தணிக்கை – மலாலா – தற்கொலை – விவாகரத்து

SMSவங்கியில் நாம் ஏதாவது பரிவர்த்தனை செய்தால் நம்முடைய மொபைலுக்கு குறுந்தகவல் [SMS] அனுப்பும் முறைக்கு முன்பு ஒரு சில வங்கிகள் மட்டும் தான் பணம் வசூலித்தார்கள்.

தற்போது அனைத்து வங்கிகளும் வசூலிக்கிறார்கள்.

நீங்கள் இந்த வசதியை பயன்படுத்தவில்லை என்றால் இதற்கு கட்டணம் வசூலித்தால் வங்கிக்கு தெரியப்படுத்தி தடுக்கவும் ஆனால், இது ரொம்ப நல்ல சேவை இதை தொடர்வது தான் நல்லது / பாதுகாப்பானது.

இதெல்லாம் வங்கி தர வேண்டிய அடிப்படை சேவை ஆனால், இதற்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள். எப்படி எல்லாம் சுரண்ட முடியும் என்று வங்கிகளிடம் தான் பயிற்சி எடுக்கணும் போல.

இந்தக் கட்டணம் மூலம் ஆண்டுக்கு கோடிக்கணக்கில் வங்கிகள் லாபம் சம்பாதிக்கின்றன.

அரசு நினைத்தால் இதை தடுக்க முடியும் ஆனால், அரசு என்பது பணக்காரர்களை பற்றி மட்டும் தான் அதிகம் கவலைப்படும் என்பதால், இதற்கு கட்டணத்தை திரும்ப பெறும் திட்டம் எதுவுமில்லை என்று சிதம்பரம் கூறி விட்டார்.

நடிகர் & தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்

மத்திய அரசு நடத்துற சென்சார் போர்டு அவ்வளவு சின்சியரா நடத்துறாங்க. ஒரு படத்துக்கு சம்பந்தமில்லாம பாக்குற முதல் ஆளுங்க அவங்கதான். அதுக்கு அவ்வளவு ரூல்ஸ் இருக்கு. 5 பேர் பாக்கணும். அதுல 2 லேடீஸ் இருக்கணும்.

படம் புரொஜக்‌ஷன் ரூம்லகூட தயாரிப்பாளர், இயக்குநர் இருக்கக் கூடாது.

ஆனா, ரிலீஸ் முன்னாடித்தான் இவங்களுக்கும் (வரிவிலக்கு குழு) படம் போட்டு காட்றோம். அவங்க வீட்டு வேலைக்காரன்ல இருந்து, தோட்டக்காரன் வரைக்கும் வந்து படம் பாக்குறாங்க. இவங்க இப்படி பாத்தா ஒரு தயாரிப்பாளருக்கு என்ன பாதுகாப்பு இருக்கு சொல்லுங்க.

என்கிட்ட எல்லாத்துக்கும் ஆதாரமிருக்கு. அதுவும் ஒரு பெரிய ஸ்டார் படம்னா ஒரு பிக்னிக் மாதிரி வீட்டுல சொந்தக்காரங்கள்ல இருந்து எல்லாத்தையும் கூட்டிட்டு வந்திராங்க. நன்றி http://tamil.thehindu.com

தன்னோட தயாரிப்பில் மனைவியின் இயக்கத்தில் வெளி வந்த வணக்கம் சென்னை திரைப்படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காததால் அது பற்றி உதயநிதி ஸ்டாலின் கருத்து கூறியதில் ஒரு பகுதி தான் மேலே இருப்பது.

இந்த அதிகார துஷ்பிரயோகம் இங்கு மட்டுமல்ல அனைத்து இடங்களிலும் நடக்கிறது. அதாவது அரசு வேலையில் முக்கியப் பொறுப்பில் இருந்தால், உங்களால் உங்கள் பதவிக்கு உட்பட்ட அளவில் எது வேண்டும் என்றாலும் செய்ய முடியும், எவரும் கேட்க முடியாது.

இந்த வழக்கம் எந்த அளவிற்கு இந்தியாவில் கேவலமாக இருக்கிறது என்றால், ஒழுக்கம் / பாதுகாப்பு அதிகம் பின்பற்ற வேண்டிய விமான நிலையத்தில் கூட இமிக்ரேசன் வரிசையில் வராமல் தங்களுக்கு தெரிந்தவர் இருந்தால், பைபாஸ் செய்து போக முடியும்.

எங்கும் விதி மீறல் தான்.

உதயநிதி கலைஞர் பேரன் மற்றும் இதற்கு முன் இவர்கள் ஆட்சிக் காலத்தில் நடந்த சம்பவங்களை எல்லாம் மறந்து இதை நோக்கினால், இது நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. நான் கூறுவது வரிவிலக்கு பற்றி அல்ல சென்சார் போர்டில் நடக்கும் விதிமீறல்கள்.

“வரி விலக்கு” என்பதே திரைப்படங்களுக்கு கூடாது என்பது தான் என் நிலைப்பாடு [சில விதிவிலக்குகள் தவிர்த்து]. அனைவரும் செய்யும் தொழில் போல திரைப்படங்கள் தயாரிப்பதும் கோடிக்கணக்கான முதலீட்டில் ஒரு தொழில்.

அப்படி இருக்கையில் இவர்களுக்கு மட்டும் என்ன தனிச் சலுகை? பாதிப் படம் குப்பை மற்றும் திருட்டுப் படங்கள். இந்த லட்சணத்தில் இதற்கு வரிச் சலுகையா! நியாயமே இல்லாத செயல்.

“தகவல் அறியும் உரிமைச் சட்டம்” பற்றி “அங்குசம்” என்று படம் எடுத்த ஒருவருக்கு, ஐந்து லட்சம் லஞ்சம் கொடுத்தால் தான் வரிவிலக்கு கொடுப்பேன் என்று வரிவிலக்கு பொறுப்பில் உள்ளவர் கூறியதால், “நான் எடுத்த படமே லஞ்சம் வாங்கக் கூடாது என்பதை வலியுறுத்தித் தான்.

இதில் நான் லஞ்சம் கொடுத்தால் எப்படி? வரிவிலக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை லஞ்சம் கொடுக்க மாட்டேன்” என்று கூறி விட்டார். இதை அறிக்கையாகவும் வெளியிட சர்ச்சையாகி தற்போது வரிவிலக்கு கொடுத்து இருக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் இருக்கிறது வரிவிலக்கு நிலை.

இந்த முறையால் குறிப்பிட்ட அதிகாரிகள் மட்டும் நோகாமல் பணம் சம்பாதிக்கிறார்கள். அவனவன் கஷ்டப்பட்டு படமெடுத்தால் இவர்கள் எதுவும் செய்யாமல் பணம் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

என்ன ஒரு கேவலமான நிலை!

இது போல எத்தனை படத்திற்கு லஞ்சம் வாங்கி இருப்பார்கள்? எவ்வளவு சம்பாதித்து இருப்பார்கள்! இந்த வரிவிலக்கு சலுகையை ஆரம்பித்து வைத்ததே கலைஞர் தான்.

அதை தனக்கு வேண்டியவர்களுக்கு தகுந்த மாதிரி பயன்படுத்திக் கொண்டு இருப்பது ஜெ. மக்கள் பணம் எப்படி எல்லாம் வீணடிக்கப்படுகிறது பாருங்க!

மலாலா & நோபல்

g9530_malala.inddதாலிபான்களால் தாக்கப்பட்ட மலாலாக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ரொம்ப ஓவர் என்பது என்னுடைய கருத்து.

சிறு வயதிலேயே பலரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார், தைரியமாக கருத்துக்களை வெளியிடுகிறார் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.

அதற்காக நோபல் பரிசுக்கு பரிந்துரை என்பதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர்.

பல சாதனைகள் செய்து, உலகில் உள்ள மக்கள் நலனுக்காக போராடியவர்கள் எல்லாம் வரிசையில் இருக்க, இவருக்கு கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைப்பது, எந்த வகையில் நியாயம் என்று எனக்கு புரியவில்லை.

மலாலாக்கு இன்னும் வயது இருக்கிறது, சாதிக்க வாய்ப்பும் இருக்கிறது. எனவே, அதற்குள்ளே கொடுப்பது என்பது ஏற்புடையதாக இல்லை. நல்லவேளை நோபல் குழுவினர் மலாலாவை தற்போது தேர்ந்தெடுக்கவில்லை.

மலாலாவிற்கு மேற்கத்திய நாடுகள் கொடுக்கும் அதீத முக்கியத்துவம், முஸ்லிம் நாடுகளை கடுப்படிக்கவே என்று நினைக்கிறேன்.

நோபல் பரிசு கேள்விப்பட்டு இருப்பீர்கள் ஆனால், அது யாரால், எந்த நோக்கத்திற்கு கொடுக்கப் படுகிறது என்பது தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். நோபல் பரிசு உருவான கதை – ஆல்ஃப்ரெட் நோபல்

சித்தி [1966]

Padmini - Movie Sithi 1966பத்மினி நடித்த ஒரு படம் “சித்தி”. குடும்பத்தில் 8 குழந்தைகள், இவர் மூத்தவர். இவர் வேலை செய்யும் வீட்டில் உள்ள பெண்ணுக்கு குழந்தை பிறந்து இருக்கும்.

பத்மினி, “நேற்று பெண்ணின் முகம் பூரிப்பாக இருந்தது அதனால், இரவு குழந்தை பிறந்து விடும் என்று நினைத்தேன்” என்று கூறுவார்.

வீட்டுக்காரம்மா, ஏண்டியம்மா! உனக்கு [28] இன்னும் கல்யாணமே ஆகலையே எப்படி இதெல்லாம் உனக்கு தெரியுது? என்று கேட்பார்.

அதற்கு பத்மினி, “என் அம்மாவிற்கே மூன்று பிரசவம் நான் தான் பார்த்தேன்” என்று கூறுவார் 🙂 .

இந்தப்படத்தில் முத்துராமன், பத்மினிக்கு தம்பியாக வருகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக 50 வயது MR ராதாவை இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய வேண்டிய நிலை இருக்கும்.

இங்கு சித்தியாக வரும் பத்மினி [MR ராதாவிற்கு ஏற்கனவே 8 குழந்தைகள் அதில் மூத்தவர் நாகேஷ்] இங்கு வந்து எப்படி நடந்து கொள்கிறார் என்பது தான் கதை. படம் ரொம்ப நன்றாக இருந்தது.

இந்தப்படத்தில் வரும் சில காட்சிகள் தலைவர் நடித்த “நெற்றிக்கண்” படத்திலும் வருகிறது. இதில் ஒரு காட்சியில் MR ராதா, பத்மினியை நாகரீக உடை அணிந்து பணக்காரர்கள் விருந்தில் நடனமாடியே ஆக வேண்டும் என்று வற்புறுத்துவார். செம காமெடியான காட்சி.

“தண்ணீர் சுடுவதென்ன, சந்திப்போமா சந்திப்போமா” போன்ற இனிய பாடல்களும் உள்ளன. விட்டா படத்தோட விமர்சனத்தையே எழுதிடுவேன் போல இருக்கு, எனவே இதோட நிப்பாட்டிக்குறேன் :-). என்றாவது இதோட விமர்சனம் எழுதலாம்… கூற நிறைய விஷயம் இருக்கு.

தற்கொலை

suicideஒருத்தருக்கு சாவு வரும் போது தான் வரும், அதற்கு முன்பு என்ன முயன்றாலும் நடப்பது தான் நடக்கும் என்று கூறுவார்கள். எனக்கு இந்த சம்பவத்தை படித்ததும் அது உண்மை தான் என்று உறுதியாகி விட்டது 🙂 .

அட நெசமாத்தாங்க! இதைப் படிங்க நீங்களே ஒத்துப்பீங்க. Image Credit – www.toonpool.com

ஒருவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, வீட்டிலிருந்த “எலக்டிரிக்’ பாக்ஸை தனது கையால் அடித்து உடைத்து தற்கொலை செய்ய முயன்றார்.

ஆனால், அதுவரை இருந்த மின்சாரம், அவர் பாக்ஸை உடைத்தபோது தடைப்பட்டு விட்டது. இரண்டாவதாக முகம் பார்க்கும் கண்ணாடியை கையால் உடைத்து, கண்ணாடி துகள்களை வாயில் போட்டு தற்கொலை செய்ய முயன்றார்.

இதையறிந்த பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விக்னேஷை பரிசோதித்த டாக்டர்கள், கண்ணாடி துகள்கள் அனைத்தும் எந்த பிரச்னைகளும் இல்லாமல் உடலிருந்து வெளியேறி விட்டதாக தெரிவித்தனர்.

நொந்துபோன அவர் மூன்றாவது முறையாக வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்குப் போட்டார். இவரது எடையை தாங்க முடியாமல், மின்விசிறி உடைந்து விழுந்ததால், உயிர் தப்பினார். இந்நிலையில், வீட்டிலிருந்து வடகோவை ரயில் நிலையம் நோக்கி ஓடினார்.

இவரை பின்தொடர்ந்து, அவரது தந்தை, பாட்டியும் ஓடினர். இவர்களின் கண்முன்னே, தண்டவாளத்தின் நடுவே படுத்தார். ஆனால், தண்டவாளத்தின் நடுவே படுத்ததால், ரயில் அவர் மீது ஏறாமல் போகவே, உயிர் பிழைத்து விட்டார்.

படிக்க திரைப்பட நகைச்சுவை காட்சி போல இருந்தாலும் இது உண்மை. இதைப் படித்து நீங்க ஏதாவது முயற்சி செய்து பார்த்துடாதீங்க 🙂 நன்றி http://www.dinamalar.com

விவாகரத்து

சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் குதிரைக்கு முத்தமிடும் தன்னுடைய நிழல் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததால், கடுப்பான அவரது கணவர் விவாகரத்து செய்து விட்டாராம்.

அதற்கு அந்தப் பெண் “விவாகரத்து பண்ணுனா பண்ணிக்கோ! மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது” என்று கூறி விட்டாராம் 🙂 .

என்னையா இது! குதிரைக்கு முத்தம் கொடுத்ததற்காக விவாகரத்து? உலகம் முழுவதும் ஒன்றும் இல்லாத விசயத்துக்கெல்லாம் நடைபெறும் விவாகரத்தில் இதுவும் ஒன்று போல.

இங்க அவனவன் திருமணத்திற்கு பொண்ணு கிடைக்கலைன்னு புலம்பிட்டு இருக்கானுக.. கிடைச்ச பெண்ணை ஒரு சப்பை மேட்டருக்கு விவாகரத்து பண்ணிட்டானே.. கிறுக்கு பய புள்ள!  நன்றி http://viruvirupu.com

{ 12 comments… add one }
 • Arun October 24, 2013, 11:48 AM

  தகவலுக்கு நன்றி தல
  தணிக்கை – எல்லா ஆட்சியும் ஒரே மாதிரி தான் உங்களுக்கு தெரியாதா

  மலாலா – நோபல் “முஸ்லிம் நாடுகளை கடுப்படிக்கவே” – நிச்சயமா உண்மை

  விவாகரத்து – லூசாப்பா நீ கேட்குற மாதிரி இருக்கு

  சித்தி – கேள்வி பட்டதே இல்லை இந்த படத்த

  – அருண்

 • Gowrishankar.P October 24, 2013, 12:12 PM

  “இந்தக் கட்டணம் மூலம் ஆண்டுக்கு கோடிக்கணக்கில் வங்கிகள் லாபம் சம்பாதிக்கின்றன”

  – actual-ல SMS அனுப்ப, வங்கிகள் SMS provider-க்கு, பணம் குடுக்கணும். ஒவ்வொரு SMS-க்கும் சார்ஜ் உண்டு. நம்பகிட்ட (SMS-க்கு) பண்ற சார்ஜ்ல வங்கிகள் பெரிசா லாபம் பாக்க முடியாது. என்ன அவங்க இதுல்லாம் free-யா பண்ணனும், ஆனா அதுக்கும் நம்பகிட்ட காசு வாங்கறாங்க.

 • Barney October 24, 2013, 7:12 PM

  கிரி,

  நானும் வங்கி பரிவர்த்தனை செய்யும் போது, கைபேசிக்கு குறுந்தகவல் வரும் ஆனால் இதுவரைக்கும் இதற்கு கட்டணம் எதுவும் செலுத்தியதில்ல. ஒருவேளை வங்கி இதற்கு கட்டணம் வசூலித்தால், எப்படி கண்டுபிடிப்பது?

  M.R. ராதா அவர்கள் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு படம் ‘சித்தி’. நீங்க சொன்ன அதே நகைச்சுவை கட்சியில் M.R. ராதாவின் நடிப்பு ரொம்ப அருமையாக இருக்கும். மேலும், கடைசி குழந்தைக்கு உடம்பு சரில்லைன்னு தந்தி வரும். பத்மினி உடனே வீட்டுக்கு திரும்ப சொல்லுவார். M.R. ராதாவுக்கு கோபம் வந்துவிடும். சமாதானம் செய்ய பத்மினி சொல்லுவார் ‘ஒரு வேளை குழந்தைக்கு எல்லாம் சரியாகிவிட்டால் உடனே ஊட்டிக்கு திரும்பிவிடலாம்’, tension ஆக இருந்த M.R. ராதா, உடனே குஷியாகி ‘season போய்டும் அதான் சொன்னேன்’ என்று அவருக்கேத்த பாணியில் சொல்வார். செம்ம நடிப்பு.

  நமக்கு பிடித்த ‘I Saw the Devil’ படத்தின் இயக்குனர் Kim Ji-woonவின் அடுத்த படமான ‘The Last Stand’ பார்த்தீங்களா? இதில் ஆர்னோல்ட் நடித்துள்ளார். எனக்கு பிடித்திருந்தது.

 • மு.முத்துக்குமார் October 24, 2013, 11:04 PM

  மலாலாவை அதிகமா புகழுறாங்க தான் எனக்கும் தோணுது. அந்த பெண் பேசும் பேச்சை கேட்டால், அதுவாக பேசுறதா தெரியல. மொத்தத்துல அந்த பொண்ண வச்சு நல்லா அரசியல் பண்றாங்க.

 • கிரி October 25, 2013, 10:52 AM

  @அருண் தணிக்கை அப்படி நடக்கிறது என்பது தெரியும்.. இருந்தாலும் என்னுடைய மனக் குறையை கூறினேன்.

  @கௌரிஷங்கர் லாபம் இருக்காது என்றாலும் சொல்ல முடியாது. ஒரு வங்கியின் வாடிக்கையாளர் எவ்வளவு லட்சம் இருப்பார்கள்.. ஒருவருக்கு 100 ருபாய் போடுங்கள்.. எவ்வளவு வரும்! இதெல்லாம் இவர்கள் தர வேண்டிய அடிப்படை வசதி.

  @Barney

  கட்டணம் நீங்கள் செலுத்த வேண்டியதில்லை.. அவர்களே உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து எடுத்து விடுவார்கள்.

  “ஒருவேளை வங்கி இதற்கு கட்டணம் வசூலித்தால், எப்படி கண்டுபிடிப்பது?”

  உங்கள் வங்கிக் பரிவர்த்தனையை கவனித்து வந்தால் தெரியும். ஆறு மாதத்திற்கு அல்லது ஒரு வருடத்திற்கு 60 – 100 வசூலிக்கிறார்கள். Customer care மின்னஞ்சல் அனுப்பி கேட்டால் கூறுவார்கள்.

  “tension ஆக இருந்த M.R. ராதா, உடனே குஷியாகி ‘season போய்டும் அதான் சொன்னேன்’ என்று அவருக்கேத்த பாணியில் சொல்வார். செம்ம நடிப்பு”

  இதையே நானும் நினைத்தேன் 🙂 அந்தக் காட்சி ரொம்ப நன்றாக இருக்கும். ரொம்ப சீரியஸ் ஆக வேண்டியதை அழகாக மாற்றி இருப்பார்கள் ரசிக்கும்படி. நான் கூட என்ன ஆகப்போகிறதோ என்று டென்ஷன் ஆக இருந்தேன்.. கடைசியில் கலகலப்பாக முடிந்து இருக்கும்.

  “நமக்கு பிடித்த ‘I Saw the Devil’ படத்தின் இயக்குனர் Kim Ji-woonவின் அடுத்த படமான ‘The Last Stand’ பார்த்தீங்களா? இதில் ஆர்னோல்ட் நடித்துள்ளார். எனக்கு பிடித்திருந்தது.”

  இன்னும் பார்க்கவில்லை.. இனிமேல் தான் பார்க்க வேண்டும். எப்படி இருந்தாலும் I saw the devil படத்தை அடிச்சுக்க முடியாது… என்னா படம். யப்பா! செம்ம.

  @முத்துக்குமார் 🙂

 • RAJESH October 25, 2013, 11:43 AM

  “குதிரைக்கு முத்தம் கொடுத்ததற்காக விவாகரத்து? ”

  எந்த இடத்தில் முத்தம் கொடுத்தாங்க ………….
  அதுதானே முக்கிய விடயம்

 • rajesh v October 25, 2013, 4:07 PM

  மலாலாவிற்கு மேற்கத்திய நாடுகள் கொடுக்கும் அதீத முக்கியத்துவம், முஸ்லிம் நாடுகளை கடுப்படிக்கவே என்று நினைக்கிறேன்.
  —————————————————–
  My view is also the same.

 • Arun November 3, 2013, 5:30 AM

  தீபாவளி வாழ்த்துக்கள் தல
  அடுத்த பதிவு எப்ப

  – அருண்

 • காயத்ரிநாகா November 6, 2013, 4:13 PM

  தீபாவளிக்கு ஊருக்குப் போயிட்டும் இன்னும் வரலயா? பயண அனுபவம் பதிவு எப்போ கிரி?

  காயத்ரிநாகா

 • Gowrishankar.P November 8, 2013, 11:47 AM

  என்ன கிரி, புது போஸ்ட் ஏதும் இல்ல? ஆளு சத்தத்தையே காணோம்.

 • காயத்ரிநாகா November 11, 2013, 8:20 PM

  கிரி தலைவரைப் பற்றி இணையத்தில் உடல் நிலை சரியில்லாமல் இருந்த ரசிகர்களின் அபரிதமான அன்பைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் யார் இந்த ரஜினிகாந்த் ஏன் இந்த கேடு என்று திட்டியவர்களுக்கு அழகான பதில் ஒன்றைக் கொடுத்து இருந்தார் STONE COLD STEVE AUSTIN .. மனதை நெகிழ செய்து விட்டது.. கீழே பகிர்ந்து இருக்கிறேன்..

  http://kumpuduraenunka.blogspot.in/2011/05/blog-post_20.html

  எனக்கு ரஜினி பிடிக்கும்….!..

  எனக்கு ரஜினி பிடிக்கும். எனக்கு ரஜினி பிடிக்கும். எனக்கு ரஜினி பிடிக்கும். எனக்கு மட்டுமல்ல என்னைப் போல கோடாணு கோடி பேருக்குப் பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்று கேட்கும் நாக்குகளுக்கு வார்த்தைகளை கொடுத்த மூளைகள் எல்லாம் மனிதர்கள் ஜனித்த பிண்டங்களுக்கு உரியதா? இல்லை இரும்பில் வார்த்தெடுத்து இயக்கங்கள் கொடுக்கப்பட்டதா?

  ஒரு மனிதனைப் பிடிக்க ஓராயிரம் காரணம் தேவையில்லை. இது மனம் சம்பந்தப்பட்ட விசயம். அறிவுகளின் செழுமையில் சில வக்கிர குரல்கள் தன்னின் சப்தங்களை உயர்த்தி ரஜினியை ஏன் இப்படி சீராட்டுகிறார்கள்? தமிழகம் ஏன் தடம் புரண்டு கொண்டு இருக்கிறது? அவர் ஒரு சுயநலவாதி, எந்த போராட்டத்தில் ஈடு பட்டார்? அவரின் தாடி ஏன் நரைத்திருக்கிறது, தலையில் முடியற்று விக் வைத்து நடிக்கிறார் என்றெல்லாம் சொல்லி தம்மின் கேவலமான மனோநிலைகளை வெளிப்படுத்தி தாமெல்லாம் பைத்தியக்காரர்கள் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

  அடக் கேவலங்களே! எமக்கு ரஜினையைப் பிடிப்பதில் உமக்கு என்ன சிரமம்? முவ்வேளையும் நீவீர் உண்ணும் சோற்றுப் பருக்கைகளை வயிற்றுக்குச் செல்ல விடாமலா நாங்கள் தடுத்தோம். ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நேசிக்க வேண்டுமெனில் நீசர்களின் வரலாற்றில் அந்த மனிதர் எங்காவது தெருவில் அமர்ந்து போராடியிருக்க வேண்டும். இல்லையே அரசியல் செய்து மீடியாக்களின் முன் தன்னைப் பற்றி மற்றவர்களை பேச வைத்திருக்க வேண்டும். இல்லையேல் பெரும் தலைவராய் இருக்க வேண்டும்.

  இப்படி எல்லாம் இல்லாமல் சக மனிதனை ஒரு நடிகனை நேசித்து விடவே கூடாது. திரையில் யாம் பார்த்த ஒரு நடிகனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை கண்டு நாங்கள் கலங்கினால் உமக்கு ஏளனம்??? கிண்டல், கேலி…….

  வெட்கங்கெட்ட தேசத்தில் வெறிநாய்களை எல்லாம் தலைவர்களாக்கி ஆட்சி போகத்தில் அமர அனுமதி கொடுத்து விடுவீர்கள். அண்டை தேசத்தில் தமிழனின் உயிரை எல்லாம் சூறையாட துணை போன தேசிய கட்சிகளுக்கு எல்லாம் வெட்கங்கள் அற்று போய் ஓட்டுப் போட்டு வாழ்க ஒழிக என்று கத்துவீர்கள்? ஆனால் தான் ரசித்த தான் நேசித்த ஒரு நடிகன் உடல் நலம் குன்றிப் போய் நா தழு தழுத்து பேசும் வேளையிலும் கூட நான் காசு வாங்கிக் கொண்டுதான் நடிக்கிறேன் என்னை ஏன் இவ்வளவு சீராட்டுகிறீர்கள் என்று தன் மனசாட்சிப் படி பேசினால் அவரை ஏசுவீர்கள்?

  தமிழத்தை காக்க வந்த தேவ தூதுவர்களுக்கு உங்களின் மூளைகளை கசக்கிக் கொண்டு உலக தத்துவ நூல்களை எல்லாம் வாசித்து விவாதி விட்டு நீங்கள் கொடி பிடியுங்கள், கோஷமிடுங்கள், உண்ணாவிரதம் இருங்கள் யாரும் தடை சொல்லவில்லை ஆனால் எம்மைப் போன்ற மனிதாபிமானமுள்ள மனிதர்களை தான் நேசித்த மனிதரின் நலனுக்காக இரண்டு சொட்டு கண்ணீர் விட விடுங்கள்.

  உங்களின் டப்பாங்குத்து ஆட்டத்தை எல்லாம் எமது சோகமான நேரத்தில் போடக்கூடாது என்ற அடிப்படை மனித நேயம் அற்றுப் போன மரப்பாச்சி பொம்மைகளே…! உமது வீட்டிலும் ஒரு சோகம் வரும் அப்பொது யாரேனும் மத்தளம் வாசித்து ஆடுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

  ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நேசிக்க அறிவும் ஆராய்ச்சியும் தேவையில்லை ஜடங்களே…! தான் நேசிக்கும் அந்த மனிதன் அடுத்தவருக்கு தொந்தரவு அற்றவராக தமக்குப் பிடித்தவராக இருந்தால் மட்டும் போதும்….! ரஜினி வயாதாகியும் நடித்துக் கொண்டிருப்பதால் உமது மாத சம்பளத்தில் ஏதேனும் பிடித்துக் கொள்கிறார்களா? இல்லை நீவீர் சோற்றை அள்ளி வாயில் வைக்கும் போது வலக்கை வாய்க்குச் செல்லாமல் காதுக்கு செல்கிறதா? எது உமது பிரச்சினை?

  உமது பிரச்சினையெல்லாம் ஆழ்மனதில் உமக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மை என்று கருதிக் கொள்ளலாம் என்று பார்த்தால் இது அதையும் மீறி உம்மை பிரபலப்படுத்த நீவீர் செய்யும் தெருக்கூத்து என்பதும் தெளிவாய் புரிகிறது.

  ஒரு மனிதனுக்கு முடியாவிட்டால், உடல்நலன் குன்றியிருந்தால் பதறக் கூட வேண்டாம் ஆனால் ஒரு வருத்தம் கூட இல்லாமல் அந்த மனிதனை விமர்சிப்பது எல்லாம் மானிடப் பதர்கள் எனக் கொள்ளலாமா? எங்கே இருந்து முளைக்கிறது உமக்கு கேவல கொம்புகள்? காலம் எல்லாவற்றையும் செதுக்கிப் போட்டு விடும்.. என்ற சிற்றறிவு கூட அற்றுப் போய் ரஜினியைப் பற்றி தாறுமாறாய் விமர்சிக்கும் ஒரு போக்கிற்கும், மனிதர்களுக்கும் இந்த கட்டுரை கடும் கண்டனங்களை ஆழமாகப் பதிந்து….

  ரஜினி என்னும் ஒரு மனித நேயம் கொண்ட மனிதன் எல்லா உடல் நலக் குறைவுகளிலும் இருந்து விடுபட்டு வெளிவந்து தன் குடும்பத்தாரோடும், தன்னை நேசிக்கும் ரசிக்கும் மனிதர்களுக்கு நடுவே நீடூடி வாழ்க என்று ஏக இறையிடம் எமது பிரார்த்தனைகளையும் மானசீகமாக சமர்ப்பிக்கிறது.

 • கிரி November 12, 2013, 9:40 AM

  @RAJESH கொடுக்க கூடாத இடத்தில் கொடுத்து குதிரை ஒரு உதை விட்டால் பிறகு வாழ்க்கையில் யாருக்குமே முத்தம் கொடுக்க முடியாத அளவிற்கு வாய் ஆகி விடுமே 🙂

  @ராஜேஷ்.V பரவாயில்லை ராஜேஷ்.. குறை சொல்லாம எதோ போனா போகுதுன்னு ஏற்றுக்கொண்டார் 😉

  @அருண், காயத்ரி நாகா, கௌரிஷங்கர்

  தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு சென்று இருந்தேன். நேற்றுத் தான் திரும்பினேன். இரண்டு வாரம் இணையம் பக்கம் வரவில்லை. விரைவில் எழுதுகிறேன். நினைவு வைத்து கேட்டமைக்கு நன்றி 🙂

  @காயத்ரி நாகா நீங்க கொடுத்த இந்தக் கட்டுரையில் லிங்க் இருந்ததால் ஸ்பாம் க்கு போய் விட்டது.

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz