கோச்சடையான் டீசர் ஒரு பார்வை

Kochadaiiyaan 2 million viewsகோச்சடையான் டீசர் வெளியான பிறகு ஃபேஸ்புக், ட்விட்டர், யு டியுப் என்றே இதே பேச்சாக இருக்கிறது.

YouTube ல் பார்வைகள் சென்னை ஆட்டோ மீட்டர் மாதிரி வேகமா ஓடி சாதனை புரிந்து கொண்டு இருக்கிறது.

அதே அளவிற்கு கடும் விமர்சனங்களையும் பெற்று இருக்கிறது.

இந்தப் படத்தின் கிராபிக்ஸ் மீது எனக்கு முன்பு இருந்தே எந்த எதிர்பார்ப்பும் இல்லை, நம்பிக்கையும் இல்லை.

இதை Blog எழுதும் போதும் அடிக்கடி புலம்பி இருக்கிறேன்.

என்னதான் பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்றாலும், இன்னும் கொஞ்சம் பெட்டராகத் இருக்கும் என்று நினைத்தேன்.

முகத் தோற்றங்கள் எனக்கு திருப்தி தரவில்லை. அந்த வகையில் தலைவர் ரசிகனாக எனக்கு ஏமாற்றம் தான்.

எனக்கு இதில் உள்ள ஒரு சந்தேகம், படம் Motion capture ஆனால், அதில் வருபவை அனிமேசன் சாயலில் உள்ளது.

ஒரு நிமிடத்தில் வந்ததை வைத்து எதையும் அறுதியிட்டு கூற முடியாது என்றாலும் எனக்கு இது உறுத்தல் தான். பட்ஜெட்டும் ஒரு காரணம் என்றாலும், இன்னும் சிறப்பாக வந்து இருக்க வேண்டும் என்பதே பலரின் குற்றச்சாட்டாக உள்ளது.

தலைவர் செம்மையா இருக்காரு… டீசர் தாறுமாறு…! என்று தீவிர ரசிகர்கள் கூறினாலும் அவர்களுக்கும் உள் மனதில் இதில் உள்ள பிரச்சனைகள் புரிந்து இருக்கும் என்றே நம்புகிறேன்.

டீசர் வெளியானதில் இருந்து ஒரே சண்டையாக இருக்கிறது 🙂 :-). என்னுடைய நண்பர்களும் விடாமல் வாக்குவாதம் செய்து கொண்டு இருக்கிறார்கள். யார் எப்படி விளக்கினாலும், எதிர்ப்பாக நினைப்பவர்கள் எண்ணத்தை மாற்றி விட முடியாது.

அவரவர் நிலையிலேயே தான் இருக்கப் போகிறார்கள். என்ன தான் தலைவர் படம் என்று விட்டுக்கொடுக்காமல் பேசினாலும் நிதர்சனம் என்ற ஒன்றும் இருக்கிறது.

யார் என்ன கூறினாலும், கிண்டல் அடித்தாலும் கோச்சடையான் நிச்சயம் இந்திய திரையுலகில் மைல் கல் தான். இது போல, ஒரு நடிகரை வைத்து தமிழ் என்ற ஒரு மொழியை / மாநில மக்களை மட்டுமே வைத்து படம் எடுக்க முடியும் என்றால், அது சூப்பர் ஸ்டாரால் மட்டும் தான் முடியும்.

கருப்பு வெள்ளை, ஈஸ்ட் மென் வண்ணம், Animatronics [எந்திரன்], 3D [சிவாஜி] தற்போது மோசன் கேப்சரிங் என்று அனைத்து தொழிநுட்பத்திலும் இவருடைய படம் வெளியாகி இன்னும் முதல் இடத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார் திறமை / பெருமை, குறை கூறுபவர்களால் எந்த விதத்திலும் குறைந்து விடாது.

இது போல படங்களை கணிப்பொறியில் / தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் திரையரங்கில் பார்ப்பதற்கும் பெரும் வித்யாசம் உள்ளது. திரையில் பிரம்மாண்டமாக,  தரமான ஒலியுடன் பார்க்கும் போது அதன் அனுபவம் வித்யாசமாக இருக்கும்.

எனக்கு இது போல படங்களைப் பார்க்க அதிகம் ஆர்வமில்லை. நான் பார்த்து நினைவு இருக்கிற படம் சமீபத்தில் வந்த அவதார் மட்டும் தான். தற்போது கோச்சடையான் பார்க்கப் போகிறேன்.

Rajini recordஇந்தியாவில் முதல் முறையாக இது போல ஒரு முயற்சியில் படம் வெளிவருகிறது.

இந்தப் படம் வெற்றி பெற்றால், ஹாலிவுட் போல இந்தியாவிலும் இது போல படங்கள் வெளிவர வாய்ப்பு இருக்கிறது.

இந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே படத்தை பாராட்டி விட முடியாது என்பது புரிகிறது.

எனவே, படத்தில் குறைகள் இருந்தாலும் தங்கள் சிறப்பான முயற்சியை கொடுத்து இருப்பார்கள் என்று நம்புகிறேன். டீசர், பலரின் கிராபிக்ஸ் எதிர்பார்ப்பை குறைத்து இருக்கும் என்று நினைக்கிறேன். இதுவும் நல்லதுக்கு தான்.

நல்ல பட்ஜெட் கிடைத்தால் நாமும் சிறப்பாக தர முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் “எந்திரன்” படம். இதில் அந்த தீ பிடிக்கும் காட்சி ஒன்றைத் தவிர மீதி அனைத்துமே மிக மிக சிறப்பாக கையாளப்பட்டு இருந்தன.

எனவே, இனி வரும் படங்களுக்கு கோச்சடையானை ஆரம்பமாக கருதலாம். பெரிய பட்ஜெட் கிடைத்தால் நாமும் சிறப்பான தரத்துடன் ஹாலிவுட்க்கு நிகராக கொடுக்க முடியும்.

நமக்கு இருக்கும் ஒரே பெரிய பிரச்சனை உலகளாவிய பார்வையாளர்கள் ஆங்கிலப் படங்களுக்கு இருப்பது போல் இல்லை. இது மட்டுமே நம்மை ரிஸ்க் எடுக்க தயக்கம் கொள்ள வைக்கிறது. குறைந்த பட்சம், ஹிந்தி அளவிற்கு கூட நமக்கில்லை.

இது போன்ற தொழில்நுட்பங்கள் இன்று இல்லை என்றாலும் பின்னாளில் வந்து தான் ஆக வேண்டும். நமக்கு பிடிக்குதோ இல்லையோ இவையே பின்னாளில் அதிகம் ஆக்கிரமிக்கும். நவீன வளர்ச்சியை நம்மால் ரொம்ப நாளைக்கு தள்ளி வைக்க முடியாது.

இன்னும் பலருக்கு கோச்சடையான் முற்றிலும் மோசன் கேப்சரிங் படம் என்பதே தெரியாது. நம்ம ஊரில் இன்னும் பெரும்பான்மையானவர்களுக்கு இது போன்ற படங்களை ரசிக்கும் மனநிலை இல்லை.

இந்தப் படம் B C சென்டர்களில் எப்படி ஓடும் என்பது என்னுடைய பெரிய சந்தேகம்! இந்தப்படத்தை குழந்தைகள் நிச்சயம் பார்ப்பார்கள். குழந்தை வர வேண்டும் என்றால் அந்தக் குடும்பமே வந்தாக வேண்டும்.

இந்தப் படம் ரஜினிக்கு புதிய தலைமுறை ரசிகர்களை நிச்சயம் பெற்றுத் தரும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

இன்று கிண்டல் அடிப்பவர்கள் நாளை இது போன்ற தொழில்நுட்பத்தில் படங்கள் வெளியாகி வெற்றி பெறும் போது இதற்கு அச்சாரமாக இருந்தது கோச்சடையான் என்று கண்டிப்பாக நினைவு கூறுவார்கள். காலம் கடந்தும் நிற்கும் வரலாற்றுப் படம் இது.

இது போல படங்களை திருட்டு DVD யில் பார்த்து ரசிக்க முடியாது. திரையரங்கில் வந்து பார்த்தால் மட்டுமே ரசிக்க முடியும். படம் வெளியான பிறகு பலத்த விவாதங்கள் / சண்டைகள் வழக்கம் போல இருக்கும் 🙂 .

ஒரு சாரர் அருமை என்றும் ஒரு சாரார் மொக்கை என்றும் கூறிக்கொண்டு இருப்பார்கள். எனவே படத்தின் முடிவு எப்படியும் இருக்கலாம், எதையும் தற்போது சொல்வதற்கில்லை.

குசேலன் சமயத்தில் P வாசு சும்மா இல்லாம ரஜினி படம் முழுக்க வருகிறார் அப்படி இப்படி என்று பில்டப் கொடுத்தார்.

ரஜினி, “நான் 25 நிமிடம் தான் மொத்தமே வருகிறேன்” “படத்தை அதிக விலைக்கு விற்காதீர்கள்” என்று கூறியும் கேட்காமல், படத்தின் மீது அதன் தகுதிக்கு மீறிய லாபம் வைத்து விற்பனை செய்து பெரிய சிக்கலானது.

அந்த சமயத்தில் காவிரி பிரச்சனை என்று சர்ச்சைகள் வர படமும் தோல்வி அடைந்தது. வசூல் ரீதியாக அதிகம் பெற்று இருந்தும் விற்பனை செய்ததன் விலை அதிகம் என்பதால், படம் கடும் சிக்கலை சந்தித்தது.

கடைசியில் அனைத்து பிரச்சனைகளும் ரஜினியின் தலை மீது விழுந்து, அப்புறம் நடந்த கதை அனைத்தும் உங்களுக்குத் தெரியும்.

தயாரிப்பாளர்கள் வாயையே திறக்காமல் இருந்து கொள்ள, அனைவரும் ரஜினியைப் போட்டு உலுக்கி எடுத்து விட்டார்கள். அந்த சமயத்தில் “பன்னீர் செல்வம்” என்ற நபர் செய்த அட்டூழியத்தை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை.

யாரோ செய்த தவறுக்கு அந்த சமயத்தில் ரஜினி தலை தான் உருண்டது. அந்த சமயத்தில் ரஜினி இல்லாமல் வேறு ஒருவர் இருந்து இருந்தால் மன உளைச்சலால் மருத்துவமனையில் தான் இருந்து இருப்பார்கள்.

இதே பிரச்னையை தற்போது சவுந்தர்யா செய்து கொண்டு இருக்கிறார். தேவையில்லாமல் ஹைப் உருவாக்குவது படத்திற்குத் தான் பாதகம், இதை இவர் உணர்ந்தது போலத் தெரியவில்லை.

டின் டின், அவதார் தரத்தில் எடுக்கப்படுகிறது என்று கூறாமல் “அதன் தொழில்நுட்பத்தில் எடுக்கப்படுகிறது, அதே தரம் இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம்” என்று கூறினால் ஒன்றும் இவர் குறைந்து விடப்போவதில்லை.

இது போல கூறினாலும் கூறாவிட்டாலும் எதிர்பார்ப்பார்கள் என்றாலும் அது பின்னாளில் தேவையற்ற சங்கடத்தை தராது.

படத்தின் பட்ஜெட் நம்ம ஊருக்கு அதிகம் இருக்கிறது. இதில் ஏதாவது தவறு நேர்ந்தால் அதன் விளைவுகள் மிக மிக மோசமாக இருக்கும். குசேலன் பிரச்சனை எல்லாம் ஒன்றுமே இல்லை என்கிற அளவில் தான் இருக்கும் என்பது என்னுடைய உறுதியான கருத்து.

ஏற்கனவே இவர் செய்த சுல்தான் சொதப்பலில் தான் ரஜினி மாட்டி விழித்துக்கொண்டு இருக்கிறார். ரஜினி படங்களை பொருத்தவரை இரண்டு முடிவு தான். ஒன்று சூப்பர் ஹிட் அல்லது அட்டர் ஃப்ளாப் [ஆனாலும் வசூல் இருக்கும் அது வேறு].

சவுந்தர்யாக்கு இது முதல் படம் மற்றும் தன்னுடைய திறமையை காட்ட வேண்டும் என்ற ஆர்வக் கோளாறில் இருக்கலாம் ஆனால், ரஜினி என்பவர் ரசிகர்களால் நடிப்பு என்பதையும் தாண்டி அதிகமாக நேசிக்கப்படுபவர்.

எனவே, தவறான வாக்குறுதிகளை தந்து, ரஜினிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதே பல ரசிகர்களின் பயம்.

படத்தின் வெற்றியும் / தோல்வியும் மூர்க்கமாக வந்தடைவது ரஜினியைத் தான். வெற்றி வந்தால் பங்கு போடவும் / பேட்டி கொடுக்கவும் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள் ஆனால், தோல்வி என்றால் செம்ம அடி வாங்கப் போவது தலைவர் மட்டும் தான் [இதை குசேலனில் கண்டு இருப்பீர்கள்].

எனவே, தேவையற்ற பில்டப்புகளையும் / எதிர்பார்ப்புகளையும் அறவே தவிர்த்து விடுங்கள். இதை முழுக்க முழுக்க தலைவர் மீதுள்ள அக்கறையில் தான் கூறுகிறேன். இப்படி கூறினாலும் யாரும் கேட்கப் போவதில்லை என்று தெரிந்தாலும் கூறாமல் இருக்க முடியவில்லை.

படத்தின் கிராபிக்ஸ் அல்லாமல் K S ரவிக்குமார் திரைக்கதை, ரகுமான் இசை, தலைவர் குரல் என்ற விஷயங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது.

முதல் படம், இயக்குனர் என்பதையும் தாண்டி தனது அப்பா மீது சவுந்தர்யாக்கு அனைவரையும் விட அக்கறை இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அதே போல ரஜினி என்பவர் நடிகர் என்பதையும் தாண்டி ரசிகர்களால் ரசிக்கப்படுபவர் என்பதையும், ரஜினி உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது, ரசிகர்கள் எப்படி உணர்ச்சிப்பூர்வமாக நடந்து கொண்டார்கள் என்பதையும் புரிந்து இருப்பார்.

எனவே, அவர்கள் நம்பிக்கையை சரியாக நிறைவேற்றும் மிகப்பெரிய பொறுப்பு தனக்கு உள்ளது என்பதை உணர்ந்து நடந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

படம் வெற்றி பெற்றால், பேச நிறைய இருக்கிறது. பார்ப்போம் என்ன ஆகிறது என்று. இனி கோச்சடையான் பற்றி எழுதுவது என்றால் அது நேரா விமர்சனம் தான் 🙂 .

கோச்சடையான் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று ரஜினி ரசிகனாகவும் / தமிழன் என்ற முறையிலும் வாழ்த்துகிறேன்.

கொசுறு 1

“வருத்தப் படாத வாலிபர் சங்கம்” கதாநாயகி ஸ்ரீ திவ்யாவை ரொம்பப் பிடித்து விட்டதால், அடுத்த வாரம் திரும்ப இதே படத்திற்கு செல்கிறோம். தமிழ் திரையுலகில் இவர் எத்தனை படம் நடிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. சீக்கிரம் துரத்தி விட்டுடாதீங்கப்பா :-).

கொசுறு 2

இந்த “அசராம் பாபு” ஜெகஜால கில்லாடியா இருக்காரே! தென்னிந்தியாவிற்கு ஒரு நித்தி என்றால் வட இந்தியாவிற்கு ஒரு அசராம் பாபு போல. சாமியார்கள் என்றாலே மோசமானவர்கள் என்று அனைவரும் நினைக்கும்படி ஒவ்வொருத்தரும் உறுதி செய்கிறார்கள்.

இவர்களை எல்லாம் அடித்து துரத்த வேண்டும். சொல்லப்போனால் எனக்கு இவர்கள் மீது கூட கோபம் இல்லை… இவங்க மொள்ளமாரித்தனம் தெரிந்தும் போய் அங்கேயே விழறாங்க பாருங்க.. இந்த மக்களை நினைத்தால் செம்ம காண்டாகிறது.

கொசுறு 3

ஆப்பிள், பட்ஜெட் ஃபோன் என்று சொல்லிட்டு மனசாட்சியே இல்லாம விலை வைத்து அறிமுகப்படுத்தி இருக்காங்க! இதை ஆப்பிள் ல இன்னொரு மாடல்ன்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே!

இதனுடைய முந்தைய 4S விலைக்கும் இதற்கும் எந்த பெரிய வித்யாசமும் இல்லை. விலை குறைவாக இருந்தால் வாங்கலாம் என்று இருந்தவர்கள் அதிக விலையால் ஏமாற்றம் ஆகி இருக்கிறார்கள், நம்ம ஊர் பணத்தில் தற்போதைய நிலைக்கு INR 35000 வருகிறது.

இதில் 5C என்பதில் C for cheap என்று கூறப்பட்டது ஆனால் இது C for colour போல 🙂 .

{ 18 comments… add one }
 • Peraveen September 12, 2013, 11:35 AM

  சூப்பர் பாஸ் நல்ல கருத்துகள்….

 • Gowrishankar.P September 12, 2013, 1:02 PM

  என்ன சொல்லவர்றீங்க? கோச்சடயான் failure ஆனா, அது ரஜினி தப்பு இல்லன்றீங்களா.

 • Mohamed Yasin September 12, 2013, 1:55 PM

  கிரி… ஆழமா யோசித்து தெளிவா எழுதியிருக்கிரிர்கள். புதிய முயற்சிகள் என்றும் வரவேற்கதக்க ஒன்று. ஆனால் அதை பாமரனுக்கும் புரியும் (ரசிக்கும்) வகையில் இருந்தால் இன்னும் சிறப்பே…
  நேற்று இரவு 2.30 மணிக்கு தங்கமீன்கள் படம் பார்த்தேன். எந்த மண்ணிலும் சிற்பம் செய்ய முடியும் என்பதை இயக்குனர் ராம் அவர்கள் தெளிவாக கூறியுள்ளார். சிறுமி சாதனா, செல்லம்மா கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை (வாழ்ந்துள்ளார்.) நேரம் இருப்பின் படம் பார்க்கவும்..பின் உங்கள் கருத்தை எழுதவும்..

 • Balaji September 12, 2013, 4:14 PM

  i am a die-hard fan of superstar and My fear was reflected in your words.
  Somehow i managed my people saying that this movie is mainly for film festivals with the target of foreign audience. Its not for open market in india. just for name-sake they’ll release here.

 • M Arunachalam September 12, 2013, 5:38 PM

  கிரி,

  //ஆப்பிள், பட்ஜெட் ஃபோன் என்று சொல்லிட்டு மனசாட்சியே இல்லாம விலை வைத்து அறிமுகப்படுத்தி இருக்காங்க! //

  ஆப்பிள் என்னிக்கு பட்ஜெட் போன் அறிமுகபடுத்தபோரோம்னு சொன்னாங்க? அவங்க எப்பவும் போல வாய திறக்கவே இல்ல…. இந்த ஷேர் மார்க்கெட் காரங்களும், டெக் மீடியாவும்தான், “ஆப்பிள்” கம்பெனிய பத்தி ஒண்ணுமே தெரியாம, அவங்க, அவங்க இஷ்டத்துக்கு கதை விட்டுகிட்டு இருந்தாங்க. இதுக்கு ஆப்பிள் கம்பெனிய குத்தம் சொல்லக்கூடாது. சொல்லப்போனா, ஆப்பிள் என்னிக்குமே மார்க்கெட் ஷேர்க்கு ஆசைப்பட்டதே கிடையாது. அவங்களுக்கு லாப ஷேர் தான் முக்கியம். அது அவங்களுக்கு இன்னிவரைக்கும் நன்றாகவே கிடைத்துக்கொண்டு இருக்கிறது.

  C என்பது கலர் நு எனக்கு முன்னாலேயே தெரிஞ்சுவிட்டது… ஆப்பிள் சம்பந்தப்பட்ட சில websites மூலமா.

  5C இந்தியாவுக்கு வரும்போது 5 என்ன விலைக்கு விற்றதோ அதே அல்லது அதைவிட கொஞ்சம் கூடுதல் விலைக்குதான் விற்கப்படும் என்பது என்னுடைய எண்ணம். நீங்க சொல்லும் விலை ரொம்ப கம்மி. அமெரிக்காவில் 5C யின் உண்மையான விலையுடன் 30% சேர்த்துக்கொண்டு சுமார் 65 ரூபாய்க்கு இந்திய ரூபாயில் convert செஞ்சீங்கன்னா 5C யின் இந்திய விலையை கண்டுபிடிக்கலாம்.

  மேலே சொன்ன 30% என்பது, freight, இன்சூரன்ஸ், மற்றும் சுங்க வரி, VAT வரி ஆகிய அனைத்துக்கும். இதற்காக ஆப்பிள் கம்பெனியை குறை கூறுவதால் பயனில்லை.

  ஆப்பிள் கம்பனிக்கு “Premium ” Tag என்பது மிக முக்கியம். அதனால் என்றுமே அவர்கள் சீப் விலைக்கு விற்க மாட்டார்கள். சீப் பொருளையும் விற்க மாட்டார்கள். ஒருவேளை ஜெயாவோ, கருணாநிதியோ அடுத்த தேர்தலுக்கு ஆப்பிள் iPhone இலவசமாக தரப்படும்னு அறிவிசாதான் சீப் iPhone கிடைக்க வாய்ப்பு.

  அருண்

 • ANaND September 12, 2013, 8:42 PM

  வணக்கம் கிரி அண்ணா …வழக்கம் போல நேர்மையான விமர்சனம்

  தமிழில் இப்படம் கண்டிப்பாக ஒரு மைல் கல் .. அதை மறுக்க முடியாது ..

  ரஜினிக்கு ஆப்பு, கூட இருக்குறவங்கநாள தான்.

  அண்ணா.. நீங்க சொல்லித்தான் இது motion டெக்னாலாஜி ன்னு தெரியுது

 • Abarajithan September 12, 2013, 8:43 PM

  கிரி சார். டீசர் ரொம்பவே மொக்கையா இருக்கு. அதை நீங்க முடிஞ்ச வரைக்கும் நாசூக்கா எழுத முயற்சி பண்ணியிருக்கீங்க. இதுக்கு தொழில்நுட்பம் இப்ப இல்லைன்னு யாரும் சொல்ல முடியாது. பட்ஜெட்டை முட்டாள்தனமா போட்டிருக்காங்கன்னு சொல்லலாம். ஆனா, படம் தோல்வியடைஞ்சா ரஜினி மேல சொல்லக்கூடிய ஒரே தப்பு, அவர் இந்த படம் எடுக்கும்போது சௌந்தர்யாவை ஒரு டைரக்டரா பார்க்காம, தன்னோட மகளா, அவங்க ஆசைப்பட்டதால மட்டுமே ஒத்துழைச்சு இருக்கார்.

  அடுத்தது ஒண்ணு சொல்லிக்க விரும்பறேன். ரஜினியை எனக்கு கொஞ்சமும் பிடிக்காது. அவர் எளிமை, எளிமை, ஆன்மீகம்னு சொல்றது வெறும் விளம்பரம்னுதான் எனக்கு தெரியுது. உண்மையான எளிமையை, உண்மையை தனுஷ், ரஹ்மான் பேட்டிகள்ள பார்த்திருக்கேன். சிகரட் பிடிச்சு உடம்பை அழிச்சுகிட்டு ஆன்மிகத்தை பின்பற்ற முடியுமா? அடுத்தது அவர் இந்த வயசுலயும் இளமையா இருக்கற மாதிரி (படங்கள்ல) காட்டிக்கறது. ஒரு நல்ல நடிகன், வாழ்க்கையில ஒவ்வொரு கட்டத்துலயும் தன்னால முடிஞ்ச ரோல்களை முழு அர்ப்பணிப்போட செய்யணும். உடம்புக்கு முடியாத வயசுலேயும் கேமரா ட்ரிக்ஸ், மேக் அப் மூலமா இளமையா நடிக்கறவரை நல்ல நடிகன்னு என்னால நிச்சயமா சொல்ல முடியாது. (சமீபத்துல வந்த படங்கள்ல ஹெவி மேக்கைப்பை மீறி, அவரோட வயசு முகத்துல தெரியுது) அவர்கூட மகளா நடிச்ச நடிகை மீனா, அப்புறம் ஜோடியா நடிச்சு, இப்போ வேற ஒரு படத்துல அம்மாவா நடிக்கறதா கேள்விப்பட்டேன். இவரு அப்பவும் இப்பவும் மேக் அப் போட்டு டூயட் பாடிட்டு இருக்காரு. இவரோட வயசு காரணமா, என்னென்ன செய்ய முடியாதுன்னு பார்த்து, திரைக்கதைலயும் பல மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கு. முன்னாடி அவரு நல்ல நடிகனா இருந்திருக்கலாம். ஆனா இப்போ அவர் ஒரு பாப்புலர் ஐகான், நடிகர் இல்ல. இப்போ அவரு படத்தோட வெற்றிக்காக நடிக்க வைக்கப்படுறாரு, அவரோட நடிப்புத் திறமையால யாரும் அவரை நடிக்க கூப்படறதில்லை. ஒருத்தர் பலகாலம் கழிச்சும் பேசப்படணும்னா, அவரு தன்னோட masterpiece ஐ உருவாக்கின கையோட ஒய்வு பெறனும்னு சொல்லுவாங்க. அந்த விஷயத்துல ரஜினி பெரிய தப்பு பண்ணிட்டாரு. அடுத்தடுத்த தலைமுறைகள் ரஜினியோட பழைய படங்களைப் பார்த்து ரசிக்க மாட்டாங்க, இப்போதைய படங்களைப் பார்த்து கேலி பண்ணி சிரிக்கப் போறாங்க. ரசிகர்கள் நீங்க ஒத்துக்காட்டியும் இதுதான் நடக்கப் போகுது.

  அவ்வளவுதான் சார். உங்க ரஜினி புகழ் போஸ்ட் படிக்கும்போதெல்லாம் இதெல்லாம் தோணும். இன்னிக்கு முழுசா சொல்லிட்டேன். அநாகரிகமா எழுதக் கூடாதுன்னு முயற்சி பண்ணியிருக்கேன். நன்றி.

  • varadhu September 13, 2013, 7:26 PM

   அபராஜிதன் அவர்களே !

   ரஜினியை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை . ஆனால் அவரது எளிமை பற்றி தாங்கள் கூறிய கருத்து ஒரு நகைப்புக்கு உரியதாகவே உள்ளது.ஏனென்றால் தாங்கள் கூறிய இருவரின் ரஜினி பற்றிய பேட்டியை படித்து பாருங்கள் பிறகு புரியும் அவரது எளிமையை பற்றி.ரஜினி இன்றும் மக்களால் விரும்பபடுவது அவரது எளிமை மற்றும் தனி மனித ஒழுக்கதினால்தான்.நீங்கள் ஒன்றும் அவருக்கு சான்று தர தேவையில்லை .
   சிகரெட் பற்றி பேசினீர்கள் .மகாத்மா காந்தி கூட ஒரு காலத்தில் மது மற்றும் மாமிசம் சாப்பிட்டதாக வரலாறு உண்டு.இன்னொன்று தங்களின் அறியாமை மற்றும் வைதேறிச்சல்தான் உங்கள் பதிவில் தெரியுது .இளம் நடிகைகளுடன் படத்தில் தான் ஜோடியே தவிர நிஜத்தில் இல்லை.இங்கே எளிமையாக இருப்பது போன்று நடிப்பவர்களின் முகம் அனைவருக்கும் தெரியும்.இன்னொன்று சொன்னீர்கள் அவரது படங்கள் பிற்காலத்தில் பார்க்கமாட்டார்கள் என்று.இதைவிட காமிடி ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறன்.இப்போதே அவரது பழைய படங்களின் தலைப்பில்தான் படமே வருகிறது .நீங்கள் ஒருதடவை உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்து கொள்ளுங்கள்.

   • Abarajithan September 29, 2013, 7:15 PM

    //எளிமை மற்றும் தனி மனித ஒழுக்கதினால்தான்//

    எளிமையைப் பற்றிய எனது கருத்தை முதலிலேயே சொல்லிவிட்டேன். தனி மனித ஒழுக்கம்? அவருடைய அரசியல் பல்டிகளைப் பற்றி சொல்கிறீர்களா? ஆனால் அவரது சொந்த வாழ்க்கை பிரச்சனைகள் இல்லாமல் இருக்கிறது என்பது உண்மையில் பாராட்டப்பட வேண்டியது. இருந்தும் என்னைப் பொறுத்தவரையில் கலைஞன், அரசியல்வாதி, விஞ்ஞானி போன்றவர்களை தனிமனித குணங்களை வைத்து மதிப்பிடக் கூடாது என்றே நினைக்கின்றேன்.

    //.மகாத்மா காந்தி கூட ஒரு காலத்தில் மது மற்றும் மாமிசம் சாப்பிட்டதாக வரலாறு உண்டு.//

    உண்மைதான். ஆனால், அவர் மது சாப்பிட்ட காலத்தில் ஊருக்கு உபதேசம் பண்ணவில்லை என்பது கவனிக்கத்தக்கது. பிற்காலத்தில் தான் அதைப்பற்றி வருந்தி, வெளிப்படையாக அதைப் பற்றிப் பேசியிருந்தார்.

    அவர் நடிப்பதை(?!)ப் பற்றி எனக்கு எந்த வயிற்றெரிச்சலும் இல்லை. ஆனால், இவ்வளவு கஷ்டப்பட்டு மேக் அப் போட்டு, விக் வைத்து நடிப்பதையும் அப்புறம் சில வேளைகளில் அவருடைய ‘உடல் நிலை’ காரணமாக திரைக்கதையில் மாற்றங்கள் செய்யப்படுவதனையும் தான் நான் குறிப்பிட்டுள்ளேன். ஒரு நடிகனுக்காக திரைக்கதை எழுதப்படும் சூழல் அவ்வளவு ஆரோக்கியமானதில்லை…

    //இப்போதே அவரது பழைய படங்களின் தலைப்பில்தான் படமே வருகிறது//
    தில்லுமுல்லு உண்மையில் ஒரு க்ளாசிக். ரஜினியாலும் நடிக்க முடியும் எனக் காட்டிய சில படங்களில் ஒன்று. வேறு எது சார்? மாப்பிள்ளை? அப்படி வந்த படங்களில் எத்தனை ஓடியிருக்கின்றன? தியேட்டரை விட்டே எத்தனை ஓடியிருக்கின்றன?

    //ரஜினியை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை //
    //நீங்கள் ஒருதடவை உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்து கொள்ளுங்கள்.//

    எனது முகம் நன்றாக இருந்தால், நானே நடிக்கப் போயிருப்பேனே சார்.. 🙂 இதில் இருந்தே உங்களது மனப் பக்குவத்தை அறிய முடிகிறது. கிரி சாரைத் தாக்காமல் ரஜினியைப் பற்றிய பிம்பத்தைப் பற்றி மட்டுமே நான் எழுதிய எனது கருத்துக்களையும் அதற்கு உங்களது சிறுபிள்ளைத்தனமான பதிலையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு ரசிகன்/வெறியனாகவே ஒரு குறுகிய வட்டத்துக்குள் யோசிக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நன்றி.

 • ANaND September 12, 2013, 8:51 PM

  அண்ணா … முடிஞ்சா ஆப்பிள் 5C பத்தி ஒரு பதிவு போடுங்க .. கிரி ப்ளாக் ல ஆப்பிள்5c பத்தி படிக்க ஆர்வமா இருக்கேன்
  Sent from http://bit.ly/otv8Ik

 • Arjun Sridhar UR September 12, 2013, 9:04 PM

  நல்ல விமர்சனம் ஆனால் டீசரில் ரஜினியின் கால்கள் தரையில் நடக்கும் போது -வீடியோ கேம் விலையாட்டில் வருவது போன்ற உணர்வு. கால்கள் தரையில் பதியாமல் நடக்கும் போது கால் முட்டிகள் இரண்டும் ஸ்பிட் கூடுதலாக இருப்பதால் வீடியோ கேம் உணர்வு வருகிறது. புதுமையான புரச்சிகரமான முயற்சி.

  கிரி என்னுடய முதல் திரை விமர்சனம் படித்துவிட்டு எப்படி இருக்கு என்று சொல்லவும்
  http://arjunsridharur.blogspot.in/2013/09/aarohanam-movie-review.ஹ்த்ம்ல்

 • Arjun Sridhar UR September 12, 2013, 9:04 PM
 • மு.முத்துக்குமார் September 12, 2013, 10:54 PM

  கோச்சடையான் பற்றி எனக்கும் இதே கருத்து தான் னா.

  ஸ்ரீ திவ்யாவை ரொம்பப் பிடித்து விட்டதால் – அப்ப மாளவிகா கதி? 🙂

 • Arun September 12, 2013, 10:56 PM

  வித்தியாசமான பதிவு தல
  கோச்சடையான் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  “இனி கோச்சடையான் பற்றி எழுதுவது என்றால் அது நேரா விமர்சனம் தான் icon smile கோச்சடையான் டீசர் ஒரு பார்வை ”

  – பாட்டு, trailer review கு உங்க கிட்ட தான் வருவேன் தல அப்படி எல்லாம் escape ஆக முடியாது
  – அருண்

 • Ilavarasan September 13, 2013, 11:39 PM

  அருமையான பதிவு நன்றி அண்ணா

 • Rajkumar September 15, 2013, 5:51 PM

  (கொஞ்ச நாள் ஊர்ல இல்ல கிரி சைனா போயிருந்தேன் அங்க கூகிள் புரோகிராம் எல்லாத்துக்கும் ஆப்பு ) கிரி எனக்கு எந்த நடிகரையும் தலைமேல் வைத்து ஆடுவது பிடிக்கவே பிடிக்காது. தட்ஸ் தமிழில் அப்படி எண்டா கொண்டாடுறீங்க அப்படின்னு கமெண்ட்ஸ் போட்டால் கெட்டகெட்ட வார்த்தையாய் வந்து விழுது. இவர்களை ரசிகர்கள் என்றழைக்காமல் வெறியர்கள் என்று தான் அழைக்கவேண்டும். டீசர் மொக்கை தான் – இப்போதுள்ள தலைமுறை எல்லா நாட்டு படங்களையும் பார்க்கிறது. மகதீரா நான் ஈ யை விட பெஸ்ட் CG இதில் கொடுத்திருக்கப்போவதில்லைன்னு நல்லாவே தெரியுது. இதுக்கெல்லாம் கம்பியுடர் கேம்ஸ் எவ்ளவோ பெட்டர்ன்னு தோணுது. சவுந்தர்யா அடுத்தவங்களையும் (cg கம்பெனிகளையும்) நம்பனும் – எல்லாத்தையும் தானே செய்துகொண்டிருந்தால் டீசர் போலத்தான் படமும் இருக்கும். குறைகள் என்று இந்த டீசரில் பார்த்தால் ஒவ்வொரு செகண்டிலும் இருக்கு. படம் வரட்டும்.. பார்க்கலாம்

 • rajesh v September 17, 2013, 2:43 PM

  மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று ரஜினி ரசிகனாகவும் / தமிழன் என்ற முறையிலும் வாழ்த்துகிறேன்.
  ———————–
  telungana irundha padam nasama poganumnu vazhthuveengala??? :O :O

 • Rajendran M November 5, 2013, 3:30 PM

  சிவகார்த்திகேயன் கலாய்திருப்பது “ஊதா கலர் ரிப்பன்” பாட்டில் ஒரு சமுதாயத்தை தான் நன்றாகப் பாரும். இப்படிப்பட்ட பாடல்களை மக்கள் புரியாமல் ரசிப்பதால்தான் இளைய தலைமுறையினர் கெட்டு சீரழிகிறார்கள். லட்சங்களையும் / கோடிகளையும் வாங்கும் நடிகர்கள், பாட்டு எழுதுபவர்கள் அதற்குப் பிரதிபலனாக இந்த சமுதாயத்தை சீரழித்து கலாசாரத்தை சிதைத்து விடுகிறார்கள். ஏற்கனவே, நம் நாட்டில் இப்போதுதான் பெண்களை அவமானப்படுத்தும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்திருக்கின்றன. இதுபோல படங்களை பார்க்கும் இளம் தலைமுறையினருக்கு மனம், வாழ்வு என்னாகும்?

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz