறும் போது தான்.. நான் எவ்வளவோ தவற விட்டு இருக்கிறேன் என்று தோன்றுகிறது.

  • Gowrishankar.P November 20, 2013, 12:28 PM

    “இரண்டு வாரம் கழித்து ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்.. அதைப் பற்றி ஒன்றும் கூறவில்லையே”

    நீங்க எப்போதும் சூப்பரா பதிவு எழுதுவீங்க, அதிலும் உங்களுக்கு புடிச்ச மேட்டர பத்தி எழுதும்போது சொல்லவாவேனும். முருகன் எனக்கும் Favorite-தான்.

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz